Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு புதிய நெருக்கடி: இலங்கை தொடர்பில் ட்ரம்பிற்கு அறிக்கை..!

Featured Replies

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பினை நடத்தவுள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் "தலையீடு செய்யாத வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக" முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

ட்ரம்ப்பின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்ற வேளையில் இலங்கை தொடர்பான கண்ணோட்டம் எவ்வாறு இருக்கப்போகின்றது...?

http://www.tamilwin.com/special/01/132971?ref=editorpick

  • தொடங்கியவர்

உயர்மட்ட அதிகாரியை கொழும்புக்கு அனுப்பினார் ட்ரம்ப்

Angela Aggeler (1)

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்றதையடுத்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் பதவிக்கு, ஏஞ்சலா அக்கேலர், கடந்த 20ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து, முதல்முறையாக சிறிலங்கா வந்துள்ள இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு  தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.

Angela Aggeler (1)Angela Aggeler (2)

இன்று இவர், சிறிலங்காவின் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதானவை சந்தித்து, தகவல் உரிமைச் சட்டம் மற்றும் சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் தொடர்பான கேட்டறிந்தார்.

அதையடுத்து, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் ஏஞ்சலா அக்கேலர்,  சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இவர் தமது பயணத்தின் முடிவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2017/01/24/news/20910

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை மீது ஐ.நாவில் மற்றுமொரு பிரேரணை..! ட்ரம்பின் பிரதிநிதி இலங்கை அரசிடம் நேரில் எடுத்துரைப்பு

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கும் மற்றொரு பிரேரணை, ஜெனிவாக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்ட அவரின் பிரதிநிதி அன்ஜூலா, இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களிடம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அமெரிக்காவின் புதிய அரச ஜனாதிபதியாக ட்ரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றார். பதவியேற்று 4 தினங்களுக்குள்ளேயே, இலங்கை அரசுக்கு, அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலர் அன்ஜூலா வருகை தந்திருந்தார்.

சிவில் சமூகத்தினர், ஊடகச் செயற்பாட்டாளர்கள், அரசின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களுடன் அவர் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

"ட்ரம்ப் பதவியேற்றதால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றமடையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு எதிர் பார்ப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

ஐ.நா. தீர்மானத்தைநடைமுறைப்படுத்துவதற்கு இணங்கி இலங்கை அரசு அதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. இன்னமும் நிறைவேற்றவேண்டிய விடயங்கள் அதிகமாக உள்ளன.

அந்த விடயங்களை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசம் வழங்கி, எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் பிரேரணை கொண்டு வரப்படும்" என்ற விடயங்களை இலங்கை அரசுக்கு அன்ஜூலா தெரியப்படுத்தியுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/133865

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவின் விபச்சார கூத்து ஒரு முடிவுக்கு வந்திட்டுது போல் தென்படுகிறது அதுதான் அவசர அவசரமாக இலங்கையில் எந்த இடத்திலும் சைனாவுக்கு இடமில்லை என்று ஊளையிடுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.