Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அதிருப்தியும் கூட்டமைப்பினரின் நிலைப்பாடும்

Featured Replies

தமிழ் மக்­களின் அதி­ருப்­தியும் கூட்­ட­மைப்­பி­னரின் நிலைப்­பாடும்

 

யுத்­தத்தில் பெரும்­பா­திப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வ­தனால் பாதிக்­கப்­பட்ட அந்த மக்கள் தற்­போது வெறுப்­ப­டைந்­துள்­ளனர். தமது பிர­தி­நி­தி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் கருத்­துக்­களை கூறும் நிலையும் அவர்­க­ளது கொடும்­பா­வி­களை எரிக்கும் சூழ்­நி­லையும் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது.

பொறுத்துப் பொறுத்து பார்த்த பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறு­மை­யி­ழந்து போராட்­டங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளிலும் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர். கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வட­மா­காண சபை தேர்தல் உட்­பட சகல தேர்­தல்­க­ளிலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். தமது பிர­தி­நி­தி­க­ளாக அவர்­க­ளையே தெரி­வு­செய்­தி­ருந்­தனர்.

இந்த தேர்தல் காலங்­களின் போது தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வைக் காண நட­வ­டிக்கை எடுப்போம் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் சார்பில் உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­னரும் இத்­த­கைய உறு­தி­மொ­ழிகள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதேபோல் பாரா­ளு­மன்றத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்றும் உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டது.

இத்­த­கைய உறு­தி­மொ­ழி­களை நம்பி தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­ப­டு­மென எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்கை இழந்த நிலையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு எதி­ரா­கவே செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். கடந்­த­மாதம் காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் வவு­னி­யாவில் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். ஐந்து நாட்­க­ளாக தொடர்ந்த இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை அடுத்து பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்து போராட்­டத்தில் ஈடு­பட்ட மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி உறு­தி­மொழி வழங்­கி­ய­தை­ய­டுத்து இந்தப் போராட்டம் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

பெப்­ர­வ­ரி­மாதம் 9 ஆம்­தி­கதி அதா­வது நேற்று முன்­தினம் அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­தித்து காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்­பிலும் அர­சியல் விடயம் குறித்தும் பேச்சு நடத்தி ஒரு தீர்வைக் காண்­பது என்று முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதற்­கி­ணங்க காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் நேற்று முன்­தினம் அல­ர­ிமா­ளி­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர். இவர்­களை அமைச்­சர்­க­ளான விஜ­ய­தாச ராஜ­பக் ஷ, சாகல ரட்­னா­யக்க, டி.எம். சுவா­மி­நாதன், ருவான் விஜ­ய­வர்த்­தன ஆகியோர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இந்த சந்­திப்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் எம்.பி.யுமான எம். ஏ. சுமந்­திரன், பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதித் தலை­வரும் வன்னி மாவட்ட எம்.பி. யுமான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி. ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அர­சாங்­கத்­த­ரப்­பி­னரின் கோரிக்­கையை அடுத்து கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த சந்­திப்பில் பங்­கேற்­றனர். ஆனால், சந்­திப்பில் கலந்து கொண்ட காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் தமது கலந்­து­ரை­யாடலின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் பங்­கேற்­கக்­கூடாது என்றும் அவர்­களை வெளி­யே­று­மாறும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி. க்கள் சந்­திப்பில் இருந்து வெளி­யே­றா­விட்டால் தாம் வெளி­யே­றுவோம் என்றும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் எச்­ச­ரித்­தி­ருக்­கின்­றனர். இதனை அடுத்து கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அந்த சந்­திப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருக்­கின்­றனர்.

இவ்­வாறு வெளி­யே­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சார்பில் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்­திரன் இவ்­வி­டயம் தொடர்பில் அறிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்தார். அந்த அறிக்­கையில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­க­ளுக்கும் அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற சந்­திப்பை நாமே புறக்­க­ணித்தோம். இறுதி யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் காணா­மல்­போ­யுள்ள நிலை­யிலும் பலர் அர­சியல் கைதி­க­ளாக தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அவர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாது ஒரு சிலரின் தூண்­டு­தலின் பேரில் குறிப்­பிட்ட சில காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் மாத்­திரம் அமைச்­சர்­களை சந்­திப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். அரச தரப்­புடன் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்கும் போது காணாமல் போனோர் அனை­வரின் சார்­பிலும் சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயி­ருப்­பதால் அது குறித்து பேச­வேண்­டி­யுள்­ளது. இத­னை­வி­டுத்து தனிப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னை­களைப் பேசி அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கள­மாக இந்த சந்­திப்­புக்­களை பயன்­ப­டுத்த முடி­யாது. குறித்த சந்­திப்பில் அவ்­வா­றான நிலை இருந்­த­மை­யி­னால்தான் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் இந்த சந்­திப்­பி­லி­ருந்து வெளி­யேற தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சுமந்­திரன் எம்.பி. இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்ள நிலையில் சந்­திப்பில் கலந்­து­கொண்ட காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் சந்­திப்பை அடுத்து செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்­தி­யி­ருந்­தனர். அந்த மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர்கள் காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மக்­களின் நிலைப்­பாட்­டினை அர­சாங்­கத்­திடம் எடுத்­து­ரைக்­க­வில்லை. அதனால் மக்­களின் கோரிக்­கைக்கும் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டுகள் உள்­ளன. இத­னால்தான் சந்­திப்­பி­லி­ருந்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களை வெளி­யே­று­மாறு நாம் கோரி­யி­ருந்தோம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இதி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட மக்­களின் மன­நிலை எவ்­வா­றா­ன­தாக அமைந்­துள்­ளது என்­பதை உணர்ந்­து­கொள்ள முடி­கின்­றது. காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் தமது உற­வு­களைத் தேடி களைப்­படைந்த நிலையில் அவர்­க­ளுக்கு என்ன ஆனது என்­ப­தை­யா­வது அறி­ய­வேண்டும் என்­ப­தற்­காக துடி­து­டித்து வரு­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் தமது பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்­லையே என்ற ஆதங்கம் இந்த மக்கள் மத்­தி­யில் ­கா­ணப்­ப­டு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கமும் தமது பிரச்­சினை குறித்து உரிய அக்­கறை காட்­ட­வில்­லை­யென்றும் அதற்­கான அழுத்­தங்­களை தமது பிர­தி­நி­தி­க­ளான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் கொடுக்­க­வில்லை என்­பது குறித்தும் மக்கள் கடும் அதி­ருப்தி கொண்­டுள்­ளனர்.

இதன் வெளிப்­பா­டா­கத்தான் காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் கடந்த மாதம் வவு­னி­யாவில் நடத்­திய கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தின் போது கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனின் உருவப் படத்­தினை எரித்­தி­ருந்­தனர். தற்­போது அர­சாங்க அமைச்­சர்­க­ளுடன் நடை­பெற்ற சந்­திப்­பி­லி­ருந்து கூட்­ட­மைப்பு எம்.பி. க்களை வெளி­யே­று­மாறு அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

எனவே, பாதிக்­கப்­பட்ட மக்­களின் மன நிலையை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மையும் அர­சாங்­கமும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். தற்­போது கூட தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கேப்­பாப்­பு­ல­விலும் புதுக்­கு­டி­யி­ருப்­பிலும் மக்கள் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

இந்த காணி விடு­விப்பு விவ­காரம் தொடர்பில் நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ. சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆகியோர் சந்­தித்துப் பேசி­யி­ருந்­தனர். இந்தக் கலந்­து­ரை­யா­டலில் புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியைச் சேர்ந்த ஐந்து பொது­மக்­களும் பங்­கேற்­றனர்.

இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் சகல தரப்பினரும் பேசி உரிய தீர்வினைக் காண்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளதுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவை போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சென்று சந்தித்து பிரச்சினைகளை கேட்டறியுமாறு பணித்திருக்கிறார்.

பிரதமருடனான இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் பிரதிநிதிகளுக்கும் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் எவரும் இதில் கலந்துகொண்டிருக்கவில்லை. உண்மையிலேயே அரசாங்கமானது தமது பிரச்சினைகளை தீர்க்கமாட்டாது என்ற எண்ணம் தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்றது. இதனால்தான் அரசாங்கத்தையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையையும் எதிர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கமானது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அக்கறை செலுத்த வேண்டுமெனக் கோருகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.