Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

Featured Replies

அட உம்மட கழிவுப்புத்திக்கு இதைவிட ஆழமாய் சிந்திக்க வக்கில்லயோ?

நீர் இந்தியன் என்று சொன்னால் நாம் நம்பிவிடுவோமாக்கும்.

அடடா.... அடடா.... இங்கை மற்றவர்கள் எல்லாம் என்ன பேர்த்சேட்டிவிக்கெற் காட்டியோ கருத்தெழு வந்தனீங்கள்....... மற்றவரை பாத்து குரைக்க முன்னம் தன்னைப்பற்றி....... <_<<_<:mellow::D

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

90 91 இல் எமது தமிழ் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்கவில்லை அதை பெரிது படுத்தி சேர்ந்து இருக்க வேண்டிய தமிழ்நாட்டு மக்களை பழிக்கு பழியும் வாங்கச் சொல்லவில்லை, என்ன எந்த ஒரு மூலையில் தமிழனுக்கு ஏதும் நடந்தாலும் சரி நடக்க போகிறது என்றாலும் மனதில் ஒரு கவலையும் கோவங்களுமே ஏன் என்றால் அடக்கு முறைகலும் பழிவாங்கிய அனுபவங்களும் எங்களிடம் இருக்கு அது வேறு எந்த தமிழனுக்கும் வர கூடாது என்ற ஆதங்கமே ,

அத்துடன் உண்மையில் நீர் தமிழ்நாட்டு தமிழன் என்றால் இப்படி சொல்ல மாட்டிர் நீர் இந்திய தமிழ் உறவுகளுக்கும் எமக்கு வீரோத போக்கு வரவேண்டும் என்ற என்னதில் கருத்து எழுதும் ஒரு ஈழத்தமிழ் இனத்தில் பிறந்த துரோகி .

ஆக நடித்து சம்பாதிக்கும் வரையும் தமிழன் தண்ணி எண்டு வந்தால் தமிழனுக்கே தண்ணி காட்டப்படுது இப்படிபட்ட நட்சத்திரங்களால்

ஏன் இந்த கிழட்டு நரி ரஜனி தமிழ்நாட்டில் கோடி கோடியாக உழைத்து கொண்டு தனது மாணிலத்தில் பெரிய பெரிய முதலீடுகள் செய்து வேலைவாய்ப்புக்களை தனது இன மக்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்ற என்னத்தில் என்ன என்ன எல்லாம் செய்தார் இந்த மாராட்டியான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் போராட்டம் நீடிப்பு: விவசாயிகள் ரெயில் மறியல்; 4-வது நாளாக பஸ்-லாரிகள் முடக்கம்

பெங்களூர், பிப். 8-

08watersp1.jpg

காவிரியில் ஆண்டு தோறும் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. 12-ந் தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்புக்கும் கன்னடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் இருந்து பஸ்- லாரி போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லாரிகள் ஓசூர், பரமத்தி வேலூர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. ஓசூர்- பெங்களூர் சாலை, தேன்கனிக்கோட்டை- பெங்களூர் சாலை, அஞ்சட்டி-பெங்களூர் சாலை மூடப்பட்டுள்ளன.

4-வது நாளாக இந்த வழித்தடங்களில் தமிழக பஸ்- லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்னும் ஒரு வாரத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.

தமிழக எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை தவழும் நிலையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர், மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. குறிப்பாக கர்நாடக காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 3 தினங்களாக போராட்டம்- மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். நேற்று கர்நாடக விவசாயிகள் ஆங்காங்கே ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை சதாப்தி ரெயிலை மறித்து தண்ணீர் விடமாட்டோம் என்று கோஷமிட்டனர். சுமார் 3 மணி நேரம் அந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தென் மாநிலங்களை நோக்கி வரும் ரெயில்களை மட்டுமே அவர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) கவர்னர் மாளிகை மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கன்னட அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தின. விவசாயிகள் திரண்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

நாளை (வெள்ளி) நடுவர் மன்ற தீர்ப்பு நகலை எரிக்கும் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. 10-ந் தேதி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். 11-ந் தேதி மோட்டார் சைக்கிள் பேரணியும் 12-ந் தேதி `பந்த்'தும் நடைபெற உள்ளது.

மைசூர், மாண்டியா இரு மாவட்ட விவசாயிகளும் தினசரி போராட்டத்தை தீவிரப் படுத்தியப்படி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பதட்டமான சூழ்நிலை இன்னும் குறையவில்லை. பெங்களூரில் அமைதி நிலவிய போதிலும் மக்களிடம் அச்ச உணர்வு குறையவில்லை.

கர்நாடக விவசாயிகள் போராட்டம் காரணமாக தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓசூரில் முடங்கி கிடக்கும் லாரிகளில் பல ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்குள் செல்லத் தொடங்கி உள்ளன.

கர்நாடகாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று கர்நாடகம் அறிவித்து இருப்பதால், மைசூர், மாண்டியாவில் கூடுதல் பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் அதிரடிப்படை ரோந்து சுற்றி வருகிறது.

இதற்கிடையே கர்நாடக பஸ், லாரிகள் நேற்று காலை முதல் தமிழ்நாட்டுக்குள் வரத் தொடங்கி உள்ளன. சென்னை, புதுச்சேரிக்கு பெங்களூர் பஸ்கள் வழக்கம் போல ஓட தொடங்கி விட்டன. அதனால் தமிழக பஸ்கள்தான் கர்நாடகாவுக்குள் செல்ல முடியாதபடி சூழ்நிலை நிலவுகிறது.

http://www.maalaimalar.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா.... அடடா.... இங்கை மற்றவர்கள் எல்லாம் என்ன பேர்த்சேட்டிவிக்கெற் காட்டியோ கருத்தெழு வந்தனீங்கள்....... மற்றவரை பாத்து குரைக்க முன்னம் தன்னைப்பற்றி....... :icon_idea::icon_idea::D:D

தெருநாய்கள், சொறிநாய்கள் குரைப்பு போதாமலா சான்றிதள்களில் ஆராட்சி வேண்டிக்கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

கர்னாநாடகவில் தமிழர் தாக்கப்படவே இல்லை என்று கதை விட வேண்டாம். வீரப்பன் காலத்தில், வீரப்பன் யாரையும், சுட்டாலும் கொன்றாலும், உடனே அங்குள்ள அப்பாவித் தமிழர் மீதே காட்டுமிராண்டித்தனத்தை கன்னடக்காரன் நடத்தவில்லையா?

எந்த மொழியிலும் விளம்பரம் போடலாம். ஆனால் தமிழ்மொழியில் விளம்பரம் போட்டால் தார் பூசுகின்ற செயலையோ, தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் தடை செய்கின்ற செயலையோ, அதை விட மேலே திருவள்ளுவரின் சிலையைக் கூடத் திறக்க விடாமல் தடுகின்ற செயலையோ அறியாதவர்கள் நாம் அல்ல.

எமக்கு என்னவோ, இந்தியாவில் நடக்கின்ற எவ்விடயமும் தெரியாது போன்றும் நீர் மட்டும் ஏதோ எமக்கு படிப்பிப்பது போன்றும் சொல்ல வேண்டாம்.

------------------------------------------

இவர் இந்தியர் என்றே நான் நம்புகின்றேன். ஆனால் தமிழரல்ல. தமிழ் படித்த தெலுங்கர். ஏற்கனவே இவர் நமக்கு அறிமுகமானவராகவே நினைக்கின்றேன். நிர்வாகம் தான் உறுதி செய்ய வேண்டும். முன்பு அவர் இருக்கும்போதும் இந்தியாவைப் புகழ்பாடியும், தமிழர்களுக்குள் ஒற்றுமை வரக் கூடாத மாதிரியும் எழுதுபவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி, பிப்.9-: காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக, தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் 1,000-க்கு மேற்பட்ட லாரிகள் சரக்குகளுடன் முடங்கிக் கிடக்கின்றன.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் லாரிகள் எல்லைப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 5 நாட்களாக, லாரி டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள், ரோட்டு ஓரத்திலேயே தங்கியுள்ளனர்.

தமிழ்நாடு லாரி அதிபர்கள் சங்கத்தலைவர் செங்கோட்டையன் இதுபற்றி நிருபர்களிடம் பேசும்போது, லாரி ஊழியர்கள் செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், லாரிகளில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்கள் காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

லாரி அதிபர்கள் கர்நாடக மாநிலத்துக்குள் லாரிகளை ஓட்டிச்செல்ல தயாராக இருந்தாலும், பாதுகாப்பு கருதி போலீசார் அவர்களை அனுமதிக்க மறுத்து வருவதாக, சேலம் போலீஸ் டி.ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தெரிவித்தார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,000 லாரிகளும், நாமக்கல்லில் 100 லாரிகளும் முடங்கிக்கிடப்பதாக அவர் தெரிவித்தார்.

ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலாறு, கொண்டபாடி, சத்தியமங்கலம் சாலைகளிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

http://www.vikatan.com/

இதற்க்கு முன்பு நான் இந்த தளத்தில் வந்தது இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதற்க்கு முன்பு நான் இந்த தளத்தில் வந்தது இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்ன புதுக்கதையோ ?

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

எப்படி உங்களால் சிரிக்காம நகைசுவையாக சொல்ல முடிகிறது

நல்ல நகைசுவை வாழ்த்துக்கள்.

பெரியாரின் இரத்ததின் இரத்தங்களே தமிழன் ஓடுறான் ஓடிக்கொண்டே இருக்கிறான் வாழ்வில் தமிழ்நாட்டின் விளிம்புவரை.. கூப்பிடுங்கள் பெரியாரை போடுங்கள் பகுத்தறிவு முழக்கம் கர்நாடகத்தில். கர்நாடகம் பெற்றுத்தந்த பகுத்தறிவுச் சிங்கம் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டாமல் உறங்கியதாலா தமிழனுக்கு தண்ணிக்கும் பஞ்சம். பாபா காலில் விழுந்தும் தண்ணீர் இல்லையா..??! காவேரியை திறக்க பெரியார் வழியில் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டுவதே சரியான தீர்வு. காட்டுமிராண்டித் தமிழன் ஏன் இன்னும் அதைத் தொடங்கவில்லை..! :huh::huh:

சரி சரி

உமக்கு என்ன இதில் வேலை

நன்றி ஈழவன்

அய்யோ பாவம் !!

கர்னாநாடகவில் தமிழர் தாக்கப்படவே இல்லை என்று கதை விட வேண்டாம். வீரப்பன் காலத்தில், வீரப்பன் யாரையும், சுட்டாலும் கொன்றாலும், உடனே அங்குள்ள அப்பாவித் தமிழர் மீதே காட்டுமிராண்டித்தனத்தை கன்னடக்காரன் நடத்தவில்லையா?

எந்த மொழியிலும் விளம்பரம் போடலாம். ஆனால் தமிழ்மொழியில் விளம்பரம் போட்டால் தார் பூசுகின்ற செயலையோ, தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் தடை செய்கின்ற செயலையோ, அதை விட மேலே திருவள்ளுவரின் சிலையைக் கூடத் திறக்க விடாமல் தடுகின்ற செயலையோ அறியாதவர்கள் நாம் அல்ல.

எமக்கு என்னவோ, இந்தியாவில் நடக்கின்ற எவ்விடயமும் தெரியாது போன்றும் நீர் மட்டும் ஏதோ எமக்கு படிப்பிப்பது போன்றும் சொல்ல வேண்டாம்.

------------------------------------------

இவர் இந்தியர் என்றே நான் நம்புகின்றேன். ஆனால் தமிழரல்ல. தமிழ் படித்த தெலுங்கர். ஏற்கனவே இவர் நமக்கு அறிமுகமானவராகவே நினைக்கின்றேன். நிர்வாகம் தான் உறுதி செய்ய வேண்டும். முன்பு அவர் இருக்கும்போதும் இந்தியாவைப் புகழ்பாடியும், தமிழர்களுக்குள் ஒற்றுமை வரக் கூடாத மாதிரியும் எழுதுபவர்.

கன்னடர்கள் உத்தமர்கள் என்று வாதட நான் வரவில்லை

ஆனால் வீரப்பன் போன்ற நச்சு சக்திகளை உதாரணம் காட்ட வேண்டாம்

வீரப்பன் என்பவன் ஒரு திருடன்

அவனால் பாதிக்கபட்டவர்கல் பலர்

90 91 இல் எமது தமிழ் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்கவில்லை அதை பெரிது படுத்தி சேர்ந்து இருக்க வேண்டிய தமிழ்நாட்டு மக்களை பழிக்கு பழியும் வாங்கச் சொல்லவில்லை, என்ன எந்த ஒரு மூலையில் தமிழனுக்கு ஏதும் நடந்தாலும் சரி நடக்க போகிறது என்றாலும் மனதில் ஒரு கவலையும் கோவங்களுமே ஏன் என்றால் அடக்கு முறைகலும் பழிவாங்கிய அனுபவங்களும் எங்களிடம் இருக்கு அது வேறு எந்த தமிழனுக்கும் வர கூடாது என்ற ஆதங்கமே ,

அத்துடன் உண்மையில் நீர் தமிழ்நாட்டு தமிழன் என்றால் இப்படி சொல்ல மாட்டிர் நீர் இந்திய தமிழ் உறவுகளுக்கும் எமக்கு வீரோத போக்கு வரவேண்டும் என்ற என்னதில் கருத்து எழுதும் ஒரு ஈழத்தமிழ் இனத்தில் பிறந்த துரோகி .

ஆக நடித்து சம்பாதிக்கும் வரையும் தமிழன் தண்ணி எண்டு வந்தால் தமிழனுக்கே தண்ணி காட்டப்படுது இப்படிபட்ட நட்சத்திரங்களால்

ஏன் இந்த கிழட்டு நரி ரஜனி தமிழ்நாட்டில் கோடி கோடியாக உழைத்து கொண்டு தனது மாணிலத்தில் பெரிய பெரிய முதலீடுகள் செய்து வேலைவாய்ப்புக்களை தனது இன மக்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்ற என்னத்தில் என்ன என்ன எல்லாம் செய்தார் இந்த மாராட்டியான்.

நல்ல நகைசுவையாயாக எழுதும் உங்களின் பதிவை கண்டு ரொம்ப சந்தோசம்

சரி நீங்க ரொம்ப ஒழுங்கா..மனசாட்சியை தொட்டு சொல்லவும்

உமக்கு இந்தியாவை பேச யாரு உரிமை கொடுத்தது

எமக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும்

எங்களுக்கு தெரியும் எப்படி சமாளிப்பது என்ரு

உம்ம வேலையை பார்துகிட்டு போனால் நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நகைசுவையாயாக எழுதும் உங்களின் பதிவை கண்டு ரொம்ப சந்தோசம்

சரி நீங்க ரொம்ப ஒழுங்கா..மனசாட்சியை தொட்டு சொல்லவும்

உமக்கு இந்தியாவை பேச யாரு உரிமை கொடுத்தது

எமக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும்

எங்களுக்கு தெரியும் எப்படி சமாளிப்பது என்ரு

உம்ம வேலையை பார்துகிட்டு போனால் நல்லது

மக்கள் நலனை தன் தலையில் தூக்கிட்டுத்திரியும் மக்கள்திலகம் சொல்லுறாருங்கோ.

சோத்துப் பருக்கைக்காய் கூட்டிக் கொடுப்பவனுக்கு கூட உங்கட வசனத்தை பேச உரிமை இருக்குங்கோ. தங்களின் யோக்கியமான வசனங்களைப் பார்த்து றொம்ப நாளாகவே காஞ்சு கொண்டிருக்கிறேன் உங்க வரவுக்கு.

வந்துடீங்க றொம்ப நன்றீங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு றாயாதிறாயா!

உம்போன்ற புத்திக்காறருக்கும் பொதுநலத்துக்கும் தூரம் றொம்ப அப்பு.

மக்கட்பண்பு மரத்த உம்மைவிட, மக்கள்துன்பத்தில் அக்கறை கொள்ளும் உரிமை எமக்கு நிறயவே உண்டு அப்பு.

உம்போன்ற கேவலப்புத்திக்கு மற்றவன் மடியை உருவுவதுதான் முழுநேர வேலையாய் இருக்கும் போது களத்துக்கு கருத்தெழுத வருவது என்ன பௌதிநேர வேலையா?

Edited by தேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்களுக்குப் பிறகு பெங்களூர் சென்றன தமிழக பஸ், லாரிகள்

11busga5.jpg

தமிழக எல்லையான ஒசூரிலிருந்து சனிக்கிழமை கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்.

ஒசூர், பிப். 11: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் கர்நாடகத்தில் கலவரம் மூளக்கூடும் என்ற அச்சத்தால் 6 நாளாக தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ், லாரிகள் சனிக்கிழமை பெங்களூர் சென்றன.

கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, கலவரம் ஆகியவை நடைபெற்றன. எனவே, முன்னெச்சரிக்கையாக தமிழக பஸ், லாரிகள் ஒசூரில் 6 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்தில் மட்டும் தமிழக லாரிகள் பெங்களூர் செல்ல தமிழக போலீஸôர் அனுமதித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தேன்மொழி, ஒசூர் டி.எஸ்.பி. ஷியாமளாதேவி, சேலம் கோட்டப் போக்குவரத்துத் துறை பொது மேலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் சனிக்கிழமை பிற்பகல் ஒசூர் பகுதியிலிருந்து பெங்களூருக்கு ஐந்து, ஐந்து லாரிகளாக முதலில் அனுப்பினர்.

பிறகு டவுன் பஸ்களை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை செல்ல அனுமதித்தனர்.

பிற்பகல் 3.30 மணிக்கு தமிழக அரசு பஸ்களை பெங்களூருக்கு இயக்க அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்த பஸ்கள், லாரிகள் அனைத்தும் கர்நாடகத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் துறையினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரில் பிப்ரவரி 12-ல் பந்த் நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை நள்ளிரவு வரை மீண்டும் போக்குவரத்து தமிழக எல்லையுடன் நிறுத்திக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

கன்னடர்கள் உத்தமர்கள் என்று வாதட நான் வரவில்லை

ஆனால் வீரப்பன் போன்ற நச்சு சக்திகளை உதாரணம் காட்ட வேண்டாம்

வீரப்பன் என்பவன் ஒரு திருடன்

அவனால் பாதிக்கபட்டவர்கல் பலர்

வீரப்பன் குறித்த ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு படலாம். அன்றைக்கு அவன் மட்டும் தான் சந்தனக்கட்டைகளைக் கடத்தினான். ஆனால் இன்று, பல பேர் சந்தனத்தை இல்லாது அழிக்கின்ற நிலமையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு வகையில் தமிழக வனாந்தரத்தைக் காப்பாற்றிய பொறுப்பு அவனைச் சார்ந்ததே!

ஆனால் இவ்விடயத்தில் வீரப்பனை ஒப்பிடவில்லையே! வீரப்பன் கடத்தினதற்காக தமிழர் பழிவாங்கப்படுகின்ற விடயத்தை தான் சுட்டிக்காட்டினேனே தவிர, வீரப்பன் குறித்தான எவ்வித விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. வீரப்பன் திருடன் என்று சொல்லி, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கிய எவ்விடயத்தையும் நியாயப்படுத்த முடியாது. மேலே சொன்னவர் அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை என்று கதை விட்டதால் தான் இதை ஞாபகப்படுத்த வேண்டி ஏற்பட்டது.

என்ன புதுக்கதையோ ?

இதற்க்கு முன்பு இந்த தளத்த்டில் வேறு எந்த பெயறிலும் வந்தது இல்லை என்று சொல்லவந்தேன்.

அப்பு றாயாதிறாயா!

உம்போன்ற புத்திக்காறருக்கும் பொதுநலத்துக்கும் தூரம் றொம்ப அப்பு.

மக்கட்பண்பு மரத்த உம்மைவிட, மக்கள்துன்பத்தில் அக்கறை கொள்ளும் உரிமை எமக்கு நிறயவே உண்டு அப்பு.

உம்போன்ற கேவலப்புத்திக்கு மற்றவன் மடியை உருவுவதுதான் முழுநேர வேலையாய் இருக்கும் போது களத்துக்கு கருத்தெழுத வருவது என்ன பௌதிநேர வேலையா?

சரி உம் கருத்தை படித்து விட்டேன். திரும்ப உங்களுக்கு பதில் எழுதும் அளவிற்க்கு ஒன்றும் இல்லை.

எதோ நீரே உடான்ஸ் அடித்து கொண்டு இருக்கிரீர்கள்.

நல்லாதான் இருக்க படிக்க

இது போல நிறைய எழுதவும்

வீரப்பன் குறித்த ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு படலாம். அன்றைக்கு அவன் மட்டும் தான் சந்தனக்கட்டைகளைக் கடத்தினான். ஆனால் இன்று, பல பேர் சந்தனத்தை இல்லாது அழிக்கின்ற நிலமையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு வகையில் தமிழக வனாந்தரத்தைக் காப்பாற்றிய பொறுப்பு அவனைச் சார்ந்ததே!

ஆனால் இவ்விடயத்தில் வீரப்பனை ஒப்பிடவில்லையே! வீரப்பன் கடத்தினதற்காக தமிழர் பழிவாங்கப்படுகின்ற விடயத்தை தான் சுட்டிக்காட்டினேனே தவிர, வீரப்பன் குறித்தான எவ்வித விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. வீரப்பன் திருடன் என்று சொல்லி, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கிய எவ்விடயத்தையும் நியாயப்படுத்த முடியாது. மேலே சொன்னவர் அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை என்று கதை விட்டதால் தான் இதை ஞாபகப்படுத்த வேண்டி ஏற்பட்டது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபட்டனர். அது உண்மை தான் மறுக்கவில்லை. அதே கர்நாடகாவில் இன்று வரை இந்த நிமிடம் வரை எந்த வித தாக்குதலும் இல்லை. இனியும் நடக்காது.

90களில் இருந்த இந்தியாவிற்க்கும் தற்போதைய இந்தியாவிற்க்கு நிறைய வித்யாசங்கள் உண்டு.

இன வெறி மொழி வெறி குறைந்து வருகிறது.

தவறுகளே நடக்க வில்லை என்று நான் சொல்லவில்லை

தற்போது அது போல ஏதும் இல்லை என்று தான் சொல்கிறேன்.

மற்ற்றபடி பெங்களூரில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். கணிப்பொறி பொறியாளர் முதல் சாதாரண தொழிலாளர் வரை தமிழர்களே. கன்னடர்களின் தலைநகரான பெங்களூரில் தமிழர் ஆதிக்கம் பொறுக்கமுடியாமல் சில அழிவு சக்திகள் இது போல நடந்து கொள்கிறார்கள்

வன்னியில் சிங்களவர்கள் ஆதிக்கம் அதிகமாக போனால் நீங்கள் என்ன செய்வீர்கள். அதே நிலைதான் இங்கும்.

மற்றபடி தமிழர்கள் பாதிக்கபடுகிறார்கள் என்று சில சித்திகரிக்கபட்ட புகைபடங்களை வைத்து பேசுவது சரியாக இருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எங்கிருந்தாலும் பாதிக்கப்படாமல் வாழ வேண்டும் என்பது தான் என் அவாவே தவிர, கன்னடர்களைத் திட்ட வேண்டுமென்றல்ல. கர்நாடகாவில் தமிழர் சந்தோசமாக வாழ்ந்தால் அத எங்களுக்கு மகிழ்ச்சியே! இனித் தமிழர் தாக்கப்படமாட்டார்கள் என்று நீங்கள் உத்தவாதம் கொடுக்கின்றீர்கள். அதை நினைவில் வைத்திருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக எல்லைக்குச் சென்ற 100 தமிழர்கள் கைது

ஒசூர், பிப். 12: ஒசூரைக் காப்பாற்றத் கர்நாடக எல்லையை நோக்கிச் சென்ற தமிழக மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான பிறகு கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட கடிநாடா சங்கா மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகா ஆகிய இரண்டு அமைப்புகள் வியாழக்கிழமை தமிழக எல்லைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தலைவர் மாரிமுத்து தலைமையில் தமிழக - கர்நாடக எல்லையில், "காவிரியை மீட்போம், ஒசூரைக் காப்போம்' என்று கோஷமிட்டவாறே ஒசூர் சூசூவாடியில் இருந்து தமிழக -கர்நாடக எல்லை நுழைவாயில் வரை காலி குடங்களுடன் சென்றனர்.

இவர்கள் அனைவரையும் தமிழகப் போலீஸôர் தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். இவர்கள் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் கூட்டமைப்புத் தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸôர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து அப் பகுதியில் மேலும் தமிழகப் போலீஸôர் குவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒசூர் மனித உரிமை பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி உம் கருத்தை படித்து விட்டேன். திரும்ப உங்களுக்கு பதில் எழுதும் அளவிற்க்கு ஒன்றும் இல்லை.

எதோ நீரே உடான்ஸ் அடித்து கொண்டு இருக்கிரீர்கள்.

நல்லாதான் இருக்க படிக்க

இது போல நிறைய எழுதவும்

உமது பழைய பதிவுகளில் இருந்து சிலவரிகள் இன்னும் என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது, அவை.

நெடுமாறன், வைக்கோ இருவரையும் இந்தியாவின் துரோகிகள் என குறிப்பிட்டுள்ளீர்.

எமது போராட்டம் பற்றி சிங்களவனின் இனவெறி போடும் கூச்சலை விட கேவலமாக இருந்தது உமது கூச்சல்.

இவையே உமது சிந்தனைவாதத்தின் சித்தாந்தத்தை அறிய போதுமானதாக இருந்தது.

வளரும் தமிழ் உணர்ச்சியின் எழிச்சி நிலையை தனக்கு பகையாக கருதும் பிராமணியவாதத்தின் வகுப்புக்குள்ளேயே நீரும் வருகிறீர்,

தமிழ்நாட்டுத் தமிழரின் துன்பத்தில் அக்கறை கொள்ள நீங்கள் யார் என்று எம்மைக் கேட்டீர்?

உமமைப் போலவே சுபவீ யைப் பார்த்து டக்ளஸ் கேட்கலாம் ஈழமக்கள் சார்பாக உதே கேள்வியை.

இந்தக் கேள்வி உமது புத்திசாலித்தனத்தை பறைசாற்றுவதாக வேறு புளகாங்கிதப் படுகிறீரா?

தமிழ் உணர்வை சமூகக் குற்றமாகப் பார்க்கின்ற உம்மிடம், இந்தியத் தேசியவாதம் என்ன சீராட்டப் படுகிறதா?

பிராமணியவாதம் தூக்கிப்பிடிக்கும் இந்தியத்தேசியத்துக்குள்ளே இருப்பது சாதியத்தின் இருப்பை தோளில் சுமக்கின்ற கொள்கைகளேயாகும்.

தவிர நல்ல ஆரோக்கியமான இந்தியதேசியத்தை வளர்த்து அதற்கு உண்மையான விசுவாசத்தை செலுத்துபவர்கள் அல்லர்.

நீர் வேர்முளைத்த பார்ப்பானிய சித்தாந்தமா? இல்லை பார்ப்பானியத்தின் தொழுதுண்ணியா? எதுவாகவும் இருக்கட்டும் ஆனால் ஒன்று. உமது இந்தியதேசியவிசுவாசம் வாந்தியையே எடுக்க வைக்கு உண்மையான இந்தியத்தேசியத்துக்கு.

திருத்த முடியாத கழுதைகளும் அடித்தும் திருத்த முடியாத கழுதைகளும் முதுகெலும்பு இல்லாததுகளும் வாழும் ஊருய்யா அது! :angry:

எக்கேடு கெட்டுப்போனால் நமெக்கென்னய்யா? :P

உதுகளை திருத்தி உண்மைய்யான தழிழராய் மாத்த எனக்கு ஒரு வழி தெரியும்...... :D

சொன்னால் பயங்கரவாதி எண்டுவீர்கள்! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சித் தரும் அடுத்த போராட்டம்...

ஓசூர் கர்நாடகாவுக்கே!’’

p14aiw4.jpg

காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் உஷ்ண அலைகள் கர் நாடகத்தில் இன்னும் தணிவதாகத் தெரிய வில்லை. நாளரு போராட்டம், பொழுதொரு கோஷம் என வக்கீல்கள், டாக்டர்கள், விவசாயிகள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என ஆளாளுக்கு போராட்ட பதாகைகளுடன் பெங்களூரைத் தாளித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

இப்படி தினம்தோறும் உதிக்கும் இன்ஸ்டன்ட் கோஷங் களில் லேட்டஸ்டாக முழங்கப்பட்டிருக்கும் ஒரு கோஷம், தமிழக மக்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது.

ஓசூரிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான ஜூஜுவாடி என்ற இடத்தில் ‘கன்னட ஜக்குறுதி வேதியா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 9-ம் தேதி ஊர்வலம் நடத்தினர். அதில், ‘காவிரி மட்டுமல்ல... ஓசூரும் எங்களுக்கே சொந்தம்’ என அழிச்சாட்டிய கோஷம் எழுப்பியிருக்கின்றனர். கர்நாடகப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளியிலிருந்து எல்லைப் பகுதியான ஜூஜுவாடியை நோக்கி உடம்பில் சட்டை யில்லாமல் கையில் அமைப்பு கொடியை ஏந்தியபடி தலைவர் மஞ்சுநாத தேவா என்பவர் தலைமையில் இந்த ஊர்வலம் நடந்தது.

p15bxg7.jpg

‘கருணாநிதியிடம் விலைபோன காங்கிரஸே ஒழிக..! கேட்காதே... கேட்காதே... காவிரியைப் பிச்சை கேட்காதே..! எங்கத் தண்ணி எங்களுக்குதான்..!’ என்ற கோஷங்களைக் கன்னடத்தில் முழங்கியபடியே ஊர்வலம் நகர்ந்தது. ஜூஜுவாடிக்கு ஊர்வலம் வந்ததும் கர்நாடக போலீஸார் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், அதையும் மீறி ஊர்வலம் வந்தவர்கள் தமிழக எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த தமிழக போலீஸார் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததால் வந்த கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. தமிழகப் பகுதிக்குள் நுழைந்த வர்கள், ‘காவிரியும் எங்களுக்குத்தான்.. ஓசூரும் எங்களுக்குத்தான்..!’ என கோஷமிட்டனர். ஊர்வலத்தில் பேசிய மஞ்சுநாத தேவா, ‘‘காவிரித் தண்ணியை எங்க உசிரே போனாலும் கொடுக்க மாட்டோம். காவிரி கர்நாடகாவுக்கு மட்டும்தான் சொந்தம். போனா போகுதுன்னு ஓசூரை இத்தனை நாளா விட்டு வச்சிருந்தோம். இனி அதையும் விட மாட்டோம்...’’ என்று குதிக்க... இருமாநில போலீஸாருக்கும் அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இந்த விஷயம் தெரிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி-யான தேன்மொழி தலைமையில், தமிழக எல்லைப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்தப் புது கோஷம் பற்றி கொதிப்புடன் பேசினார் ஓசூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான கோபிநாத். ‘‘ஓசூர்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழி பேசும் மக்களும் இருக்காங்க. இங்கே எல்லோரும் ஒற்றுமை யோடும் சகோதரத்துவத்தோடும்தான் இருக்கோம். யாரையும் யாரும் பிரிச்சி பார்க் கிறது இல்ல. இதே பெங்களூர்ல எங்க தமிழ் சகோதரர்கள் தாக்கப்படுறாங்க. தமிழ்ப் படங்களை ஓட விட மாட்டேங்குறாங்க. கேபிள்ல தமிழ் சேனலை கட் பண்றாங்க. ஆனா ஓசூர்ல இன்னைக்கு வரைக்கும் கன்னடப் படம் ஓடிட்டு இருக்கு. கன்னட சேனல் தெரிஞ்சிட்டு இருக்கு. எங்களுக்கு இருக்கிற பெருந்தன்மை ஏன் அவுங்களுக்கு இல்லாம போச்சி..? இப்படிப்பட்ட நிலையில, ஓசூர் கர்நாடகாவுக்கு சொந்தம்னு சிலர் கூச்சல் போட்டுட்டுப் போயிருப்பது வேதனையா இருக்கு. ஓசூர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தொழில் நகரம். இதை யாருக்காகவும் எதுக்காகவும் நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுக்கு மேல இந்த விஷயத்துல கர்நாடகா பக்கமிருந்து ஏதாவது சத்தம் வந்துச்சுன்னா, அதை எதிர்த்துப் போராட முதல் ஆளா நானே நிற்பேன்’’ என்றார் சூடாக.

p14gq5.jpg

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்தோஷ்பாபுவிடம் இது பற்றி பேசினோம். ‘‘ஊர்வலத்துல வந்தவுங்க உணர்ச்சி வேகத்துல ஏதேதோ பேசிருப்பாங்க போலிருக்கு. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கத் தேவை இல்ல. அவுங்க சொல்றதால ஓசூர் கர்நாடகாவுக்குச் சொந்தம்னு ஆயிடுமா என்ன..? எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் மாவட்ட காவல்துறை மூலமா செஞ்சிருக்கோம். ’’ என்றார்.

ஒரு பிரச்னை முடிவதற்கே இன்னும் வழி தெரியவில்லை. அதற்குள் அடுத்த விவகாரத்துக்கு அஸ்திவாரம் போட்டி ருக்கிறார்கள் கர்நாடகாக்காரர்கள். இதெல் லாம் எங்கே போய் முடியப் போகிறதோ..?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 நாள்களுக்குப் பிறகு தமிழக பஸ்கள் பெங்களூர் செல்கின்றன

ஒசூர், பிப். 16:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானதில் இருந்து, தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக பஸ்கள் அனைத்தும், 11 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் கர்நாடகத் தலைநகரான பெங்களூருக்குச் செல்கின்றன.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு பிப்.5-ல் வெளியான பிறகு, கர்நாடக மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் தமிழகத்தில் இருந்து சென்ற லாரிகள் மற்றும் பஸ்கள் உள்பட தமிழக பதிவுஎண் கொண்ட அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு வாரத்திற்கும் மேல் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை இரவோடு இரவாக கர்நாடக மாநிலத்திற்குத் தமிழக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட அமைப்புகள் பிப்.12-ல் முழு கடை அடைப்பு நடத்தியதால் மீண்டும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன.

மறுநாள் கன்னட நடிகைகள் பெங்களூரில் ஊர்வலம் சென்றதால் தமிழக வாகனங்கள் தொடர்ந்து தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன.

கடந்த 11 நாள்களாக தமிழக வாகனங்கள் பெங்களூருக்குச் செல்லாமல், தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டதால் தமிழக போக்குவரத்துத் துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் தமிழக எல்லையான ஒசூரில் இருந்து கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருக்கு தமிழக பஸ்கள் செல்லத் துவங்கின.

இதனால் தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நன்றி தினமணி.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக தமிழர்களுக்காக வைகோ உண்ணாவிரதம்

பிப்ரவரி 17, 2007

சென்னை: கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் எதிரொலியாக கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில் கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யக் கோரி கர்நாடக அரசு, மத்திய அரசு ஆகியவற்றை வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வைகோ தலைமையில் போராட்டம் நடக்கிறது. நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் பாதக அம்சங்களை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.

தமிழக மக்களை இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து தமிழகத்தின் உரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார். கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையிலும் கூட, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது கண்டனத்துக்குரியது.

1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது, இதேபோல தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. பல நூறு பேர் கொல்லப்பட்டனர். அதே நிலை இப்போதும் வந்து விடக் கூடாது என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2007/02/17/vaiko.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.