Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா?

Featured Replies

பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா?

மலை­யக மக்­களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. பெரும்­பா­லான மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கும் மத்­தியில் லயன் அறை­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். லயத்து வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைத்து தனி­வீட்டு கலா­சா­ரத்தை இம் ­மக்­களின் நலன் கருதி முன்­னெ­டுக்­க­ வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. எனினும் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் காத்­தி­ர­மா­ன­தாக இல்லை. மந்த கதி­யி­லேயே அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக வீட­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­கி­டையில் பொருத்து வீட்டுத் திட்­டத்­தினை மலை­ய­கத்தில் அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் தற்­போது ஆலோ­ச­னைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் பொருத்து வீட்டுத் திட்டம் குறித்து தற்­போது மலைய­கத்தில் வாதப்­பி­ர­தி ­வா­தங்கள் இடம்­பெற்று வரு­வ­த­னையும் அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது.

வீடு என்­பது ஒரு மனி­தனின் முக்­கிய தேவை­யாக கரு­தப்­ப­டு­கின்­றது. வீடு ஒரு மனி­தனின் நல்­வாழ்­வுக்கும் ஏனைய பல அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் உந்து சக்­தி­யாக அமை­கின்­றது. வீடு தொடர்­பாக பேரா­சி­ரியர் மா.செ.மூக்­கையா தனது நூல் ஒன்றில் குறிப்­பி­டு­கையில், வீடு என்­பது தனியே வெயி­லுக்கும் மழைக்­கு­மான ஓர் ஒதுங்­கிடம் அல்ல. அது சமூக நிறு­வ­னமும் கூட. அங்­கே தான் சமூக நாக­ரி­கத்தின் அத்­தி­வாரம் இடப்­ப­டு­கின்­றது. எனவே வீடு என்­பது குறைந்­த ­பட்ச தகு­தி­களைக் கொண்­டி­ருக்க வேண்டும். காற்­றோட்டம், குடிநீர் வசதி, கழி­வ­கற்றும் வச­திகள், சுகா­தா­ர­மான சமையல் வசதி என்­ப­னவும், வாசிக்க இட வச­தி­களும், மின்­சார வச­தியும் தேவை. இந்­திய கிரா­மங்­களில் வீடு­க­ளுக்கு மின்­சார வசதி ஏற்­பட்­ட­தோடு அங்கே கல்வி வளர்ச்சி நிலை­மை­களில் விருத்தி ஏற்­பட்­டுள்­ள­தாக ஆராய்ச்­சிகள் எடுத்துக் கூறு­கின்­றன. எனவே இத்­த­கைய அடிப்­படை வச­திகள் ஆடம்­ப­ர­மா­ன­வை­யல்ல. சுகா­தா­ர­மான ஆரோக்­கிய வாழ்க்­கைக்கு இவ்­வ­ச­திகள் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வை­யாகும் என்று குறிப்­பி­டு­கின்றார்.

இப்­படிப் பார்க்கும் போது மலை­யக வீடுகள் தொடர்பில் நாங்கள் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. மலை­யகப்பகு­தி­களில் காணப்­படும் லயன்கள் மிகப்­ப­ழைமை வாய்ந்­த­ன­வாக உள்­ளன. பொருத்­த­மற்ற அமை­வி­டத்தில் காணப்­படும் இத்­த­கைய லயன்­களில் பல இடிந்து விழும் அபா­யத்­தி­னையும் எதிர்­கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய லயன் அறை­களில் மிகுந்த போராட்­டத்­துக்கும் மத்­தியில் எமது சகோ­த­ரர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். 1996 ஆம் ஆண்டில் தகவல் ஒன்­றின்­படி இரட்டை லயன் காம்­பரா அல­குகள் ஒரு இலட்­சத்து நான்­கா­யி­ரத்து 556 காணப்­பட்­டுள்­ளன. ஒற்றை லயன் காம்­பரா அல­கு­களின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து எட்­டா­யி­ரத்து 825 ஆகும். குடி­சைகள் தற்­கா­லிக குடில்கள் என்ற வகையில் 22 ஆயி­ரத்து 410 அல­கு­களும், தற்­கா­லிக வீடு­க­ளாக 35 ஆயி­ரத்து 100 அல­கு­களும் காணப்­பட்­டுள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் இரண்டு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 381 வீடுகள் பழைய லயன் முறையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இருந்­துள்­ள­மையை அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. லயத்து வாழ்க்­கையில் பல்­வேறு சீர்­கே­டுகள் நில­வு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்ற நிலையில் தனி­வீட்டு கலா­சா­ரத்­தினை முன்­னெ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த கால வர­வு–­செ­லவு திட்­டங்­க­ளிலும் மலை­யக மக்­க­ளுக்­கான வீட­மைப்பு தொடர்பில் பல முன்­மொ­ழி­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன. எனினும் இம்­முன்­மொ­ழி­வு­களின் சாத்­தி­யப்­பா­டுகள் குறை­வா­ன­தா­கவே இருந்து வந்­துள்­ளன. மலை­யக மக்­க­ளுக்கு சுமார் மூன்று இலட்சம் வீடுகள் தேவை­யாக உள்­ளன என்­கின்ற கருத்தை கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வி.ராதா­கி­ருஷ்­ணனும் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

ராதா­கி­ருஷ்ணன் இது­பற்றி மேலும் குறிப்­பி­டு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­களின் அடிமைச் சின்­ன­மாக லயன் அறைகள் காணப்­ப­டு­வதும், காணி­யற்­ற­வர்­க­ளாக இம்­மக்கள் காணப்­ப­டு­வதும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். இந்­நி­லையில் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு காணி­யுடன் வீட்­டு­ரிமை வழங்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க ஒன்­றாகும். சுமார் இரு நூறு ஆண்­டு­கால வர­லாற்­றினைக் கொண்ட எமது மக்கள் இப்­பி­ர­தே­சத்­தி­லேயே வாழ்ந்து வரும் நிலையில் அவர்­க­ளுக்கு காணி­யு­ரிமை வழங்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும். மலை­யக தோட்­டப்­பு­றங்­களில் 1.5 மில்­லியன் மக்கள் வாழ்ந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட குடும்­பத்தை எடுத்துக் கொண்டால் மூன்று இலட்சம் வீடுகள் வரையில் தேவைப்­ப­டு­கின்­றது. இந்தத் தேவை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. தற்­போது மலை­ய­கத்தில் காணப்­படும் பெருந்­தொ­கை­யான வீடுகள் மண்­ச­ரிவு அபா­யத்­தினை எதிர்­நோக்கி இருக்­கின்­றன. அதற்கும் தீர்வு காண வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் அண்மைக்காலங்­களில் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய காலத்தில் அமைச்சர் வீடு­களை கட்­டிக்­கொ­டுத்­துள்ளார்.

தற்­போது மலை­ய­கத்தில் ஐம்­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் தற்­கா­லிக வீடு­களில் வாழ்ந்து வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­நி­லைமை நாளாந்தம் குடும்ப பரம்­ப­லுக்கு ஏற்ப அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது. தோட்­டப்­பு­றங்­களில் தற்­போது முன்­னெ­டுத்து வரும் வீட­மைப்புத்திட்­டங்கள் இலங்கை பெருந்­தோட்ட ஆக்கம், மக்கள் பெருந்­தோட்ட அபி­வி­ருத்திச் சபை போன்­ற­வற்றில் கேள்­விக்­கு­றி­யா­கவே இருந்து வரு­கின்­றது என்றும் ராதா­கி­ருஷ்ணன் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்திப் பேசி இருந்தார். இதற்­கி­டையில் இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் தோட்டக் குடும்­பங்­க­ளுக்கு வீட­மைப்பு கருதி 7 பேர்ச்சஸ் காணி வழங்­கு­வ­தாயின் 10 ஆயி­ரத்து 937 ஏக்கர் காணிகள் தேவைப்­படும் என்­ப­தனை அமைச்சர் திகாம்­பரம் பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மலை­ய­கத்தின் வீட்டுத் தேவை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் வீட்டுத் தேவையை பூர்த்­தி­செய்ய பொருத்து வீட்டு திட்­டத்­தினை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் தற்­போது கருத்­துக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இத்­திட்டம் குறித்து வாத­ப்பி­ர­தி­ வா­தங்­களும் இதற்­கி­டையே தற்­போது மலை­ய­கத்தில் மேலெ­ழும்பத் தொடங்கி இருக்­கின்­றன. வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். வட­மா­கா­ணத்தில் இருந்து 97 ஆயிரம் பொது மக்கள் பொருத்து வீடு­க­ளுக்­கான கோரிக்­கையை முன்­வைத்து கடிதம் மூலம் தனக்கு அறி­வித்­த­மையை தொடர்ந்தே 22 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் சுவா­மி­நாதன் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் பொருத்து வீட்டுத் திட்டம் வட­ப­கு­திக்கு உகந்­த­தில்லை என்று பல்­வேறு முரண்­பா­டு­களும் மேலெ­ழுந்­தன. வடக்கின் கால­நி­லைக்கு ஈடு­கொ­டுத்து அவை நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்க மாட்­டாது என்று கூட்­ட­மைப்­பினர் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். நீண்ட காலம் நிலைத்­தி­ருக்கக் கூடிய கல்­வீட்­டினை அமைப்­ப­தனை விட இரண்டு மடங்கு கூடு­த­லான செல­வினை கொண்­ட­தாக இந்தப் பொருத்து வீடுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழகம் நடத்­திய ஆய்வு அறிக்­கை­களும் பொருத்து வீடுகள் தொடர்பில் சாத­க­மான கருத்­து­க்களை பெரிதும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

மேலும் கலா­சார முறை­மைகள், வாழ்­வியல் சம்­பி­ர­தா­யங்கள் என்­ப­வற்றை கருத்தில் கொள்­ளாது சூழ­லி­ய­லா­ளர்­களின் கருத்­துக்­க­ளையும் புறந்­தள்ளி, பொருத்து வீட்டுத் திட்டம் திணிக்­கப்­ப­டு­வ­தனை வட­ப­குதி மக்­களும் எதிர்த்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் வட­ப­கு­தியில் கூடாது என்று வெறுத்து ஒதுக்­கப்­பட்ட பொருத்து வீட்டுத் திட்­டத்­தினை மலை­ய­கத்தில் முன்­னெ­டுக்க உள்­ள­தாக செய்­திகள் வலி­யு­றுத்தி இருந்­தன. இந்­நிலை தொடர்பில் மலை­ய­கத்தில் இரு­வேறு கருத்­துக்கள் இப்­போது நிலவி வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. மலை­ய­கத்தின் வீட்­டுத்­தே­வையை பூர்த்தி செய்ய நீண்ட காலம் பிடிக்கும் என்­பதால் பொருத்து வீட்டுத் திட்டம் போன்­றவை, வீட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்று ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். இன்­னு­மொரு சாராரர் மலை­ய­கத்தின் கால­நிலை உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மை­க­ளையும் கருத்தில் கொண்டு நோக்கும் போது பொருத்­து­வீட்டு திட்டம் மலை­ய­கத்­துக்கு பொருத்­த­மற்­றது என்ற ரீதியில் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் மலை­ய­கத்தில் உள்ள சில முக்­கி­யஸ்­தர்­க­ளிடம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன என்று கருத்து வின­வினேன். அவர்கள் கேச­ரிக்­காக தெரி­வித்த கருத்­துக்­களை இதன் கீழ் தொகுத்துத் தரு­கின்றேன்.

முத்து சிவ­லிங்கம் (பாரா­ளு­மன்ற உறுப்­பினர்)  

இயற்கை அனர்த்­தங்கள் இப்­போது மலை­யகத்தில் அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன. மண்­ச­ரிவு என்­ப­வற்­றினால் கடந்த காலத்தில் பல விப­ரீ­தங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. உயி­ரி­ழப்­புகள் பலவும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிலையில் மலை­ய­கத்தின் கால­நிலை மாற்றம் உள்­ளிட்ட கார­ணி­களை கருத்தில் கொண்டு நோக்கும் போது பொருத்து வீட்டுத் திட்டம் மலை­ய­கத்­துக்கு பொருத்தம் இல்­லாத ஒன்­றா­கவே தென்­ப­டு­கின்­றது. மலை­ய­கத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கல்­வீ­டுகள் கூட விரி­ச­ல­டைந்து விடு­வ­தனை காண முடி­கின்­றது. இந்­நி­லையில் பொருத்து வீட்டுத் திட்டம் குறித்து நாம் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. இது வீண் செல­வா­கவே அமையும். மலை­யக மக்­களின் வீட்­டுத்­தே­வையை பூர்த்தி செய்ய இ.தொ.கா. நீண்ட கால­மா­கவே பணி­யாற்றி வரு­கின்­றது. விரைவில் இது தொடர்­பாக இந்­திய அர­சுடன் பேச்­சு­வார்த்­தை­யையும் நடத்த உள்ளோம். மலை­யக சமூ­கத்தின் நலன் கருதி பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளையும் பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை இ.தொ.கா.வுக்கு இருக்­கின்­றது. இதனை நாம் சரி­வர முன்­னெ­டுப்போம். கடந்த காலத்தில் நாலா­யிரம் வீடு­களை இந்­தியா எம்­ம­வர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க இ.தொ.கா. வழி­வ­குத்­தது.

மலை­யக மக்­களின் வீட்டுத் தேவையை மூன்று, நான்கு வரு­டங்­களில் தீர்த்து வைப்­ப­தாக சிலர் கூறு­கின்­றனர். எனினும் இது சாத்­தி­யப்­ப­டாத ஒரு விட­ய­மாகும். இ.தொ.கா. பல தோட்ட வீடு­களை முற்­றாக மாற்­றி­ய­மைத்­தது. சிலர் இ.தொ.கா.வின் செயற்­பாட்டை குறை கூறினர். எனினும் நாம் எமது பணி­களை சிறப்­பாக முன்­னெ­டுத்தோம். மலை­ய­கத்தின் நில அமைப்பு வீட­மைப்பு தொடர்பில் நடை­முறை சிக்கல் நிலையை தோற்­று­வித்­துள்­ளது. தனி­ வீட்டு கலா­சாரம் இப்­போது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இப்­போது நிர்­மா­ணிக்­கப்­படும் வீடுகள் பழைய வீடு­க­ளுக்கு மாற்­றீ­டாக இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. வீடில்­லா­த­வர்­க­ளுக்கு வீடு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பா­டா­கவே பெரிதும் உள்­ளது. பழைய வீடு­களில் முழு­மை­யான மாற்­றத்தை ஏற்­ப­டுத்த இன்னும் நீண்­ட­காலம் செல்­லலாம். அதி­காரம் தனது கையில் இருக்­கின்­றது என்­ப­தற்­காக சிலர் வாக்­கு­று­தி­களை வழங்­கலாம். இதன் நடை­முறை சாத்­திய தன்­மையை பொறுத்­தி­ருந்­து தான் பார்க்­க­வேண்டும். வீட­மைப்­பிற்­கான நிதி­யினை பெற்­றுக்­கொள்­வதில் கடந்த காலத்­திலும் இழு­பறி நிலை இருந்­தது. மூன்று இலட்சம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தனால் ஒரு வரு­டத்­துக்கு 60 ஆயிரம் வீடுகள் என்­ற­வாறு நிர்­மா­ணித்­தால்தான் ஐந்து வரு­டத்தில் இது சாத்­தி­ய­மாகும். எனினும் வரு­டத்­திற்கு 60 ஆயிரம் வீடு­க­ளென நிர்­மா­ணிக்க முடி­யுமா? என்­பது கேள்­விக்­கு­றி­யே­யாகும். சாத்­தி­யப்­ப­டாத விட­யங்­களை கூறி மக்­களை பிழை­யாக வழி­ந­டத்தக் கூடாது.

60 ஆயிரம் வீடு­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில் ஆளு­மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அர­சியல் வாக்­கு­று­திகள் இனியும் செல்­லாது. நடை­முறை சாத்­தி­யப்­பா­டு­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும். ஏழு பேர்ச்சஸ் காணி­யினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்கி மக்­களின் வீட்­டுத்­தே­வை­யினை பூர்த்தி செய்­யவும், துரி­தப்­ப­டுத்­தவும் முன்­னின்று செயற்­பட உள்­ள­தாக அர­சாங்கம் பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. இது மகிழ்ச்­சிக்­கு­ரிய ஒரு விட­ய­மாக உள்­ளது. இதன் மூலம் தோட்ட மக்­க­ளுக்கு புதி­ய­தொரு நம்­பிக்­கையும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். ஆறு­முகன் தொண்­ட­மா­னையும், இ.தொ.கா.வை.யும் திட்­டு­வ­தனை வழக்­க­மாக கொண்­ட­வர்கள் இதனை விடுத்து சமூக அபி­வி­ருத்தி கருதி செயற்­பட வேண்டும். இ.தொ.கா.பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தது. அர­சாங்­கங்­களின் மந்த போக்கின் கார­ண­மா­கவே சில விட­யங்கள் தாம­த­ம­டைந்­தன. பாரா­ளு­மன்­றத்­திலும், மாகாண சபை, பிர­தேச சபை­க­ளிலும் அங்கம் வகித்து மலை­யக மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் வாய்ப்­பினை அமரர் தொண்­டமான் ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்ளார். இதனை யாரும் மறந்து ­விடக் கூடாது.

எம்.தில­கராஜ் (பாரா­ளு­மன்ற உறுப்­பினர்)  

மலை­ய­கத்தில் இயல்­பாக நிர்­மா­ணிக்கும் வீட்டு நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் மலை­ய­கத்­துக்கு எந்த வகை­யி­லான பொருத்­து­வீட்டுத் திட்டம் கொண்­டு­வ­ரப்­பட உள்­ளது என்­பது தொடர்பில் பூரண தெளி­வில்லை. பொருத்து வீடு தொடர்­பான பிரச்­சி­னைகள் வடக்கில் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மலை­ய­கத்­த­வர்கள் அதனைப் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னரே தவிர மலை­யகத்­துக்­கு­ரி­யது எத்­த­கைய திட்டம் என்­பது தொடர்பில் முன்­மொ­ழி­வுகள் எதுவும் இல்லை.

மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் வேக­மாக வீட்டுத் திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய ஒரு தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இன்­றுள்ள அர­சாங்கம் இதில் முக்­கிய கவ­னத்­தினை செலுத்தி இருக்­கின்­றது. இந்த நிலையில் வீட­மைப்பு திட்டம் தொடர்பில் புதி­ய­தொரு முறை முன்­வைக்­கப்­ப­டு­மானால் அதனை பரீட்­சித்துப் பார்ப்­பதில் தவ­றில்லை என்றே கரு­து­கின்றேன். வடக்கில் 22 இலட்சம் ரூபா செலவில் பொருத்து வீடு அமைக்­கப்­பட உள்­ளதால் நமக்கு அதே திட்டம், அதே­வ­கையில் வரப்­போ­கின்­றது என்று யோசிக்க வேண்­டிய தேவை கிடை­யாது. நமக்­கா­னது என்ன என்­ப­தனை நாம் இன்னும் தீர்­மா­னிக்­கவும் இல்லை. மலை­யக மக்கள் லயத்து வாழ்க்­கையில் இப்­போது அல்­லல்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த நிலையை மாற்­றி­ய­மைக்க பல்­வேறு அர­சியல் போராட்­டங்­களை நடத்­தி­ விட்டு, இனி வரப்­போ­கின்­றது என்ற ஒரு திட்­டத்தை வெறும் கற்­பனை செய்து கொண்டு விமர்­சிப்­பது எந்­த­ள­வுக்கு பொருத்­த­மாகும் என்­பதே எனது கருத்­தாகும். அதனைப் பற்றி பரீட்­சித்துப் பார்ப்­ப­தற்கு எமக்கு போது­மான கால அவ­காசம் இருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு ஏற்­க­னவே நிலம் இருக்­கின்­றது. நிலச் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவும் அவர்கள் இருக்­கின்­றார்கள். மலை­யக மக்­களை பொறுத்­த­வ­ரையில் நில­வு­டை­மை­யா­ளர்­க­ளாக அவர்கள் இல்லை. நாம் முதலில் காணி­யு­ரி­மையை பெற்­றுக்­கொள்ள வேண்டும். வீட்டத் திட்­டத்தின் ஊடாக இல்­லாத காணியை நாம் பெற்­றுக்­கொள்­ளப்­போ­கின்றோம் என்ற பெரிய உண்மை உள்­ளது. காணி­யு­ரி­மையை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­ மென்றால் எந்த வீட்­டுத்­திட்­டத்­தையும் ஏற்­றுக்­கொள்­ளு­கின்ற மன­நி­லைக்கு நாம் வருதல் வேண்டும். எந்த ஒரு வீடும் பரம்­பரை பரம்­ப­ரை­யாக சேதங்­க­ளுக்கு உள்­ளா­காமல் நிலைத்து நிற்க மாட்­டாது என்­பது தெரிந்த விட­ய­மாகும். வடக்கில் உள்ள பொருத்து வீட்டை அப்­ப­டியே தலையில் வைத்துக் கொண்டு பேச முனைதல் கூடாது. எனவே தெளி­வான விளக்­கத்­தினை பெற்­றுக்­கொண்டு தெளி­வாக முடி­வெ­டுக்க வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும்.

இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் (மத்­திய குழு உறுப்­பினர், மக்கள் விடு­தலை முன்­னணி)

வடக்கில் 22 இலட்சம் ரூபா செலவில் பொருத்து வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட இருந்­தன. இது இரும்­பா­லான வீடு­க­ளாகும். இத்­த­கைய இரும்பு வீடுகள் வடக்­கிற்கு பொருத்­த­மற்­றவை என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. மேலும் இந்தப் பொருத்து வீடுகள் கொள்­வ­னவு விட­யத்தில் பல கோடிக்­க­ணக்­கான ரூபாய்கள் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ளமை தொடர்­பிலும் ஜே.வி.பி. ஆட்­சே­பனை தெரி­வித்து வரு­கின்­ற­மையும், குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த ஊழல்­களின் பின்­ன­ணியில் பலர் இருப்­ப­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. நாம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினை நிரா­க­ரிப்­ப­தற்கு ஊழல் நட­வ­டிக்­கையும் பிர­தான கார­ண­மாக இருக்­கின்­றது. பொருத்து வீடு என்­பது மலை­ய­கத்­திற்கு கிடைக்­கின்ற ஒரு சந்­தர்ப்­ப­மாகும் என்றும் இதனைக் கைவி­டு­வது புத்­தி­சா­லித்­த­ன­மல்ல என்றும் சில புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருந்­தனர். நான் இவர்­க­ளிடம் ஒரு கேள்வி கேட்­கின்றேன். பொருத்து வீட்டின் உண்­மை­யான பெறு­மதி என்­ன­வென்று இவர்கள் எப்­போ­தேனும் ஆராய்ந்து பார்த்­துள்­ளார்­களா? இது ஒரு போதும் கிடை­யாது.

பொருத்து வீட்டில் இடம்­பெற உள்ள மோச­டிக்கு நாம் துணை போகப் போகின்­றோமா? என்­ப­தனை முதலில் தீர்­மா­னிக்க வேண்டும். பொருத்­து­வீட்டு நட­வ­டிக்கை எந்­த­ள­வுக்கு பொருத்­த­மா­னது என்­ப­தனை சிந்­திக்க வேண்டும். பொருத்து வீடொன்றின் பெறு­மதி 22 ரூபா என்­கிற நிலையில் இந்த 22 இலட்சம் ரூபா­வினை கடன் அடிப்­ப­டையில் மலை­யக மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்து புதி­தாக ஒரு வீட்­டினை நிர்­மா­ணித்­துக்­கொள்ள இட­ம­ளிக்கக் கூடாதா? இது சிறந்த திட்­டமாக அமை­யாதா? ஊழலின் மூலம் பணம் மீட்டிக் கொள்­வ­தற்கே பொருத்­த­மில்­லாத பொருத்­து­வீட்டுத் திட்டம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. மக்கள் மேல் பாரம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. பொருத்து வீட்டுத் திட்­டத்தை மலை­யக மக்­க­ளா­யினும் சரி வடக்கு, கிழக்கு மக்­க­ளா­யினும் சரி முற்­றாக எதிர்க்க வேண்டும். 22 இலட்சம் ரூபா­வினை மக்கள் பெற்­றுக்­கொள்­கின்ற வகையில் திட்­டங்கள் முன்­வைக்­கப்­ப­டு­தலும் வேண்டும். பொருத்து வீட்டுத் திட்­டத்தின் ஊடாக சிலர் மடியை நிறைப்­ப­தற்கு துணை­போகக் கூடாது. நாட்டு மக்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும்.

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்

பொருத்து வீட்டுத் திட்டம் மலை­யக மக்­க­ளுக்கு பொருத்­த­மில்லை என்று ஒரே­ய­டி­யாக கூறி­விட முடி­யாது. அதன் சிறப்­பம்­சங்­களை சீர்­தூக்கிப் பார்த்து நன்கு ஆராய்ந்து முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. வட பகுதி கலா­சார சூழ்­நி­லை­க­ளுக்கும், கால­நி­லையை பொருத்­த­மட்­டிலும் பொருத்து வீட்டுத் திட்டம் பொருத்­த­மில்லை என்று வட­ப­குதி மக்­களும் முக்­கி­யஸ்­தர்­களும் தீர்­மா­னித்து இத்­திட்­டத்தை பூர­ண­மாக நிரா­க­ரித்து வரு­கின்­றனர். இவ்­வா­றாக வட­ப­கு­தி­யினர் நிரா­க­ரித்த பொருத்து வீடு­களை மலை­ய­கத்­திற்கு கொண்டு வர உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வட­ப­கு­தி­யினர் பொருத்து வீட்டுத் திட்­டத்தை நிரா­க­ரித்­த­மைக்கு அர­சியல் கார­ணங்­களும் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது பற்றி நமக்கு எதுவும் கூற முடி­யாது. மலை­யக மக்­களை பொறுத்­த­வ­ரையில் வீட்டுத் தேவையை துரி­த­மாக பூர்த்தி செய்ய வேண்­டிய நிலையில் பொருத்து வீட்டுத் திட்டம் மிகவும் பய­னுள்­ள­தாக அமையும் என்று கூற தோன்­று­கின்­றது. எனினும் மலை­யக மக்­களின் வாழ்க்கை முறைக்கும் மலை­யக கால­நி­லைக்கும் இது பொருத்­த­மாக இருக்­குமா? என பரீட்­சிக்க வேண்டும். யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று நாம் ஆராய வேண்டும். கட்­டி­டக்­கலை நிபு­ணர்­களின் உத­வி­யையும் நாம் இதற்­கென பெற்­றுக்­கொள்ள வேண்டும். நாம் எமது வீட்­டினை காலத்­துக்கும், தேவைக்கும் ஏற்­ற­வாறு மாற்றிக் கொள்­கின்றோம். மாறுதல் இயல்­பா­னது. இதற்­கேற்ப பொருத்து வீட்டுச் சூழ்­நி­லை­க­ளையும் நாம் தேவைக்­கேற்ப திரி­பு­ப­டுத்த முடியும்.

காணி­யுடன் ஒரு வீடு வேண்டும் என்­பது தற்­போது மலை­ய­கத்தின் தேவை­யாக உள்­ளது. இந்த வீடு இப்­போது எப்­படி இருப்­பினும் நாள­டைவில் நாம் திருத்திக் கொள்வோம். எமது கலா­சார பண்­பாட்­டுக்கு ஏற்­ற­வாறு பின்னர் மாற்றிக் கொள்வோம். வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்­காது பொருத்து வீட்டு வாய்ப்­பினை இறுக பற்றிக் கொள்ள வேண்டும்.

எஸ்.விஜ­ய­சந்­திரன் (சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்)  

பொருத்து வீடு தொடர்பில் ஒரு முழு­மை­யான விளக்கம் இன்னும் எமக்கு கிடைக்­க­வில்லை. பொருத்து வீடு தொடர்பில் முதலில் தெளி­வு­ப­டுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு பகு­தியில் உள்ள பொருத்து வீடு அதே வடிவில் மலையகத்தில் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளதா? அல்­லது மலை­ய­கத்­துக்­கென்று விசே­ட­மான முறையில் பொருத்து வீடுகள் உள்­ள­னவா? என்­பதை தெரிந்­து­கொள்ள வேண்டும். மலை­ய­கத்தில் முதலில் ஐம்­ப­துக்கும் குறை­வான பொருத்து வீடு­களை உரு­வாக்­கிய அதன் யதார்த்த நிலை­மை­களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் இத்­திட்டம் சரி­யா­னதா? பிழை­யா­னதா? என்று ஒரு நீண்­ட­கால திட்­டத்­தி­னையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொருந்­தோட்ட மக்­க­ளுக்கு மூன்று இலட்சம் வீடுகள் தேவைப்­ப­டு­வ­தாக செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன.

கடந்த கால வீட்டுத் திட்­டங்கள் ஆமை வேகத்தை அடைந்த நிலையில் மலை­யக வீட்டுத் திட்­டத்­தினை துரி­தப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. குறு­கிய காலத்தில் வீடு­களை கட்டி முடிக்க புதிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய வேலைத்­திட்­டங்கள் முக்­கி­ய­மாகும். கட்­டிட பொறி­யியல் நவீ­னத் ­தன்மை என்­பது தேவை­யாக இருக்­கின்­றது. வீட்­டுத்­தே­வையை பூர்த்தி செய்ய 30 வரு­டங்கள் மலை­யக மக்கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. இது மிக நீண்­ட­கா­ல­மாகும். மாதிரி பொருத்­து­வீட்டுத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு நிலை­மைகள் ஆரா­யப்­படல் வேண்டும்.

மலே­சியா போன்ற நாடு­களில் பொருத்து வீட்டுத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. இந்­நாட்டின் பொருத்­து­வீட்டு அனு­ப­வங்­க­ளையும் எம்­ம­வர்கள் பெற்­றுக் ­கொண்டு முன்­செல்ல வேண்டும்.

பெ.முத்துலிங்கம் (பணிப்பாளர், சமூக அபிவிருத்தி நிறுவகம், கண்டி)

பொருத்து வீடு என்பது உடனடி வீடுகளின் வகையை சார்ந்ததாகும். மலையகத்தில் பொருத்து வீடுகளை பாய்ந்து எடுப்பதற்கான அவசியம் இல்லை. முறையான, பயன்மிகுந்த வீடுகள் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இம்மக்கள் இந்நாட்டு பிரஜையாக இருப்பதில் பயனில்லை. நிலைமாறு கால ரீதியில் எம்மவர்களுக்கு என்ன பயன் இருக்கின்றது. எம்மவர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்க இடமளிக்கலாகாது. பொருத்துவீட்டில் இடவசதியை அதிகரிக்க முடியாது. மலையகத்தில் கல்வீடுகளை நிர்மாணிக்க உரிய வளங்களுக்கு பஞ்சமில்லை என்கையில் பொருத்துவீடு எமக்கு தேவைதானா? மாடி வீடு, இரட்டை வீடுகள் என்பவற்றில் காணப்படும் குறைபாடுகளை கருத்தில் கொண்டு தனிவீட்டு கலாசாரத்துக்கு வித்திடப்பட்டது. தனிவீடே சிறந்தது. இதுவே எமக்கு வேண்டும். பொருத்து வீடு என்ற வரையறுத்த சிறிய பகுதி மலையக மக்களுக்கு தேவையில்லை. மலையக அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும் சமூக நலன் கருதி சிந்திக்க வேண்டும். ஆட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக எதற்கெடுத்தாலும் ஆமாம் போடக் கூடாது. மலையக சமூகத்தினை வீணடிக்கவும் முற்படுதல் கூடாது. வீடு என்பது மனித உரிமையாகும். இந்த உரிமையை மீறுவதற்கு இடமளிக்கலாகாது. மலையக மக்களை தொடர்ந்தும் ஓரம் கட்ட இடமளிக்கவும் கூடாது.  

பி.பி.சிவப்பிரகாசம் (தலைவர்,மனித அபிவிருத்தி தாபனம்)

அண்மையில் இலங்கைக்கு அவுஸ்திரேலிய கல்விமான்கள் மலையகத்துக்கு பொருத்து வீடுகள் சிறந்தன என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தனர். மிகக் குறைந்த செலவிலான பொருத்து வீடுகள் மலையகத்துக்கு பொருந்தும் என்றும் தெரிவித்திருந்தனர். இத்திட்டம் வடபகுதியைக் காட்டிலும் முதலில் மலையகத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். எனினும் நிலைமை மாறிப்போய் இப்போது நிலைமை இழுபறியாகி இருக்கின்றது. மலையக மக்கள் மீது அதிகமாக முதலீடு செய்து வீடுகளை நிர்மாணிக்கின்ற அளவுக்கு அவர்களது வருமானம் இடம் தருவதாக இல்லை. பொருளாதாரச்சிக்கலில் இவர்கள் உள்ளார்கள். இந்நிலையில் குறைந்த செலவிலான பொருத்து வீடுகளை இவர்கள் பெற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமாகும். அரசாங்கம் மலையக மக்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்ய பொருத்து வீடுகளை வழங்க முற்படுகின்ற நிலை யில் அதனை உதறித் தள்ளுவது பிழையான தாகும்.

துரை­சாமி நட­ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.