Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு காணிகளில் 225 வீடுகள் அமைக்க நடவடிக்கை என்கிறார் யாழ்.அரச அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு காணிகளில் 225 வீடுகள் அமைக்க நடவடிக்கை என்கிறார் யாழ்.அரச அதிபர்
 
13384.jpg
வலி-வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில்  225 வீடுகள் அமைப்பதற்காக விரை வான நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாய கன் தெரிவித்துள்ளர். யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை விரைவாக வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் பலாலியில் உள்ள யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நடைபெற்றது 
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 
 
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக 1950ஆம் ஆண்டு மற்றும் 1985ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கை நடைபெற்றது. அதில் சிலர்தான் கொடுப்பனவுகளை பெற்றுள்ளார்கள் என்றும் ஏனையவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 
 
அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் சில காணிகள் இந்த வருடத்துக்குள் விடுவிப்பதற்கான சந்தர்பங்கள் இருப்பதாகவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முக்கியமாக இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் மீள்குடியேறியுள்ள பகுதிகளில் மக்களுக்குரிய வீட்டுத்திட்டங்கள் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 
 
ஏற்கெனவே கீரிமலைப் பகுதியில் 100 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 33  வீடுகள்  கட்டப்பட்ட நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து 225 வீடுகள் கட்டுவதற்குரிய  நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 
 
முகாம்களில் உள்ள காணி அற்றவர்களுக்கு காணி  கொள்வனவு செய்து வழங்குவதாக கடந்த வருடம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் 251 பேர் காணி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 130 பேர்  தமக்கான காணிகளை அடையாளம் காட்டியுள்ளனர். 
விரைவில் உரிய நடைமுறைகள் மேற்கொண்டு  காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங் கப்படவுள்ளது. 
 
பாதுகாப்பு அமைச்சின் மேல திக செயலாளர் ராஜபக்ஷ, காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தயாரட்ண, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க,  யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன், யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், தெல்லிப்பளை, உடுவில், கோப்பாய், பருத்தித்துறையைச்  சேர்ந்த பிரதேச செயலர்கள், சிரேஷ்ட நிலஅளவை  அத்தியட்சகர், விலை மதிப்பீட்டு அதிகாரி உள்ளிட்ட பலர் மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.