Jump to content

சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள்


வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது:
நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்." 
நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?" 
நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்."
நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்"    
இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. 

அதைவிட இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் வரும்  நிகழ்ச்சிகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழிக் கலப்பு சர்வ சாதாரணம். அவர்கள் எங்கே தமிழில் பேசுகிறார்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்  ஆங்கில இந்திச் சொற்களுக்கு தமிழ்போன்ற உச்சரிப்புகளையும், தமிழ் வேற்றுமையுருபுகளையும் கொடுத்து, தமிழினுள் உள்வாங்கி, தமிழ்மொழி வளர இடையறாது பாடுபடுகிறார்கள்.   

தொலைக்காட்சியில் சமையல் பற்றிய நிகழ்ச்சியொன்றைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினரொருவர், "இவங்கள் சொல்லுற சாமான்களை வாங்க இந்தியாதான்  போவேணும் போலயிருக்கு" என்றார். எந்தப் பொருட்களை வாங்கவென்று கேட்டால் "தனியா, லவங்கம், ..." என்று பட்டியல் வந்தது.   

அவரைப் போன்றவர்களுக்காகத் தொகுத்ததே இந்தக்குறிப்பு. முதலில் தமிழ்ப் பெயரும் (இலங்கை / இந்திய தமிழ் பேச்சு வழக்குகளில்), அடுத்ததாக ஆங்கிலப் பெயரும், அடைப்புக் குறிகளினுள் இந்திப்பெயர்களும் தரப்பட்டுள்ளன.  

விதைகளும், பழங்களும் - Seeds and Fruits

கடுகு - Mustard seeds (Rai / Sarson)
சின்னச்சீரகம் / சீரகம் - Cumin seed (Jeera)
பெருஞ்சீரகம் / சோம்பு - Fennel seed (Saunf/Sanchal)
வெந்தயம் - Fenugreek seeds (Methi)
கொத்தமல்லி / தனியா - Coriander seeds (Dhaniya)
மிளகு - Black Pepper Corns / Pepper (Mirchi)
ஏலம் / ஏலக்காய் - Cardamom / Green Cardamom (Elaichi)
கறுப்பு ஏலக்காய் - Black Cardamom (Kali Elaichi)
ஓமம் - Carom seeds / Bishop's Weed seeds (Ajwain)

கருஞ்சீரகம் - Black Cumin seed
தமிழில் கருஞ்சீரகம் எனும் பொதுப் பெயரால் இரண்டு முற்றிலும் வேறுபட்ட தாவரங்களின் விதைகள் அழைக்கப்படுகின்றன. அவையாவன: Nigella sativa மற்றும் Bunium persicum (Syah Jeera).

சாதிக்காய் – Nutmeg (Jaiphal)

சாதிப்பூ - Mace (Javitri)
உண்மையில் இதுவொரு பூவல்ல, மாறாக பழத்தினுள் சாதிக்காய் விதையைச் சூழ்ந்திருக்கும் உறைபோன்ற மெல்லிய பகுதியே சாதிப்பூ என அழைக்கப்படுகின்றது.

எள் - Sesame seeds (Til)
கசகசா - Poppy seeds (Khus Khus)
அன்னாசி மொக்கு / மகம்பூ - Star anise (Chakra phool)
செத்தல் மிளகாய் - Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)
பச்சை மிளகாய் - Green chili pepper (Hari Mirch)
சாம்பார் மிளகாய் - Sambar Chilli
புளி / பழப்புளி - Tamarind (Imli)
எலுமிச்சை / தேசிக்காய் - Lime (Nimbu)
கொறுக்காய்ப்புளி - Malabar tamarind / Brindall berry (Kudampuli)
நெல்லிக்காய் / முழுநெல்லிக்காய் - Indian gooseberry (Amla)
கடுக்காய் - Terminalia chebula (Harad / hime)
மாதுளம் விதை - Pomegranate seed (Anardana)
சீமைச் சோம்பு - Caraway Seed (Siya zira)
கண்டந்திப்பிலி - Long pepper (Pippali)
வால்மிளகு - Cubeb
அசம்டவோமன் - Celery seed (Ajmud)

பூக்களும் மொட்டுக்களும் - Flowers and Buds

கிராம்பு / லவங்கம் - Clove (Lavang)
குங்குமப்பூ - Saffron (Kesar)

பட்டைகளும் வேர்களும் கிழங்குகளும் - Barks, Roots and Rhizomes

கறுவா / இலவங்கப்பட்டை / பட்டை - Cinnamon (Dalchini)
இஞ்சி - Ginger (Adrak)
வோ்க்கம்பு / வோ்க்கொம்பு / சுக்கு - Dried ginger (Sonth)
மஞ்சள் - Turmeric (Haldi)
வசம்பு - Sweet Flag
அதிமதுரம் - Licorice (Jethimadh, Valmi)
பிசின்களும் பாசிகளும் - Resins and Lichens
பெருங்காயம் - Asafoetida (Hing)
கல்பசி - lichen (Pathar Ka Phool)

இலை வகைகள் - Leaves

கருவேப்பிலை - Curry leaf / Sweet neem leaf (Kadipatta)
கொத்தமல்லி கீரை - Coriander leaf (Dhaniya)
வெந்தய கீரை - Fenugreek leaf (Kasoori Methi leaves)
புதினா இலை - Mint leaf (Pudina)
(பட்டை) - Bay leaf (Tej Patta)

பூண்டு வகைகள் - Bulbs

உள்ளி / வெள்ளைப் பூண்டு / பூண்டு – Garlic (Lahsun)

சின்ன வெங்காயம் / ஈருள்ளி (கன்னடம்) - Baby Onion, Red Onion, Shallot
சின்ன வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் வகைகள்: வல்லாரை 60, வல்லாரை 90, வேதாளம், யாழ்ப்பாண உள்ளூர் வகை.
பெரிய வெங்காயம் / பம்பாய் வெங்காயம் - Big onions, Red/purple Onion
பெரிய வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.

பருப்பு வகைகள் - Nut Varieties

முந்திரி - Cashew nut
பாதாம் - Almond
வேர்க்கடலை / நிலக்கடலை / கச்சான் / மணிலாக்கொட்டை / மல்லாக்கொட்டை- Peanuts

தூள் வகைகள் - Powder Varieties

வறுத்த கறித்தூள் - Roasted Curry powder (Sri Lankan)
கறித்தூள் - Curry powder 
மிளகாய்த் தூள் – Chilli powder
குடை மிளகாய்த்தூள் - Paprika powder
மாங்காய்த்தூள் - Sour mango powder (Aamchur)
கரம் மசாலா - Garam Masala
மிளகு, கிராம்பு, கறுவா, சின்னச்சீரகம், கருஞ்சீரகம், பச்சை ஏலக்காய் மற்றும் கறுப்பு ஏலக்காய் ஆகியவற்றின் கலவை வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.

ஏனையவை - Others

உப்பு / கறியுப்பு - Salt (Namak)
வெல்லம் / சர்க்கரை (இலங்கை பேச்சுவழக்கில்) / கருப்பட்டி - Jaggery (Gur)
பன்னீர் - Rose water (Gulab Jal)
வினாகிரி - Vineger (Sirka)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செத்தல் மிளகாய் / காய்ந்த மிளகாய் / வர மிளகாய்  - Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.