Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர்

Featured Replies

கவர்னர் சென்னை வருவது உறுதியாகவில்லை

 

சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706941

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பரபரப்பான அரசியல் களம்! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? #OPSvsSasikala

ஒ.பி.எஸ் ராஜினாமா- ஆளுநர் முடிவு

மிழகத்தில் அரசியல் நிலைமை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.ஆளுநர் சென்னை வந்த பிறகே அது முழு அளவில் தெளிவடையும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மெரினாவில் 40 நிமிட நேரம், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், நேற்றிரவு தனது மௌனத்தைக் கலைத்து விட்டார். சசிகலா குடும்பத்தினரால் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தனது மனசாட்சி உந்துதல் காரணமாக அ.தி.மு.க தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தான் சொல்ல விரும்பியதை சொன்னதாகவும் அளித்த பேட்டி, தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் அ.தி.மு.க சட்டமன்றக்கட்சி தலைவராக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் ஓ.பி.எஸ். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், தனது மனச்சாட்சிப்படி உண்மைகளைத் தெரிவிப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது பேட்டியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 3 எம்.எல்.ஏக்கள் தவிர, ஏனைய 130 சட்டமன்ற உறுப்பினர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது மும்பையில் உள்ளார். அங்கிருந்தபடியே சட்ட ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரவோ, ஓரிரு நாட்களிலோ சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் ரோல் என்ன?

ஆளுநர் வித்யாசாகர் ராவ்ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அ.தி.மு.க-வின் 134 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் முதல்வராக ஓ.பி.எஸ்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். இப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடி சசிகலாவை சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்வு செய்திருக்கின்றனர். எனவே சசிகலாவும் ஆளுநரை சென்னையில் சந்தித்து தன்னை ஆட்சியமைக்க உரிமைகோருவார் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ-க்களின் தேர்வு கடிதத்துடன் ஆளுநரை சசிகலா சந்திப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்பப்பெறுவதாகக் கோருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சசிகலாவை முதல்வர் பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தால், ஓ.பி.எஸ்-ன் முதல்வர் பதவி முடிந்து விடும். அப்படி இல்லாதபட்சத்தில், 'உங்களுக்குள் உள்ள பிரச்னையைத் தீர்த்துவிட்டு வாருங்கள். அதுவரை சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்கிறேன்' என ஆளுநர் தெரிவிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. அல்லது, சசிகலா குறிப்பிட்ட காலத்திற்குள் தனது செல்வாக்கை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம். மேலும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வருமாறு கோருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தவிர, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இரு பிரிவாக உடையும்நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அடுத்த பெரிய கட்சியான தி.மு.க-வை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. அல்லது, குடியரசுத் தலைவர் ஆட்சியை தற்காலிகமாக அமல்படுத்தவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எது எப்படி இருப்பினும் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பிய பின்னரே தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்புடன் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை கிடைக்கும்.

நளினி சிதம்பரம்இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் பேசினோம். "அரசியல் ஸ்திரமற்ற சூழலில் ஆளுநர் முடிவுதான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், எந்தக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்றதோ, அந்தக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். மற்றபடி இதுபோன்ற அசாதாரண சூழலில், ஆளுநர் முடிவில் முக்கிய ரோல் இருக்கிறது. இப்போது ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்திருக்கிறார். இங்கு நடக்கும் அரசியல் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார். முதல்வர் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அதனை ஏற்றுக்கொள்ளா விட்டால் மட்டுமே, அந்தக் கடிதத்தை ஆளுநர் ரத்து செய்ய முடியும். ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரை அவரது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில், தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகச் சொல்லி இருக்கிறார். இதையும் வித்யாசாகர் ராவ் கவனத்தில் கொள்வார். ஒருவரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தால் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆளுநர் சொல்வதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது. கட்டாயப்படுத்தி வாங்கி இருப்பதால் அந்தக் கடிதம் செல்லாது என்று சொல்லி ஓ.பி.எஸ் கடிதத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கின்றேன் என்று ஆளுநர் சொல்லலாம். ஆளுநர் பரந்த வகையில் முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பன்னீர் ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுத்த பிறகுதான், ஆளுநர் அடுத்தக்கட்ட முடிவுகளை நோக்கி நகர்வார். முதலில் பன்னீர் செல்வத்தை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அழைப்பு விடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர்தான் இரண்டாவதாக சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புக் கொடுப்பார்" என்றார் நளினி சிதம்பரம்.

http://www.vikatan.com/news/coverstory/80117-governor-to-decide-on-ops-resignation-and-next-government-formation-in-tamilnadu--opsvssasikala.art

  • தொடங்கியவர்

நாளை சென்னை வருகிறார் ஆளுநர்

TamilNaduGovernor

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பாரா?, பன்னீர்செல்வம் ராஜினாமாவை திரும்ப பெறுவாரா? போன்ற பல கேள்விகளுக்கு நாளை விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குடியரசுத்தலைவரை சந்திக்க வைத்திலிங்கம் தலைமையிலான ஒன்பது அதிமுக எம்.பி.க்கள் விமானத்தில் டெல்லி பயணம் செய்ய உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80180-c-vidyasagar-rao-will-arrive-in-chennai-tomorrow.art

  • தொடங்கியவர்

அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர்

தமிழகம் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 
அதிமுக எம்.எல்.ஏ.க்களை நாளை பிற்பகல் சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர்
 
சென்னை:

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை மதியம் சென்னை வருகிறார். ஆளுநர் சென்னை வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை பிற்பகல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்கள்.
அதிமுக பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பை தமிழகத்தில் உள்ள ஆளுநர் மாளிகை இதுவரை உறுதி செய்யவில்லை.

முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் டெல்லிக்கு செல்வதாக இருந்தனர். விமான நிலையம் வரை சென்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆளுநர் வருவது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08215216/1067149/Governer-rao-will-meet-Admk-MLAs-tom-noon.vpf

  • கருத்துக்கள உறவுகள்

16640846_973160292783665_689936815411558

16473824_747469082085892_336080230715549

:D:

  • தொடங்கியவர்
கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை
பன்னீர்செல்வம் வாபஸ் பெற முடியுமா?
 
 
 

'ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து, கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்றால், முதல்வர் பன்னீர்செல்வம், அவரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்' என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tamil_News_large_170710920170209001051_318_219.jpg

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், முதல் கட்டமாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பொறுப்புக்கு, தற்காலிகமாக சசிகலா நியமிக் கப்பட்டார். அடுத்த கட்டமாக, ஆட்சிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என்ற கோஷத்தை, கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் முன் வைத்தனர்.

சட்டசபை கட்சி தலைவராகவும், சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். முன்னதாக, முதல்வர் பதவி யில் இருந்து, பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்; அதை, கவர்னரும் ஏற்றார். தற்போது, இடைக்கால முதல்வராக, பன்னீர்செல்வம் தொடர்கிறார்.

ராஜினாமா கடிதத்தை வற்புறுத்தி பெற்றதாக, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மக்கள் விரும்பினால், ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் கொடுத்து, அதை கவர்னரும் ஏற்ற பின், வாபஸ் பெற முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.


முதல்வரின் ராஜினாமாவை ஏற்பதற்கு முன், அந்த கடிதம் குறித்து, முதல்வரிடம் கவர்னர் உறுதி செய்திருக்க வேண்டும். அவ்வாறு உறுதிசெய்திருக் கும் பட்சத்தில், ராஜினாமாவை வாபஸ் பெற முடி யாது என, ஒரு தரப்பும், கவர்னர் திருப்தி அடைந் தால், வாபஸ் பெறலாம் என, மற்றொரு தரப்பும் கூறுகிறது.
 

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:


கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக, முதல்வர் கூறியுள்ளார். அது உண்மையா என்பது குறித்து, கவர்னர் விசாரணை நடத்தலாம். ஆனால், முதல்வர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக, கவர்னரிடம் மனு அளிக்க வேண்டும். அப்போது, அந்த புகார் குறித்து, கவர்னரும் விசாரிக்க வேண்டும்.

முதல்வரின் விளக்கத்தில் திருப்தியடைந்தால், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவது குறித்து, கவர்னர் பரிசீலிக்க முடியும். கவர்னரிடம் புகார் அளிக்காமல் இருந்தால்,அவரது ராஜினாமாவை ஏற்றது சரியாகி விடும்.

ராஜினாமாவை வாபஸ் பெற அனுமதித்தால் மட்டும், மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வராகி விட முடியாது. தனக்கு இருக்கும் பெரும் பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஆதாரங்களை, கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதில், கவர்னர் திருப்தியடைந்தால், பெரும் பான்மையை சட்டசபையில் நிரூபிக்கும்படி,

 

அழைப்பு விடுப்பார். இடைக்கால அரசாக, நீண்ட காலம் இயங்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
 

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி கூறியதாவது:


முதல்வரின் ராஜினாமாவை, கவர்னர் ஏற்றுக்கொண்டு விட்டதால், அதை வாபஸ் பெற முடியாது. பெரும்பான்மை இருக்கிறது என, யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். ஆனால், சட்டசபையில் தான், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

பெரும்பான்மை இருக்கிறது என, கடிதம் கொடுத்தால், உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் கையெழுத்து, அதன் உண்மைத் தன்மையை, கவர்னர் பரிசீலிப்பார். அவர் திருப்தி அடைந்தால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707109

  • கருத்துக்கள உறவுகள்

16473785_1227087180692978_80454613485330

:D:

  • தொடங்கியவர்

KK_1_18097.jpg

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.