Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்திதராத நகர்வுகள்

Featured Replies

Page-19-6b197e1ee3ca5b3a52e7aa237acb458c

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-3

 

திருப்திதராத நகர்வுகள்

 

ஐக்­கிய தேசிய  கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் தமக்கு இருக்­கின்ற பொறுப்புக் குறித்து சிந்­திக்க வேண்டும். அத்­துடன் தமிழர் தரப்பும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் பொறுப்புத் தன்­மை­யு­டனும் அழுத்தம் கலந்த சம­யோ­சி­தத்­து­டனும் நடந்து கொள்ள வேண்டும். அது மட்­டு­மின்றி நாட்­டின் ஏனைய அர­சியல் கட்­சி­களும் இந்த விட­யத்தில் பொறுப்­பு­டனும் வர­லாற்றுக் கட­மையை உணர்ந்தும் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

 

என்ன முன்­னேற்­றத்தைக் கண்டோம் இந்த 2016 ஆம் ஆண்டில்? ஒன்­றுமே நடக்­க­வில்­லையே? ஒரு­சில நம்­பிக்­கைக்­கு­ரிய விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ள­னவே என இவ்­வாறு சிலர் விவா­தித்துக் கொண்­டி­ருப்­பதை அண்­மையில் அவ­தா­னிக்க முடிந்­தது. இவர்கள் ஏன் இவ்­வாறு பேசிக் கொள்­கி­றார்கள் என்­ப­தற்கு பல்­வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன.

விசே­ட­மாக இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் முடி­வுக்கு வந்­துள்ள 2016 ஆம் ஆண்டு எவ்­வாறு அமைந்­நது? சாத­க­மாக அமைந்­ததா? அல்­லது பாத­க­மாக அமைந்­ததா? இல்லை ஓர­ளவு நம்­பிக்கை தரும் வகையில் அமைந்­ததா? என்­பது தொடர்பில் விரி­வான மற்றும் பரந்­து­பட்ட வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போ­தைய நிலை­மையில் தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் முக்­கி­ய­மான சில விட­யங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளன. அவற்றில் முதன்­மை­யாக அதி­காரப் பகிர்­வுடன் அமைந்த அர­சியல் தீர்வுத் திட்டம், மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­ற­லி­னூ­டாக நீதியை நிலை­நாட்­டுதல், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­புதல், பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தல் போன்ற விட­யங்­களை குறிப்­பி­டலாம்.

இவற்றில் ஏதா­வது சாத­க­மான அம்­சங்கள் கடந்து சென்ற 2016 ஆம் ஆண்டில் பதி­வா­னதா? அல்­லது சாத­க­மான விட­யங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தென்­பட்­ட­னவா போன்ற கேள்­விகள் அனைவர் மத்­தி­யிலும் எழு­கின்­றன. பொது­வாக நோக்­கும்­போது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பொறுத்­த­வரை ஓர­ளவு நம்­பிக்கை தரக்­கூ­டிய விட­யங்கள் இடம்­பெற்­றி­ருந்­தாலும் ஒட்­டு­மொத்த ரீதியில் பார்க்­கும்­போது தமிழ் பேசும் மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாத நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன.

மிகவும் விசே­ட­மாக 2016 ஆம் ஆண்­டுக்குள் தமிழ்­பேசும் மக்கள் விரும்பும் வகை­யி­லான அர­சியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என தமிழர் தரப்பு நம்­பிக்கை கொண்­டி­ருந்­த­துடன் அது தொடர்பில் பகி­ரங்­க­மாக கருத்து வெளி­யிட்டும் வந்­தது. ஆனால் அந்த முயற்சி 2016 ஆம் ஆண்­டுக்குள் நிறை­வே­றாத ஒரு நிலை­மையை காண்­கின்றோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி இந்த நாட்டில் பாரிய எதிர்­பார்ப்­புக்­க­ளு­டனும் நம்­பிக்­கை­க­ளு­டனும் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான அர­சாங்­க­மா­னது நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது.

அது­மட்­டு­மன்றி நீண்­ட­கா­ல­மாக புரை­யோடிப் போயுள்ள தமிழர் பிரச்­சி­னையை புதிய நல்­லாட்சி அர­சாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்­பிக்­கையும் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் யுத்­த­கா­லத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன தொடர்­பாக நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் எனவும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது.

அந்த வகையில் முக்­கிய இரண்டு விட­யங்­க­ளான அர­சியல் தீர்வுத் திட்டம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு என்­ப­வற்றில் பாரி­ய­ளவு நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய விட­யங்கள் எதுவும் இடம்­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை. முதலில் அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் நாம் பார்ப்­போ­மானால் அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. அதற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

மேலும் அந்த அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யா­னது பிர­தான வழி­ந­டத்தல் குழுவை நிய­மித்­துள்­ள­துடன் அதன் கீழ் ஆறு உப நிறை­வேற்றுக் குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் குறித்த ஆறு உப நிறை­வேற்றுக் குழுக்­களும் பல்­வேறு விட­ய­தா­னங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்ற நிலையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது தேர்தல் முறை மாற்றம், அதி­காரப் பகிர்வு மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஆகிய மூன்று விட­யங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்­றது.

இந்­நி­லையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது தற்­போது அதி­காரப் பகிர்வு குறித்து ஆராய்ந்து வரு­கி­றது. இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் பிர­தமர் தலை­மையில் 21 எம்.பி.க்கள் அங்கம் வகிப்­ப­துடன் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து அர­சியல் கட்­சி­களும் அங்கம் வகிக்­கின்­றன. அதன்­படி பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் இது­வரை இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதே தவிர எந்­த­வொரு விட­யத்­திலும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

விசே­ட­மாக தமிழர் தரப்பை பொறுத்­த­வ­ரையில் இணைந்த வடக்கு, கிழக்கு மற்றும் சமஷ்டி முறை­மை­யுடன் கூடிய தீர்வு வேண்டும் என வலி­யு­றுத்தி வரு­கின்­றது. ஆனால் தென்­னி­லங்­கை­யா­னது ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே தீர்வு வழங்­கப்­படும் என்றும் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட முடி­யாது என்றும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. இவ்­வாறு பார்க்­கும்­போது பிர­தான இரண்டு விட­யங்­க­ளி­லுமே இது­வரை இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

அந்­த­வ­கையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான விதத்தில் இந்த பிரச்­சி­னையை அணுகப் போகின்­றது என்­பது புதி­ரா­ன­தா­கவே இருக்­கின்­றது. 2016 ஆம் ஆண்டில் இந்த இரண்டு முக்­கிய விட­யங்­க­ளுக்கும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அத்­துடன் இந்த விடயம் இல­கு­வாக தீர்க்­கப்­ப­டக்­கூ­டிய விட­ய­மா­கவும் தென்­ப­ட­வில்லை.

தென்­னி­லங்கை கடும்போக்­கு­வா­திகள் இந்த சமஷ்டி முறை­மையை பிர­தான ஆயு­த­மாகக் கொண்டு அர­சியல் செய்து வரு­கின்­றனர். அதா­வது சமஷ்­டியை வழங்­கினால் நாடு பிரிந்து விடும் என்ற விதத்­தி­லேயே தென்­னி­லங்­கையில் பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இது மிகவும் உணர்வு பூர்­வ­மான விடயம் என்­பதன் கார­ண­மாக அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­மா­னத்­திற்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இரு தரப்புப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும். இந்த விட­யத்தில் முதலில் இரண்டு தரப்­புக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டு­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.

மேலும் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­களும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்­டத்தின் அவ­சியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்­களின் பிரச்­சி­னை­களின் தாற்­ப­ரி­யத்தை தென்­னி­லங்கை புரிந்து கொள்ள வேண்டும். வெறு­மனே இன­வாத நோக்கில் தீர்வு முயற்­சி­களை குழப்பிக் கொண்­டி­ருக்­காமல் ஆக்­கப்­பூர்­வ­மான ஆத­ரவை வழங்­க­வேண்­டி­யது அனைத்து தரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும்.

2016 ஆம் ஆண்டில் இந்த தீர்வுத் திட்ட விவ­கா­ரத்தில் ஓர­ளவு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பொது­வான ரீதியில் பார்க்­கும்­போது தமிழ் பேசும் மக்­க­ளினால் மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. எனவே 2017 ஆம் ஆண்­டி­லா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக நாட்டை பொறுத்­த­வ­ரையில் 2017 ஆம் ஆண்டு என்­பது மிகவும் தீர்க்­க­மா­ன­தாகும்.

கடந்த வருடம் ஆரம்­பிக்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியையும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியையும் பிர­தா­ன­மாகக் கொண்ட தேசிய அர­சாங்கம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டை­கி­றது. தொடர்ந்து அதனை கொண்டு செல்­வதா அல்­லது இடை­ந­டுவில் தேசிய அர­சாங்­கத்தை முறித்­துக்­கொள்­வதா என்­பது குறித்து இரண்டு கட்­சி­களும் தீர்­மா­னிக்­க­வுள்­ளன. அது மட்­டு­மன்றி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சர்­வ­ஜ­ன ­வாக்­கெ­டுப்பும் 2017 ஆம் ஆண்டு நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அந்­த­வ­கையில் அடுத்­த­ வ­ரு­ட­மா­வது தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யம் மிகவும் தீர்க்­க­மா­ன­தாக அமை­ய­வேண்டும். குறிப்­பாக இந்த விட­யத்தில் அனைத்து அர­சியல் கட்­சி­களும் பொறுப்­புடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் தமிழ் பேசும் மக்­களின் மற்­று­மொரு முக்­கிய விட­ய­மான பொறுப்­புக்­கூறல் தொடர்பில் பார்க்­கும்­போது அர­சாங்கம் இது­வரை உள்­ளகப் பொறி­மு­றையை நிறு­வ­வில்லை.

இது 2016 ஆம் ஆண்டில் ஒரு­சில நம்­பிக்கை தரும் விட­யங்கள் இடம்­பெற்­றாலும் ஒட்­டு­மொத்த ரீதியில் நம்­பிக்கை ஏற்­படும் வகையில் பாரிய விட­யங்கள் எதுவும் நடை­பெ­ற­வில்லை. குறிப்­பாக 2016 ஆம் ஆண்டு காணா­மல்­போனோர் குறித்து ஆராய்­வ­தற்­கான நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­துடன் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றும் இந்த வரு­டத்தில் நிறு­வப்­படும் என கூறப்­பட்­டது. ஆனால் இது­வரை அந்த உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மின்றி பொறுப்­புக்­கூறல் பொறி­முறை எவ்­வாறு அமையும் என ஆராய்­வ­தற்­கான செய­ல­ணி­யா­னது தமது அறிக்­கையை ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. அந்த அறிக்கை கடந்த வருடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் ஜன­வரி 03 ஆம் திகதி வரை பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை எவ்­வாறு நீதிப் பொறி­மு­றையை கையா­ளப்­போ­கின்­றது என்­பது குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் 2016 ஆம் ஆண்டு பாரிய முன்­னேற்­றத்தை காண­வில்லை என்­பதே உண்­மை­யாகும்.

எனவே பொறுப்­புக்­கூறல் விட­யத்தை பொறுத்­த­வ­ரை­யிலும் 2017 ஆம் ஆண்டு என்­பது மிகவும் தீர்க்­க­மா­ன­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி 2017 ஆம் ஆண்டில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் மேலோங்கி காணப்­ப­டு­கின்­றது. அந்த நம்­பிக்­கையை சீர்­கு­லைத்­து­வி­டக்­கூ­டாது.

அந்த வகையில் கடந்து சென்ற 2016 ஆம் ஆண்டு பொறுப்­புக்­கூறல் மட்டும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்வு போன்ற விட­யங்கள் தொடர்பில் முன்­னேற்­ற­க­ர­மான நிலைமை ஏற்­ப­ட­வில்லை என்ற மக்­களின் கவலை 2017 ஆம் ஆண்டில் தீர்க்­கப்­பட வேண்டும்.

விசே­ட­மாக அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல், பொறுப்­புக்­கூ­ற­லி­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்குதல் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் 2017 ஆம் ஆண்டு நல்லது நடக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துவிடக்கூடாது.

2016 ஆம் ஆண்டில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படாதுவிடினும் ஓரளவு நம்பிக்கை தருகின்ற ஏற்பாடுகள் இடம்பெற்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த நம்பிக்கை தரும் விடயங்கள் புதிய வருடத்தில் மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை கட்டியெழுப்பி நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமக்கு இருக்கின்ற பொறுப்புக் குறித்து சிந்திக்க வேண்டும். அத்துடன் தமிழர் தரப்பும் இராஜதந்திரமாகவும் பொறுப்புத் தன்மையுடனும் அழுத்தம் கலந்த சமயோசிதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி நாட்டின் ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் பொறுப்புடனும் வரலாற்றுக் கடமையை உணர்ந்தும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை 2017 ஆம் ஆண்டு பொய்த்துவிடக்கூடாது. மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.