Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்''

Featured Replies

''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்''

-அ. பிரியன்-

நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு என் நெருங்கிய சினேகிதன் வந்தான் அவனை அடையாளம் காண்பதில் சற்றுத் தடுமாறி பின் நிதானித்தேன் ஏனெனில் ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின்பு அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலை மனைவியையும் பிள்ளைகளையும் காணாது கவலையோடு இருந்தவனுக்கு அவனது ஒரே ஒரு தம்பியையும் சிறிலங்காப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றனர்.

இரண்டு துயரங்களும் ஒன்று சேர தலைமுடியும் தாடியும் வளர்த்து முனிவர் நிலை பூண்டிருந்தான் 33 வயதுடைய எனது நண்பன். அதே கோலத்துடன் பார்த்துப் பழகிய என் கண்கள் சற்றுத் தடுமாறியது நியாயமானதே.

“இப்ப தான் ஆளப்பாக்கச் சந்தோஷமா இருக்கு” என்ன மனசி பிள்ளையள் வந்திட்டினம் போல”

என எனது கேள்வி தொடர்ந்தது “ஓம் மச்சான் பெரிய கஷ்டப்பட்டு வந்து சேர்ந்திட்டினம் அவேலுக்கு சிக்கன்குனியா காச்சல் வந்ததாம் பிள்ளைகளின் கைகால் எல்லாம் இப்பவும் வீக்கம் வத்தேல்ல மனிசி பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கணநேரம் நிக்கமாட்டா அந்தளவுக்கு கைகால் வலி என்றான். கடந்த காலங்களில் போரின் அவலத்தாலும் இயற்கை அநர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின் யாழ்ப்பாணம் மனித அவலங்கள் நிறைந்த மண்ணாக மறிய நிலையில் இங்க வாழும் மக்களை புதிய வகையான நோயான சிக்குன்குனியா இன்று அம் மக்களை அழிக்கும் புதிய ஒரு எதிரியாக உருவெடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாழும் எமது மக்களை பெரிதும் பீடித்துள்ள இந்த நோயினால் பலர் இறந்துள்ளனர் இந்தநோய் பீடிப்பபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு வருடகாலம் வரை இந்நோய் தாக்கத்தின் விளைவுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். என மருத்துவர்கள் கூறுகின்றனா.; யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பாதை பூட்டப்பட்டவுடன் அங்கு நிலவிய உணவுத் தட்டுப்பாடும் மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாடும் இந்நோய் அதிகமாக பரவ காரணமாயிற்று ஏற்கனவே நீரிழிவு நோய்இ அஸ்மா போன்ற நிரந்தர வருத்தங்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிக்கன்குனியா காச்சல் வந்தால் அவர்கள் துரிதமாக இறந்து போகும் நிலை ஏற்பட்டது. யாழில் நிலவும் உணவுத்தட்டுப்பாட்டினால் முழு நிறைவுடைய போசாக்கான உணவுகளை மக்கள் உண்ணாததன் விளைவு நோய் எதிர்ப்பு சக்தியற்ற இழப்பு நிலை அவர்களுக்க எற்பட்டது.

நன்பனை நோக்கி இனி சந்தோஷம் தானே ஆறு மாதத்திற்கு பிறகு சந்திச்சிருக்கிறியள் என்றேன்

ஓமோம்……… பிறகு சொல்லுங்கோ என்ற மூத்தவள் துயககயெ ர்iனெர pசயiஅயசல யில் 1ம் வகுப்பு படிச்சவ இப்ப இங்கால வந்த பிறகு பிள்ளையளன்ற படிப்பு தொடராமல் போனால் கஷ்டம் தானே அதுதான் ஐவெநசயெவழையெட ளுஉhழழட இல் படிக்கவிடுவம் அதுதான் வந்தனான் யுனஅளைளழைn எடுக்கவேணும் என்றான் உங்கட வீட்டிற்கும் ஐவெநசயெவழையெட ளுஉhழழட க்கும் 10 கிலோ மீற்றர் தூரம் வருமே போக்குவரத்தெல்லாம் சாத்தியப்படுமா? என்றேன் பிள்ளைகளின் படிப்புக்கு என்ன சிரமம் பட்டாலும் பரவாயில்லை என்றான்.

ஒவ்வொரு பேற்றோரும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாழ்கிறார்கள் அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்திவிட வேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணிக்கிறார்கள்.

இன்றைய நவீன உலகின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம் அதனடிப்படையில் ஆங்கில மொழித் தேர்ச்சி என்பது தமிழர்களைப் பொறுத்தவரை கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில் சிறுவயது தொடக்கத்திலேயே பிள்ளைகளை ஆங்கிலம் கற்பிப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் அதற்காக கிளிநொச்சியில் ஒரு ஆங்கில ஆரம்ப பாடசாலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது இது இப்போர் மற்றும் தமிழ் மக்களின் இன்றைய வாழ் நிலையில் ஒரு முன்னேற்றமே ஆகும்.

பிள்ளையின் படிப்புச் சம்பந்தமான விடயங்களை கதைத்து முடித்துவிட்டு நண்பன் விடைபெற நான் எனது பணிக்குத் திரும்பினேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய போது என் அம்மாவின் வார்த்தைகள் எனக்கு திகைப்பூட்டின “தம்பி உன் சிநேகிதன் வாசனுக்கும் மனிசிக்கும் சண்டையாம்” மனிசி வீட்டை விட்டு வெளிக்கிட்டு மீனாவின் வீட்டில் நிக்கிறாளாம்

உன்ர அப்பாவும் என்னை எத்தனை தரம் அடித்திருக்கிறார் நான் எப்போதாவது வீட்டைவிட்டு வெளிக்கிட்டு இருக்கிறனா? இது அம்மாவின் கேள்வி.

முன்னைய காலத்தில் பெண்களுக்கு ‘படிதாண்டாப் பத்தினி’ என்று கௌரவம் கொடுத்தார்கள் ஆனால் இப்போது அப்படியல்ல காலம் மாறிவிட்டது. பெண்கள் தனித்தனியே படிப்புஇ உழைப்பு என வீட்டை விட்டு வெளியேறி தம்மை நிலை நாட்ட வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமூகச்சிக்கல்களை எதிர்கொண்டு வாழப் பழகிவிட்டனர் பெண்கள் மீது இன்று தினிக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து போராட்டக்களங்களிலும் குதித்துள்ளனர். இவர்களின் இன்றைய பெருமை கௌரவம் என்பது உலகத்தையே வியந்து பார்க்க வைக்கிறது. ஒரு அடிமைத்தனமான வாழ்க்கைக்குள் வாழாமல் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகவும் தற்துணிவாகவும் முடிவுகளை எடுக்கும் ஒரு முற்போக்காக்ளர்களாக பெண்கள் மாறி வருகின்றனர்.

எனது மோட்டார் சைக்கில் மீனாவின் வாசலில் நின்றது. தனது 10 மாதக் குழந்தையை கையில் சுமந்தபடி அழுது முடித்த முகத்துடன் வாசனின் மனைவி என் முன் நின்றாள்.

என்ன தங்கச்சி பிரச்சினை என வினாவினேன் பிள்ளைய பள்ளிக்கூடத்தில சேக்கிறதில வாக்குவாதம் ஏற்பட்டதாள அடிச்சிப் போட்டார். அதுதான் நான் வெளிகிட்டன். நான் யாழ்ப்பாணத்தில இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டனான் என்றது எனக்குத் தான் தெரியும் முகமாலைப் பாதை பூட்டின உடனே எல்லா இடமும் ஒரே ஊரடங்குச்சட்டம் ஒவ்வொரு நாளும் ஆமியின் ரவுண்டப் சாப்பாட்டுச் சாமான் எல்லாம் தட்டுப்பாடு இந்தக் கைக்குழந்தையோட சங்கக்கடைக்கு முன்னால வரிசையில காலம போய் நின்றால் பின்நேரம் தான் சாமான் வாங்கலாம் அதுவும் கிராம் கணக்கிலதான் அப்பிடி கஷ்டப்பட்டு நான் இந்த மூன்று பிள்ளைகளோடும் பட்டகஷ்டம் எனக்குத்தான் தெரியும். இந்த நேரத்திலதான் இவர்ர தம்பி அவனுடைய சிநேகிதன் வீட்ல நின்றவன் எங்கட வீட்டுக்கு வரமுடியாது அவன் இருந்தது உரும்பிராய் நாங்கள் இருந்தது சங்கானை இரண்டு இடத்துக்கும் மாறி மாறி ஊரடங்கச்சட்டம் போட்டதால இங்கிரந்தவர் அங்கேயும் அங்கே இருந்தவர் இங்கேயும் போக்கு வரத்து செய்ய முடியாத நிலை. இந்த நிலையில் தான் இவர்ர தம்பியும் சிநேகிதப் பொடியனும் மோட்டர் சைக்கில்ல போகேக்க ஆமிக்காரன் சுட்டு நாலு நாலுக்கு பிறகுதான் எங்களுக்குத் தெரியும். அதுவும் இவர்ர வெளிநாட்டில இருக்கிற தங்கச்சிக்கு தகவல் போய் அவர்கள் எங்களுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்லித் தான் நாங்கள் போய் யாழ்பாண ஆஸ்பத்திரியில அடையாளங்கண்டனாங்கள் அதுவும் ஆமியும் பொலிசும் நீதிமன்றத்துக்கு வரச்சொல்லி கடும் விசாரனைகளுக்கு மத்தியில செத்தவர் டுவுவுநு என்று கையெழுத்து வைச்சாத்தான் பொடியத் தருவம் என்று சொல்லி பெரிய கஷ்டப்படுத்தி 6.00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் 4.00 மணிக்கு பொடியத் தந்தான் இந்த 2.00 மணித்தியாள இடைவெளிக்குள்ள தான் வீட்டையும் கொண்டு போகாமல் அடக்கம் செய்தம் பெரிசா வெளியில சொல்லி அழவும் ஏலாது வீட்டுக்கு ஆக்கள் வரவும் ஏலாது பக்கத்தில ஆமி காம்ப் நாங்கள் எவ்வளவு நடுக்கத்தோட இருந்தம் என்றது எங்களக்கத் தான் தெரியும்.

யாழ்ப்பாணம் சிங்களப் படைகளாலும் துணை இராணுவக் குழுக்களாலும் மரணப் புதைகுழியாக்கப்பட்டுள்ளது எந்தவிதமான அரசியல் சார்போ ஆயத வாடையே அற்ற அப்பாவி இளைஞர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சுடப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடுத்த தமிழ் சந்ததியின் இன்றைய வித்துக்கள் துப்பாக்கி வாய்களால் சப்பித்துப்பப்படுகிறது அந்தத் தொடரில் வாசனின் தம்பியும் பலியாகிப் போனான் வாசனின் மனைவியைப் பொறுத்தவரை இந்த தமிழ் மக்களின் விடிவிற்காக தங்களை மாவீரர்களாக்கிய இரு அண்ணனின் தங்கை இவளின் ஒரு அண்ணன் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து நோய்வாய்ப்பட்டுள்ளான். இப்படியே எமது இளம் சமூகம் ஆயதப்படைகளின் அழிப்புகளுக்குள் சிக்கிப் போனால் எமது எதிர்காலம் என்னாவது?

எனது சிந்தனைகள் எல்லாம் தற்போது பிரிந்திருக்கின்ற கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதிலேய குறியாக இருந்தன. வாழ்க்கை என்பது முட்செடியில் பூத்திருக்கும் மென்மையான பூவைப் போன்றது. அதனை ஏடாகூடமாக கையாண்டால் கையில் இரத்தம் தான் மிஞ்சும். இன்று பெரும்பாலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே புரிதல் என்பது குறைந்து போவதால் பிரிதல் கூடுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புடன் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்காகவும் வாழும் நிலை அருகி வருகிறது. இதன் காரணமாக இன்று இளம் தம்பதிகளிடையே கசப்புணர்வு ஏற்பட்டு விவாகரத்துவரை செல்கிறது. ஆடிப்படையில் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவது பொருளாதாரம் தாம்பத்தியம் ஆகியவற்றில் ஏற்படுகின்ற குறைபாடுகளே தற்போது மூன்றாவது காரணியாக உருவெடுத்திருப்பது போர்க்காலச் சூழல்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர் மீது ஏவி விட்டிருக்கும் போரியல் நடவடிக்கையால் தமிழ் மக்களின் வாழ்வியல் அங்கங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு கேள்விகள் நிறைந்ததாக காணப்படுகிறது.

நன்றி

ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.