Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்

Featured Replies

mavai-965s1-720x480.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா மாகாந்தி சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த சிலை கடந்த 26ஆம் திகதி இரவு அடையாளந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தவிடம் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி இந்திய போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து விடுதலை உணர்வூட்டியவர் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா,

மனிதகுல விடுதலைக்காகவும் இந்தியாவின் விடுதலைக்காகவும் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அஹிம்சை வழியில் போராடிய உலகின் மிக வலிமை மிகுந்த போராட்ட தத்துவத்தை உருவாக்கிய, உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளமைக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு மானிடனும் இச்செயலை செய்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன், இச்செயலுக்கு யாரும் எந்த காரணமும் கூறமுடியாது எனவும் இச்செயலானது மனித குலத்தின் ஒரு இழிவுச்செயலாகும் எனவும் சாடியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தானறிந்தது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரியிருந்ததாக குறிப்பிட்டுள்ளதுடன்,

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் மகாத்மாகாந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.

அத்தீர்மானத்தின்படி நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை உடைத்தமையின் உள்நோக்கமானது மூடச்செயலாகும் என்பது வெளிப்படை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மாக்களின் முன், வீர மண்ணில் இச்செயல் நடைபெற்றமை பாரதி பாடியமை போன்று 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்' என்று கண்ணீர் விடத்தான் வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilkingdom.com/2017/01/34.html

19 minutes ago, Athavan CH said:

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் மகாத்மாகாந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் போன்றவர்கள் தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்த சேவைக்காக அவர்களுக்கு சிலை வைப்பதில் ஒரு நியாயம் இருக்குது. காந்தி தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் என்னத்த வெட்டிப் புடுங்கினவர்.

19 minutes ago, Athavan CH said:

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

தியாக தீபம் தீலீபன் அண்ணாவின் நினைவிடம் உடைக்கப் பட்டபோது, நீங்கள் எல்லாம் என்ன புளியங்காய் சப்பிக்கொண்டோ இருந்தியள். 

இந்தியர்களே காந்தியை மதிக்கவில்லை. பிறகு என்னத்துக்கு முல்லைத்தீவில் சிலை 

Edited by Surveyor

5 hours ago, Athavan CH said:

காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா

மாவையின் தமிழின விரோத எசமானார்களின் ஏமாற்றுச் சின்னங்களாகிய சிலைகள் உடைக்கப்படும் போது மாவை வேதனை அடைவது எதிர்பார்க்கக் கூடியதே!

உடைக்கப்பட வேண்டிய சிலை! உடைத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிலை வைக்கும் யோசனை வரும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டியவர் நீங்கள்.

வரவு செலவு திட்டத்தில் பா.உறுப்பினர் ஒருவருக்கு ஒதுக்கப்படும் நிதி அவரது சொந்த பணமா அவர் நினைத்தபடி செலவு செய்வதற்கு....,

எமது மக்களின் தேவைகள் மலை போல் குவிந்துள்ள போது  அதற்கு கிடக்கும் நிதி வளமோ மிக மிகக் குறைவு , இந் நிலையில் வட , கிழக்கு மாகாணங்களை போரால் மிகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்து, அம் மாகாண பா.உறுப்பினர் களுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்குமாறு அரசை கோர வேண்டிய நீங்கள் , அதைச் செய்யாது கிடைக்கும் அந்த அறப நிதியில் சிலை அமைப்பது எவ்வளவு கேவலம்.....

எமது தாயகத்தில் பெண்களை தலைமையாக கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன , அவர்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்க மிகவும் கஸ்ட்டப் படுகிறார்கள், பல சிறுவர்கள் தமது பாடசாலை கல்வியைக் கைவிட்டு கூலி வேலைக்குப் போகிறார்கள்....., இந்த குடும்ப தலைவிகளை ஒன்றினைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியாதா?
 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  1 அல்லது 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக் கொடுத்து அதன் மூலம் வருமானங்களைப் பெற்று அவர்களுக்கு உதவ முடியாதா? 

ஒரு பா.உறுப்பினரின் நிதி போதாவிடின் , மற்றய பா.உறுப்பினர்களின் நிதிகளையும் சேர்த்து இவ்வாறன திட்டங்களை முன்னெடுக்கலாமே.....

வங்க தேசத்தினைச் சேர்ந்த  பேராசிரியர் முகமது யூனுஸ் வறிய பெண்களை மையப்படுத்தி இப்படியான மகளிர் சுய உதவிக் குழுக்கள் , சிறு கடன் திட்டங்களை நடைமுறைப் படுத்தி தானே பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தினார், அதனால் தானே அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.

 மிகவும் நசுக்கப்பட்ட , பொருளாதர நிலையில் பின் தங்கிய ஒரு இனத்தின் பிரதிநிதிகளிடமிருந்து இப்படியான சிந்தனகள் ஊற்றெடுக்காமல் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் வக்கிரம் எப்படி தோன்ற முடியும்

சில வருடங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டது
கணவனைத் தொலைத்த பெண் ஒருவர் எந்த நிவாரணமும் இன்றி ,கட்டாயம் வேலைக்கு போய்த்தான் குடும்பத்தினை காக்க வேண்டிய நிலையில் கூலி வேலைக்கு செல்ல , தனது மகளை பாதுகாப்புக்காக விடப்பட்ட இடத்தில் , அச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த்ப் பட்டாள்....., ஒரு பக்கம் காணாமல் போன கணவன் , மறுபுறம் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி ... யோசித்துப் பாருங்கள் எவ்வளவு கொடுமை...... 
 இப்படியான குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு சிறுவர் காப்பகம் ஒன்றை உருவாக்கி , வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக விடக்கூடிய சூழலை உருவாக்கலாமே....

அண்மையில் எனது நண்பர் ஒருவர் ஊரிற்கு சென்றிருந்த போது..... அவர் நின்ற வீட்டில் இரு பெண் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து  வீட்டிற்கு வந்தவுடன் அவசரப் பட்டு டொய்லெட்டுகு ஓடுவார்களாம்.... இதைத் தொடர்ந்து அவதானித்த நண்பர் ,பெற்ரோரிடம் விசாரித்த போது அவர்களின் பாடசாலையில் பெண்களுக்கென பிரத்தியோகமான மலசல கூட வசதி இல்லை எனச் சொன்ணாராம்....... எவ்வளவு கொடுமை வளர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் மலசல கூட வசதி இல்லை, ஏன் இந்த பா.உறுப்பினர்களால் இப்படியான தேவைகளை நிறைவேற்ற முடியாதா..... என்ன மண்ணாங்கட்டிக்கு காந்தி சிலை?

உங்களைப் பத்தி சுருக்கமாகக் கூறின் 
நீங்கள் எல்லாரும் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள்

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

மாவை... சுகமில்லாமல், ஆஸ்பத்திரியில்.... உள்ளார் என்று செய்தி வந்தது.
காந்திக்கு... கருத்து சொல்ல, துண்டு வெட்டிக் கொண்டு வந்து விட்டாரா  ?

  • தொடங்கியவர்
On 16.1.2017 at 5:12 AM, தமிழ் சிறி said:

மாவை... சுகமில்லாமல், ஆஸ்பத்திரியில்.... உள்ளார் என்று செய்தி வந்தது.
காந்திக்கு... கருத்து சொல்ல, துண்டு வெட்டிக் கொண்டு வந்து விட்டாரா  ?

இல்லை சிறி , இது சுகமில்லாமல் போவதற்கு முன்னர் வந்த செய்தி,

தமிழ் எம்.பி கள் ,மற்றும்  மாகாணசபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மிகவும் அலட்சியமாகவே உள்ளனர், அவர்கள் அங்கு கிடைக்கும் வளங்களைக் கொண்டே பல காரியங்களைச் செய்யலாம்......, 
ஆனால் அவர்கள் தங்களை வளப்படுத்துவதே குறியாக உள்ளனர்...
இங்கு எங்களுக்கு பல விடயங்கள் தெரிய வருவதில்லை

கடந்த வருடம் ஜப்பானின் உதவித் திட்டங்களுக்கு பொறுப்பான தூதுக்குழு ஒன்று யாழ் சென்று மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்து நீங்கள் என்ன உதவியை எதிர்பார்க்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளனர், அதற்கு இவர்கள் தங்களுக்கு வாகனங்கள் தரும் படி கேட்டுள்ளார்கள்..... (என்ன பிறப்புகளோ ....) 
நிலத்தடி நீர் மாசடைவினால் பாரிய பிரச்சினையை எதிர் கொள்ளும் யாழ்ப்பாணத்திற்கு  ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலயத்தினை அமைத்துத் தரும்படி கேட்டிருக்கலாம்.... என்ன செய்வது எமது தலை விதி அப்படி.....
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.