Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் பிரச்சாரத்திற்கு உதவும் ரி.வி.ஐ( T V i )

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்; நான் ரீ.வி.ஜ யின் அபிமானி. அவர்கள் எப்போதும் எங்களுடந்தான். அந்தச் செய்தியில் புலிகளின் மறுப்பையும் கூறினார்கள். அவர்கள் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் எம்மவர்களின் நிகழ்ச்சிகள் பல போடுகிரார்கள்.மிக விரைவில் குரும் திரைப்படப் போட்டி வருகின்ற்து. தயவு செய்து அவர்களைத் தூசிக்காதீர்கள்.ஒரு வாரம் அவர்களின் நிகழ்ச்சிகளைப்பாருங்கள் தெரியும்.

கனடா நாட்டிலுள்ள தமிழ் தொலைக்காட்சிகளை மட்டும் விமர்சனம் செய்வது அழகல்ல. யூரோப்பிலுள்ள தீபம் எனும் தொலைக்காட்சியின் இணையத் தளத்தினுள்ளும் சென்று அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். இதிலிருந்து ஒருவிடயம் மிகத் தெளிவாக விளங்குகின்றது.

தமிழீழக் குழந்தையின் பிறப்பை வரவேற்க உலகத் தமிழர் இன்னும் தங்களைத் தயார் செய்யவில்லை என்பதே அச்செய்தியாகும்!

தமிழீழக் குழந்தையின் பிறப்பை வரவேற்க உலகத் தமிழர் இன்னும் தங்களைத் தயார் செய்யவில்லை என்பதே அச்செய்தியாகும்!

மாப்பிள்ளை, உங்களுக்கு விஷயமே புரியவில்லை.

தீபம் பார்க்கும் பரதேசிகள் தமிழீழத்தை மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. செல்வி, கல்கி, கீதாஞ்சலி என்று இவர்கள் பிரச்சனையே வேறு.

( தெருநாய்கள் ஜாக்கிரதை! )

  • தொடங்கியவர்

வணக்கம்; நான் ரீ.வி.ஜ யின் அபிமானி. அவர்கள் எப்போதும் எங்களுடந்தான். அந்தச் செய்தியில் புலிகளின் மறுப்பையும் கூறினார்கள். அவர்கள் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் எம்மவர்களின் நிகழ்ச்சிகள் பல போடுகிரார்கள்.மிக விரைவில் குரும் திரைப்படப் போட்டி வருகின்ற்து. தயவு செய்து அவர்களைத் தூசிக்காதீர்கள்.ஒரு வாரம் அவர்களின் நிகழ்ச்சிகளைப்பாருங்கள் தெரியும்.

இராணுவம் வெளியிட்ட கண்டனத்தை தமிழர் விரோத இணையத் தளங்கள் மாத்திரமே வெளியிட்டுருந்தன. எந்தவொரு தமிழ் ஊடகமும் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. குறித்த படுகொலையை தானே செய்து விட்டு அதனை எமது போராட்டத்திற்கு எதிரான பரப்புரையான இராணுவமும் ஸ்ரீலங்கா அரசும் செய்து வருகின்றன. உலகில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளின் இரவு பிரதான செய்தியை இறுதியாக ஒளிபரப்பும்(வாய்ப்பு) ரிவிஐக்குத்தான் இருக்கிறது. புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் குறித்த பூசகர் படுகொலை செய்யப்பட்டார். அப்படுகொலை நடைபெற்று 36 மணிநேரத்தற்குப் பின்னராகவே ரி.வி.ஐயின் செய்தி ஒளிபரப்பானது. அந்த 36 மணிநேரத்திற்குள் அது தொடர்பாக தமிழ்நெட் வெளியிட்ட செய்தியில் பூசகர் வலுக்கட்டாயமாக மகிந்தவின் நிகழ்விற்கு அழைத்துச் சென்றமை மற்றும் அப்படுகொலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தொடர்பு தொடர்பாக எழுதப்பட்டிருந்தது. சில தமிழ் இணையத்தளங்களும் இராணுவத்தின் தொடர்பு பற்றியும் ஐயர் வலுக்கட்டாயமாக வாகரைக்குக் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக தெளிவாகக் எழுதப்பட்டிருந்தது.

இவ்வளவு கால அவகாசம் இருந்தும் அப்படுகொலையில் இராணுவத் தரப்பின் தொடர்பு பற்றி தனது செய்தியில் ஒரு வார்த்தை சொல்லாத ரி.வி.ஐ. இராணுவம் வெளியிட்ட கண்டனத்தை ஏன் தனது தலைப்பு(பிரதான) செய்தியாகச் சொல்லவேணும். அத்தோடு அதனைப் புலிகள்தான் செய்தார்கள் என காவல்துறை குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்தனர். 'அவர்கள்(புலிகள்) மறுத்தனர்' என்ற மட்டும்தான் சொல்லப்பட்டது. அதைத்தவிர தமிழர் தரப்பிற்கு அக்கொலையில் தொடர்பில்லை என்பது பற்றி ஒண்டுமே தெரிவிக்கவில்லை. இராணுவத்தின் தொடர்பு பற்றி எதுவுமே ரி.வி.ஐ தெரிவிக்க வில்லை.

இங்கே ரி.வி.ஐ விட்ட தவறை இராணுவத்தின் பரப்புரைக்கு உதவும்படியாக வியாழக்கிழமை இரவின் அதன் செய்தி அமைந்திருந்ததைத்தான் சொன்னேன். இந்தப் பிழையை நீங்கள் ஏன் பிழையாகப் பார்க்காமல் நான் அவர்களை தூசிப்பதாகச் சொல்கிறீர்கள்.

அவர்கள் கஸ்ரப்படுவதாக, படும்பாடு என்று நீங்களே எதையும் கற்பனை பண்ணி இங்கே பூச்சாண்டி காட்டாதீர்கள்.

Edited by மின்னல்

தமிழ் விஷன் நிலயத்தை குறைகூறுவது ஏற்க முடியாதது.ஆனால் தப்பு நடைபெற்றால் சுட்டிகாட்டவேண்டியது நம் கடன்.அது வரவேற்க வேண்டியது.ரிவிஐயில் தொடங்கி என்ன நாத்தம் எல்லாம் வெளியில் வ்ந்திருக்கிறது.இன்னும் ரிவிஐ யை குறை கூறும் மக்கள் தான் கனடாவில் அதிகம்.காரணம் சும்மா எங்களின் நிகழ்ச்சிகளையே போட்டு அறுக்கிறான்கள்,ஒழுங்கான நாடகங்கள் கூட இல்லை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இதை விட கள்ள சட்ரலைட் கள்ள கேபிள் இப்படி அவர்களுக்கு வருமானமும் குறைவு.அங்கு தொண்டர் ஊழியர்கள் தான் அதிகம்.இதன் துணை அல்லது சேர்ந்த நிறுவனம் தான் கனடாபல்கலாச்சார வானொலி{சி எம் ஆர் ப்ண்பலை)இந்த நிறுவனத்தை ஆரம்பிக்க எவ்வளவு மக்களின் கையெளுத்து பெறப்பட்டது.பெரிய தொகையிலான மனித பல்கலைக்கழக மாணவ வலு பயன்படுத்தபட்டதெனலாம்.

ஆனால் இன்றிரவுச் செய்தியில் இராணுவ துணப்படையினால் பூசகர் கொல்லபட்டது குறிப்பிடத்தக்கது.என்று கூறப்பட்டது

TVஜை க்கு தயவு செய்து யாரும் வக்காலத்து வாஙகவேண்டாம்...நிர்வாக திறமையற்ற ஒரு தொலைக்காட்சி என்பது அதன் நிகழ்ச்சிகளை பார்த்தால் புரியும்....யார்..யாராகவோ தங்களை மனதில் நினைத்து கொள்வதாலோயோ என்னவோ தங்கள் சுயத்தைய்ம் எளிமைத்தன்மையையும் முற்றும் இழந்த அறிவிப்பாளர்கள்....இப்படி பல சொல்லாம்.....மேலும் ..தேசியம் என்ற வார்த்தையையும் ..ரிரின் நின் ஆதரவையும் கொன்டே பிழைப்பு நடத்துகிறது... ( நேரடி ஒளி பரப்புகள்.. படலைக்கு படலை போன்ற தரமான நிகழ்ச்சிகள் TTண் தயவால் வருபவை....)இது " இயங்கு நட்டத்திலிருந்த" ஒரு நிறுவனம்...

மற்றபடி மின்னல் உங்கள் கோபமும் ஆதங்கமும் நியாயமானதே...ஆனாலும் ஒருவ்ரது பெயரை சுட்டி கூறியிருக்கத் தேவையில்லை ..அப்படிப் பார்த்தால்.. இன்று அரச திணைக்களங்களில் வேலை பார்த்த பலர் இன்று எமது விடுதலை இயக்கத்தில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்...

இவற்றை விட.. எமது ஊடகங்களையும் கலைப்படைப்புகளையும் நாம் மதிக்க பழக வேண்டும் . ..அதற்கு முன் எமது ஊடகங்கள் தமது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.. எமது கலைப்படைப்புகள் தரமாக்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

புலத்தொலைக்காட்சிகள் சினிமா, தென்னிந்திய தொ.கா. நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு தமது ஒளிபரப்பை மேற்கொள்வது தற்காலத்தில் நடைமுறைச்சாத்தியமற்றது.

புலத்தில் இயங்கும் தமிழ்தொலைக்காட்சிகள் பிரதானமாக தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையே பெருமளவில் கொண்டுள்ளன.

இது தற்போதைய சூழலில் தவிற்க முடியாத ஒன்றாகி விட்டது. காரணம் அவர்களாக நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கு போதிய நிதிவளமோ அல்லது ஆளணி வளமோ இல்லை.

எனவே குறைந்த செலவில் கிடைக்கும் தென்னிந்திய நிகழ்ச்சிகளை வழங்குவதை குறை கூற முடியாது. 24 மணிநேரத் தொலைக்காட்சிகளிற்கு இதனை விட்டால் வேறொன்றுமில்லை.

இடையிடையே தமது சொந்த நிகழ்ச்சிகளையும் அவை வழங்கு கின்றன. குறிப்பாக ரி.ரி.என் தொலைக்காட்சியினால் தயாரிக்கப்படும் படலைக்குப் படலை, நையாண்டி மேளம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுடன் கனடா ரி.வி.ஐ தனது சொந்த நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. சொந்த நிகழ்ச்சிகளாக வழங்கப்படுவை அனைத்து தென்னிந்திய சினிமாவை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன)

சண் டிவி, கேரிவி என்பன செயற்கைக்கோள் மூலம் இங்கே கிடைப்பதால் அவற்றுடனும் போட்டிபோட வேண்டும். இந்த போட்டியில் புலம்பெயர் தொலைக்காட்சிகள் நின்று பிடிப்பதற்கு ஒரே காரணம் தாயகச் செய்திகள் மற்றும் தாயகத்தில் தாயாரிக்கப்படும் நிகழச்சிகள், போராட்டத்துடன் சார்ந்த ஆய்வு(ரி.வி.ஐயின் செய்திக்கண்ணோட்டம்) நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவதால்தான்.

இந்த நிகழ்ச்சிகள் மூலமே எமது விடுதலைப் போராட்டத்திற்கான பரப்புரைகளை மேற்கொள்வதுடன், எமது மக்களின் போராட்டத்தின் மீதான பங்களிப்பை, பற்றை மேலும் வலுப்படுத்த முடியும். எதிரியின் பரப்புரைகளை தமது செய்திகள் மற்றைய நிகழச்சிகள் மூலம் முறியடிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளை எதிரியின் பரப்புரைக்கு உதவும்படி அமையக்கூடாது.

நிச்சயமாக....எமது ஊடகங்களில் அலட்சிய போக்கு அதிக அளவில் இருக்கிறது...

நிச்சயமாக....எமது ஊடகங்களில் அலட்சிய போக்கு அதிக அளவில் இருக்கிறது...

அதற்காக தொலைக்காட்சிகளை மாத்திரம் விமர்சிப்பது பொருத்தமாகுமா? வானொலி, பத்திரிகைகளையும் கூட விமர்சனம் செய்யலாமோ? :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் அவர்கள் நமக்கெதிராக இயங்குகின்றார்கள் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் செஞ்சோலை சிறுவர்களின் அநியாயச் சாவின் போது.."கொண்டாட்டம் கொண்டாட்டம்" என்று கொண்டாடினவ!..

தொலைக்காட்சி எப்படி நடத்துவது என்பது சுத்தமாகத் தெரியாது. ஏதோ எங்கட நிதர்சனம். ரி.ரி.என் நிகழ்சிகளை எடுத்து போடுறதால பார்க்க கூடிய மாதிரி இருக்கு!...

இவைக்கு அந்த இந்தியப்பெட்டையோட சேர்ந்து மசாலா அரைக்கத் தான் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தொலைகாட்சியை மாத்திரம் இங்கு விமர்சனம் செய்வது பொருத்தமாக இருக்காது. தமிழ் விசனுக்கும், தமிழ் வன்னிற்கும் எதிர்புறமாக கடை போட்டிருக்கும் கனடா நாட்டிலுள்ள ஏ.ரி.என் - ஜெயா ரீ.வி எனப்படும் தொலைக் காட்சி இணையத்தினுள்ளும் சென்று அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். இங்கு கழிவுகள் தமிழ் மக்களின் தலையில் இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கொட்டப்படுகின்றன. யப்பா! இணையத்திற்கூடாக இதுகளை பார்க்கும் போதே நமக்கு தலையைச் சுத்துது. நம்மட சனங்கள் கனடா நாட்டில இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி வாழுதுகளோ தெரியாது! கடவுள் காக்க!<<<<<<<<<<<<<<<<<

சரியாச் சொன்னீங்கள். நாங்க தப்பினம்..வார நாட்களில் வேலை வீட்டுக்கு வரவே 7மணி ஆயிடும். அதுக்குப் பிறகு எங்க...8மணிக்கு தாயகவலம் பார்ப்போம். இவையின்ற கூத்தைப் பார்க்கிற நேரம் வலைத்தளங்கள் பார்ப்பது உபயோகம். இதையெல்லாம் முறியடிக்க யார் வரப்போறாங்கள்? தமிழ்வன் எங்கட நாட்டின்ற செய்திகளை காட்டுற மாதிரி விளம்பரம் செய்தினம் பிறகு அவையும் கூழ்பானைக்குள்ளேயே விழுந்திட்டினம்.

அங்குள்ள சூழ்நிலைக்குள்ளேயே எங்கட நிதர்சனம் என்னமாதிரி இயங்குது!..இவை அதை எடுத்தெண்டாலும் போடலாம்...எப்ப பார்த்தாலும் பாட்டு கூத்து கச்சேரி தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ரி.வி.ஐ விட்ட தவறை இராணுவத்தின் பரப்புரைக்கு உதவும்படியாக வியாழக்கிழமை இரவின் அதன் செய்தி அமைந்திருந்ததைத்தான் சொன்னேன். இந்தப் பிழையை நீங்கள் ஏன் பிழையாகப் பார்க்காமல் நான் அவர்களை தூசிப்பதாகச் சொல்கிறீர்கள்.

அவர்கள் கஸ்ரப்படுவதாக, படும்பாடு என்று நீங்களே எதையும் கற்பனை பண்ணி இங்கே பூச்சாண்டி காட்டாதீர்கள்.

<<<

நீங்கள் உண்மையைத் தான் மின்னல் சொல்றீங்கள். அவைக்கு செய்தி தயாரிக்கத் தெரியாது. புதினம்/ லங்காசிறி என்ற தளங்களில் இருந்து செய்தியை வாசிப்பினம் அதை எப்படி சொல்ல வேண்டும் என்கின்ற முறையைக் கூட அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

எங்கட ஆக்கள் தயாரிச்ச படத்தையாவது போடலாம் அதுவும் இல்லை. நிதர்சனத்தில் இருந்து எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துப் போடலாம்...ரீ.வி.ஐ தொடங்கி எத்தனை காலம். ஒரு முன்னேற்றமும் இல்லை கொண்டாட்டம் வைச்சு மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சவ அவைக்கு என்ன பணக்கஷ்டம்/ இல்லை ஆளணி இல்லை என்று சொல்லுறீங்கள்.ரீ.ரீ.என் நிகழ்ச்சிகள் எல்லாம் எவ்வளவு தரமா இருக்கு!...இவையை நினைக்க வெட்கமா இருக்கு!!...

அதற்காக தொலைக்காட்சிகளை மாத்திரம் விமர்சிப்பது பொருத்தமாகுமா? வானொலி, பத்திரிகைகளையும் கூட விமர்சனம் செய்யலாமோ? :huh:

அடேய் மாப்பு!

இவையை விமர்சனம் செய்ய வெளிக்கிட்ட கனடாவில இருக்கிற தமிழ்சனத்திற்கு இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச மானத்தையும் கப்பலேற்ற வேண்டிவரும்.

இங்க வாற பத்திரிகைகள் , சஞ்சிகைகள் உன்னான எத்தினை எண்டு எனக்குத் தெரியாது ராசா, ஆனா நிறைய வருது. எல்லாம் இந்த இணையங்கள் தாற உதவி. ரேடியோக்களும் பல இருக்கு அரைச்ச மாவை அரைச்சு அரைச்சு..... தமிழ் தொலைக்காட்சி சேவைகள் சும்மா சொல்லக் கூடாது சொந்தமாத் தயாரிக்கிற நிகழ்ச்சிகளைவிட சுரணையை தொலைச்சுப் பாக்கிற நிகழ்ச்சிகளை நல்லாக் காட்டுவினம். தாயக நிகழ்சிகளைத் தவிர்த்துப் பாத்தா புலம்பெயர் மக்களுக்கு சிந்தனையைத் தூண்டக்கூடியதாக ஏதேனும்..... காணக்கிடைக்குதில்லைப்பா. இதெல்லாம் ஆதி சொல்லேல்லை அங்கால கதைக்கிறாங்கப்பா...

ஓம்..ஓம்..இந்த ரீ.ரீ.ன்.. என்ன பண்ணுது..இங்கே....???

எதற்க்கு சின்னத்திரைகளை போடவேனும்...இதன் செய்தியாளர்

விட்டா புறுடா கதைகளை கேட்டனீங்களோ...???

அவர் ஆய்வில சொன்னர் கண்டியளே ''தமிழ் ஆதரவு'' ஊடகங்கள்

இது எதை சொல்லுது...???

அப்படியே இணைய செய்திகளை கொப்பி பண்ணி போடுவீPனம்...

அதை எங்கிருந்து பெற்றதென கூட சொல்லிட வெட்க்கம்..

ஏன்...?? தங்கள் பெயர் கெட்டு போகும்....!

இப்படி இருக்கு அவயளின்ர பாடு அதற்க்குள்ள தமிழ் ஆதரவு ஊடகம்

எண்டு வெளிக்கிடுறார்...

எங்க போய் இதை சொல்லியழ....

தமிழன் தலை எழுத்து...

தெரியுதெல்லே சின்னதிரை போடாட்டி சந்தா அட்டை விலையாகதென

அப்ப மூடிக்கொண்டு இருக்க வேண்டியது தானே...

மற்றவருக்கு உபதேசம் கூற வெளிக்கிட்டு விட்டார்...

இணையத் தளங்களும்..அப்படித்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.