Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வின்றித்தொடரும் கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்டம் தென்பகுதி மக்களும் நேரில் வந்து ஆதரவு

Featured Replies

தீர்­வின்­றித்­தொ­ட­ரும் ­கேப்­பா­ப்பு­லவு மக்­க­ளின் ­காணி மீட்­பு­ போ­ராட்டம்

p13-8aca35582d2260ba3023eda7eb6e888388fe7518.jpg

 

தென்­ப­கு­தி­ மக்­க­ளும் ­நே­ரில் ­வந்து ஆத­ரவு

(கே.குமணன்)

முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு பிலக்­ கு­டி யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்­டெ­டுக்கும் நோக்கில் முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் பத்­தா­வது நாளாக   நேற்றும் தொடர்ந்து.      இந்­நி­லையில் நேற்று முன்­தினம் இரவு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் மயூரன் நேரில் சந்­தித்து மக்­களின் குறை­களை கேட்­ட­றிந்­த­தோடு தனது ஆத­ர­வி­னையும் தெரி­வித்தார். 

கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40ஏக்­க­ருக்கு மேற்­பட்ட காணி­களை கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமைத்­துள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை பலப்­ப­டுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்­ல­மு­டி­யா­த­வாறு தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் தமது நிலங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி மக்கள் கடந்த 10 நாட்­க­ளாக பேராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். தமது சொந்த நிலங்­களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொட­ரு­மென கூறி தொடர் போராட்­டத்­தி­லீ­டு­பட்டு வரு­கின்­றனர்.

இந்த நிலையில் நேற்று குறித்த போராட்டம் இடம்­பெறும் பகு­திக்கு தென்­னி­லங்கை சிவில் சமூக அமைப்­பு­க­ளான தேசிய மீனவ இயக்கம் மற்றும் தென்­னி­லங்­கையை சேர்ந்த பங்­குத்­தந்­தைமார் அருட்ச்­ச­கோ­த­ரிகள் மற்றும் சகோ­தர இனத்தை சேர்ந்த மக்கள் தென்­னி­லங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அடங்­கி­யக்­கு­ழு­வினர் வரு­கை­தந்து மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினர்.

 இதன்­போது கேப்­பா­பு­லவு மக்­களின் போரா­டடம் தொடர்பில் தென்­னி­லங்­கையில் தவ­றான பிரச்­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தாம் நேரில் வந்து பார்க்­கும்­போதே நிலைமை விளங்­கு­வ­தா­கவும் தென்­னி­லங்கை சிவில் சமூக பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

 எனவே நாம் அனை­வரும் தெற்கில் இந்த மக்­களின் நியா­ய­மான போராட்­டத்­துக்கு வலுச்­சேர்க்கும் வகையில் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்ட்ங்­களை முன்­னெ­டுப்போம் எனவும் இந்த கேப்­பா­பு­லவு மக்­க­ளுக்கு என்றும் உறு­து­ணை­யாக இருப்போம் எனவும் இவர்கள் தெரி­வித்­தனர்.

அத்­தோடு பல பிர­தே­சங்­களில் இருந்து மக்­களும்,சிவில் அமைப்­பு­களும் வரு­கை­தந்து மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தோடு பல உத­வி­க­ளையும் வழங்கி சென்­றனர்.  இந்­தப்­போ­ராட்டக் களத்தில் உள்ள மாண­வர்கள் வீதி ஓரத்­தி­லேயே தமது பாட­சா­லையில் வழங்­கப்­பட்ட வீட்டு வேலை­களை செய்­வ­தோடு அனை­வரும் இணைந்து தமது கல்­வி­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.  

. மேலும் நேற்று மாலை முல்லை வலய கல்வி பணி­ம­னையின் பிர­திக்­கல்வி பணிப்­பாளர் ஆதவன் தலை­மையில் சில ஆசி­ரி­யர்கள் இணைந்து போராட்ட களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டனர் . போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.