Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர்

Featured Replies

கேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர்

Mullai-keppa.jpg

ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இது தொடர்பில் நாளையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் நடைபெறவுள்ள  இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐந்து பேர்  கொழும்பு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிர போராட்டம் தொடருமென கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல்போன தமது உறவுகள் குறித்த உண்மையை பகிரங்கப்படுத்துமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் போராட்டம் மேற்கொண்டிருந்தவா்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்   நாளைய தினம் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/16783

  • தொடங்கியவர்
கேப்பாபுலவு: பிரதமருடன் இன்று பேச்சு
 
09-02-2017 08:32 AM
Comments - 0       Views - 6

article_1486616782-MA.jpgஜே.ஏ.ஜோர்ஜ்

முல்லைதீவு, கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு கிராம மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, இப்பேச்சுவார்த்தையின் போது, காணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று சமர்ப்பித்தார்.

அதன்போது, பிலவுக்குடியிருப்பு கிராமத்தின் காணி விடுவிப்பு விடயத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை படையினர் மீறிவிட்டதாக, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி சிவமோகன், சிறிநேசன், காதர் மஸ்தான் ஆகியோர் கூட்டாக குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், காணாமற் போனோர் விவகாரம் தொடர்பில், அவர்களது உறவினர்கள் உள்ளடங்கிய குழுவினர், அலரி மாளிகையில் நாளை (இன்று) பிரதமரைச் சந்திக்கவுள்ளனர். அதன் பின்னர், இந்த காணிப்பிரச்சினைக் குறித்து பிரதமரிடம் பேச, நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டனர். “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,  எழுத்துமூலம் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உறுதிமொழி, தற்போது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் போராட்டத்துக்கு நாமும் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம். ஆகவே, கேப்பாபுலவு குடியிருப்பு நிலங்களை, அதன் பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்கு திரும்ப ஒப்படைப்பதற்கு, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். இதன்போது பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இது தொடர்பிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/191251/க-ப-ப-ப-லவ-ப-ரதமர-டன-இன-ற-ப-ச-ச-#sthash.tx6IIIVd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.