Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் திக்., திக்.,- அடுத்த வாரத்தில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்

Featured Replies

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் திக்., திக்.,- அடுத்த வாரத்தில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்

 

புதுடில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தயாராக உள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெ., சசிகலா, இளவரசி , சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக மாநிலம் சார்பில் வக்கீல் நேரில் ஆஜரானார். இவர், நீதிபதிகளிடம் இந்த வழக்கில் தீர்ப்பு இழுக்கப்படிக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என கேட்டார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்; இந்த வழக்கில், தீர்ப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய தயாராகி விட்டது. அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.



 

 

பாதிப்பை ஏற்படுத்தும் :

 

ஜெ., மறைந்த நிலையில் , சசிகலா நேற்றுதான் ( பிப்., 5 ம்தேதி) அதிமுக சட்ட சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705468

  • தொடங்கியவர்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி

supreme_court_long_1_10463.jpg

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996-ம் ஆண்டில், சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை தலைவராக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சசிகலா வரும் ஒன்பதாம் தேதி முதல்வராக பதவியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/79894-supreme-court-likely-to-pronounce-judgement-in-jayalalithaa-and-sasikala-disproportionate-assets-case-in-a-week.art

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

 

 
SC

புது தில்லி: ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பளித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர், நால்வர் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததார். தீர்ப்பில், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்குரைஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
மேலும், வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.
இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது.
வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி நான்கு பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துக்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று இன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி அல்லது நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் செய்தி அதிமுகவினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்று கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா எழுதியுள்ள தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/tamilnadu/2017/feb/06/ஜெயலலிதா-சொத்துகுவிப்பு-வழக்கில்-ஒரு-வாரத்தில்-தீர்ப்பு-உச்சநீதிமன்றம்-அறிவிப்பு-2644752.html

  • தொடங்கியவர்
சசிகலாவை மிரள வைக்கும் சொத்து குவிப்பு வழக்கு; நடந்தது என்ன ?

 

சென்னை: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில் அவர் சொத்துக்களை கணக்கிட்டதில் பிழை உள்ளது என்றே மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 18 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, 2014, செப்டம்பர் 27ல், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, தலா, நான்காண்டு சிறை தண்டனையும் விதித்தார்.மேலும், ஜெயலலிதாவுக்கு, நூறு கோடி ரூபாய் அபராதமும், பிறருக்கு, தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 

 

சிறையில் அடைப்பு:

இதையடுத்து, முதல் வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 17ல், அவரை ஜாமினில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார். அதே நேரம், தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை, மே 12க்குள் முடிக்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த, மே 11ல் பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக மீண் டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2015 ஆண்டு ஜூன், 22ம் தேதி மேல் முறையீடு செய்தது. வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், 'ஜெயலலிதா மற்றும் மூவரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.


 

 

கடன் விவர கூட்டலில் தவறு :

மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்களாவன:

* இந்த வழக்கில், கர்நாடகா விசாரணை அமைப்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன், வாதியாக சேர்க்கப்படவில்லை.

* ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை, உயர்நீதிமன்றம் தவறாக கணக்கிட்டுள்ளது.

* மொத்த கடன், 10.67 கோடி ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், 24.17 கோடி ரூபாய் என, தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.

* வருமானத்தை விட, 8.12 சதவீதம் அளவிற்கு தான் ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார் என கருதி, நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்துள்ளார். ஆனால், 76.7 சதவீத அளவுக்கு, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார்.

* வருமானத்திற்கு அதிகமாக, 16.32 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது; வருமானம், 21.26 கோடி ரூபாயாக நீதிபதியால் கண்டறியப்பட்டுள்ளது.

* 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீதத்திற்குள் சொத்து சேர்த்திருந்தால், வழக்கிலிருந்து விடுதலை செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை, இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு சாதகமாக ஆக்கியுள்ளது. ஆனால், அவர், 10 சதவீதம் அல்ல; 76 சதவீதம் அளவிற்கு சொத்து குவித்துள்ளார்.

* கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, கவனத்தில் கொள்ளவேண்டும்.


* முதல்வர் பதவியில் இருந்தபோது, பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளை குவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. அவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும். இவ்வாறு, கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

புது கணக்குப்படி 168 சதவீதம்!

'கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழையை சரி செய்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு, 168 சதவீதம் வரும்' என, 'அப்பீல்' மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை, விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 8.12 சதவீதம் என கணக்கிட்ட, நீதிபதி குமாரசாமி, 'ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார்த்தால், அது, அனுமதிக்கப்பட்ட அளவு தான்' என, குறிப்பிட்டிருந்தார்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.,), கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழை இருப்பதாக, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனுவில், கூறியிருப்பதாவது:உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள பிழையை சரிசெய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி அளவுக்கு வருகிறது. அது, உயர் நீதிமன்றம் கணக்கிட்ட, 8.12 சதவீதத்துக்கு மாற்றாக, 76.70 சதவீதமாகத் தெரிகிறது. இதனுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன்னது போல், கட்டடங்களின் கட்டுமான செலவான, 19.90 கோடி ரூபாயைச் சேர்த்தால், சொத்தின் அதீத மதிப்பு, 93.60 சதவீதமாகிறது.இத்தொகையுடன், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமான, 22.75 கோடி ரூபாயைச் சேர்த்தால், கூடுதல் வருமானம், 123.50 சதவீதமாகிறது; இதனுடன், சுதாகரனின் திருமண செலவான, 6.16 கோடி ரூபாயைச் சேர்த்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 168 சதவீதம் ஆகிறது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு ஜூன், 6ம் தேதி விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக இருப்பதால் தமிழக அரசியல் மேலும் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705469

  • தொடங்கியவர்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு நாளை மனுதாக்கல் செய்ய உள்ளது.

 
 
 
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்
 
பெங்களூர்:

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது.

இந்த நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். எனவே அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

இது சம்பந்தமாக கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே இதற்கான சிறப்பு மனு ஒன்றை நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம். அதில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட தகவலை கூறி வழக்கில் இருந்து அவரை பெயரை எடுத்து விடும்படி வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். எனவே மற்ற 3 பேருடைய பெயர்களும் தொடர்ந்து நீடிக்கும். அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். அவர்கள் 3 பேரும் தவறு செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
 
  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை வேகப்படுத்திய தவே!

வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நினைவூட்டலுக்கு பிறகே, இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

 
 

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளவருமான சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த வாரமே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிட காரணமாக இருந்தவர் கர்நாடக தரப்பு, சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவேயாகும்.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996ம் ஆண்டில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.

 

ஜாமீன்

இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

 

விடுதலை

இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

ஒரு வாரத்தில் தீர்ப்பு

இன்னும் ஒரு வாரத்திற்குள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும் முடிவுக்கு வர, கர்நாடக அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கோரிக்கை ஒரு முக்கியமான காரணமாகும். சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞரான ஆச்சாரியாவுடன் இணைந்து வாதிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர்தான் துஷ்யந்த் தவே.

 

    நினைவூட்டிய தவே

சுப்ரீம்கோர்ட் பெஞ்ச்சை இன்று அணுகியுள்ளார் தவே. "சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தீர்ப்பு குறித்து நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று தவே நீதிபதிகள் பெஞ்சிடம் தெரிவித்தார். இவரது நினைவூட்டலுக்கு பிறகே, இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சலசலப்பு

இந்த வாரத்திலேயே தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், தவே கோரிக்கையும், அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட தகவலும், அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-s-da-case-be-pronounced-this-week-senior-counsel-dushya/slider-pf221127-273392.html

  • தொடங்கியவர்

சசிகலா சிறைக்கு போனால் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளி நடராஜனும் முதல்வராக முடியாது!

 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பினால் அடுத்த முதல்வராக அவரது கணவர் நடராஜனையும் உட்கார வைக்க முடியாது என்பதால் கைபிசைந்து நிற்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.

 

 சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டால் அடுத்த தமிழக முதல்வராக யாரை உட்கார வைக்கலாம்? சசிகலா கணவர் நடராஜனுக்கு ஃபெரா வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டன விதிக்கப்பட்டால் அவரும் முதல்வராக முடியாதே என புலம்பி வருகிறதாம் போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

 

அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கிவிடக் கூடாது என்பதில் மன்னார்குடி கோஷ்டி மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.

இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்னும் ஒருவாரத்தில் வழங்க உள்ளது.

 

முதல்வராகும் சசிகலா

இதனிடையே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை கைப்பற்றிய சசிகலா முதல்வர் பதவியில் அமரவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஓரிருநாட்களில் அவர் முதல்வராக பதவியேற்க கூடும்,

மீண்டும் சிறை?

இந்த நிலையில் தற்போது சசிகலா விடுதலைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் சசிகலா மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும்.

முதல்வராக நடராஜன்?

அப்படி சசிகலா சிறைக்கு போகும்நிலையில் முதல்வர் நாற்காலியில் யார் உட்காருவது? என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது மன்னார்குடி கோஷ்டி. சசிகலாவின் கணவர் நடராஜன் மீது லெக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் தொடர்ந்தன.

2 ஆண்டு சிறை

அமலாக்கப்பிரிவு ஃபெரா சட்டத்தின் கீழும் சிபிஐ தவறான தகவலை தந்ததாகவும் நடராஜன் மீது வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கில் நடராஜன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார் நடராஜன்.

 

அப்பீல் நிலவரம்

அத்துடன் இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரியும் நடராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் நடராஜனின் 2 ஆண்டு சிறைத் தண்டனையை மட்டுமே நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் நடராஜன் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளியே.

 

முதல்வராக முடியாது.. ஆகையால் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற, நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நடராஜனால் முதல்வர் நாற்காலியில் அமரவே முடியாது. ஏனெனில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற நபர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகையால் நடராஜனுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் சசிகலா சிறைக்குப் போனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் படுதீவிரமாக இருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-sc-verdict-who-is-next-cm/slider-pf221112-273388.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதாரணமாக மரணமான ஒருவர் மீதுள்ள வழக்கு நிலுவைகள் தள்ளுபடி செய்யப்படும் என கேள்விப்பட்டுள்ளேன்.:rolleyes:

9 hours ago, நவீனன் said:

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

 

  • தொடங்கியவர்
4 hours ago, குமாரசாமி said:

சாதாரணமாக மரணமான ஒருவர் மீதுள்ள வழக்கு நிலுவைகள் தள்ளுபடி செய்யப்படும் என கேள்விப்பட்டுள்ளேன்.:rolleyes:

 

 

13 hours ago, நவீனன் said:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு நாளை மனுதாக்கல் செய்ய உள்ளது.

 
 
 
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்
 
பெங்களூர்:

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது.

இந்த நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். எனவே அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

இது சம்பந்தமாக கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே இதற்கான சிறப்பு மனு ஒன்றை நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம். அதில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட தகவலை கூறி வழக்கில் இருந்து அவரை பெயரை எடுத்து விடும்படி வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். எனவே மற்ற 3 பேருடைய பெயர்களும் தொடர்ந்து நீடிக்கும். அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். அவர்கள் 3 பேரும் தவறு செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
 

 

  • தொடங்கியவர்
சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா?:
அடுத்த வாரத்தில் தீர்ப்பு
 
 
 

'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா, அவரது தோழி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அடுத்த வாரம் அளிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக் கின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என, தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

 

Tamil_News_large_170564920170207000600_318_219.jpg

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நடந்து வருகிறது.
 

ஒத்திவைப்பு


இந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2014, செப்., 27ல், தீர்ப்பு அளித்தார். பரபரப்பான அந்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என அறிவித்து, தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு ஐகோர்ட் நீதிபதி,குமாரசாமி, 2015,

மே,11ல்அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். ஜெயல லிதா, சசிகலா உள்ளிட் டோர் மீதான, இந்த சொத்து குவிப்பு வழக்கு, 21 ஆண்டுக ளாக பல்வேறு கோர்ட் களில் நடந்து,

தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக் கிறது. நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ்,அமிதவராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை, 2016, ஜூன், 7ல், ஒத்தி வைத்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மரணம், தமிழ கத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க சசிகலா தயாராகி வருவது போன்ற சம்பவங்கள் நடந்துள் ளன. இந்த நிலையில், ''இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது அளிக்கப்படும்,'' என, நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையிலான அமர்வை, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நேற்று கேட்டார்.

'அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது; ஒரு வாரம் காத்திருங்கள்' என, தேதி எதையும் குறிப் பிடாமல், அமர்வு பதிலளித்துள்ளது; இது, தமிழகத் தில் மிகப் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், சசி மற்றும் அவரது உறவினர்கள் மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என, பரவலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.
 

சசி பதவியேற்க கூடாது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, தமிழக முதல்வராக, சசிகலா பதவியேற் பதற்கு தடை விதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்ற அரசு சாரா அமைப்பின்

 

சார்பில், அதன் பொதுச் செயலர் செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில், ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவியேற்று, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால், பதவியை இழக்க நேரிடும். இதனால், தமிழகத் தில் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே, புயல், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், முன்னாள் முதல்வர், ஜெயலலிதா வின் மரணம் என, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள தமிழக மக்கள், இதை தாங்க மாட்டார்கள்.இந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும் புரளி பரப்பி விடப் பட்டுள்ளது. கோர்ட்டின் மாண்பை காக்கும் வகையில், முதல்வராக சசிகலா பதவியேற் பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705649

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பில் சசிகலாவுக்கு பெரும் பங்கு: கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து

 

 
 
பி. வி. ஆச்சார்யா
பி. வி. ஆச்சார்யா
 
 

மறைந்த தமிழக முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 2-வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வுக்கு பெரும் பங்கு உள்ளது என கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘தி இந்து'விடம் கூறியதாவது:

“சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறைந்தார். ஆனால் ஜெயலலிதா வழக்கின் விசாரணை காலம் முழுவதும் உயிருடன் இருந்த தால் வழக்கின் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதே வேளை யில் வழக்கில் தொடர்புடையவர் இறந்துவிட்டால் அவரது பெயரை நீக்க வேண்டும். இதனை அரசு வழக்கறிஞர் என்ற முறையில் நான் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி ஜெயலலிதா வின் பெயரை வழக்கில் இருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மனுதாக்கல் செய்வேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மட்டுமில்லாமல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் குற்றம் செய்ததாலே தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா பொது ஊழியராக இருந்து ஊழல் புரிந்ததாலே அவருக்கு ரூ.100 கோடி அபராதம் வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு உடந்தை யாக இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. இதன் மூலம் ஜெயலலிதா மட்டுமில்லாமல் சசிகலா உள்ளிட்டோருக்கும் ஊழலில் பெரும் பங்கு உள்ளது என்பதை நீதிபதி குன்ஹா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலி தாவுடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டது, ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டது, பொது ஊழியரின் பெயரைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தது ஆகியவற்றை பற்றி உறுதி யான ஆதாரங்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை அளிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

http://tamil.thehindu.com/india/சொத்துக்குவிப்பில்-சசிகலாவுக்கு-பெரும்-பங்கு-கர்நாடக-அரசு-வழக்கறிஞர்-ஆச்சார்யா-கருத்து/article9525160.ece?homepage=true

  • தொடங்கியவர்

'சசிகலா முதல்வராவது கடினம்..!' சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்

சசிகலா

ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22 -ம் தேதி அப்போலோவில் காய்ச்சல் மற்றும்  நீர்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமிழக முதல்வராக ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வில் அடுத்த தலைமை யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் திடீரென்று கடந்த டிசம்பர் 31-ம் தேதி சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாராகப் பதவி ஏற்ற சில நாட்களில் சசிகலா முதலமைச்சராகவும் பதவி ஏற்கப்போகிறார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏ- க்கள் கூட்டத்தில்  அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இன்று (7.2.2017) சசிகலா நடராஜன் பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பதவி ஏற்புக்கான விழா ஏற்பாடுகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. எப்போது நடைபெறும் என்றும் தெளிவான தகவல் இல்லை. 

 அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது....

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.2.2017) வழக்கறிஞர் விஜயன் தனது பேஸ்புக் பதிவில் சட்டசிக்கல்கள் குறித்துத் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவரிடம் பேசியபோது "மூன்று விவகாரங்களில் சசிகலா பதவி ஏற்பதற்கான தடைகள் உள்ளது. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வரவுள்ளது. இப்படி அவர் மீது உள்ள வழக்குகளாலும் சசிகலாவுக்கு சிக்கல் உள்ளது. 

மற்றொரு தடையாக , சட்டமன்றத்துக்கு ஒருவர் செல்லவேண்டும் என்றால் இந்திய அரசியலைமைப்பின் 188-வது பிரிவின்படி உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கே உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று விதியில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் ஒருவர் எப்படி உறுதிமொழி ஏற்காமல் பதவி ஏற்க முடியும் ? பதவி ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்துக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுவேன் என்பது  இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது" என்றார் .

 விஜயன் சார்பாக வைக்கப்படும் வாதங்கள்.....

1. இந்திய அரசியலமைப்பு -10-வது விதியின் படி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டும். விஜயன்(legislative member ) சசிகலா அவர்கள் உறுப்பினராக இல்லை.

2.ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் அமர்வதற்கு பிரமாணம் எடுக்க வேண்டும். அப்படியே முதலமைச்சராக வந்தாலும் 6 மாதகாலம்  உறுப்பினராக இல்லாமல் எப்படி அமர முடியும். 

இவ்வாறு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும் "இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முதலமைச்சருக்கான விதிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சசிகலா பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற  நிலையில்,தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் டெல்லியில் இருந்து மும்பை சென்று விட்டார். சசிகலா பதவி ஏற்பதில் உள்ள சட்ட சிக்கல்களை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே,அவர் தமிழகம் திரும்பலாம் என்று சொல்லப்படுகிறது.  

http://www.vikatan.com/news/coverstory/80039-sasikala-could-not-assume-office-legally-says-lawyer-vijayan.art

  • தொடங்கியவர்

தற்காலிகமாக தப்பினார் சசிகலா.. சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு கிடையாது!

 

சசிகலாவுக்கு தற்காலிக நிவாரணமாக, சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது.

 

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. நாளைய உச்சநீதிமன்ற பணிப் பட்டியலில் சொத்துக் குவிப்பு வழக்கு இடம் பெறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவசரி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் அனைவருக்கும் தலா 4 வருட சிறைத் தண்டனையாயும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

 

இதனால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். VIDEO : ஜெயலலிதா சொத்து மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு... ஜெயலலிதா சொத்து மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..

 

இதை எதிர்த்து பின்னர் கர்நாடக உயர்நீமன்றத்தில் அனைவரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்து அதிர வைத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகியும் தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென சிலநாட்களுக்கு முன்பு கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகளை அணுகி தீர்ப்பு என்னாச்சு என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

 

இதனால் சசிகலா தரப்பு பெரும் கலக்கமடைந்தது. தீர்ப்பு பாதகமாக வந்தால் முதல்வர் கனவு மட்டுமல்லாமல் மொத்த வாழ்க்கையும் நாசமாகி விடும் என்பதால் சசிகலா தரப்பு பெரும் துயரத்தில் மூழ்கியது. ஆனால் இன்று வரை தீர்ப்பு வெளியாகவில்லை. நாளைதான் இந்த வாரத்தில் நீதிமன்றத்திற்கு கடைசி பணி நாள். ஆனால் நாளைய பணிப் பட்டியலிலும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இடம் பெறவில்லை. இனி இதை விட்டால் வருகிற திங்கள்கிழமைதான் தீர்ப்பு அளிக்கப்பட முடியும். எனவே இந்த வாரம் சசிகலா தப்பி விட்டார். அனேகமாக திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு சசிகலாவின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதால் சசிகலா தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/breather-sasikala-no-sc-verdict-da-case-this-week-273717.html

  • தொடங்கியவர்

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு.. திங்கள்கிழமையும் தீர்ப்பு வர வாய்ப்பில்லை!

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கள்கிழமையும் தீர்ப்பு வராது என்று கூறப்படுகிறது.

 

டெல்லி: சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மேலும் தள்ளிப் போகிறது. திங்கள்கிழமையும் இந்தத் தீர்ப்பு வராது என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

 

 
No Jaya DA case verdict on Monday
 

 

 

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அமித்தவா ராய், பி.சி.கோஷ் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. 8 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை தீர்ப்பைச் சொல்லாமல் உள்ளனர் நீதிபதிகள். கடந்த வாரம் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இதுகுறித்து நீதிபதிகளிடம் கேட்டபோது இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்றனர். ஆனால் தேதி குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இன்று வரை தீர்ப்பு அளிக்கப்படவில்லை. நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் கோர்ட் விடுமுறை. எனவே திங்கள்கிழமை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. காரணம், நீதிபதி அமித்தவா ராய் திங்கள்கிழமை விடுமுறை. எனவே அன்று தீர்ப்பு வர வாய்ப்பில்லை.

தற்போதைய நிலவரப்படி செவ்வாய் அல்லது புதன்கிழமைதான் தீர்ப்பு வரும் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் மேலும் தள்ளிப் போகும் வாய்ப்பும் உள்ளதை மறுக்க முடியாது என்கிறார்கள்.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான தீர்ப்பு ரத்து செய்யப்படும். ஆனால் சசிகலாதான் இங்கு முக்கியமாக பதைபதைப்பில் உள்ளார். அவரது தலையெழுத்து இந்தத் தீர்ப்பில்தான் அடங்கியுள்ளது. இதில் அவர் தண்டிக்கப்பட்டால் அவரது அரசியல் கனவு, முதல்வர் பதவி கனவு ஆகியவை நப்பாசையாகி நாசமாகி விடும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது.

இந்தத் தீர்ப்பைக் காரணமாக வைத்துத்தான் ஆளுநரும் சசிகலாவுக்கு முதல்வராகப் பதவியேற்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்தத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால் அது தொடர்ந்து தாமதமாகி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

http://tamil.oneindia.com/news/india/no-jaya-da-case-verdict-on-monday-273809.html

  • தொடங்கியவர்

சசிகலாவின் தலை தப்புமா.. சொத்து குவிப்பு வழக்கில் 14-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?

 

சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வரும் 14-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 14-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. 1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா.

 

ஆனால் மேல்முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். VIDEO : ஜெயலலிதா சொத்து மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு... ஜெயலலிதா சொத்து மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு...

 

உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார்.

 

அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். இத்தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து ஹோட்டலில் அடைத்து வைத்துள்ளார். ஆனால் ஆளுநரோ இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே வரும் 14-ந் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பு வரும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-verdict-against-sasikala-on-feb-14-273853.html

  • தொடங்கியவர்
சசிகலா வழக்கு என்னாகும்?
 
 
 

இதுவரை, பன்னீர்செல்வம் பற்றி பேசாத வட மாநிலத்தவர், இப்போது பன்னீரைப் பற்றியே பேசுகின்றனர். மத்திய அரசு அலுவலகங்களி லும், பன்னீர் முதல்வராக பதவியேற்பாரா அல்லது சசிகலா முதல்வராவாரா என, பட்டிமன்றமே நடக்கிறது.

 

Tamil_News_large_170901520170211233456_318_219.jpg

உ.பி., தேர்தல் நடக்கும் நிலையில், அதை பற்றி யாரும் பேசுவதில்லை; பன்னீர்... பன்னீர் என, தமிழக நிலவரத்தைப் பற்றித்தான் பேசுகின்ற னர்.

சசிகலாவைப் பற்றி, 'வாட்ஸ் ஆப்'பில் வரும் தமிழ், 'மீம்ஸ்'களை மொழிபெயர்த்துசொல்லும் படி,தமிழக பணியாளர்களை கேட்டு, விஷயத்தை புரிந்து, சிரித்து மகிழ்கின்றனர்.

அந்த அளவிற்கு, டில்லியை ஆக்கிரமித்து விட்டார், பன்னீர்செல்வம். 'மத்திய அரசு, பன்னீருக்கு ஆதரவு தருகிறது.

தமிழக அரசியல், இந்த நிலைக்குப் போவதற்கு மோடி தான் காரணம்' என, கூறப்படும் குற்றச்சாட்டு களை மறுக்கிறார், ஒரு மத்திய சீனியர் அமைச்சர்.' தமிழக அரசியலில் காட்டும் வேகத்தை, உ.பி.,யில் காட்டினால், எங்களுக்கு ஒருசில தொகுதிகள் அதிக மாக கிடைக்கும்.

அதை விடுத்து, நாங்கள் ஏன் தமிழக அரசியலில் தலையிடப் போகிறோம். இத னால், தமிழகத்தில், பா.ஜ.,விற்கு அதிக தொகுதிகள் கிடைக்கப் போவ தில்லை. எனவே, கவர்னர் பார்த்து கொள்வார்' என்கிறார், அந்த அமைச்சர். 'அப்படியானால், ஏன் கவர்னர் உடனே ஒரு முடி வெடுக்காமல் இருக்கிறார்' என்ற கேள்விக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை,பொறுமையாக இருக்கும்படி, மேலிடத் தில் இருந்து சொல்லப்பட்டதாக கூறுகிறாராம்.

மேலும், வித்யாசாகர் ராவே ஒரு வழக்கறிஞர். தன் வழக்கறிஞர் நண்பர்களுடன், தமிழக நிலை குறித்து விவாதித்தாராம். மும்பையில், பல மூத்த வழக்கறி ஞர்களிடம் பேசினாராம் வித்யாசாகர் ராவ்.

 

சென்னையில் உள்ள, ஒரு சில மூத்த வழக்கறிஞர்களிடமும் கருத்து கேட்டுள்ளார். இப்படி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்காக காத்திருக் கின்றனர் என்றால், தமிழக அரசியலில், அந்த தீர்ப்பு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

'அமைதியாக பொறுத்திருந்து பாருங்கள்' என் கின்றனர், விபரம் அறிந்தவர்கள். தீர்ப்பு தரும் நீதிபதிகளில் ஒருவர், திங்கட்கிழமை யன்று விடுப்பில் உள்ளாராம். எனவே, செவ்வாய் அல்லது புதனில், தமிழக அரசியல் குழப்பத் திற்கு முடிவு கட்டும் தீர்ப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709015

  • தொடங்கியவர்

சசிகலா பதவியேற்பு... சொத்துக் குவிப்பு தீர்ப்பு! - ஆச்சார்யா அதிரடி!

 

சிகலா, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வாகி முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்ந்த நிலையில், ‘அடுத்த வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும்’ என அறிவித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை மையமாக வைத்து, ‘இதில் தீர்ப்பு தரும் வரை, சசிகலா பதவியேற்கத் தடை விதிக்க வேண்டும்’ என பலத்தக் குரல் எழுந்துவருகிறது. இந்தச் சூழலில், கர்நாடக அரசு வழக்கறிஞராக இருந்து இந்த வழக்கில் வாதாடி முடித்திருக்கும் பி.வி.ஆச்சார்யாவை பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

p28.jpg

‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாம் நபராகக் குற்றம்சாட்டப்பட்ட சசிகலாவின் பங்கு என்ன?’’

‘‘சசிகலாவுக்குப் பெரிய ரோல் இருக்கிறது. வழக்கில் சம்பந்தமுள்ள 32 கம்பெனிகளில், பெரும்பாலான கம்பெனிகளில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். இந்த நிறுவனங்களின் மூலம் வரும் வருமானத்தை எந்த வங்கிக் கணக்கில் போட வேண்டும், எப்போது போட வேண்டும் என்று வழிகாட்டியவர் சசிகலாதான். புதிய சொத்துகளை வாங்கும்போது ‘எந்த நிறுவனத்தின் பெயரில் வாங்க வேண்டும்’ என்றும், ‘அதையெல்லாம் எப்படிப் பதிவுசெய்ய வேண்டும்’ என்றும் ஜெயலலிதாவுக்குப் பரிந்துரை செய்ததும் சசிகலாதான். ‘ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டுச் சதி செய்து தனித் தனியாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்’ என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

‘ஊழல் தடுப்புச் சட்டம் அரசு ஊழியர்களுக்குத் தான்’ என்று இருந்தாலும், அரசு ஊழியரான ஜெயலலிதாவைக் குற்றம் செய்யத் தூண்டிய வர்களாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் சசிகலாவின் மீது, குற்றம்செய்யத் தூண்டுதல், குற்றத்துக்கான கூட்டுச்சதி செய்தல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.’’

‘‘ஜெயலலிதாவின் மரணம், தீர்ப்பை பாதிக்குமா?’’

‘‘நிச்சயம் பாதிக்காது. முதல்கட்ட விசாரணை நடந்தபோது, ஜெயலலிதா உயிரிழந்திருந்தால் வழக்கில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், இறுதி விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகத் தள்ளிவைத்திருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் உயிரிழப்பு என்பது வழக்கின் தீர்ப்பை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருவேளை மீண்டும் விசாரணைக்கு வந்தால்கூட, கூட்டுச்சதியில் தனித் தனியாகக் குற்றம்செய்தவர்கள் என்பதால் இந்த மூன்று பேரும் தனித் தனியாக விசாரிக்கப் படுவார்கள்.’’

‘‘தீர்ப்பு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்த வழக்கின் வழக்கறிஞர் என்ற முறையில், நீதிமன்றத் தீர்ப்பு பற்றி நான் எந்தக் கருத்தும் கூற முடியாது. ஆனால், ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் அவர்களுடைய வழக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.’’

‘‘ஜெயலலிதா சொல்லித்தான் செய்தோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இப்போது சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சொல்லித் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘இது புதிய வழக்கு அல்ல. பல ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு. எல்லா விசாரணையும் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் முடிந்த பிறகு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்புவரும் நிலையில், சசிகலா, சுதாகரன், இளவரசி யாரும் மாற்றிப் பேச முடியாது.’’

‘‘தீர்ப்பு வருவதற்கு முன் தமிழக முதல்வர் பதவியை சசிகலா ஏற்றுக்கொள்வது சரியா?’’

‘‘சட்டப்படி இன்று அவர் முதல்வர் ஆவதற்குத் தடையில்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் தண்டனைப் பெற்றால் மீண்டும் மாற்றம் வரும். அதனால், தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும். ஏன் அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒருநாள் தண்டனை விதிக்கப்பட்டாலும் முதல்வர் பதவியில் இருக்க முடியாது. தேர்தலிலும் போட்டியிட முடியாது. மற்ற சட்டங்களின் கீழ் இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் முதல்வராக ஆக முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாது.’’

‘‘நீங்கள் கர்நாடக அரசு அட்வகேட் ஜெனரலாக இருந்ததால் கேட்கிறோம். சசிகலா பதவி ஏற்பு விஷயத்தில் தமிழக கவர்னர் எப்படி செயல்பட வேண்டும்?’’

‘‘சசிகலா பதவியேற்க முடியாமல் காலம் தாழ்த்துவதும், அவருடைய விருப்பத்தின்படி உடனடியாக பதவி ஏற்கச் செய்வதும் ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் கவர்னரின் முடிவு. இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைக் கூற முடியாது.’’

‘‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணை விரைவில் முடிந்தது. ஆனால், தீர்ப்பு இவ்வளவு மாதங்கள் தள்ளிப் போயிருக்கிறதே?’’

‘‘காலதாமதம் பற்றி என்னிடம் கேட்கக் கூடாது. இப்போதாவது தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் செய்யக் கூடாது.’’

‘‘கடந்த ஐந்து மாதங்களாகத் தீர்ப்பு பற்றி எதுவும் பேசாமல் இருந்த நீங்கள், சசிகலா பதவி ஏற்க இருந்த சூழ்நிலையில், ‘விரைவாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்’ என மெமோ தாக்கல் செய்திருக்கிறீர்களே?’’

‘‘இது தவறான தகவல். இது அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா அறிவிக்கப்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 4-ம் தேதி கர்நாடக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கலந்துகொண்டார். அவரிடம் நான், ‘இந்த வழக்கின் தீர்ப்பு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. விரைவாகத் தீர்ப்பு வழங்க, நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்தார். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. இடையில் 5-ம் தேதி, சசிகலா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்புக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.’’

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்
சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?
 
 
 

சென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

 

Tamil_News_large_170950520170212232904_318_219.jpg

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா,
 

முதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வராக பதவியேற்க, யாரை அழைப்பது என்ற விஷயத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் காலந் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:

இந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும்.

சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல்,

 

கவர்னர் காலந்தாழ்த்துவது சரியே. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால்இதுகுறித்து முடிவு எடுக்க, அவருக்கு நேரம் தேவைப்பட்டி ருக்கும். அவர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை;

எனவே, காலதாமதம் சட்ட விரோதமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709505

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.