Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

Featured Replies

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

 

 

( ஆர் . கே. வி )
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.1tha.png
வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் மலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்னம், சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிதிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15303

  • தொடங்கியவர்

நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 9 பேர் படுகொலை:  நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

 


நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 9 பேர் படுகொலை:  நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
 

நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

 

 

http://newsfirst.lk/tamil/2017/01/நான்காவது-உலக-தமிழ்-ஆராய/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.