Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சி அரசின் எதிர்காலம்

Featured Replies

நல்லாட்சி அரசின் எதிர்காலம்

02-3473cae707ed1cd73d2e9590faef87f9159db9a5.jpg

 

" ஒரு­புறம் இப்­போக்­குகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தேசிய  அர­சாங்­கத்தின் உரு­வாக்­கிகள் என்று கூறிக் கொள்­கின்­ற­வர்கள் தமது சீற்­றத்­தையும் அடிக்­கடி இந்த அர­சாங்­கத்தின் மீது காட்டி வரு­வதை நாம் அவ­தா­னிக்க முடி­கி­றது. உதா­ர­ண­மாக ஒற்­றை­யாட்சி முறை­யி­லான தீர்வை நாம் ஏற்கத் தயா­ரா­க­யில்லை. இணைப்­பற்ற ஒரு அர­சியல் தீர்வு அர்த்­த­மற்­றது என்ற தமது தீர்க்­க­மான  முடி­வு­க­ளையும் சொல்லி  வரு­கின்­றார்கள். ஆனால் ஜனா­தி­ப­தி­ய­வர்கள் தமிழ்  மக்­களின் நீண்­ட­காலப்  பிரச்­சி­னைக்கு அர­சியல்  சாச­னத்தின் மூலம் தீர்­வு­காண வேண்­டி­யது எனது தலை­யாய பொறுப்பு. அதி­லி­ருந்து நான் விலகிப் போக­மாட்டேன் என சத்­தி­ய­வாக்கு செய்து  வரு­கின்ற போதும் அவரின் தெளி­வற்ற கருத்­துக்­களால் தமிழ் மக்கள் குழம்பிப் போகின்ற நிலையே  காணப்­ப­டு­கி­றது."

 

 

புதிய ஆண்டின் அர­சியல் போக்கு குறித்தும் அதன் யதார்த்த நிலை­கு­றித்தும் நண்­ப­னொ­ரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்த போது அர­சி யல் ஆர்வம் கொண்ட அந்த நண்பர் ஒரு புதி­ன­மான அதே­வேளை ஆச்­ச­ரி­ய­மான கருத்­தொன்றை வெளி­யிட்டார்.

கட்­சி­களும் தலை­வர்­களும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை உடனே நடத்­துங்கள் என அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் சிலரோ மாகாண சபைகள் கலைக்­கப்­பட்டு தேர்தல் நடக்­கப் ­போ­கி­றது என ஆவ­லோடு எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். போகிற போக்­கையும் அர­சியல் சூழ்­நி­லை­க­ளையும் பார்த்தால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகா­ண ­சபைத் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­னமே இன்­னு­மொரு பொதுத்­ தேர்தல் வந்­து­வி­டுமோ என்று சந்­தே­கம் உண்­டா­கி­றது. இலங்­கையின் அர­சியல் போக்­கு­களை நாடி பிடித்­துப் ­பார்ப்­போ­மானால் பொதுத்­ தேர்­த­லொன்று வந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை என்ற நகைச்­சுவை ததும்ப அந்த நண்பர் கூறினார்.

நண்­பனின் கருத்­துக்கள் நகைச்­சுவை கொண்­ட­தாக இருந்­தாலும் இன்­றைய அர­சியல் சூழலை ஆழ­மா­கவும் தேசிய அர­சாங்­கத்தை நெருங்கிக் கொண்­டி­ருக்கும் சவால்­க­ளையும் சுட்­டிக்­ காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

தேசிய அர­சுக்குள் இணைந்­தி­ருக்கும் இரு­ பி­ர­தான கூட்­டுக்­ கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் பனிப்போர் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரசின் மீது கொண்­டி­ருக்கும் அதி­ருப்­திகள். கூட்டு அர­சாங்­கத்தை உரு­வாக்கி தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தமது சமூகம் சார்ந்த பிரச்­சி­னைக்கும் தீர்­வு­காண எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும் சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்­களின் மன­மு­றி­வு­களும் நம்­பிக்­கை­யீ­னங்­களும் மஹிந்த ராஜபக் ஷவின் சவால், அர­சுக்கு எதி­ராக இன்று எழுந்­து ள்ள போராட்­டங்கள் ஜனா­தி­ப­தி­ய­வர்கள் கருத்­துப்­படி புதிய அர­சியல் அமைப்­புக்கு பாரிய முட்­டுக்­கட்டை ஏற்­பட்டு வரு­கின்­றன என்ற கூற்று என ஏரா­ள­மான விட­யங் கள் தேசிய அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி நிலை­களை உரு­வாக்கி வரு­கின்றது. கூட்டு அர­சாங்­கத்­துக்கு அல்­லது தேசிய அர­சாங்­கத்­துக்கு சாவு­மணி அடிக்கும் சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கி ­வ­ரு­வ­துடன் 2017 ஆம் ஆண்டை ஒரு சவால் ஆண்­டாக மாற்­றி ­வி­டுமோ என்ற விமர்­ச­னங்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இன்னும் குறிப்­பாகக் கூறப் ­போனால் தேசிய அர­சாங்­கத்தின் கூட்டு நிலைகள் முறி­வ­டைந்து தேசிய இரு­கட்­சிகள் தங்கள் போக்கில் பிரிந்து சென்று புதிய தேர்தல் ஒன்­றுக்கு செல்ல வேண்­டிய சூழ்­நி­லையே இன்று கருக்­கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது என்ற நிலை­மை­யையே அனு­மா­னிக்க முடி­கி­றது.

புரை­யோ­டி­யுள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணவே தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். எனவே புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கி­ விட்டு அவ­சி­ய­மானால் கூட்டு அர­சாங்­கத்தில் உள்ள நாம் வெவ்­வேறு திசை­களில் வில­கிப் ­போவோம். முடி­யு­மானால் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான அரசை அவர் கள் அமைக்­கட்டும். ஐ.தே.கட்­சி­யினர் முடி­யு­மானால் தங்கள் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை அமைக்­கட்டும் வேண்­டு­மானால் புதிய பொதுத்­தேர்­த­லுக்கு செல்வோம். ஆனால் இன்­றைய நிலையில் தேசிய அரசு நீடிக்க வேண்டும் அதை உடைக்க முன்னாள் ஜனா­தி­ப­திக்கு உறு­து­ணை­யாகப் போகா­தீர்கள் என தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் நல்­லி­ணக்கம் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோகணேசன் தெரி­வித்த கருத்து இன்றைய இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களை நாடி­பி­டித்­துக் ­காட்டும் எச்­ச­ரிக்­கை­யா­கவே காணப்­ப­டு­கி­றது.

தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்ல புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மாத்­தி­ரமே செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த இரண்டு வரு­டங்­களும் நாளைய 08 ஆம் திக­தி­யுடன் (08.01. 2017) முடி­வுறு தருவாயில் காணப்­படும் நிலையில் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்­வதா அல்­லது இடையில் முறித்துக் கொள்­வதா என்ற தளம்பல் நிலை­களும் அர­சுக்குள் காணப்­ப­டு­கி­றது என்ற கருத்தும் ஒரு சாரா­ரிடம் விர­வி­ வ­ரு­கின்ற சூழ்­நி­லையில் தேசிய அர­சாங்­கத்­திற்கு சவா­லுக்கு மேல் சவால்கள் விடப்­பட்டு வரு­கின்­றன என்­பது உண்­மையே.

உதா­ர­ண­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அவர்கள் அண்­மையில் இப்­ப­டி­யொரு கருத்தை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். தற்­போ­தைய அர­சுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருப்­பினும் அரசின் தற்­கால செயற்­பா­டு­களைப் பார்க்கும் போது நிலை­மைகள் மாறி ­விடும் வாய்ப்பே தெரி­கி­றது. எனவே 2017 ஆம் ஆண்டு இந்த ஆட்­சியை மாற்­றி­ய­மைப்பேன். காரணம் இரு­ பி­ர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முர ண்­பா­டுகள் முற்­றி­யுள்­ளன.

அடுத்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் சுதந்­தி­ரக்­ கட்சி பிள­வு­பட்டுப் போய்­விட்டால் சுதந்­தி­ரக் ­கட்­சிக்கு பாரிய பல­வீனம் ஏற்­படும். இதை வாய்ப்­பாகக் கொண்டு ஆட்­சியைக் கவிழ்க்க முடி­யு­மென மஹிந்த ராஜபக் ஷ சவால் விட்­டி­ருப்­பதைக் காணு­கின்றோம்.

மேற்­படி சவாலை ஏற்றுக் கொண்­ட­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யான் (16.01.2017) ஒரு­வாரம் வெளி­நாட்­டுக்குச் செல்­ல­வுள்ளேன் இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி முடி­யு­மானால் மஹிந்த ராஜபக் ஷ அவர்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்துக் காட்­டட்டும் என பதில் கூறி­யுள்ளார். இதே­வளை நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள சர்ச்­சை­யான நிலைமை தொடர்பில் விசேட செயற்­குழுக் கூட்­ட­மொன்றை ஐ.தே.கட்­சி­யினர் கடந்த நான்காம் திகதி (04.01.2017) கூட்­டி­யி­ருந்­தமை, இதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் ­கூட்டம் நேற்­றைய தினம் (06.01.2017) கூட்­டப்­பட்­டி­ருந்­த­மையும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

வருட இறு­தியில் பல்­வேறு விட­யங்கள் தாறு­மா­றாக நடந்­தி­ருப்­பது அர­சியல் நிலை­மை­களை படம் பிடித்துக் காட்­டு­வ­ன­வாக இருக்­கின்­றது. ஐ.தே. கட்­சியின் பின்­வரிசை ஆச­னக்­கா­ரர்கள் 25 பேர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் சந்­தித்து (30.12.2016) பின்­வரும் குறை­பா­டு­களை தேசிய அர­சாங்­கத்தின் மீது முன்­வைத்­துள்­ளனர். தேசிய அர­சாங்­கங்­கத்தை உடைக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்கள் சிலர் அண்மைக் கால­மாக கடு­மை­யான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள். இது தேசிய அர­சாங்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருப்­ப­துடன் மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் இருக்கும் பொது எதி­ர­ணியை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யாக அமைந்து காணப்­ப­டு­கி­றது என ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலை­மை­களை ஆராய்ந்து பார்க்­கின்ற போது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் பெறும் இரு­பி­ர­தான கட்­சி­களின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் பனிப்போர் ஒன்று நிலவி வரு­வதை அனு­மா­னிக்க முடி­வ­துடன் அறி­யவும் முடி­கி­றது. இன்னும் தெளி­வாகக் கூறப் ­போனால் அமைச்­சர்­க­ளான எஸ்.பி.திஸா­நா­யக்க, டிலான் பெரேரா போன்­ற­வர்­களின் கூற்­று­களும் கருத்­துக்­களும் உள்­ளக நிலை­மை­களை மிக மோச­மாகி வரு­கின்­றன என்பதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

இது தொடர்­பாக தன்னைச் சந்­திக்க வந்­தி­ருந்த ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்துக் கூறு­கையில் இது பற்றி நானும் அறிந்­தி­ருக்­கிறேன் குறித்த அமைச்­சர்­களை அழைத்து எச்­ச­ரித்­தி­ருப்­ப­துடன் இன்னும் சந்­திக்­க­வுள்ளேன்.

சுதந்­தி­ரக் ­கட்சி அமைச்­சர்கள் பலர் ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருந்­த­வர்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் அவரை ஆத­ரித்­த­வர்கள் அவர்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்க முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­வ­தனா­லேயே இந்­நி­லை­மைகள் உரு­வா­கி­யுள்­ளன என ஜனா­தி­ப­தி­ய­வர்கள் கூறி­யி­ருந்தார்.

இது இவ்­வா­றான நிலை கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் வேறு திசையில் பார்ப்பின் அண்­மையில் (30.12.2016) மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச் சின் ராஜாங்க அமைச்சர் பிரி­யங்க ஜெய­ரட்ண அவர்கள் தனது பத­வியை ராஜி­னாமாச் செய்ய முற்­பட்டார். அவ்­வாறு முற்­பட்ட போதும் ஜனா­தி­ப­தி­ய­வர்­க­ளினால் அந்த ராஜி­னாமா ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இதே­வேளை நாளைய தினம் (08.01.2017) காலி, கம்­பஹா, குரு­ணாகல், இரத்­தி­ன­புரி, மொன­ரா­கலை, பதுளை ஆகிய மாவட்­டங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பதவி வில­க­வுள்­ளனர் என செய்­திகள் கசிந்து கொண்­டி­ருக்­கின்­றன. இவர்கள் பதவி வில­கு­வ­தற்­கான கார­ணங்கள் வெளிப்­ப­டை­யாகக் கூறப்­ப­டு­கி­றது யாதெனில் 01) உள்­ளூ­ராட்சி தேர்தல் இன்னும் நடத்­தப்­ப­டாமை

02) இந்­தி­யா­வுடன் செய்து கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் எட்கா உடன்­ப­டிக்கை

03) அம்­பாந்­தோட்டை துறை­முக மற்றும் காணிகள் சீனா நாட்­டுக்கு வழங்­கப்­ப­ட­வி­ருப்­பது தொடர்பில் எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பதவி விலகப் போவ­தாக கூறப்­பட்­டாலும் உண்மை நிலை மாறு­பட்­ட­தா­க­வே­யுள்­ளது.

புதிய அர­சி­யல் சாச­னத்தின் முறையில் மரணப் பொறி­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற மறை­மு­க­மான கார­ணங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே தேசிய அர­சாங்­கத்தை உடைக்கும் முயற்­சியில் மறை­மு­க­மாக இத்தகையவர்கள் செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக கூறப்­படும் கருத்­துக்­களும் மறை­மு­க­மாக கசிந்து வரு­கின்­றது. இந்த விட­யத்தை மணந்து பிடித்துக் கொண்­டதன் கார­ண­மா­கவே அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து யாரா­வது வெளி­யேற நினைப்­பார்­க­ளாக இருந்தால் அது மக்கள் ஆணையை மீறும் செய­லா­கு­மெனக் கண்­டித்­துள்ளார்.

ஒரு­புறம் இப்­போக்­குகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தேசிய அர­சாங்­கத்தின் உரு­வாக்­கிகள் என்று கூறிக் கொள்­கின்­ற­வர்கள் தமது சீற்­றத்­தையும் அடிக்­கடி இந்த அர­சாங்­கத்தின் மீது காட்டி வரு­வதை நாம் அவ­தா­னிக்க முடி­கி­றது. உதா­ர­ண­மாக ஒற்­றை­யாட்சி முறை­யி­லான தீர்வை நாம் ஏற்கத் தயா­ரா­க­யில்லை. இணைப்­பற்ற ஒரு அர­சியல் தீர்வு அர்த்­த­மற்­றது என்ற தமது தீர்க்­க­மான முடி­வு­க­ளையும் சொல்லி வரு­கின்­றார்கள். ஆனால் ஜனா­தி­ப­தி­ய­வர்கள் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் சாச­னத்தின் மூலம் தீர்­வு­காண வேண்­டி­யது எனது தலை­யாய பொறுப்பு. அதி­லி­ருந்து நான் விலகிப் போக­மாட்டேன் என சத்­தி­ய­வாக்கு செய்து வரு­கின்ற போதும் அவரின் தெளி­வற்ற கருத்­துக்­களால் தமிழ் மக்கள் குழம்பிப் போகின்ற நிலையே காணப்­ப­டு­கி­றது. இது நம்­பிக்­கை­யீ­னங்­க­ளையும் அவ­நம்­பிக்­கை­க­ளையும் நம் தலை­வர்கள் மீது குறிப்­பாக த.தே.கூ அமைப்பின் தலை­மைகள் மீது உண்டு பண்ணும் செயற்­பா­டா­கவே காணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக அண்­மையில், ஜனா­தி­ப­தி­ய­வர்கள் மல்­வத்த மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மஹா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து உரை­யா­டிய வேளையில் புதிய அர­சியல் யாப்பில் எந்­த­வொரு பிரி­வி­னை­ வாத சக்­தி­க­ளையும் உள்­ள­டக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. உரு­வாக்­கப்­படும் அர­சியல் அமைப்பு என்­பது ஒற்­றை­யாட்சி முறை­யி­லான அமைப்­பாக இருக்­கு­மென்­ப­தையும் சமஷ்டி முறை­மையை அடி­யொற்­றி­ய­தாக இருக்­காது என்­ப­தையும் கூறி­யி­ருப்­ப­துடன் மஹா­நா­யக்க தேரர்­களின் ஆசீர்­வா­த­மில்­லாமல் அர­சியல் அமைப்பு நிறை­வேற்­றப்­ப­டாது என்ற உத்­த­ர­வா­தத்தை வழங்­கி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்த சத்­திய வாக்­கா­னது தமிழ் மக்கள் பக்கம் ஒரு சமா­தா­ன­மான அல்­லது சந்­தோ­ஷ­மான கருத்­தாக அமை­ய­மு­டி­யாது என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கின்ற விட­ய­மாகும்.

அதி­கா­ரப்­ ப­கிர்வு அழி­வையே தரும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த நாட்டு மக்­களை எச்­ச­ரித்து வரு­வதும் யாப்பை எதிர்க்­கின்­ற­வர்­களும் எதி­ர­ணி­யி­னரும் புதிய அர­சியல் யாப்­பா­னது மர­ணப்­பொ­றி­யென கடு­மை­யாக கூறி­வ­ரு­கின்ற கருத்­துக்­களை இல்­லாது ஒழிக்க ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­யி­ருந்­தாலும் மலிந்தால் சந்­தைக்கு வரும் என்­பது போல் புதிய அர­சியல் யாப்பு எப்­படி இருக்­கப் ­போ­கி­றது அது தமிழ் மக்­களின் கன­வு­க­ளுக்கு நன­வுத் ­தன்­மையைத் தரப் ­போ­வ­தில்­லை­யென்­பதை கூட்­ட­மைப்­பினர் ஓர­ளவு ஊகிக்கும் தன்­மையை, உரு­வாக்­கி­வ­ரு­கி­றது என்­ப­தே­யுண்மை. இது போலவே சர்­வ­தேச விசா­ரணை விவ­கா­ரத்தில் த.தே.கூ. அமைப்பும் இலங்கை அர­சாங்­கமும் முரண்­ப­டும்­ நிலை வள­ரத் ­தொ­டங்­கி­யுள்­ளது என்­பது புரி­யக்­ கூ­டிய விட­ய­மாகும். அண்­மையில் வழங்­கப்­பட்ட நீதி­மன்றத் தீர்ப்­புக்­களில் த.தே.கூ. அமைப்­பினர் அதி­ருப்தி அடைந்­தி­ருப்­பது தெளி­வா­கவே புலப்­ப­டு­கிற விட­ய­மாகும். என­வே தான் இறு­தி­ யுத்தம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையே அவசியமானது என்ற நிலையான நிலைப்பாடு கொண்டவர்களாக கூட்டமைப்பினர் காணப்படுகிறார்கள் என்பதற்கு அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்து எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்து வப்படுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது அதிருப்தியையும் சமூகம் சார்ந்த வகையில் மெல்லியதாக வெளிக்காட்டியிருந்தார். சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சியென்ற போர்வையில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவு சின்னங்களும் தடயங்களும் இருப்பதாகக் கூறிக் கொண்டு சில பேரினவாத தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் முஸ்தீப்புக்கள் இனங்களுக் கிடையில் முறுகல் அதிகரிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவிக்கின்றார்.

இவற்றை ஆராய்ந்து பார்க்கிற போது இலங்கை அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை காணப்பட வில்லையென்பது வெளிப்படையாகவே தெரியவருகிறது. தேசிய அரசாங்கமானது, ஐக்கிய தே.கட்சியின் பலத்தில் கொழுகொம்பாக இருக்கின்ற போதும் ஒன்றுக் கொன்று ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள், விரிசல் கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறதோ என்னவோ பொதுத் தேர்தல் வந்து விடுமோ என்ற அச்சமே அனைவரிடமும் காணப்படுகிறது.  

திரு­மலை நவம்  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-2

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.