Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனி போடும் வேதனையான நிலை காணப்படுகிறது! : புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

Featured Replies

முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனி போடும் வேதனையான நிலை காணப்படுகிறது! : புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
2017-02-08 11:27:38

இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும்  அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும்  தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

22225rishad.jpg

 

என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்..

 

புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது:-

 

"புத்தளம் அகதிமுகாமில் வாழ்ந்து வடமாகாணத்தில் மீளக்குடியேறிவரும் மக்களினது பிரச்சினைகளிலும் உள்கட்டுமானப்பணிகளிலும் கரிசனை செலுத்தும் அதேவேளை சமாந்தரமாக புத்தளத்தில் வாழும் பெரும்பாலான அகதிமக்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.

 

மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புத்தளத்தில் வாழ்ந்துவரும் அகதி மக்களின் கட்டுமானப்பணிகளையும்  வாழ்வியல் தேவைகளையும் மேற்கொள்ளும் போது எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தோமோ அதேயளவு சவால்களை வடக்கு மீள்குடியேற்றத்திலும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனிபோடுகின்ற வேதனையான நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

எமது முழுநேரத்தையும், காலத்தையும் இப்படியே வீணடித்துவிட்டால் முஸ்லிம் சமுதாயத்துக்கு சேவை செய்யாமல் கால்கட்டுப் போட்டுவிடலாமென இவர்கள் கற்பனை பண்ணுகின்றனர். அவர்களின்  இந்தக் கற்பனையானது பகல் கனவாகவே இருக்கும்."

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=22225#sthash.RnYwJAd9.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.