Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பூச்சாண்டி எதற்காக: எழுக தமிழில் சி.வி.ஆவேசம்

Featured Replies


புலி பூச்சாண்டி எதற்காக: எழுக தமிழில் சி.வி.ஆவேசம்
 

article_1486717056-6.jpg

'விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின், புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று, பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்துக்;காக' என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக்கழகத் திடலில் தற்போது நடைபெற்றுவரும் எழுக தமிழ் பேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,  

 'எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!' என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் எமது மக்களுக்கு, நான் கூறுவதும் அதுவே. 'எழுமின்! விழிமின்! இலட்சியங்களை அடையும் வரை நிறுத்தாதீர்கள்

'எமது பாதை, கரடு முரடாக அமையப் போகின்றது. அதற்கு நாங்கள் எங்களைத் தயார் படுத்த வேண்டியிருக்கின்றது. 69 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் எங்கள் குறைகளைக் கூறிக் கொண்டு வருகின்றோம். ஆனால் செவிடன் காதில் மகுடி இசைத்த கதையாகவே இருந்து வருகின்றது. உறங்குபவனை எழுப்பலாம். உறங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்புவது மிகச் சிரமம். ஒரு வேளை, பச்சைத் தண்ணீர் கொண்டு முகத்தில் தெளித்தால் அவன் எழும்பக் கூடும். உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நடைபெறுகின்றது. மக்களின் மனோ நிலையையே நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.

'எங்கள் நடவடிக்கைகள் பிழையென்றும் நாட்டில் இருக்கும் நற்சூழலை நாங்கள் குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் வாய்பேசா மடந்தைகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையின அரசியல்வாதிகளுடன் ஒத்தூதினால் எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் கிடைக்கும். துணிந்து எமது குறைகளைக் கூறினால், அது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் எனப்படும். ஆகமொத்தம் எமக்கெது தேவை என்பதிலும் பார்க்க தாம் தருவதை நாங்கள் ஏற்க வேண்டும் என்பதிலேயே, குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள்.  இன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள் என்பார்கள் என்று நினைக்கின்றேன்.  

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் அமுலில் இருந்து வருகின்றது. அதன் ஓரம்சம் பற்றி நான் தெளிவு படுத்துவது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். ஒருவரை இன்னொருவர் கொல்கின்றார் அல்லது அடித்துத் துன்புறுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் எங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றவியல் வழக்கா பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கா பதிய வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறுத்தல்கள் எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை. இதனைத் தீர்மானிப்பது அரசே அல்லது அரச அதிகாரிகளே அல்லது இராணுவத்தினரே அல்லது பொலிஸாரே. இங்குதான் எம்மக்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை ஒட்டப்படுகின்றார்கள். அரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் சாதாரணக் குற்றவாளி. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளியாக்கப் பட்டவரே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படலாம் என்றோ ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரேயானால் அவை எவ்வாறு அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றோ, அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருக்குக் குற்றப்பத்திரிகை தயாரிக்கலாம் என்றோ சட்டத்தில் கூறப்படவில்லை. அரசோ, அரசின் சாட்சிகளோ ஒருவரைப் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தினால் அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன.

குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றைய வழக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அதை மட்டும் வைத்து எம் இளைஞர்கள் யுவதிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். குற்றம் உண்மையில் நடந்தேறியதா என்பதைக் கூட நீதிமன்றங்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதாவது, குற்ற ஒப்புதல் கூறும் குற்றமானது உண்மையில் நடந்ததா என்று சுதந்திரமாக நீதிமன்றம் அறிந்துகொள்ள வேண்டும் என்றொரு சட்டமில்லை. அவ்வாறு அறிய பெரும்பான்மையான நீதிமன்றங்கள் சிரத்தை எடுப்பதும் இல்லை. இவை என்னுடைய பல வருட நீதித்துறை சார்ந்த அனுபவம்.

இதனை இன்று ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால,; உரிமைகளைக் கோருவோர், உரிமைகளுக்காகப் போராடுவோர், உரிமைகளைத் தாருங்கள் என்று உரக்கக் கேட்போர் யாவரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பயங்கரவாதிகளாகவே காணப்படுகின்றார்கள். அன்று 'வெள்ளையனே வெளியேறு' என்றவர்களெல்லாம் சட்டத்தின் முன் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள். வெள்ளையன் வெளியேறியதும் கெப்பத்திப்பொலவும், சூரசரதியேலும் இன்னும் பலரும் சிங்கள மக்களின் வீர சூரர்கள் ஆனார்கள். இன்று எம்மை பயங்கரவாதிகளாகப் பார்ப்பவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். எமது உரிமைகளை நாம் கோருவது குற்றமல்ல என்பதை எமது சிங்களச் சகோதரர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எம்மைப் பயங்கரவாதிகள் என்போர் என்ன கூறப் பார்க்கின்றார்கள்? நாங்கள் எங்கள் இராணுவத்தை வடக்கு, கிழக்கில் நிறுத்தியுள்ளோம்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றோம். ஆறாவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையும் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கின்றோம். பன்னாட்டு அரசாங்கங்களின் பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். இவ்வாறிருக்கவும் நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள் என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் தானே என்பது தான் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் அரசியல் நிலை.

உரிமைகள் அற்றவர்கள் தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள். உரிமைகள் இருந்திருந்தால் ஏன் வெயிலில் இருந்து, பனியில் காய்ந்து, மழையில் நனைந்து கேட்கப்போகின்றார்கள்? இல்லாததால்த்தானே கேட்கின்றோம். இதைச் சிங்கள சகோதர, சகோதரிகள் உணர வேண்டும். எம் உரித்துக்களை நாம் கோர விடாது அடுத்து வந்த அரசாங்கங்கள் தடுத்துள்ளன. கடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல் யாப்பு அனுசரணைகளுடனும் இதைச் சாதித்துள்ளார்கள்.

அது மட்டுமன்றி கடைசிப் போர் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் எவருடைய பிரசன்னங்களும் இல்லாத நிலையில் சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை சிங்கள மக்கள் யாவரும் அறிவர். அவ்வேளையில், கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல. சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் எண்ணிக்கை திரிபுபடுத்தப்பட்டு மிகச் சொற்ப தொகையாக எந்தவித மனச்சாட்சியுமின்றி சர்வதேச உலகுக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால், விளைந்ததுதான் சர்வதேச போர்க்குற்ற விசாரணை முன்மொழிவு. இந்தத் தீர்மானம்; 2015ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து அதனை ஏற்றுக்கொண்டனர். இருந்தபோதிலும் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் தான் அளித்த முக்கிய வாக்குறுதிகளை இதுகாறும் நிறைவேற்ற முன்வரவில்லை.  

அண்மையில் இன்னலுறும் கேப்பாப்பிலவு மக்களைக் காணச் சென்றிருந்தேன். போகும் வழியெல்லாம் ஏக்கர் ஏக்கரான காடார்ந்த நிலங்களைக் கொங்கிறீட் கட்டைகள் நாட்டி, கம்பி போட்டு, கையகப்படுத்தி வைத்துள்ளார்கள் படைவீரர்கள். அவற்றிலே மக்களின் உறுதிக் காணிகளும் அடங்குவன. தம் சொந்த இடங்களுக்கு எம் மக்கள் திரும்பிச் செல்வதற்கு ஆங்காங்கே தடையாக உள்ளார்கள் இராணுவத்தினரும், கடற் படைவீரர்களும், ஆகாயப் படைவீரர்களும். அதற்கு எதிராக எம்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களைத் துன்புறுத்துகின்றார்கள்.

ஏன் என்று இவர்களிடம் கேட்டால் பாதுகாப்புக்கு அவசியம் என்கின்றார்கள். யார் பாதுகாப்புக்காக இந்த அடாவடித்தனம்? எங்கள் பாதுகாப்புக்காகவா, உங்கள் பாதுகாப்புக்காகவா அல்லது அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காகவா என்று கேட்டால் பதிலில்லை.

எங்களுக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். போதிய பொலிஸார் இருந்தால் பொறுப்பாக அவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று நாங்கள் கூறினால் அதற்கு அவர்கள் செவிசாய்க்கின்றார்கள் இல்லை. அவர்கள் போட்டிருக்கும் பாதுகாப்பு அரண்களையும், கட்டியுள்ள மாளிகைகளையும், எடுத்திருக்கும் எம்மக்களின் காணிகளின் விஸ்தீரணத்தையும் பார்த்தால் இன்னும் 500, 600 வருடங்களுக்கு மேலாகத் தாம் தொடர்ந்திருக்கப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை அது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்கள் செய்வது பிழை என்று நாங்கள் கூறினால் நீங்கள் சமாதானத்தைச் சீர்குலைப்பவர்கள் என்று எமக்குப் பட்டம் கட்டப் பார்க்கின்றார்கள்.

முன்னர் இந்திய அமைதி காக்கும் படைகள், 'நாங்கள் இங்கு 100 வருடங்களுக்கேனும் இருக்கப் போகின்றோம்' என்று கூறிக்கொண்டுதான் வந்தார்கள். வி.பி.சிங் அரசாங்கம் அவர்களைத் திரும்ப அழைத்தது. அதுபோல எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கம் இராணுவத்தினரைத் திரும்ப அழைக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற மனிதாபிமானத்துடன் பக்கச்சார்பின்றி போருக்குப் பின்னரான மக்களின் பாதிப்புக்களை உணர்ந்து செயற்;படக்கூடிய பொலிஸாரை வடக்கு, கிழக்கில் இரட்டிப்பாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே எமது ஒரு கோரிக்கை.

போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் இராணுவத்தினரைத் திரும்ப அழைக்காததன் மர்மம் என்ன? விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாகக் கூறுகின்றார்கள். பின் எதற்காக வடக்கிலும் கிழக்கிலும் வான் படைகளும், கடற்படைகளும், காலாற்படைகளும்? அளவுக்கதிகமான படைகளைத் தம்முடைய தரைகளில் நிலை நிறுத்த இடமில்லை என்றுதான் அவர்களை எம்மத்தியில் உலாவ விட்டுள்ளார்களா? அல்லது நாம் எவரும் சுதந்திரக்காற்றை உட்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றார்களா? அல்லது எமது பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப விடாது எம் மக்களின் காணிகளையும், வீடுகளையும் கடைகளையும், கடற்கரைத் தொழில்களையும், விவசாய நில புலன்களையும் நிரந்தரமாகச் சுவீகரித்து எம்மை அடக்கி ஆள நினைக்கின்றார்களா?

ஒரு சில நாட்களுக்கு முன்னர் உள்ள10ர் அதிகாரசபைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரித்துக்கள், தத்துவங்கள் சிலவற்றை 01.02.2017ல் இருந்து திரும்பப் பெற்று நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப் போவதாக முகாமைத்துவசபை பத்திர சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டிருந்தது. எமது உரித்துக்களைப் பறிக்காதீர்கள் திரும்பத் தாருங்கள் என்று நாங்கள் போராடி வருகின்றோம். சட்டத்துக்கு முரணாக எங்கள் உரிமைகள் உங்களால் தடைசெய்யப்பட்டு கையேற்கப்பட்டுள்ளது.

சுற்றுநிரூபத்தை இரத்துச் செய்து முன்னிருந்த உரிமைகளைத்திரும்பத் தாருங்கள் என்று நேற்று எமது வடக்கு மாகாணசபையில் நாங்கள் பிரேரணை கொண்டுவந்து ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே, பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்ட சொற்ப உரித்துக்களையுந் திரும்பப் பெறப்பார்க்கின்றது அரசாங்கம்.

ஒரு சில பெரும்பான்மை அரசியல்வாதிகளும் எமது சிங்கள சகோதரர்கள் சிலரும் ஒரு விசித்திரமான கருத்தை முன்வைக்கின்றார்கள். 'நாங்கள் தருவதையுந் தரமாட்டோம், நீங்கள் தகாத முறையில் 'தா' என்று கேட்டால்' என்று கூறுகின்றார்கள். எப்பொழுதையா நீங்கள் தந்தீர்கள்? தருவதாகக் கூறினீர்களே ஒளிய தரவில்லையே! நீங்கள் தராத ஒன்றைத்தானே தாருங்கள் என்கின்றோம். எம் உரித்துக்களைப் பறித்து வைத்துக் கொண்டு வெறுமனே தருவதாக 60 வருடங்களுக்கு மேலாகக் கூறிக் கொண்டு வந்து விட்டு இப்பொழுது 'நீங்கள் கேட்டால் தரமாட்டோம்' என்பதன் அர்த்தம் என்ன? நாம் நினைத்ததைத் தான் தருவோம். நீங்கள் கேட்பதைத் தர மாட்டோம் என்பது தானே அர்த்தம்? ஆனால், சட்டத்தில் அப்படிக் கூறப்படவில்லையே.

உரிமைகள் உரித்துக்கள் பெரும்பான்மை மக்களுக்கு மட்டுந் தான் சிறுபான்மையினருக்கு அல்ல என்று சட்டம் கூறவில்லையே! மேலும் வடக்குக் கிழக்கில் 2000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் மக்கள் தான் பெரும்பான்மையினர். ஆகவே நாங்களும் எங்கள் பிரதேசங்களில் பெரும்பான்மையினரே. எனினும் சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு நீதி சிறுபான்மையினருக்கு ஒரு நீதி என்று கூறவில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்குஞ் சில பல உரித்துக்கள் இருப்பதைச் சட்டம் அங்கீகரிக்கின்றது, ஏற்றுக்கொள்கின்றது. அதற்கு மேலாகக் குழுமங்களின், மனித குழுக்களின் உரித்துக்களையும் சட்டம் ஏற்றுள்ளது. நாம் இழந்த உரிமைகளை ஜனநாயக ரீதியில் மீளப் பெறுவதற்கு முயற்சிப்பது வகுப்புவாதமாகவோ, தீவிரவாதமாகவோ, அநீதியாகவோ கருத முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நியதிகளுக்கு அமைவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமை சாசனங்களின் அடிப்படையில் ஒரு இனத்தின் உரிமைகள், அடையாளங்கள் மற்றும் மரபு ரீதியான, சரித்திர ரீதியான வதிவிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டுதலே எமது குறிக்கோளாகும்.

1987ம் ஆண்டில் நாங்கள் பதின்மூன்றாவது திருத்தச் சட்ட மூலம் தந்தோம் அல்லவா என்கின்றார்கள் சில சிங்களத் தலைவர்கள். நீங்கள் எங்கே தந்தீர்கள்? அது இந்தியாவின் அனுசரணையால் கிடைத்தது. அதுவும் இந்தியர்களுக்குத் தெரியாமல் சட்டத்தைப் பலமற்றதாக மாற்றிய பின்னரே தரப்பட்டது.தருவதற்கு உங்களுக்கு மனமிருந்தால் நாங்கள் கேட்காமலே தந்திருப்பீர்களே!

இந்த யதார்த்தத்தைத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின்  முன்னாள் தலைவர்கள் அமரர் அமிர்தலிங்கம்,அமரர் சிவசிதம்பரம் ஆகியோரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களும் 28.10.1987ம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வெகு விபரமாக எழுதி அவருடைய தலையீட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால்அது நடைபெறவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உங்களை எவ்வளவு நம்பினார்? 2016ல் கட்டாயம் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். தந்தீர்களா? உங்களுக்குத் தர மனமில்லை என்பது உலகறிந்த விடயம். எனவே நாங்கள் கூட்டம் கூடிக் கேட்க வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ளியது நீங்களே என்று அரசாங்கத்தைப் பார்த்துக் குறை கூறுகின்றேன். எங்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதும் உங்களாலேயே என்று குற்றம் சாட்டுகின்றேன்.

முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் அவர் 18 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தினார் தமிழர்களுடன். ஏதேனுந் தந்தாரா? இப்பொழுது ஜெனிவாவில் மார்ச் மாதத்தில் கூட்டம் போடப் போகின்றார்கள் என்றதும் அதைத் தரப்போகின்றோம், இதைத் தரப்போகின்றோம் என்று விட்டு இன்று வரையில் ஒன்றுமே தரவில்லை, தர எத்தனிக்கவும் இல்லை. இருபதுக்கு மேலான உத்தரவாதங்களை இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் சர்வதேச சமூகத்திற்கு 2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் அளித்தது. எவ்வௌற்றை இதுவரையில் நிறைவேற்றியுள்ளார்கள்? நிறைவேற்றியதாகக் கூற எத்தனிப்பவைகளிலும் மக்களுக்கு பயன் ஏதும் கிடைத்துள்ளதா? மாறாக அரசியல் யாப்பு உருவாக்கத்தின் நிமித்தம் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்று சந்திரிக்கா அம்மையார் கூறியுள்ளார். இவை இரண்டுக்கும் தொடர்பே இல்லை. ஒன்று நடந்து முடிந்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மற்றையது இன்னும் நடைபெறாதது. அரசியல் சம்பந்தமான எமக்கிருக்கும் உரித்துக்களைத் தர, எம்மிடம் இருந்து பறித்தெடுத்த உரித்துக்களைத் தர, பாதிக்கப்பட்ட எம்மக்களின் நலனையும் உரிமைகளையும் விலைபேசப் பார்க்கின்றாரா சந்திரிக்கா அம்மையார்?

அதுமட்டுமல்ல. அண்மைக் காலங்களில் எமக்கு ஏற்கனவே இருக்கும் உரித்துக்களைத் திரும்பப் பெறும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றது அரசாங்கம். மேலும் எம்மாகாணக் காணிகளில் தென்னவர்களைத் தேர்ந்தெடுத்துக் குடிவைக்கின்றார்கள். எம்மவரை அவற்றிலிருந்து துரத்துகின்றார்கள். எமக்கிருக்குங் காணி உரித்துக்களைத் தமதாக்கிக் கொண்டு மேலும் மேலும் படையினருக்கு மேலதிகக் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள்.
தாம் செய்யுந் தவறுகளை மூடி மறைத்து விட்டு எம்மேல் பழியைப் போட எத்தனிக்கின்றது அரசாங்கம்.
இந்நிலையில் தான் நாம் மிகவும் விழிப்படைய வேண்டிய ஒரு தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எமது அரசியல் தேவைகள் மற்றும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் ஆகியவற்றை இந்த அரசின் புதிய அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலான சில அரசியல் அறிவுரைகளை அரசுக்கு எடுத்துக் கூறுகின்ற அத்துடன் மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு நிகழ்வாகவே 'எழுக தமிழ்' நிகழ்வை நாம் அன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்திருந்தோம். ஆனால் அதன்பின் எம்மைப் பலரும் பல விதமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கியது மட்டுமன்றி நாம் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முத்தாய்ப்பு வேலைகளில் ஈடுபடுகின்றோம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலத்தையுங் கூறுபோடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம் என எமது தமிழ் அரசியல் தலைமைகள் கூட நேரடியாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் கருத்துக்களை முன்வைக்கத்தலைப்பட்டனர். அவர்களுக்குப் பக்கபலமாக நாங்கள் நிற்கின்றோம் என்பதை மறந்து அவ்வாறு கூறத் தலைப்பட்டார்கள்.

அதேபோன்று, சிங்களத் தலைமைகளும் எம்மை அடிப்படைவாதிகள், அரசியல் குழப்பத்தை உண்டுபண்ண முயல்பவர்கள் எனப் பல்வேறு விதமாக சித்திரித்ததுடன் நாம் அரசுக்கு எதிரான தீவிரவாதப் போக்கைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்ற தவறான கருத்துக்களையும் முன்வைக்கத் தலைப்பட்டனர்.

நாம் அன்று தெரிவித்த அதே கருத்துக்களையே இன்றும் வலியுறுத்துகின்றோம். ஏனென்றால் எமது கருத்துக்கள் கடந்த 69 வருடகாலமாக எம்மால் கூறப்பட்டுவரும் கருத்துக்களே. அதில் மாற்றம் எதுவுமில்லை. புதிதாக நாம் எதுவுங் கேட்கவில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறி எம் மக்கள் அங்கீகரித்த அதே கருத்துக்களையே நாம் கூறி வருகின்றோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பன நேற்று இன்று முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அல்ல. இந்தக் கருத்துக்கள்அன்று முன்வைக்கப்பட்டதாலேயே பண்டாரநாயக்கா –செல்வநாயகம் உடன்பாடு உருவாகியது. ஆனால் சிலரின் உன்மத்த உறழ்வுகளால் அந்த உடன்பாடு கிழித்தெறியப்பட்டது. டட்லி - செல்வநாயகம் உடன்பாடும் அதே கருத்துக்களையே பிரதிபலித்தன. ஆனால் அந்த உடன்பாட்டுக்கும் அதே கதியே. இந்தியாவின் அனுசரணையால் 13வது திருத்தச்சட்டம் யாக்கப்பட்டதால் இதுவரையில் அது நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனையுஞ் சட்டங் கொண்டும் சுற்றறிக்கைகள் கொண்டும் மலினப்படுத்தியுள்ளார்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மை இனத் தலைவர்கள். எனவே தான் எமது கோரிக்கைகளை மேலும் முன்வைக்க வேண்டிய அவசியம் எமக்கெழுந்துள்ளது. நாங்கள் குழப்பம் விளைவிக்கவில்லை. குழப்பத்திற்குக் காரணமே தொடர்ந்து வந்த பெரும்பான்மையின அரசியல்த் தலைவர்கள் தான். கூட்டாட்சி என்றால் பிரிவினையே என்ற பொய்யை சிங்கள மக்களுக்கு இதுகாறும் கூறிவந்தவர்களும் இந்தத் தலைவர்களே.

 

இலங்கையில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பு யுத்தமானது 2009ம் ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையிலும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்னும் பலர் ஊனமுற்றவர்களாக எழுந்து நடமாட முடியாதவர்களாக மாற்றப்பட்ட நிலையிலும், வீடு, வாசல், சொத்து, சுகம், காணி, பூமி என அனைத்தையும் இழந்து கையறு நிலையில் ஏதிலிகளாக எமது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்ற வேளையிலும் நாம் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான ஒரு அரசியல் தீர்வையே நாடியிருந்தோம்;நாடுகின்றோம். எனினும் அரசியல் யாப்புக்களில் பூரணமான அல்லது வலுவான திருத்தங்களை மேற்கொள்ள விழைந்தால் அவற்றை சர்வஐன வாக்கெடுப்புக்களின் மூலமே நிறைவேற்ற வேண்டி வரும் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் எனப் பூச்சாண்டி காட்டித் தீர்வுகளை மலினப்படுத்துவதும், அடிப்படையாகக் கொடுக்க வேண்டியவற்றை கொடுக்காமல் விடுவதற்கு அதனை ஒரு சாட்டாக கைக்கொள்கின்ற யுக்தியையும் அரசுகள் கடைப்பிடித்து வந்துள்ளன.

இதே தந்திரத்தையே இப்பொழுதும் ஒரு சாரார் கையாள முயற்சிக்கின்றனர். இது நாம் எழுந்தமானமாகச் சொல்லுகின்ற ஒரு கருத்தல்ல. இந்த அரசில் அங்கம் வகிக்கின்ற இரு பெரும்பான்மை அரசுக் கட்சிகளும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு ஒற்றையாட்சிக்குஅமைவாகவே தொடரும் என்றும் இந்த நாட்டில் சமஷ;டி அரசியல் அமைப்பிற்கு இடமில்லை எனவும் இந்த நாடு மத சார்பற்ற நாடாக மாறாது என்றும் உரக்கக் கூறுவதை நாம் காண்கின்றோம். அதற்கும் மேலாக ஒரு அரசியல் தலைவர் 13வது அரசியல் அமைப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலே மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது பற்றி சிந்திக்கின்ற தருணம் இதுவல்ல என்று கண்டி மாநகரில் வைத்து தெரிவித்திருப்பது கவனிக்கப்படல் வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அரசியல் அமைப்பு திருத்தத்தில் இப்போது இருக்கின்ற நிலையை விட ஒரு சிறு முன்னேற்றங் கூட ஏற்படும் என்று எண்ணத் தோன்றவில்லை. இது எமக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது 'எழுக தமிழ்' நிகழ்ச்சியையும் விட உறுதியாகவும் ஆக்கோரசமாகவும் எமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

மீண்டும் மீண்டும் எங்களுடைய கோரிக்கைகளை நாம் உரத்துச் சொல்ல வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையிலே இந்த 'எழுக தமிழ்' நிகழ்வானது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வெளிநாட்டவர்கள் எம் நாட்டில் யுத்தம் முடிந்த பின் நடந்து வருவதை நன்றாக உணர்ந்துள்ளார்கள். ஆகவே ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவான எங்களுடைய நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் வரவேற்கின்றன என்றே நான் கூறுவேன். அண்மையில் ஒரு வெளிநாட்டுத் தூதுவர் 'ஏன் சமஷ்டிக்கு உங்கள் நாட்டில் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள், சமஷ்டி முறைதானே யாவரையும் சேர்த்துக் கொண்டு முன்னேறக் கூடியது' என்றார். அதற்கு நான் 'பிரித்தானியர் வெளியேறும் போது பெரும்பான்மையினத்தவர்களுக்கு கூடிய அதிகாரங்களையும், வலுவையும் கொடுத்துச் சென்று விட்டார்கள். அதைத் தொடர்ந்து தக்க வைக்கவே அவர்கள் சமஷ்டியைப் பிரிவினை என்கின்றார்கள்' என்றேன்.

நாம் முன்னெடுக்கின்ற இந்த'எழுக தமிழ்'என்ற நிகழ்வு தமிழ்ப் பேசும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை ஜனநாயக முறைப்படி கேட்டெடுத்துப் பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியே தவிர அரசியல் குட்டையைக் குழப்பும் எண்ணமோ அல்லது வேறு எந்த கபட நோக்கோ எமக்கில்லை.

மாறாக  இந்த நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பூர்வீக பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு தேசிய இனம், தமது இருப்பை உறுதி செய்து தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவதற்கு ஏற்ற ஒரு அரசியல் அமைப்பைப் பெற்றுக் கொள்ளவே விழைகின்றது. எமது நடவடிக்கைகளை சர்வதேச அரசியல் அமைப்புக்களும் மற்றும் ஐக்கிய நாடுகள் தாபனங்களும் நன்குணர்ந்து எமக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.எங்கள் அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை. நாங்கள் பிரிவினை கோரவில்லை. சமஷ;டியையே கேட்கின்றோம். கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து போன்று நாட்டை ஒருமைப்படுத்தி தன்மானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம்.

எனினும் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உண்டு. அவைபின்வருமாறு -

1.    யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியடைய இருக்கும் நிலையிலும் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாதது ஏன்? மேலும் மேலும் கூடிய காணிகளைக் கையகப்படுத்த விளைவது ஏன்?எமது சில உரித்துக்களைத் தட்டிப் பறித்து அதிகார சபை ஒன்றிடம் கையளிக்கப் பார்ப்பதின் தாற்பாரியம் என்ன? சட்டத்திற்குப் புறம்பாக வெளிமாகாணங்களில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தினுள் பலாத்காரமாக குடியேற்றியுள்ள சிங்கள குடியேற்ற வாசிகளின் இருப்பிடங்களைத் தமிழ் உள்ள10ராட்சி வட்டாரங்களுடன் சேர்க்க முனைவதன் தந்திரம் என்ன?

2.    புத்த கோவில்கள் அமைப்பது தொடர்பில் நாம் மிகத் தெளிவான கருத்துக்களை முன்வைத்திருந்தோம். புத்த கோவில்கள் கட்டுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபணைகளும் இல்லை.ஆனால் புதிதாக அமைக்கப்படுகின்ற கோவில்கள் எந்த மதம் சார்ந்ததாக இருப்பினும் எங்கே? எப்படி? எவரால்? அமைக்கப்பட வேண்டும் என்பதிலேயே கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன என்று கூறியிருந்தோம். பௌத்த மதத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் புத்த கோவில்களை அமைப்பதற்கு நாம் எதுவித மறுப்புக்களையுந் தெரிவிக்;கவில்லை. அவர்கள் அவற்றுக்கான உரிய அனுமதிகளை முறையாகப் பெற்று புதிய கோவில்களை அமைத்துக் கொள்ளமுடியும். அப்படியல்லாது பௌத்தர்கள் எவரும் நிரந்தரமாக குடியிருக்காத பகுதிகளில் எந்தவித முன்னனுமதிகளும் இன்றி தனியார்களின் காணிகளிலும் இராணுவத்தினர் உதவியுடன் அடாத்தாக கைப்பற்றப்பட்ட அரச காணிகளிலும் புதிய புதிய பௌத்த கோவில்களை அமைப்பதும் பிற மத வணக்கத்தலங்களை இடித்து அழிப்பதுமாகிய செயற்பாடுகளில்ஈடுபடுவது எதற்காக?

3.    பாரிய உடல் உபாதைக்கு உள்ளான அங்கவீனர்கள் வன்னி மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவிக்காக காத்திருக்கின்றனர். எனினும் அரசினால் வழங்கப்படுகின்ற நிதி 300 பேர் வரையான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் உதவி பெறுநர் ஒருவர் மரணிக்கின்ற வேளையிலேயே இன்னொருவருக்கு இவ்வுதவி கிடைக்கக் கூடிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என பெருமளவில் விளம்பரம் செய்யும் அரசு மிகவும் அவசரமான அடிப்படைத் தேவைகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அல்லது அங்கவீனர்களுக்கு கூட உதவ முடியாதிருப்பது ஏன்?அசூயையா? அக்கறையின்மையா? அலட்சியமா? அரசியல்ப் பழிவாங்கலா?

4.    பொருத்து வீடுகள் வேண்டாம் என்றதும் வங்கிக் கடன் பெற்று வீடுகள் கட்டித் தருவதாகக் கூறப்பட்டது. ஆனால் திரும்பவும் பொருத்து வீடுகளை எம் மாகாணத்தில் அறிமுகப்படுத்த விளைவதன் மர்மம் என்ன?
5.    பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கைவாங்காமல் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?

6.    விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின் புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்திற்காக? அதுவும் எமது மக்கள் வன்முறை களைந்து ஒருமித்த ஒரு நாட்டினுள் சமஷ்டியே சிறந்தது என்று கனடா, சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளின் முன்மாதிரியை எடுத்துக் காட்டி ஜனநாயக ரீதியாக அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்ல முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறான பொய்யான புனைந்துரைகளைப் பகர்வதின் நோக்கம் என்ன?


7.    காணாமற் போனவர்கள் சம்பந்தமாக வலுவற்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து விட்டு அதைக் கூட நடைமுறைப்படுத்த முன் வராததின் காரணம் என்ன?

இறுதியாக ஒரு முக்கிய விடயத்தை இந்த மட்டக்களப்பு மண்ணில் கூற விரும்புகின்றேன். இன்றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் ஒன்றாக இணைந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும்.தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் அரசு ஈடுபட்டிருந்த வேளையில் தமது போர் யுக்திகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் முஸ்லீம் அரசியல் கட்சிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு மேலதிக அமைச்சுக்கள் எனப் பல சலுகைகளை வழங்கி தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை வளர்க்க முற்பட்டது.இன்று தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவடைந்த நிலையில் பெரும்பான்மை இனத்தின் கழுகுப் பார்வையை முஸ்லீம் சகோதரர்கள் மீது திருப்பி முஸ்லீம்களின் வணக்கத் தலங்களை உடைப்பதும்; குடியேற்றங்கள் தொடர்பில் இன ரீதியான கருத்துக்களை முன்வைப்பதும், துவேச மனப்பான்மையை வளர்ப்பதும் எதற்காக?

எனது நண்பரும் தமிழ்ப் பற்றாளருமான அமரர் ஆர்ஆ அஷ்ரப் அவர்கள் 1975ம் ஆண்டிலிருந்து தந்தை செல்வா அவர்களின் விசுவாசியாக இருந்தவர். 1976ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ந் திகதி புத்தளம் பள்ளிவாசலில் 06 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட போது அக்காலத்தில் நாட்டிலிருந்த எந்தவொரு முஸ்லீம் தலைமைப்பீடங் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. தந்தை செல்வா அவர்கள் மாத்திரம் இவ்விடயம் சம்பந்தமாகக் கண்டனம் தெரிவித்து தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடனான எமது ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் காரணியாக இருந்தார். அதுமாத்திரமன்றி 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரப் அவர்கள் பங்குபற்றியிருந்தார் என்று எனக்கு ஞாபகம்.

சுதந்திரத்தின் பின்பு அனேகமான முஸ்லீம் தலைவர்கள் தமிழரசுக் கட்சி வேட்பாட்டாளர்களாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வேறுபாடின்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் பிட்டும் தேங்காய்த் திருவலும் போல இரண்டறக் கலந்தவர்கள், பிரிக்கவே முடியாதவர்கள். என்று கூறியவர் வேறுயாருமல்ல காலஞ்சென்ற அமரர் அஷ்ரப் அவர்களே.  மேலும் முஸ்லீம் மக்களில் பலர் தமிழ் மொழியில் மிக்க பாண்டித்தியமும், புலமையும் கொண்டவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல. இன்றும் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பவர்களாகவும் இச்செம்மொழியை மேம்படுத்துவதற்கு உழைப்பவர்களாகவும் உள்ளார்கள். எம்முடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் கொழும்பு கம்பன் கழக விழாவில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் மறக்கமுடியாதன.

ஆனால், 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளின் பின்னர் இடம் பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரசியல் கருத்து வேற்றுமைகளும் எம் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிவிட்டது. இருந்த போதிலும் உரிய தேவையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே சகோதரர்களாக நாம் மாறிவிடுவதை, ஒன்றுபட்டு நாம் உழைப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மேற்கூறியவாறு ஏற்பட்ட சில சம்பவங்கள் எம்மிடையில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் தமிழ்த் தாயின் புதல்வர்கள் என்ற முறையில் முன்னர் எவ்வாறு எப்படி ஒற்றுமையை நிலைநாட்டினோமோ அவ்வாறே இன்றும் வேறுபாடுகளைக் களைந்து எமது உரிமைகள் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு பறிக்கப்படும் போது நாம் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலோடு எமது கோரிக்கைகளை முன்னெடுக்கவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதுடன் சகல இனப் பாதுகாப்பிற்காகவும் நாம் அல்லும் பகலும் பாடுபடுவோம். எம்முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேச வாதம், வர்க்க பேதம் இன்றி, ஆண் பெண் பேதமின்றி, மத பேதமின்றி அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டிக்க முன் வரவேண்டும். தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஒரே அரசியல்த் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ;டி அரசியல் அமைப்பின் தேவையை வலியுறுத்த வேண்டும். முஸ்லீம் மக்களுக்கும் ஒரு சமஷ;டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது ஒற்றுமையை கிறீஸ்தவ இந்துத் தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும். வாழ்க தமிழ்! எழுக தமிழ்' என்றார்.    (வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா)

article_1486717073-7.jpg

- See more at: http://www.tamilmirror.lk/191324/ப-ல-ப-ச-ச-ண-ட-எதற-க-க-எழ-க-தம-ழ-ல-ச-வ-ஆவ-சம-#sthash.FzELTS7R.dpuf
  • தொடங்கியவர்
மகிந்த அரசு செய்த தவறையே நல்லாட்சியும் செய்கிறது-வியாழேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு
 
 
மகிந்த அரசு செய்த தவறையே நல்லாட்சியும் செய்கிறது-வியாழேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்தின் தெரிவித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்த அதே தவறுகளை நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
 
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறு ப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி மேற்கொள்ளும் போராட்டம் வேறு வடபகுதியில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் வேறு எனவும் குறிப்பிட்டார்.

http://www.onlineuthayan.com/news/23715

வடக்கு கிழக்கு படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை-இரா.துரைரெட்ணம் கோரிக்கை
 
 
வடக்கு கிழக்கு படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை-இரா.துரைரெட்ணம் கோரிக்கை
வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அலகை இலங்கை அரசாங்கம் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி நடைமுறை ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுக தமிழ் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
 
வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
எழுக தமிழ் பேரணியானது கட்சி சார்பானது அல்ல மாறாக பொது மக்கள் சார்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்

 

http://www.onlineuthayan.com/news/23714

  • தொடங்கியவர்

உரிமையை கோரினால் நாம் பயங்­க­ர­வா­திகள்

p11-af3f68bc5b103b7cd28e3d22db0d0afb536fe0aa.jpg

 

அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு இதுவே; எழுக தமிழ்  நிகழ்வில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் விசனம்

(காங்­கே­யே­னோடை, பட்­டி­ருப்பு, பெரியபோரதீவு, வவு­ண­தீவு நிரு­பர்கள்)

தமிழ் மக்­களின் உரி­மை­களை கோரு­ப­வர்கள் ஆட்சி யாளர்­களின் பார்­வையில் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே தென்ப­டு­கின்­றனர். எமது உரி­மை­களை நாம் கோரு­வது குற்­ற­மல்ல என்­பதை சிங்­களச் சகோ­த­ரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் அர­சியல் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. நாங்கள் பிரி­வி­னையை கோர­வில்லை. 

சமஷ்­டியை கோரு­கின்றோம். கனடா, பெல்­ஜியம், சுவிட்  ஸர்­லாந்து போன்று நாட்டை ஒரு­மைப்­ப­டுத்தி தன்­மா­னத்­து­டனும் ஐக்­கி­யத்­து­டனும் வாழவே விரும்­பு­கின்றோம் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

இந்த நாட்டில் தமிழ் மொழியை பேசு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் சகோ­த­ரர்கள் ஒன்­றாக இணைந்து அர­சாங்கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்கும் எமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் அவற்றைப் பாது­காப்­ப­தற்கும் தொடர்ந்தும் முயற்­சிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு  சமஷ்­டியை உள்­ள­டக்­கிய அர­சியல் தீர்வை பெறு­வ­தற்கே நாம் உறுதியுடன் செயற்­பட வேண்டும் என்றும்  அவர் வழி­யு­றுத்­தினார். 

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் மட்­டக்­க­ளப்பில் நேற்று எழுக தமிழ் எழுச்சிப் பேர­ணியும் நிகழ்வும் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது, எழுமின், விழிமின், இலட்­சி­யத்தை அடையும் வரை நிறுத்­தா­தீர்கள்! என்றார் சுவாமி விவே­கா­நந்தர். கடோ­ப­நி­ஷ­தத்தில் வரும் சொற்­களை உல­க­றியச் செய்தார் சுவாமி விவே­கா­னந்தர். இன்று மட்­டக்­க­ளப்பு விவே­கா­னந்தா விளை­யாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்­ணிக்­கையில் திரண்­டி­ருக்கும் எமது மக்­க­ளுக்கு நான் கூறு­வதும் அதுவே.எழுமின்! விழிமின்!இலட்­சி­யங்­களை அடையும் வரை நிறுத்­தா­தீர்கள்! 

எமது பாதை கரடு முர­டாக அமையப் போகின்­றது. அதற்கு நாங்கள் எங்­களைத் தயார் படுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது. 69 வரு­டங்­க­ளுக்கும் மேலாக நாங்கள் எங்கள் குறை­களைக் கூறிக் கொண்டு வரு­கின்றோம். ஆனால் செவிடன் காதில் மகுடி இசைத்த கதை­யா­கவே இருந்து வரு­கின்­றது.இதற்குக் காரணம் உறங்­கு­ப­வனை எழுப்­பலாம். உறங்­கு­வது போல் பாசாங்கு செய்­ப­வனை எழுப்­பு­வது மிகச் சிரமம். ஒரு வேளை பச்சைத் தண்ணீர் கொண்டு முகத்தில் தௌித்தால் அவன் எழும்பக் கூடும். உறங்­கு­ப­வர்கள் போலக் காண்­ப­வரை உசுப்பி எழுப்­பவே இந்த எழுக தமிழ் நடை­பெ­று­கின்­றது.

 மக்­களின் மனோ நிலை­யையே நாங்கள் பிர­தி­ப­லிக்­கின்றோம்.

எங்கள் நட­வ­டிக்­கைகள் பிழை­யென்றும்,நாட்டில் இருக்கும் நற்­சு­ழலை நாங்கள் குழப்­பு­கின்றோம் என்றும் எங்கள் மீது குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. நாங்கள் வாய்­பேசா மடந்­தை­க­ளாக இருந்தால் அல்­லது பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளுடன் ஒத்­தூ­தினால் எங்­க­ளுக்கு நற்­சாட்சிப் பத்­திரம் கிடைக்கும். துணிந்து எமது குறை­களைக் கூறினால் அது ஒற்­று­மையைச் சீர்­கு­லைக்கும் செயல் எனப்­படும். ஆக­மொத்தம் எமக்­கெது தேவை என்­ப­திலும் பார்க்க தாம் தரு­வதை நாங்கள் ஏற்க வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றார்கள் பெரும்­பான்மை இன அர­சி­யல்­வா­திகள். இன்னும் சில காலம் போனால் எங்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்­பார்கள் என்று நினைக்­கின்றேன். ஏற்­க­னவே அவ்­வாறு கூறி­வ­ரு­கின்­றார்­க­ளோநான் அறியேன்.

உரி­மை­களை கோரினால் பயங்­க­ர­வா­திகளா 

உரி­மை­களைக் கோருவோர், உரி­மை­க­ளுக்­காகப் போரா­டுவோர், உரி­மை­களைத் தாருங்கள் என்று உரக்கக் கேட்போர் யாவரும் ஆட்­சி­யா­ளர்கள் பார்­வையில் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். அன்­று ­வெள்ளை­யனே வெளியேறு என்­ற­வர்­க­ளெல்லாம் சட்­டத்தின் முன் குற்­ற­வா­ளிகள் ஆக்­கப்­பட்­டார்கள். வெள்ளையன் வெளியே­றி­யதும் கெப்­பற்­றிப்­பொ­லவும், சூர­ச­ர­தி­யேலும் இன்னும் பலரும் சிங்­கள மக்­களின் வீர சூரர்கள் ஆனார்கள். இன்று எம்மை பயங்­க­ர­வா­தி­க­ளாகப் பார்ப்­ப­வர்கள் இவற்­றை­யெல்லாம் எண்­ணிப்­பார்க்க வேண்டும். எமது உரி­மை­களை நாம் கோரு­வது குற்­ற­மல்ல என்­பதை எமது சிங்­களச் சகோ­த­ரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம்மைப் பயங்­க­ர­வா­திகள் என்போர் என்ன கூறப் பார்க்­கின்­றார்கள்? நாங்கள் எங்கள் இரா­ணு­வத்தை வடக்கு, கிழக்கில் நிறுத்­தி­யுள்­ளோம். ­ப­யங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை அமுலில் வைத்­தி­ருக்­கின்றோம். ஆறா­வது அர­சியல் யாப்புத் திருத்தச் சட்­டத்­தை­யும் ­தொ­டர்ந்து அமுலில் வைத்­தி­ருக்­கின்றோம். பன்­னாட்டு அர­சாங்­கங்­களின் பரிந்­து­ரை­களைப் பெற்­றுள்ளோம். இவ்­வா­றி­ருக்­கவும் நீங்கள் உங்கள் உரி­மை­களைக் கேட்­கின்­றீர்கள் என்றால் நீங்கள் பயங்­க­ர­வா­திகள் தானே என்­பது தான் தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­களின் அர­சியல் நிலை.

உரி­மைகள் அற்­ற­வர்கள் தான் உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் கேட்­பார்கள். உரி­மைகள் இருந்­தி­ருந்தால் ஏன் வெயிலில் இருந்து, பனியில் காய்ந்து, மழையில் நனைந்து கேட்­கப்­போ­கின்­றார்கள்? இல்­லா­த­தால்­தானே கேட்­கின்றோம். இதைச் சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் உணர வேண்டும். எம் உரித்­துக்­களை நாம் கோர விடாது அடுத்து வந்த அர­சாங்­கங்கள் தடுத்­துள்­ளன. கடு­மை­யான சட்­டங்­க­ளாலும் இரா­ணுவப் பிர­சன்­னங்­க­ளாலும் அர­சியல் யாப்பு அனு­ச­ர­ணை­க­ளு­டனும் இதைச் சாதித்­துள்­ளார்கள்.

போர்க்­குற்ற விசா­ரணை

அது மட்­டு­மன்றி கடைசிப் போர் ஒரு­த­லைப்­பட்­ச­மாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஊட­கங்கள் எவ­ரு­டைய பிர­சன்­னங்­களும் இல்­லாத நிலையில் சர்­வ­தேச போர் விதி­க­ளுக்கு மாறாக மேற்­கொள்­ளப்­பட்டு முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை சிங்­கள மக்கள் யாவ­ரும்­ அ­றிவர். அவ்­வே­ளையில் கொல்­லப்­பட்­ட­வர்கள் விடு­தலைப் புலிகள் மட்­டு­மல்ல. சாதா­ரண அப்­பாவிப் பொது­மக்களும் பெரு­வா­ரி­யாகக் கொல்­லப்­பட்­டனர். அவர்­களின் எண்­ணிக்கை திரி­பு­ப­டுத்­தப்­பட்டு மிகச் சொற்ப தொகை­யாக எந்­த­வித மனச்­சாட்­சி­யு­மின்றி சர்­வ­தேச உல­கிற்கு காட்­டப்­பட்­டுள்­ளது. இதனால் விளைந்­தது தான் சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை முன்­மொ­ழிவு. இந்தத் தீர்­மானம் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்­கிய நாடுகள் சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது சர்­வ­தே­சமும் இலங்கை அர­சாங்­கமும் ஒன்­றி­ணைந்து அதனை ஏற்­றுக்­கொண்­டனர். இருந்­த­போ­திலும் ஒன்­றரை வரு­டங்கள் கழிந்த பின்­னரும் இலங்கை அர­சாங்கம் தான் அளித்த முக்­கிய வாக்­கு­று­தி­களை இது­காறும் நிறை­வேற்ற முன்­வ­ர­வில்லை.

அண்­மையில் இன்­ன­லுறும் கேப்­பாப்­பு­லவு மக்­களைக் காணச் சென்­றி­ருந்தேன். போகும் வழி­யெல்லாம் ஏக்கர் ஏக்­க­ரான காடடர்ந்த நிலங்­களைக் கொங்­கிறீட் கட்­டைகள் நாட்டி, கம்பி போட்டு, கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்­ளார்­கள் ­ப­டை­வீ­ரர்கள். அவற்­றில் மக்­களின் உறுதிக் காணி­களும் அடங்­கு­வன. தம் சொந்த இடங்­க­ளுக்கு எம் மக்கள் திரும்பிச் செல்­வ­தற்கு ஆங்­காங்கே தடை­யாக உள்­ளார்கள் இரா­ணு­வத்­தி­னரும், கடற் படை­வீ­ரர்­களும், ஆகாயப்படை வீரர்­களும். அதற்கு எதி­ராக எம்­மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்தால் அவர்­களைத் துன்­பு­றுத்­து­கின்­றார்கள்.

ஏன் என்று இவர்­க­ளிடம் கேட்டால் பாது­காப்­புக்கு அவ­சியம் என்­கின்­றார்கள். யார் பாது­காப்­புக்­காக இந்த அடா­வ­டித்­தனம்? எங்கள் பாது­காப்­புக்­கா­கவா அல்­லது உங்கள் பாது­காப்­புக்­கா­க­வா­ அல்­லது அர­சி­யல்­வா­தி­களின் பாது­காப்­புக்­கா­கவா என்று கேட்டால் பதி­லில்லை. எங்­க­ளுக்கு உங்கள் பாது­காப்பு தேவை­யில்லை என்று திரும்பத் திரும்பக் கூறு­கின்றோம். போதிய பொலிஸார் இருந் தால் பொறுப்­பாக அவர்கள் பாது­காப்பு வழங்­கு­வார்கள் என்று நாங்கள் கூறினால் அதற்கு அவர்கள் செவி­சாய்க்­கின்­றார்கள் இல்லை. அவர்கள் போட்­டி­ருக்கும் பாது­காப்பு அரண்­க­ளையும், கட்­டி­யுள்ள மாளி­கை­க­ளையும், எடுத்­தி­ருக்கும் எம்­மக்­களின் காணி­களின் விஸ்­தீ­ர­ணத்­தையும் பார்த்தால் இன்னும் 500, 600 வரு­டங்­க­ளுக்கு மேலாகத் தாம் தொடர்ந்­தி­ருக்கப் போகின்­றார்கள் என்ற எண்­ணத்­தில் தான் அவர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை அது ­தெளி­வாக எடுத்துக் காட்­டு­கின்­றது. அவர்கள் செய்­வது பிழை என்று நாங்கள் கூறினால் நீங்கள் சமா­தா­னத்தைச் சீர்­கு­லைப்­ப­வர்கள் என்று எமக்குப் பட்டம் கட்டப் பார்க்­கின்­றார்கள்.

முன்னர் இந்­திய அமைதி காக்கும் படைகள் நாங்கள் இங்கு 100 வரு­டங்­க­ளுக்­கேனும் இருக்கப் போகின்றோம் என்று கூறிக்­கொண்டு தான் வந்­தார்கள். வி.பி.சிங் அர­சாங்கம் அவர்­களைத் திரும்ப அழைத்­தது. அது போல எங்கள் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரைத் திரும்ப அழைக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற மனி­தா­பி­மா­னத்­துடன் பக்­கச்­சார்­பின்றி போருக்குப் பின்­ன­ரான மக்­களின் பாதிப்­புக்­களை உணர்ந்து செயற்­ப­டக்­கூ­டிய பொலி­ஸாரை வட­கி­ழக்கில் இரட்­டிப்­பாக நிலை­நி­றுத்த வேண்டும் என்­பதே எமது ஒரு கோரிக்கை.

இரா­ணு­வத்தை மீளப்­பெ­றா­ததன்  மர்மம் என்ன? 

போர் முடிந்து 8 வரு­டங்கள் ஆகியும் இரா­ணு­வத்­தி­னரைத் திரும்ப அழைக்­கா­ததன் மர்மம் என்ன? விடு­த­லைப்­பு­லி­களை முற்­றாக அழித்து விட்­ட­தாகக் கூறு­கின்­றார்கள். பின் எதற்­காக வடக்­கிலும் கிழக்­கிலும் வான் படை­களும், கடற்­ப­டை­களும், காலாட்­ப­டை­களும்? அள­வுக்­க­தி­க­மான படை­களைத் தம்­மு­டைய தரை­களில் நிலை நிறுத்த இட­மில்லை என்­றுதான் அவர்­களை எம்­ மத்­தியில் உலாவ விட்­டுள்­ளார்­களா? அல்­லது நாம் எவரும் சுதந்­தி­ரக்­காற்றை உட்­கொள்ளக் கூடாது என்று நினைக்­கின்­றார்­களா? அல்­லது எமது பொரு­ளா­தா­ரத்தைக் கட்டி எழுப்ப விடாது எம் மக்­களின் காணி­க­ளையும், வீடு­க­ளையும்,கடை­க­ளையும், கடற்­கரைத் தொழில்­க­ளையும், விவ­சாய நில புலன்­க­ளையும் நிரந்­த­ர­மாகச் சுவீ­க­ரித்து எம்மை அடக்கி ஆள நினைக்­கின்­றார்­களா?

ஒரு சில பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் எமது சிங்­கள சகோ­த­ரர்கள் சிலரும் ஒரு விசித்­தி­ர­மான கருத்தை முன்­வைக்­கின்­றார்கள். “நாங்கள் தரு­வ­தையும் தர­மாட்டோம், நீங்கள் தகாத முறையில் ‘தா’ என்று கேட்டால்” என்று கூறு­கின்­றார்கள். எப்­பொ­ழு­தையா நீங்கள் தந்­தீர்கள்? தரு­வ­தாகக் கூறி­னீர்­களே ஒளிய தர­வில்­லையே! நீங்கள் தராத ஒன்­றைத்­தானே தாருங்கள் என்­கின்றோம். எம் உரித்­துக்­களைப் பறித்து வைத்துக் கொண்டு வெறு­மனே தரு­வ­தாக 60 வரு­டங்­க­ளுக்கு மேலாகக் கூறிக் கொண்டு வந்து விட்டு இப்­பொ­ழுது “நீங்கள் கேட்டால் தர­மாட்டோம் என்­பதன் அர்த்தம் என்ன? நாம் நினைத்­ததைத் தான் தருவோம்.” நீங்கள் கேட்­பதைத் தர மாட்டோம் என்­பது தானே அர்த்தம்? ஆனால் சட்­டத்தில் அப்­படிக் கூறப்­ப­ட­வில்­லையே. உரி­மைகள் உரித்­துக்கள் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு மட்டும் தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அல்ல என்று சட்டம் கூற­வில்­லையே! மேலும் வடக்கு, கிழக்கில் 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் பேசும் மக்கள் தான் பெரும்­பான்­மை­யினர். ஆகவே நாங்­களும் எங்கள் பிர­தே­சங்­களில் பெரும்­பான்­மை­யி­னரே. எனினும் சட்டம் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு நீதி சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு நீதி என்று கூற­வில்லை. ஒவ்­வொரு தனி­ம­னி­த­னுக்கும் சில பல உரித்­துக்கள் இருப்­பதைச் சட்டம் அங்­கீ­க­ரிக்­கின்­றது, ஏற்­றுக்­கொள்­கின்­றது. அதற்கு மேலாகக் குழு­மங்­களின், மனித குழுக்­களின் உரித்­துக்­க­ளையும் சட்டம் ஏற்­றுள்­ளது. நாம் இழந்த உரி­மை­களை ஜன­நா­யக ரீதியில் மீளப் பெறு­வ­தற்கு முயற்­சிப்­பது வகுப்­பு­வா­த­மா­கவோ, தீவி­ர­வா­த­மா­கவோ, அநீ­தி­யா­கவோ கருத முடி­யாது. ஐக்­கிய நாடுகள் சபையின் சர்­வ­தேச நிய­தி­க­ளுக்கு அமை­வாக ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட உரிமை சாச­னங்­களின் அடிப்­ப­டையில் ஒரு இனத்தின் உரி­மைகள், அடை­யா­ளங்கள் மற்றும் மரபு ரீதி­யான, சரித்­திர ரீதி­யான வதி­வி­டங்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஒன்­று­பட்ட ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வை எட்­டு­தலே எமது குறிக்­கோ­ளாகும்.

1987ஆம் ஆண்டில் நாங்கள் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்ட மூலம் தந்தோம் அல்­லவா என்­கின்­றார்கள் சில சிங்­களத் தலை­வர்கள். நீங்கள் எங்கே தந்­தீர்கள்? அது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணையால் கிடைத்­தது. அதுவும் இந்­தி­யர்­க­ளுக்குத் தெரி­யாமல் சட்­டத்தைப் பல­மற்­ற­தாக மாற்­றிய பின்­னரே தரப்­பட்­டது. தரு­வ­தற்கு உங்­க­ளுக்கு மன­மி­ருந்தால் நாங்கள் கேட்­கா­மலே தந்­தி­ருப்­பீர்­களே!

சம்­பந்­தனின் நம்­பிக்கை

இந்த யதார்த்­தத்­தைத்தான் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முன்னாள் தலை­வர்கள் அமரர் அமிர்­த­லிங்கம், அமரர் சிவ­சி­தம்­பரம் ஆகி­யோரும் தற்­போ­தைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனும் 28.10.1987ஆம் ஆண்டு முன்னாள் இந்­தியப் பிர­தமர் ரா­ஜீவ்­காந்திக்கு அனுப்­பிய கடி­தத்தில் வெகு விப­ர­மாக எழுதி அவ­ரு­டைய தலை­யீட்டை எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால்­ அது நடை­பெ­ற­வில்லை.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் உங்­களை எவ்­வ­ளவு நம்­பினார்? 2016இல் கட்­டாயம் தரு­வார்கள் என்று எதிர்­பார்த்தார். தந்­தீர்­களா? உங்­க­ளுக்குத் தர மன­மில்லை என்­பது உல­க­றிந்த விடயம். எனவே நாங்கள் கூட்டம் கூடிக் கேட்க வேண்­டிய நிலைக்கு எங்­களைத் தள்­ளி­யது நீங்­களே என்று அர­சாங்­கத்தைப் பார்த்துக் குறை கூறு­கின்றேன். எங்கள் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தி­யதும் உங்­க­ளா­லேயே என்று குற்றம் சாட்­டு­கின்றேன்.

முன்­னைய ஜனா­தி­ப­தியின் காலத்தில் அவர் 18 சுற்றுப் பேச்­சுக்கள் நடத்­தினார் தமி­ழர்­க­ளுடன். ஏதேனும் தந்­தாரா? இப்­பொ­ழுது ஜெனி­வாவில் மார்ச் மாதத்தில் கூட்டம் போடப் போகின்­றார்கள் என்­றதும் அதைத் தரப்­போ­கின்றோம், இதைத் தரப்­போ­கின்றோம் என்று விட்டு இன்று வரையில் ஒன்­றுமே தர­வில்லை, தர எத்­த­னிக்­கவும் இல்லை. இரு­ப­துக்கு மேலான உத்­த­ர­வா­தங்­களை இலங்கை அர­சாங்கம் ஜெனி­வாவில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு 2015ம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்தில் அளித்­தது. எவ்­வெ­வற்றை இது­வ­ரையில் நிறை­வேற்­றி­யுள்­ளார்கள்? நிறை­வேற்­றி­ய­தாகக் கூற எத்­த­னிப்­ப­வை­க­ளிலும் மக்­க­ளுக்கு பயன் ஏதும் கிடைத்­துள்­ளதா? மாறாக அர­சியல் யாப்பு உரு­வாக்­கத்தின் நிமித்தம் போர்க்­குற்ற விசா­ரணை தேவை­யில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா கூறி­யுள்ளார். இவை இரண்­டுக்கும் தொடர்பே இல்லை. ஒன்று நடந்து முடிந்­தது. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்டும். மற்­றை­யது இன்னும் நடை­பெ­றா­தது. அர­சியல் சம்­பந்­த­மான எமக்­கி­ருக்கும் உரித்­துக்­களைத் தர, எம்­மிடம் இருந்து பறித்­தெ­டுத்த உரித்­துக்­களைத் தர, பாதிக்­கப்­பட்ட எம்­மக்­களின் நல­னையும் உரி­மை­க­ளையும் விலை­பேசப் பார்க்­கின்­றாரா சந்­தி­ரிகா?

அது­மட்­டு­மல்ல. அண்மைக் காலங்­களில் எமக்கு ஏற்­க­னவே இருக்கும் உரித்­துக்­களைத் திரும்பப் பெறும் கைங்­க­ரி­யத்திலும் ஈடு­பட்டு வரு­கின்­றது அர­சாங்கம். மேலும் எம்­மா­காணக் காணி­களில் தென்­ன­வர்­களைத் தேர்ந்­தெ­டுத்துக் குடி­ வைக்­கின்­றார்கள். எம்­ம­வரை அவற்­றி­லி­ருந்து துரத்­து­கின்­றார்கள். எமக்­கி­ருக்கும் காணி உரித்­துக்­களைத் தம­தாக்கிக் கொண்டு மேலும் மேலும் படை­யி­ன­ருக்கு மேல­திகக் காணி­களை சுவீ­க­ரிக்க நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்­றார்கள்.

தாம் செய்யும் தவ­று­களை மூடி மறைத்து விட்டு எம்மேல் பழியைப் போட எத்­த­னிக்­கின்­றது அர­சாங்கம். இந்­நி­லையில் தான் நாம் மிகவும் விழிப்­ப­டைய வேண்­டிய ஒரு தேவை எமக்கு ஏற்­பட்­டுள்­ளது.

எம்மை விமர்­சித்­தனர்

எமது அர­சியல் தேவைகள் மற்றும் தமிழ் மக்­களின் சுய நிர்­ணய உரி­மைகள் ஆகி­ய­வற்றை இந்த அரசின் புதிய அர­சியல் யாப்பில் சேர்த்துக் கொள்­வ­தற்கு ஏற்ற வகை­யி­லான சில அர­சியல் அறி­வு­ரை­களை அர­சுக்கு எடுத்துக் கூறு­கின்ற அத்­துடன் மக்கள் உணர்­வு­களைப் பிர­தி­ப­லிக்கக் கூடிய ஒரு நிகழ்­வா­கவே “எழுக தமிழ்” நிகழ்வை நாம் அன்று யாழ்ப்­பா­ணத்தில் முன்­னெ­டுத்­தி­ருந்தோம். ஆனால் அதன்பின் எம்மைப் பலரும் பல வித­மாக விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்­கி­யது மட்­டு­மன்றி நாம் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான முத்­தாய்ப்பு வேலை­களில் ஈடு­ப­டு­கின்றோம், தமிழ் மக்­களின் ஒட்­டு­மொத்தப் பலத்­தையும் கூறு­போ­டு­கின்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்றோம் என எமது தமிழ் அர­சியல் தலை­மைகள் கூட நேர­டி­யா­கவும் அதே­நேரம் மறை­மு­க­மா­கவும் கருத்­துக்­களை முன்­வைக்­கத்­த­லைப்­பட்­டனர். அவர்­க­ளுக்குப் பக்­க­ப­ல­மாக நாங்கள் நிற்­கின்றோம் என்­பதை மறந்து அவ்­வாறு கூறத் தலைப்­பட்­டார்கள்.

அதே­போன்று சிங்­களத் தலை­மை­களும் எம்மை அடிப்­ப­டை­வா­திகள், அர­சியல் குழப்­பத்தை உண்­டு­பண்ண முயல்­ப­வர்கள் எனப் பல்­வேறு வித­மாக சித்­த­ரித்­த­துடன் நாம் அர­சுக்கு எதி­ரான தீவி­ர­வாதப் போக்கைக் கொண்ட ஒரு அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம் என்ற தவ­றான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்கத் தலைப்­பட்­டனர்.

நாம் அன்று தெரி­வித்த அதே கருத்­துக்­க­ளையே இன்றும் வலி­யு­றுத்­து­கின்றோம். ஏனென்றால் எமது கருத்­துக்கள் கடந்த 69 வரு­ட­கா­ல­மாக எம்மால் கூறப்­பட்­டு­வரும் கருத்­துக்­களே. அதில் மாற்றம் எது­வு­மில்லை. புதி­தாக நாம் எதுவும் கேட்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் கூறி எம் மக்கள் அங்­கீ­க­ரித்த அதே கருத்­துக்­க­ளையே நாம் கூறி வரு­கின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைப்பு

வடக்கு,கிழக்கு இணைப்பு, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வு என்­பன நேற்று, இன்று முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் அல்ல. இந்தக் கருத்­துக்­கள்­ அன்று முன்­வைக்­கப்­பட்­ட­தா­லேயே பண்­டா­ர­நா­யக்கா –செல்­வ­நா­யகம் உடன்­பாடு உரு­வா­கி­யது. ஆனால் அந்த உடன்­பாடு கிழித்­தெ­றி­யப்­பட்­டது. டட்லி–செல்­வ­நா­யகம் உடன்­பாடும் அதே கருத்­துக்­க­ளையே பிர­தி­ப­லித்­தன. ஆனால் அந்த உடன்­பாட்­டுக்கும் அதேகதியே. இந்­தி­யாவின் அனு­ச­ர­ணையால் 13ஆவது திருத்­தச்­சட்டம் யாக்­கப்­பட்­டதால் இது­வ­ரையில் அது நடை­மு­றையில் இருக்­கின்­றது. ஆனால் அத­னையும் சட்டம் கொண்டும் சுற்­ற­றிக்­கைகள் கொண்டும் மலி­னப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள் மத்­தியில் உள்ள பெரும்­பான்மை இனத் தலை­வர்கள். எனவே தான் எமது கோரிக்­கை­களை மேலும் முன்­வைக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கெ­ழுந்­துள்­ளது. நாங்கள் குழப்பம் விளை­விக்­க­வில்லை. குழப்­பத்­திற்குக் கார­ணமே தொடர்ந்து வந்த பெரும்­பான்­மை­யின அர­சியல் தலை­வர்கள் தான். கூட்­டாட்சி என்றால் பிரி­வி­னையே என்ற பொய்யை சிங்­கள மக்­க­ளுக்கு இது­காறும் கூறி­வந்­த­வர்­களும் இந்தத் தலை­வர்­களே.

இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய இன அழிப்பு யுத்­த­மா­னது 2009ஆம் ஆண்டில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யிலும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்டு இன்னும் பலர் ஊன­முற்­ற­வர்­க­ளாக எழுந்து நட­மாட முடி­யா­த­வர்­க­ளாக மாற்­றப்­பட்ட நிலை­யிலும், வீடு, வாசல், சொத்து, சுகம், காணி, பூமி என அனைத்­தையும் இழந்து கையறு நிலையில் ஏதி­லி­க­ளாக எமது மக்கள் செய்­வ­த­றி­யாது திகைத்து நின்ற வேளை­யிலும் நாம் ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டி முறை­யி­லான ஒரு அர­சியல் தீர்­வையே நாடி­யி­ருந்­தோம். ­நா­டு­கின்றோம். எனினும் அர­சியல் யாப்­புக்­களில் பூர­ண­மான அல்­லது வலு­வான திருத்­தங்­களை மேற்­கொள்ள விழைந்தால் அவற்றை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்­களின் மூலமே நிறை­வேற்ற வேண்டி வரும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் அதை விரும்ப மாட்­டார்கள் எனப் பூச்­சாண்டி காட்டித் தீர்­வு­களை மலி­னப்­ப­டுத்­து­வதும், அடிப்­ப­டை­யாகக் கொடுக்க வேண்­டி­ய­வற்றை கொடுக்­காமல் விடு­வ­தற்கு அதனை ஒரு சாட்­டாக கைக்­கொள்­கின்ற யுக்­தி­யையும் அர­சுகள் கடைப்­பி­டித்து வந்­துள்­ளன.

இதே தந்­தி­ரத்­தையே இப்­பொ­ழுதும் ஒரு சாரார் கையாள முயற்­சிக்­கின்­றனர். இது நாம் எழுந்­த­மா­ன­மாகச் சொல்­லு­கின்ற ஒரு கருத்­தல்ல. இந்த அரசில் அங்கம் வகிக்­கின்ற இரு பெரும்­பான்மை அரசுக் கட்­சி­களும் இந்த நாட்டின் அர­சியல் அமைப்பு ஒற்­றை­யாட்­சிக்­கு­அ­மை­வா­கவே தொடரும் என்றும் இந்த நாட்டில் சமஷ்டி அர­சியல் அமைப்­பிற்கு இட­மில்லை எனவும் இந்த நாடு மத சார்­பற்ற நாடாக மாறாது என்றும் உரக்கக் கூறு­வதை நாம் காண்­கின்றோம். அதற்கும் மேலாக ஒரு அர­சியல் தலைவர் 13 ஆவது அர­சியல் அமைப்புத் திட்­டத்தில் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளுக்கு மேலே மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வது பற்றி சிந்­திக்­கின்ற தருணம் இது­வல்ல என்று கண்டி யில் வைத்து தெரி­வித்­தி­ருப்­பது கவ­னிக்­கப்­படல் வேண்டும். இவற்­றை­யெல்லாம் பார்க்­கின்ற போது அர­சியலமைப்பு திருத்­தத்தில் இப்­போது இருக்­கின்ற நிலையை விட ஒரு சிறு முன்­னேற்றம் கூட ஏற்­படும் என்று எண்ணத் தோன்­ற­வில்லை. இது எமக்கு ஒரு புதிய வெளிச்­சத்தைக் காட்­டி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நடந்த முத­லா­வது “எழுக தமிழ்” நிகழ்ச்­சி­யையும் விட உறு­தி­யா­கவும் ஆக்ரோஷ­மா­கவும் எமது கோரிக்­கை­களை முன்­வைக்க வேண்­டிய தேவை இப்­போது ஏற்­பட்­டுள்­ளது என்­பதை உங்கள் அனை­வ­ருக்கும் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன்.

மீண்டும் மீண்டும் எங்­க­ளு­டைய கோரிக்­கை­களை நாம் உரத்துச் சொல்ல வேண்­டிய தேவையும் கடப்­பாடும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. நாம் முன்­னெ­டுக்­கின்ற இந்­த ­எ­ழுக தமிழ்­ என்ற நிகழ்வு தமிழ் பேசும் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டிய உரி­மை­களை ஜன­நா­யக முறைப்­படி கேட்­டெ­டுத்துப் பேணிப் பாது­காப்­ப­தற்­கான ஒரு முயற்­சியே தவிர அர­சியல் குட்­டையைக் குழப்பும் எண்­ணமோ அல்­லது வேறு எந்த கபட நோக்கோ எமக்­கில்லை.

மாறாக இந்த நாட்டில் இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலான பூர்­வீக பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட தனித்­து­வ­மான ஒரு தேசிய இனம், தமது இருப்பை உறுதி செய்து தம்மைத் தாமே ஆளக்­கூ­டிய ஒரு நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு ஏற்ற ஒரு அர­சியலமைப்பைப் பெற்றுக் கொள்­ளவே விழை­கின்­றது. எமது நட­வ­டிக்­கை­களை சர்­வ­தேச அர­சியலமைப்­புக்­களும் மற்றும் ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னங்­களும் நன்­கு­ணர்ந்து எமக்குப் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று நாம் விரும்­பு­கின்றோம்.எங்கள் அர­சியல் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. நாங்கள் பிரி­வினை கோர­வில்லை. சமஷ்­டி­யையே கேட்­கின்றோம். கனடா, பெல்­ஜியம், சுவிட்­சர்­லாந்து போன்று நாட்டை ஒரு­மைப்­ப­டுத்தி தன்­மா­னத்­து­டனும் ஐக்­கி­யத்­து­டனும் வாழவே விரும்­பு­கின்றோம்.

எனினும் நாங்கள் அர­சாங்­கத்­திடம் கேட்க வேண்­டிய கேள்­விகள் சில உண்டு. அவை­பின்­வ­ரு­மாறு -

1. யுத்தம் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டைய இருக்கும் நிலை­யிலும் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்கள் இன்னும் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டா­தது ஏன்? மேலும் மேலும் கூடிய காணி­களைக் கைய­கப்­ப­டுத்த விளை­வது ஏன்? எமது சில உரித்­துக்­களைத் தட்டிப் பறித்து அதி­கார சபை ஒன்­றிடம் கைய­ளிக்கப் பார்ப்­பதின் தாத்­ப­ரியம் என்ன? சட்­டத்­திற்குப் புறம்­பாக வெளிமா­கா­ணங்­களில் இருந்து கொண்டு வந்து வட­மா­கா­ணத்­தினுள் பலாத்­கா­ர­மாக குடி­யேற்­றி­யுள்ள சிங்­கள குடி­யேற்றவாசி­களின் இருப்­பி­டங்­களைத் தமிழ் உள்­ளூ­ராட்சி வட்­டா­ரங்­க­ளுடன் சேர்க்க முனை­வதன் தந்­திரம் என்ன?

2. புத்த கோவில்கள் அமைப்­பது தொடர்பில் நாம் மிகத் தெளிவான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தோம். புத்த கோவில்கள் கட்­டு­வதில் எமக்கு எவ்­வித ஆட்­சே­ப­மும் இல்லை. ஆனால் புதி­தாக அமைக்­கப்­ப­டு­கின்ற கோவில்கள் எந்த மதம் சார்ந்­த­தாக இருப்­பினும் எங்கே எப்­படி எவரால் அமைக்­கப்­பட வேண்டும் என்­ப­தி­லேயே கருத்து முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன என்று கூறி­யி­ருந்தோம். பௌத்த மதத்தை சார்ந்த மக்கள் வாழ்­கின்ற பகு­தி­களில் புத்த கோவில்­களை அமைப்­ப­தற்கு நாம் எது­வித மறுப்­புக்­க­ளையுந் தெரி­விக்­க­வில்லை. அவர்கள் அவற்­றுக்­கான உரிய அனு­ம­தி­களை முறை­யாகப் பெற்று புதிய கோவில்­களை அமைத்துக் கொள்­ள­மு­டியும். அப்­ப­டி­யல்­லாது பௌத்­தர்கள் எவரும் நிரந்­த­ர­மாக குடி­யி­ருக்­காத பகு­தி­களில் எந்­த­வித முன்­ன­னு­ம­தி­களும் இன்றி தனி­யார்­களின் காணி­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் உத­வி­யுடன் அடாத்­தாக கைப்­பற்­றப்­பட்ட அரச காணி­க­ளிலும் புதிய புதிய பௌத்த கோவில்­களை அமைப்­பதும் பிற மத வணக்­கஸ்­த­லங்­களை இடித்து அழிப்­ப­து­மா­கிய செயற்­பா­டு­க­ளில்­ ஈ­டு­ப­டு­வது எதற்­காக?

3. பாரிய உடல் உபா­தைக்கு உள்­ளான அங்­க­வீ­னர்கள் வன்னி மாவட்­டத்தில் மட்டும் ஆயி­ரக்­க­ணக்கில் உத­விக்­காக காத்­தி­ருக்­கின்­றனர். எனினும் அர­சினால் வழங்­கப்­ப­டு­கின்ற நிதி 300 பேர் வரை­யான பய­னா­ளி­க­ளுக்கு மட்­டுமே வழங்கக் கூடி­ய­தாக உள்­ளது. இந்­நி­லையில் உதவி பெறுநர் ஒருவர் மர­ணிக்­கின்ற வேளை­யி­லேயே இன்­னொ­ரு­வ­ருக்கு இவ்­வு­தவி கிடைக்கக் கூடிய துர்­பாக்­கிய நிலைக்கு அவர்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்­கின்றோம் என பெரு­ம­ளவில் விளம்­பரம் செய்யும் அரசு மிகவும் அவ­ச­ர­மான அடிப்­படைத் தேவை­களைக் கொண்ட மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்கு அல்­லது அங்­க­வீ­னர்­க­ளுக்கு கூட உதவ முடி­யா­தி­ருப்­பது ஏன்?அசூ­யையா? அக்­க­றை­யின்­மையா? அலட்­சி­யமா? அர­சியல் பழி­வாங்­கலா?

4. பொருத்து வீடுகள் வேண்டாம் என்­றதும் வங்கிக் கடன் பெற்று வீடுகள் கட்டித் தரு­வ­தாகக் கூறப்­பட்­டது. ஆனால் திரும்­பவும் பொருத்து வீடு­களை எம் மாகா­ணத்தில் அறி­மு­கப்­ப­டுத்த விளை­வதன் மர்மம் என்ன?

5. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தைக் கைவாங்­காமல் அர­சியல் கைதி­களைத் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்­தி­ருப்­பது ஏன்?

6. விடு­த­லைப்­பு­லி­களை முற்­றாக அழித்­து­விட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்த பின் புலிகள் திரும்­பவும் வந்­து­விட்­டார்கள் அல்­லது வரப் போகின்­றார்கள் என்று பூச்­சாண்டி காட்­டு­வது என்ன கார­ணத்­திற்­காக? அதுவும் எமது மக்கள் வன்­முறை களைந்து ஒரு­மித்த ஒரு நாட்­டினுள் சமஷ்­டியே சிறந்­தது என்று கனடா, சுவிட்­சர்­லாந்து, பெல்­ஜியம் போன்ற நாடு­களின் முன்­மா­தி­ரியை எடுத்துக் காட்டி ஜன­நா­யக ரீதி­யாக அர­சியல் நட­வ­டிக்­கை­களைக் கொண்டு செல்ல முன்­வந்­தி­ருக்கும் இந்த நேரத்தில் இவ்­வா­றான பொய்­யான புனைந்­து­ரை­களைப் பகர்­வதின் நோக்கம் என்ன?

7. காணாமல் போன­வர்கள் சம்­பந்­த­மாக வலு­வற்ற ஒரு சட்­டத்தைக் கொண்டு வந்து விட்டு அதைக் கூட நடை­மு­றைப்­ப­டுத்த முன் வரா­ததின் காரணம் என்ன?

முஸ்­லிம்கள் இணைய வேண்டும்

இறு­தி­யாக ஒரு முக்­கிய விட­யத்தை இந்த மட்­டக்­க­ளப்பு மண்ணில் கூற விரும்­பு­கின்றேன். இன்­றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் சகோ­த­ரர்கள் ஒன்­றாக இணைந்து கொண்டு அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுப்­ப­தற்கும் எமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் அவற்றைப் பாது­காப்­ப­தற்கும் தொடர்ந்தும் முயற்­சிக்க வேண்டும்.தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் அரசு ஈடு­பட்­டி­ருந்த வேளையில் தமது போர் யுக்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் இன்னும் பல்­வேறு தேவை­க­ளுக்கும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைத் தம்­முடன் இணைத்துக் கொண்டு அவர்­க­ளுக்கு மேல­திக அமைச்­சுக்கள் எனப் பல சலு­கை­களை வழங்கி தமிழ் பேசும் மக்­க­ளி­டையே பிரி­வி­னையை வளர்க்க முற்­பட்­டது.இன்று தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்த நிலையில் பெரும்­பான்மை இனத்தின் கழுகுப் பார்­வையை முஸ்லிம் சகோ­த­ரர்கள் மீது திருப்பி முஸ்­லிம்­களின் வணக்கஸ் தலங்­களை உடைப்­பதும் குடி­யேற்­றங்கள் தொடர்பில் இன ரீதி­யான கருத்­துக்­களை முன்­வைப்­பதும், துவேஷ மனப்­பான்­மையை வளர்ப்­பதும் எதற்­காக?

எனது நண்­பரும் தமிழ்ப் பற்­றா­ள­ரு­மான அமரர் அஷ்ரப் 1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து தந்தை செல்வாவின் விசுவாசியாக இருந்தவர். 1976ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி புத்தளம் பள்ளிவாச லில் 6 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்ப ட்ட போது அக்காலத்தில் நாட்டிலிருந்த எந்தவொரு முஸ்லிம் தலைமைப்பீடங் கூட கண்டனம் தெரிவிக்க வில்லை. தந்தை செல்வா மாத்திரம் இவ்விடயம் சம்பந்தமாகக் கண்டனம் தெரிவித்து தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனான எமது ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் காரணியாக இருந்தார். அதுமாத்திர மன்றி 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரப் பங்குபற்றியிருந்தார் என்று எனக்கு ஞாபகம். சுதந்திரத்தின் பின்பு அனேகமான முஸ்லிம் தலைவர்கள் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வேறுபாடின்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத் தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் திருவலும் போல இரண்டறக் கலந்தவர்கள், பிரிக்கவே முடியாதவர்கள். என்று கூறியவர் வேறுயாருமல்ல காலஞ் சென்ற அமரர் அஷ்ரப் அவர்களே. 

 மேலும் முஸ்லிம் மக்களில் பலர் தமிழ் மொழியில் மிக்க பாண்டித்தியமும், புலமையும் கொண் டவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல. இன்றும் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பவர்களாகவும் இச்செம் மொழியை மேம்படுத்துவதற்கு உழைப்பவர் களாகவும் உள்ளார்கள். எம்முடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் கொழும்பு கம்பன் கழக விழாவில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் மறக்கமுடியாதன. ஆனால் 1980ஆம் ஆண் டின் நடுப்பகுதிகளின் பின்னர் இடம் பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரசி யல் கருத்து வேற்றுமைகளும் எம் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் இடை வெளியை உருவாக்கிவிட்டது இருந்த போதி லும் உரிய தேவையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே சகோதரர்களாக நாம் மாறி விடுவதை, ஒன்றுபட்டு நாம் உழைப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

மேற்கூறியவாறு ஏற்பட்ட சில சம்பவங் கள் எம்மிடையில் ஆறாத வடுக்களை ஏற்ப டுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் தமிழ்த் தாயின் புதல்வர் கள் என்ற முறையில் முன்னர் எவ்வாறு எப்படி ஒற்றுமையை நிலைநாட்டினோமோ அவ்வாறே இன்றும் வேறுபாடுகளைக் களைந்து எமது உரிமைகள் ஆட்சியாளர்க ளால் உதாசீனம் செய்யப்பட்டு பறிக்கப்படும் போது நாம் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குர லோடு எமது கோரிக்கைகளை முன்னெடுக் கவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும். தமிழ்–முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை 

தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுப டுவதுடன் சகல இனப் பாதுகாப்பிற்காகவும் நாம் அல்லும் பகலும் பாடுபடுவோம். எம் முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேச வாதம், வர்க்க பேதம் இன்றி, ஆண்–பெண் பேதமின்றி, மத பேதமின்றி அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண் டிக்க முன் வரவேண்டும். தமிழ்பேசும் மக்

களுக்கு ஒரே அரசியல் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை வலியுறுத்த வேண்டும். முஸ்லிம் மக்களுக்கும் ஒரு சமஷ்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக் கின்றோம். எமது ஒற்றுமையை கிறிஸ்தவ, இந்து, தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும். வாழ்க தமிழ்! எழுக தமிழ்! 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.