Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்!

Featured Replies

  • தொடங்கியவர்

'நாங்கள் சிட்டுக்குருவிகள் அல்ல’- ரிசார்ட்டில் கொந்தளித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்

resort_13111.jpg

படம்: ஜெரோம்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ADMK MLA Tamilselvan

இந்நிலையில், கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார், 'எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை. எங்களது விருப்பத்தின் பேரில்தான் நாங்கள் இங்கு தங்கியுள்ளோம். நாங்கள் இங்கு சுதந்திரமாக உள்ளோம். அடைத்து வைக்க நாங்கள் சிட்டுக்குருவிகள் அல்ல. திமுக வேண்டுமென்றே நாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக விஷமப் பரபரப்புரை செய்கிறது' என்றார்.

முருகுமாறன் எம்எல்ஏ கூறுகையில், தொல்லைகள் வருவதால் போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளோம் என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80354-we-are-not-birds-to-keep-in-cage-says-admk-mla-tamilselvan.art

  • தொடங்கியவர்
சசி பிடியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டினியா?
அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
 
 
 

சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக கூறப்படுவது குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., பதிலளிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tamil_News_large_170827720170211001511_318_219.jpg

'எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தான், அவர்கள் உள்ளனர் என, அரசு வழக்கறிஞர் கூறியது சரி
யல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 

தகவல் சரியல்ல


பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த மனு:குன்னம் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, ஆர்.டி. ராமச்சந்திரனை காணவில்லை; பிப்., 8ல், சென்னையில் நடந்த, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.அவர் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, சொகுசு பங்களாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராமச்சந்திரன் உட்பட,

130 எம்.எல்.ஏ.,க்களையும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதாவை ஆஜர்படுத்த கோரியும், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை உடனே விசாரிக் கும் படி, நேற்று முன்தினம், உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார். அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் உள்ளனர்; சட்ட விரோதமாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம், மதிவாணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, வழக்கறிஞர் கே.பாலு, ''இரண்டு வாரங்கள் என்பது நீண்ட நாட்களாகி விடும். எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கியிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில், எம்.எல்.ஏ.,க் களை தங்க வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன,'' என்றார்.

அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், ''அரசு வழக்கறிஞர், நேற்று கூறிய தகவல் சரியல்ல; எம்.எல்.ஏ.,க்கள்விடுதியில் யாரும் இல்லை; அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்து எனக்கு தகவல் இல்லை. அதற்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.

உடனே வழக்கறிஞர் கே.பாலு, ''பிடித்து வைக்கப் பட்டுள்ள, 20 எம்.எல்.ஏ.,க்கள், உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே, காஞ்சிபுரம் எஸ்.பி., நேரில் சென்று

 

விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என்றார்.

தள்ளிவைப்பு


இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:'எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக உள்ள னர்; அவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர் என, நேற்று முன் தினம் அரசு வழக்கறிஞர் கூறியது சரியல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்; அதை பதிவு செய்கிறோம். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதால், 20 எம்.எல்.ஏ.,க்கள் உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக, வழக்கறிஞர் கே.பாலு கூறியுள் ளார். அது, உண்மை என்றால் மிகவும் கடுமை யான விஷயம். இருந்தாலும், வழக்கறிஞர் கூறியதை வைத்து, நீதிமன்றம் செயல்பட முடியாது.

எனவே, இந்த வழக்கின் தன்மையை பொறுத்து, அரசு தரப்பு பதிலளிக்க வாய்ப்பு அளிப்பது, உகந்ததாக இருக்கும் என கருதுகிறோம். விசாரணை, பிப்., 13க்கு தள்ளி வைக்கப் படுகி றது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708277

  • தொடங்கியவர்

அனல்பறக்கும் அதிமுக அரசியல்! - என்ன சொல்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?

 
admkphone_3131235f.jpg
 
 
 

அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ‘உங்களது ஆதரவு யாருக்கு?’ என்பதை தெரிந்துகொள்ள ‘தி இந்து’ சார்பில் அவர்களின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. பல எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. பலர் அலைபேசியை எடுக்கவில்லை. பட்டென துண்டித்தனர் பலர். விஷயத்தை சொன்னதும் ’ஹலோ... ஹலோ...’ என்றபடி அணைக்கப்பட்ட அலைபேசிகள் பல. சிலர் மட்டும் பேசினார்கள். அவர்களின் ரியாக்‌ஷன் இதோ..

விருகம்பாக்கம், வி.என்.ரவி:

அலைபேசியை எடுத்தவரிடம் விஷயத்தைச் சொன்னோம். “அண்ணே நான் எம்எல்ஏ இல்லைண்ணே; அவரது பி.ஏ.; 10 நிமிஷத்துல கூப்பிட சொல்றேன்” என்றார். 10 நிமிடங்களுக்கு பிறகு பலமுறை அழைத்தும் அலைபேசி எடுக்கவில்லை.

மயிலாப்பூர், ஆர்.நட்ராஜ்:

அலைபேசி அடிக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது. ‘குறுந்தகவல் அனுப்பவும்’ என்று குறுந்தகவல் அனுப்பினார். அனுப்பினோம். கடைசி வரை பதில் வரவில்லை.

பெரம்பலூர், வெற்றிவேல்:

“எனது ஆதரவு கட்சிக்கே. கட்சி யார் வசம் உள்ளதோ அவர்கள் பக்கம்தான் நான்.” என்றார். பெயரைச் சொல்லுங்கள் என்ற பின்பு ‘பொதுச் செயலாளர் சின்னம்மா’ என்றார்.

மேட்டூர், செம்மலை:

“எம்ஜிஆர். கண்ட இயக்கம் இது. இதை வளர்த்தெடுத்தவர் அம்மா. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்றால், எனது ஆதரவு பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கே” என்றார்.

சேந்தமங்கலம், சி.சந்திரசேகரன்:

விஷயத்தை சொன்னதும் ‘ராங் நெம்பர்’ என்றவர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார். ஆனால், அந்த எண் அவரது பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது.

வீரபாண்டி, மனோன்மணி:

‘சின்னம்மா’ என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

சேலம் தெற்கு, ஏ.பி.சக்திவேல்:

“அண்ணே எங்க ஆதரவு எப்பவும் இரட்டை இலைக்குதான். பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கே என்னோட ஆதரவு” என்றார்.

ஈரோடு, தென்னரசு:

“வேற யாருக்குங்க, சின்னம்மாவுக்குதானுங்க..”

ஈரோடு மேற்கு, கே.வி.ராமலிங்கம்:

அலைபேசியை எடுத்தவர், சொன்னதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். வேறொரு எண்ணை குறிப்பிட்டு அதில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். நான்கைந்து முறை அழைத்தும் எடுக்கவில்லை.

அரக்கோணம், ரவி:

“கட்சி யாரிடம் இருக்கிறதோ அவருக்கே என் ஆதரவு.” என்றவரிடம் நேரடியாக பெயரைச் சொல்லுங்கள் என்றோம். “கட்சி சின்னம்மா விடம் இருக்கிறது” என்றார்.

பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அமைச்சர்):

“இது என்னங்க கேள்வி. தலைமை எங்கு இருக்கிறதோ அதற்குத்தான் என் ஆதரவு. பொதுச் செயலாளர் சின்னம்மாவிடம்தானே தலைமை இருக்கிறது” என்றார்.

நிலக்கோட்டை, தங்கதுரை:

“பி.ஏ. பேசறேன். எம்எல்ஏ வனத்துறை அமைச்சர்கூட இருக்காருங்க.” என்றார்.

அலைபேசி அடித்தும் எடுக்காதவர்கள்:

ஸ்ரீபெரும்புதூர், கே.பழனி:

(ரிங் டோன்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது..)

கும்மிடிப்பூண்டி, கே.எஸ்.விஜயகுமார்

(நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை..)

பூந்தமல்லி, டி.ஏ.ஏழுமலை

(அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை..)

ஆத்தூர், சின்னத்தம்பி

(நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..)

சங்ககிரி, எஸ்.ராஜா

(நினைத்தேன் வந்தாய் நூறு வயது..)

ஏற்காடு, ஜி.சித்ரா. திருப்போருர், கோதண்டபாணி. திருத்தணி, பி.எம்.நரசிம்மன். அம்பத்தூர், வி.அலெக்சாண்டர். கெங்கவள்ளி, ஆ.மருதமுத்து. சேலம் மேற்கு, ஜி.வெங்கடாஜலம். நாமக்கல், கே.பி.பி.பாஸ்கர். திருச்செங்கோடு, சரஸ்வதி. வால்பாறை, கஸ்தூரி வாசு. அந்தியூர், இ.எம்.ஆர்.ராஜா. பவானிசாகர், ஈஸ்வரன். கோவை தெற்கு, கே.அர்ச்சுனன், கோவை வடக்கு, பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர், கனகராஜ்.

http://tamil.thehindu.com/tamilnadu/அனல்பறக்கும்-அதிமுக-அரசியல்-என்ன-சொல்கிறார்கள்-அதிமுக-எம்எல்ஏக்கள்/article9535486.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

16708722_1768043233489750_38528632638953

  • தொடங்கியவர்

சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு- ஆளுநர் மாளிகை விளக்கம்...

Subramanian Swamy and Vidyasagara Rao

இன்று பாஜக-வின் எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ்வை சந்தித்தார். இதையடுத்து, 'சுப்ரமணியன் சுவாமி மரியாதை நிமித்தமாகவே ஆளுநரை சந்தித்தார். அவருடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது' என்று சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80500-governor-office-briefs-about-meeting-with-subramanian-swamy.html

  • தொடங்கியவர்
எம்.எல்.ஏ.,க்களை விடுவதாக இல்லை!
 
 
 

ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில், பல்வேறு அரசியல் கேலிக்கூத்துக்கள் அரங் கேறி வருகின்றன. நேரடி அரசியல் களத்தில், ஒரு அனுபவமும் இல்லாத சசிகலா, நடை, உடை, பாவனையை மாற்றிக் கொண்டு, 'ஜெ., வழியில் கட்சியை நடத்துவேன்' எனக்கூறி, ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 

Tamil_News_large_170900920170211233152_318_219.jpg

புறத் தோற்றத்தை மாற்றினாலும், ஜெயலலிதா விற்கு ஈடாகுமா என, பெரும்பாலான அமைச்சர் களும், சட்டசபை உறுப்பினர்களும், உள்ளுக் குள் பொறுமினாலும், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, போயஸ் தோட்டத்தில் கை கூப்பி நிற்கின்றனர். 'நீங்கள் தான் பொதுச் செயலராக, முதல்வராக வர வேண்டும்' என, மன்றாடுகின்றனர்.

மவுனம் கலைப்பு: அதை ஏற்று, சசிகலா,

முதல்வராக பதவியேற்க ஆயத்தமாவதை அறிந்து, தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அன்றாட வாழ்வில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, முதல்வர் பதவியில் அமரப் போகிறவர் சசிகலாவா என்ற கேள்வி, ஒட்டு மொத்த மக்களின் மனசாட்சி யையும் உசுப்பி விட்டுள்ளது.

அடுத்த நாளே, முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயல லிதா சமாதி முன், தன் மவுனத்தை கலைத்தார்; சசிக்கு எதிராக கொடி உயர்த்தினார். பூனைக்கு யாராவது மணி கட்டுவரா என, காத்திருந்த மக்க ளுக்கு, பன்னீர்செல்வம், புதிய அவதாரமாகவே தெரிந்தார். அதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வத் தையே ஆதரிக்க வேண்டும் என, எல்லா தொகுதி மக்களும் எண்ணத் துவங்கினர்.

அதனால், தங்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள துவங்கினர். அவர்கள் அனை வரும், சென்னையில் அடைபட்டு கிடக்கும் தகவல் தெரிந்தும்,விடாமல், அவர்களது மொபைல் போனில் பேசி, 'தயவுசெய்து, சசிகலாவை ஆதரிக் காதீர்கள்' என, வலியுறுத்த துவங்கினர்.

தயக்கம்: மக்களின் எதிர்ப்பைப் பார்த்து, சில எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் மனம் மாறினர். மேலும் பலர், ஆயத்தமாகி வருகின்றனர். எனினும், இன்னும் பலர், பதவிக்காகவும், இதர

 

ஆதாயங்களுக்காகவும்,மக்களின் மன நிலையை ஏற்க தயங்கு கின்றனர். அவர்கள், ஓட்டுப் போட்ட ஒவ்வொருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது. அதற்காக, பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.

'நம்மை யார் ஆள வேண்டும் என்பதை, நாம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம், மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி விட்டது. அவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில், தொகுதி, எம்.எல்.ஏ.,க்களை விடுவதாக இல்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709009

  • தொடங்கியவர்
எம்.எல்.ஏ.,க்களை திரும்ப பெறும் உரிமை?
குதிரை பேரத்தால் மக்கள் எதிர்பார்ப்பு
 
 
 

தமிழகத்தில், எம்.எல்.ஏ., க்களுக்கு நடக்கும் குதிரை பேரத்தால், ஓட்டுகளை திரும்ப பெறும் உரிமை கிடைக்காதா என, நடுநிலை வாக்காளர் கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Tamil_News_large_170883220170212001629_318_219.jpg

திடீர் ஆட்சி மாற்றம் வரும் போது, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களை விலைக்கு வாங்கும், குதிரை பேரம், ஜனநாயகத்தின் உரிமைகளை கேள்விக் குறியாக்குகிறது. குதிரை பேரத்திற்கு, பீஹார் மாநிலம் மிக பிரபலமாக இருந்தது. அந்த நிலை தற்போது, தமிழகத்திலும் வந்து விட்டது.

காசு, பணம், துட்டு, மணி... என, சொகுசுக்கும், ஆடம்பரத்துக்கும், ஆசைப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பலர், மக்களை தவிக்க விட்டு, சொகுசு விடுதி களில் களியாட்டம் போடுகின்றனர். நீதி

துறையோ, அரசியலமைப்பு சட்டமோ, இதை சட்டரீதியாக அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. எனவே, ஓட்டளித்த மக்களே, எம்.எல்.ஏ.,க் களை திரும்பப் பெறும் உரிமைகிடைக்காதா என, யோசிக்க துவங்கி உள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, 2011ல் நடத்திய, அன்னா ஹசாரே, இந்த கருத்தை கடுமையாக வலியுறுத்தினார். தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த, குரேஷியும், 2012ல், இதை வலியுறுத்தி னார். அப்போது, 'நிலுவையில் உள்ள, தேர்தல் சீர் திருத்தம் தொடர்பான அம்சங்களை, மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை அளிப்பது குறித்து, பரிசீலிக்கும் நேரம் வந்து விட்டது. பார்லிமென்ட் கூட்டத்தில், இவற்றை நடைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என, குரேஷி தெரிவித்தார்.

அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, ஐந்து ஆண்டு களுக்குள், தமிழகத்தில், மக்கள் அதுபோன்ற கேள்வி எழுப்பும் நிலை வந்துள்ளது. ஆட்சி அமைவது தொடர்பாக, பொது மக்களின் எண்ண

 

ஓட்டம் ஒரு புறம் இருக்க, எம்.எல்.ஏ.,க் களின் எண்ணங்கள், காசு, பணம் என, ஓட்டு வியாபாரத்தை சுற்றி மையம் கொண்டு உள்ளன. '

எம்.எல்.ஏ.,க்களின் குதிரை பேரம் மூலம், ஆட்சி அமைந்தால், அது இளைய தலைமுறையினரி டம், ஜனநாயகம் குறித்த நம்பிக்கையை இழக்க செய்யும். வரும் காலத்தில், ஓட்டு போடுவதை, இளைய தலைமுறையினர் புறக்கணிக்கும் நிலை ஏற்படும்' என, நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவித்துஉள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708832

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.