Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா கொலை வழக்கு - 10ஆவது நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு

Featured Replies

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 ஆவது நபரின் விளக்கமறியலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 12 நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 2015 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 ஆவது எதிரியாக கலகே பேபிகே கமகே ராஜ்குமார் என்ற நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனால் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நிசாந்த் நீதிமன்றில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு 30ஆம் பிணைச்சட்டம் 17 ஆம் பிரிவின்படி 10 ஆம் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை இன்றிலிருந்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

எனினும் இது தொடர்பில் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவிக்கையில்,

“நான் குறித்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. அத்தருணத்தில் நான் காரைநகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றியிருந்தேன்.

வித்தியாவின் 45ஆம் நினைவு தினத்தின் போது பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றேன் அத்தருணத்திலேயே புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டேன்.

இன்று நீதிமன்றில் வழக்கு உள்ளது என எனக்கு தெரியாது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் நான் வினவியபோதும் அவர்கள் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கவில்லை அதனால் சட்டத்தரணிக்கோ எனது வீட்டாருக்கோ தெரியப்படுத்தவில்லை.

இதனால் விளக்கமறியலை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் சந்தேக நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் விளக்கமறியலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடித்ததுடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

http://www.tamilwin.com/statements/01/130496?ref=home

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு..! சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/130665?ref=morenews

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை - சுவிஸ்குமார் உள்ளிட்டோர் சிறைச்சாலையில் ஆதிக்கம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் உள்ளிட்டோர் சிறைச்சாலைகளுக்குள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அங்கு செல்லும் கைதிகளை மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேகநபர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிறைச்சாலைக்குள் ஏனைய கைதிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய குற்றச் செயல்கள் செய்து சிறைக்குச் செல்லும் கைதிகளை “தாம் சொல்வதை கேட்டு செய்ய வேண்டும்” என பணிப்பதாகவும், அவ்வாறு செய்யாதவர்களை மிரட்டுவதாகவும், தமக்கு கட்டுப்படாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை காவலர்களுக்கு தெரியப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு சுவிஸ்குமார் உள்ளிட்டோர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் இது குறித்து மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/statements/01/130617?ref=home

வழக்கு இழுக்க இழுக்க குற்றவாளிகளுக்கு சாதகமான நிலைமைகள் உருவாக்கி ஒவ்வொருவரும் நான் அப்போ அங்கு இருந்தன் சாப்பிட்டுக்கொண்டு இருப்பன் என்று தப்பிக்க சாட்ச்சிகளை ஜோடிப்பார்கள் இவ்வளவு நாள் ஆகிவிட்டுது அரசியல் செல்வாக்கு எல்லாம் சேர்த்து அந்த பிஞ்சு அனுபவித்த மரண வலிகளை மறக்க பண்ணிடும்போல் உள்ளது அங்குள்ள நிலைமை ஆனால் என்னமோ தெரியலை இந்த பெண்ணியவாதிகள் என்போர் யாரப்பா ?

அவை எண்ணத்துக்கு இருக்கினம் கனடாவில் சுளகு டான்ஸ் ஆட்டவும் லண்டனில் ஓவரா மேக்கபோட்டு மற்றவையலை வெருட்டவும் தானே இந்த சம்பவம் இணுவிலை மகளிர் பள்ளிகூட பிரச்சினை க்கு எல்லாப்பக்கமும் பொத்திக்கொண்டு இருக்கினம் ஏனையா ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.