Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 
தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?
 
தர்மசாலா:

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

716F977A-15E8-4082-A1A2-CDB52F34B56D_L_s

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும். ‘டிரா’ வில் முடிந்தால் தொடர் சமநிலை பெறும்.

தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது. முதல் 2 டெஸ்டும் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது.

ராஞ்சி ‘பிட்ச்‘ பேட்டிங்குக்கு அதிகமான சாதக நிலையில் இருந்தது. ஆனாலும் பந்துவீச்சுக்கு சிறிது ஏற்ற வகையில் இருந்தது. அஸ்வினின் பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை.

தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும். இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் சுனில் சவுகான் கூறியதாவது:-

672E6A20-C55C-41CA-9309-71837ED9F458_L_s

முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும். ரஞ்சி டிராபி போட்டியில் வேகப்பந்து வீச்சை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். அதே நிலையில் தான் டெஸ்ட் போட்டியிலும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தர்மசாலா மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டி மற்றும் எட்டு 20 ஓவர் ஆட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/22124707/1075298/Will-support-dharamsala-pitch-for-India-test-team.vpf

  • Replies 136
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபருடன் ஒப்பீடு: விராட் கோலி புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கிளார்க் குற்றச்சாட்டு

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் குற்றம்சாட்டி உள்ளார். அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

 
 
 
 
அமெரிக்க அதிபருடன் ஒப்பீடு: விராட் கோலி புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கிளார்க் குற்றச்சாட்டு
 
புதுடெல்லி:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம், சிலெட்ஜிங் ஆகியவை, போட்டியை விட பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை இந்திய அணி கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தது.

கோலி உலக விளையாட்டில் டிரம்பாக மாறி விட்டார் என்று செய்தி வெளியிட்டது. டிரம்பை போன்று கோலியும் தனது செயல்களை மூடி மறைக்க மீடியாக்களை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

862AC833-FD00-40AE-A0E1-8235B3A5A527_L_s

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கோலியை ஒப்பிடுவது தவறானது. ஸ்டீவன் சுமித்தை விட கோலி என்ன செய்துவிட்டார். எதையும் மனதில் வைத்து பேச வேண்டும்.

விராட் கோலியை எனக்கு பிடிக்கும். ஆஸ்திரேலிய மக்களும் அவரை நேசிக்கிறார்கள். அவர் சவால்களை ஏற்றுக் கொண்டு செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு அல்லது மூன்று ஆஸ்திரேலிய நிருபர்கள் விராட் கோலியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் இதுபற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. இதேபோல ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதுவதை சுமித்தும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

2005-ல் ஆசஷ் டெஸ்ட் தொடரின்போது ஒவ்வொரு டெஸ்டும் வீரர்களுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலை இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே இரு அணி வீரர்களும் நட்புடன் இருந்தோம். தற்போதைய டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் அவ்வாறு முடிவு செய்கிறது.

விராட் கோலி ஒரு கடினமான வீரர். நம்பர் ஒன் வீரராக இருக்க வேண்டுமானால் அதுபோன்றுதான் இருக்க முடியும். தர்மசாலாவில் அவர் சதத்துடன் மிகப்பெரிய ரன் குவித்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும்.

விராட் கோலி ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்யும் போது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா போட்டியிலும் அவர் சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

97DC12F3-211D-4FC3-ABA6-F69C9DCAD05C_L_s

தர்மசாலாவில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். ‘டாஸ்’ வெல்லும் அணி வெற்றி பெறும் என்று கருதுகிறேன்.

மைதானம் ஈரப்பதம் காணப்பட்டால் இந்திய அணி சிரமத்தை சந்திக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 முதல் 450 ரன்களை குவிக்க முடியும்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/23105537/1075482/Michael-Clarke-Defends-Virat-Kohli-Says-Australian.vpf

  • தொடங்கியவர்

தரம்சலா பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகம்

 
கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
 
 

தரம்சலாவில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று பிட்ச் தயாரிப்பாளர் சுனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

“பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகள் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆனது போல் மிகுதியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் என்று கூற முடியாது, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பந்துகள் ஸ்விங் ஆகும்.

5 நாட்கள் ஆட்டம் நீடிக்குமாறு உண்மையான ஆட்டக்களத்தை தயாரிப்பதே நோக்கம். அனைவருக்கும் இந்தப் பிட்சில் சாதக அம்சங்கள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் இருக்கும். கடைசி 2 நாட்கள் ஸ்பின்னர்களுக்கு உதவிபுரிய வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் போல் அல்லாமல் எட்ஜ் எடுத்தால் பந்து ஸ்லிப் பீல்டர் கைக்கு சவுகரியமான உயரத்தில் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆஸ்திரேலிய அணி ஓகீஃபுக்குப் பதிலாக ஜேக்சன் பேர்ட் விளையாட வாய்ப்புள்ளது, இதனால் ஹேசில்வுட், பேட் கமின்ஸ், ஜேக்சன் பேர்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பு, அதே போல் இந்திய அணியில் மீண்டும் உடல்தகுதி பெற்ற மொகமது ஷமி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கருண் நாயரை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டால் ஒருவேளை இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக மொகமது ஷமி ஆட வாய்ப்புள்ளது.

மேலும் புவனேஷ் குமாரை அணியில் சேர்ப்பதும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/தரம்சலா-பிட்ச்-வேகப்பந்து-வீச்சுக்குச்-சாதகம்/article9597892.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்ப்பு: தரம்சாலாவில் கோலி விளையாடுவாரா?

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இதனால் தரம்சாலா டெஸ்டில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

 
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்ப்பு: தரம்சாலாவில் கோலி விளையாடுவாரா?
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.

போட்டியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தெரிகிறது.

FA45E04D-DC35-4F85-9C38-39112CAF149F_L_s

இதை உறுதிப்படுத்தும் வகையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி ஈடுபடவில்லை. உடற்தகுதி இருந்தால் மட்டுமே அணியில் விளையாட முடியும். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தரம்சாலாவிற்கு நாளை விரைகிறார்.

இதனால் விராட் கோலி தரம்சாலா போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிய வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/23204631/1075624/Shreyas-Iyer-has-been-included-in-the-Indian-squad.vpf

  • தொடங்கியவர்

தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள்

தரம்சாலாவில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்டில் விளையாட சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தலாய்லாமாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

 
 
 
 
தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்கான இரண்டு அணி வீரர்களும் அங்கு சென்றுள்னர். இதற்காக நேற்றும் இன்றும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

F759AB5B-F61B-40E7-84DB-E72DACA6958D_L_s

திபெத் புத்த மத குருவான தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவர் தரம்சாலாவில் தங்கியுள்ளார்.

43FAFF38-1A38-4720-9F7E-0F2E7E1175C4_L_s

அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் அவருடைய மடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தலாய் லாமா ஆசி வழங்கினார்.

F2DAB603-A17B-4990-8F07-FB61F91D265F_L_s

அத்துடன் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய கையெழுத்து அடங்கிய டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சியை தலாய் லாமாவிடம் வழங்கினார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/24165047/1075792/Steven-Smith-Has-a-Peace-Session-With-The-Dalai-Lama.vpf

  • தொடங்கியவர்

நான் நிம்மதியாக உறங்க தலாய் லாமாவின் ஆசீர்வாதம் உதவும்: ஆஸி. கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சி

 
தரம்சலாவில் திபெத்திய பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்த ஆஸி. அணியின் கேப்டன் ஸ்மித், திபெத்திய கலாச்சாரத்தின் படி ஒருவர் மூக்கை ஒருவர் உரசிக்கொள்ளும் காட்சி. | படம். ஏ.பி.
தரம்சலாவில் திபெத்திய பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்த ஆஸி. அணியின் கேப்டன் ஸ்மித், திபெத்திய கலாச்சாரத்தின் படி ஒருவர் மூக்கை ஒருவர் உரசிக்கொள்ளும் காட்சி. | படம். ஏ.பி.
 
 

தரம்சலாவில் உள்ள ஆஸ்திரேலிய அணியினர் அங்குள்ள மெக்லியாட் கஞ்சில் திபெத் பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

அமைதி, சமாதானத்தின் ஊற்றுக்கண்ணான தலாய் லாமாவை சந்தித்ததை ஆஸ்திரேலிய அணியினர் பெரும்பேறாக கருதுகின்றனர்.

மேலும் தலாய் லாமாவிடம் கேப்டன் ஸ்மித், உயர் அழுத்த டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் நிம்மதியாக உறங்குவது எப்படி என்று அறிவுரை கேட்டார்.

சந்திப்பு பற்றி ஸ்மித் கூறும்போது, “இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியான உறக்கம் பற்றியும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேன், அவர் என்னை ஆசீர்வதித்தார்.

திபெத் கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார், இது எனக்கு அடுத்த 5 நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

ஏற்கெனவே 2013-ல் இங்கிலாந்து தொடரின் போது தலாய்லாமாவை ஆஸ்திரேலிய அணியினர் சந்திக்க முயன்றனர் ஆனால் அப்போது முடியவில்லை.

இந்நிலையில் தலாய் லாமா சந்திப்பு அணிக்கு எப்படி உதவும் என்று கூறிய ஸ்மித், “இன்னும் கொஞ்சம் நிம்மதியாக ரிலாக்ஸ் செய்வோம், அவர் கருணை மிக்கவர், ஒவ்வொரு மனிதரையும் நேசிப்பவர். அவரைப்போன்ற ஒருவரிடம் ஆசி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்கள் அனைவருக்குமே இது ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது, அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் என்றால், கடினமான கிரிக்கெட் ஆட்டத்தில் நாங்கள் சில வேளைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படுபவர்களாக மாறிவிடுவது தடுக்கப்படலாம். ஏனெனில் கடைசியில் இது ஒரு விளையாட்டு மட்டுமே என்பதை நாங்கள் உணர வேண்டிய தேவை உள்ளது” இவ்வாறு கூறினார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/நான்-நிம்மதியாக-உறங்க-தலாய்-லாமாவின்-ஆசீர்வாதம்-உதவும்-ஆஸி-கேப்டன்-ஸ்மித்-நெகிழ்ச்சி/article9600257.ece

  • தொடங்கியவர்

தரம்சாலா டெஸ்டில் மொகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

தரம்சாலா டெஸ்டிற்கான இந்திய அணயில் மொகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 
தரம்சாலா டெஸ்டில் மொகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது. காயம் காரணமாக விராட் கோலி களம் இறங்குவது சந்தேகம் என்பதால், ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக தரம்சாலா அழைக்கப்பட்டார்.

மும்பையில் இருந்து கிளம்பிய அவர் இன்று காலை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், காயத்தில் இருந்து மீண்டுள்ள மொகமது ஷமியும் தரம்சாலா சென்றிருந்தார்.

689BA45C-8FC8-445C-AF86-DF92660B2810_L_s

தற்போது அவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பி.சி.சி.ஐ, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்திய சீனியர் அணியின் குழு இன்று காலை கூடியது. அப்போது மொகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற இருக்கும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

ஷமி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/24215403/1075841/Mohammed-Shami-Shreyas-Iyer-included-in-Indian-squad.vpf

  • தொடங்கியவர்

கோலி இல்லை... ரஹானே கேப்டன்... ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Rahane

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் இன்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து கோலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  கோலிக்கு பதிலாக அறிமுக வீரர் குல்தீப் யாதவ் களமிறங்குகிறார். மேலும், இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ராஞ்சி டெஸ்ட்டில் களமிறங்கிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. சற்று முன் வரை அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வார்னர் 23 ரன்னிலும், ஸ்மித் 29 ரன்னுலும் களத்தில் உள்ளனர். துவக்க ஆட்டக்காரர் ரென்ஷாவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

http://www.vikatan.com/news/sports/84538-australia-won-the-toss-choose-to-bat-vs-india.html

  • தொடங்கியவர்
Australia 192/5 (53.0 ov)
India
  • தொடங்கியவர்

சக வீரர்களுக்காக குளிர்பானம் ஏந்தி வந்த விராட் கோலி!

 

 

போட்டி இடைவேளையின்போது சக அணி வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்துச் சென்ற விராட் கோலியின் செயலை இலட்சக்கணக்கானோர் பாராட்டிவருகின்றனர்.

3_V_Kohli_Drinks.jpg

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. ஏற்கனவே இடம்பெற்ற மூன்று போட்டிகளுள் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதனால், தற்போது நடைபெற்று வரும் போட்டி தொடரை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது. போட்டியின் முதல் நாளான இன்று, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

மூன்றாவது போட்டியின்போது தோள் உபாதைக்குள்ளான அணித் தலைவர் விராட் கோலி, போதிய உடல் தகுதி பெறாததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. என்றாலும், அவர் செய்த ஒரு சிறு செயல், போட்டியில் விளையாடியதற்கு இணையாக இலட்சக்கணக்கானோரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆட்டத்தின் முதல் பாதியில் குளிர்பான இடைவேளை அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் சற்றும் எதிர்பார்த்திராத வகையில், குளிர்பானங்களைக் கையில் ஏந்தியபடியே களத்தினுள் நுழைந்தார் விராட் கோலி. பன்னிரண்டாவது ஆட்டக்காரர்களே செய்யும் இந்தப் பணியை, அதற்குரிய ஆடை விதிமுறைகளுடன் கோலி மேற்கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

கைகளில் குளிர்பானத்துடன் கோலி நுழைவதைக் கண்ட ரசிகர்கள் மைதானமே அதிரும் வகையில் கூக்குரலிட்டு தமது குதூகலத்தை வெளிப்படுத்தினர். களத்தில் இருந்த வீரர்கள் கூட கோலியின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தக் காட்சியைக் கண்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான பிரெட் லீ, “உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த குளிர்பானப் பையன் (Drinks Boy) கோலியாகத்தான் இருக்கவேண்டும்” என்று நகைச்சுவையாக வர்ணித்தார்.

இந்தச் செய்தி சமூக வலைதளத்தில் ஒரு சில நிமிடங்களில் இலட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. இன்னும் வேக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. என்ன நடந்தபோதும் கோலியை களத்தை விட்டு விலக்கிவிட முடியாது என்று அவரது இரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/18262

  • தொடங்கியவர்

தரம்சாலா டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

 

தரம்சாலா டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

 
 
தரம்சாலா டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக குல்தீப் யாதவும், இசாந்த் சர்மாவிற்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டனர். குல்தீப் யாதவிற்கு இது அறிமுக போட்டியாகும்.

முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை வார்னர் சந்தித்தார். வார்னர் அடித்த முதல் பந்து 3-வது ஸ்லிப் திசையை நோக்கி பறந்தது. இதை கருண் நாயர் பிடிக்க தவறினார். இதனால் இந்தியா முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது.

ஆனால் 2-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரென்ஷா க்ளீன் போல்டானார். அவர் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

7078B66E-E836-4491-8A12-B6B700ACF4BE_L_s
உமேஷ் யாதவ் பந்தில் ரென்ஷா போல்டாகிய காட்சி

அதன்பின் வார்னர் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கேப்டன் ஸ்மித் அதிரடியாக விளையாடினார். இதனால் ரன்ரேட் 4-க்கு மேல் இருந்தது. இருவரும் மதிய உணவு இடைவேளைக்குள் அரைசதம் அடித்தனர்.

இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. வார்னர் 54 ரன்னுடனும், ஸ்மித் 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

C4E9C4AE-C2CE-4DED-A035-99D396242E4B_L_s

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மார்ஷ் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

05F8DCA7-6B1F-49B6-AECC-C15FB34D3477_L_s
குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த ஹேண்ட்ஸ்காம்ப்

ஹேண்ட்ஸ்காம்ப் (8), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுத்தார் குல்தீப். மறுமுனையில் ஸ்மித் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.

A081F249-248E-4201-8B3C-E0A8D5DCDF39_L_s

7-வது விக்கெட்டுக்கு வடே உடன் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 37 ரன்கள் சேர்த்தது. கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீ்ப் பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஓ'கீபே 8 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் வடே நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300-ஐ நெருங்கியது. ஆஸ்திரேலியா 298 ரன்கள் எடுத்திருக்கும்போது வடே 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார்.

3DB94131-C3F3-4035-842B-421643F11310_L_s
அரைசதம் அடித்த வடே

கடைசி விக்கெட்டுக்கு லயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். 88-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 300 ரன்னைத் தொட்டது. 89-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லயன் அவுட்டாக ஆஸ்திரேலியா சரியாக 300 ரன்னில் முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.

4A90E8C3-64C0-418D-ADF0-D4088AE09A9F_L_s

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் இருந்ததால் இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 1 ஓவர் விளையாட வேண்டியிருந்தது. லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
  • தொடங்கியவர்

தரம்சாலாவில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்த ஸ்மித்

தரம்சாலாவில் 20-வது சதத்தை பதிவு செய்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

 
தரம்சாலாவில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்த ஸ்மித்
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது அவருக்கு 20-வது சதம் ஆகும். இந்த சதம் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் ஸ்டீவன் ஸ்மித்.

1. இந்தியாவில் ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகளவில் 2-வது வீரராவார். இதற்கு முன் 2012-13 சீசனில் இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

2. அதேபோல் இந்திய மண்ணில் ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த 2-வது கேப்டன் ஸ்மித். இதற்கு முன் அலைஸ்டர் குக் கேப்டனாக இருக்கும்போதுதான் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

3. 99 இன்னிங்சில் 20 சதங்களை விளாசியுள்ளார். இதற்கு முன் டான் பிராட்மேன் மட்டும்தான் 20 சதத்தை 55 இன்னிங்சில் கடந்திருந்தார். சுனில் கவாஸ்கர் மற்றும் ஹெய்டன் ஆகியோர் 95 இன்னிங்சில் அடித்திருந்தனர்.

8821C850-B3D9-4404-97F9-94A15FE4A99B_L_s

4. இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் 8 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

5. 19 இன்னிங்சில் இந்தியாவிற்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் எவர்டன் வீக்ஸ் 14 இன்னிங்சில் 7 சதங்கள் அடித்துள்ளார். இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாட்டிற்கும் எதிராக ஸ்மித் ஐந்து சதங்களுக்கு மேல் அடித்தது கிடையாது.

6. இந்த சீசனில் வெளிநாட்டு கேப்டன்களில் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக், வங்காள தேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இந்திய மண்ணில் சதம் அடித்திருந்தனர். தற்போது ஸ்மித் 3 சதங்கள் அடித்துள்ளார்.

7. இந்த தொடரில் புது மைதானமாக அறிமுகமான மூன்றிலும் (புனே, ராஞ்சி, தரம்சாலா) ஸ்மித் சதத்தை பதிவு செய்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/25165049/1075991/Steven-Smith-joins-elite-performers-in-India.vpf

  • தொடங்கியவர்

யாருப்பா இந்த சைனா-மேன்... ஆஸ்திரேலியாவை மிரள வைத்த குல்தீப் யாதவ்...!

குல்தீப் யாதவ்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அறிமுகமான குல்தீப் யாதவ், முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். குல்தீப் வீசும் பந்துவீச்சு ஸ்டைல்  'சைனா-மேன்' டெலிவரி என்று கூறுப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரபலமான பல முன்னோடி இடது கை பந்துவீச்சாளர்கள், ஆஃப்-ஸ்பின் முறையை கையாண்டாலும் ரைட்டு-ஹேண்டு பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் வீசும் பந்து லெக்-ஸ்பின்னாகத்தான் டெலிவரியாகும்.

ஆனால், இடது-கை பவுலரான குல்தீப் யாதவ், லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுகிறார். இதைப் போல் இடது-கை பவுலர்கள் அறிதினும் அறிதாகத்தான் லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுவார்கள். 

'சைனா-மேன்' சொல்லை பயன்படுத்துபவருக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியவர் எல்லீஸ் ஏகான்ங் ( Ellis Achong) சீன வம்சாவளியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் நபர். இவர், லெக்-ஸ்பின் வீசும் இடது-கை பந்துவீச்சளராக இருந்தார். இவர் பந்துவீச்சுக்குப் பிறகே, 'சைனா-மேன்' சொல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டது. எனவே, சைனா-மேன் என்பது குல்தீப் யாதவை குறிப்பிடும் பெயர் அல்ல. அது, அவர் பந்து வீசும் டெலிவரியைக் குறிப்பிடும் பெயர்.  

http://www.vikatan.com/news/sports/84568-what-is-chinaman-delivery.html

  • தொடங்கியவர்
Australia 300
India 68/1 (28.4 ov)
India trail by 232 runs with 9 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, நிதானமாக ஆடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா நிதானமாக ஆடி வருகிறது.

Pujara

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்திருந்தார். 

இதையடுத்து இரண்டாம் நாளில், இந்தியா நிதானமாக ஆடி வருகிறது. சிறப்பாக, விளையாடிய ராகுல் அரை சதம் அடித்தார். ராகுல் 60, விஜய் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேபோல், புஜாராவும் அரை சதம் அடித்தார். புஜாரா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.  சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்ஸில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 147 ரன்கள் பின் தங்கியுள்ளது. அந்த அணியின் ஹேசில்வுட் மற்றும் கமின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

Australia 300
India 221/5 (82.0 ov)
India trail by 79 runs with 5 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்

தரம்சாலா டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248/6

தரம்சாலா டெஸ்டில் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல், புஜாரா அரைசதம் அடித்தனர்.

 
 
தரம்சாலா டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248/6
 
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டுமே விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சால் இருவரையும் மிரட்டினார்கள்.

ஸ்விங், சீம், பவுன்ஸ் என தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்கள். இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். ராகுல், புஜாரா ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்திய அணி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. ராகுல் 31 ரன்னுடனும், புஜாரா 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், இருவரும் ரன்குவிக்க தொடங்கினார்கள். லோகேஷ் ராகுல் 98 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய லோகேஷ் ராகுல் 60 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அப்போது இந்தியா 40.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. புஜாரா 132 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய தேனீர் இடைவேளை வரை வி்க்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 60 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 53 ரன்னுடனும், ரகானே 19 ரன்னுடனும் களத்தில் இருந்தது. முதல் இரண்டு செசனிலும் இந்தியா இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது.

B1972D8F-9E8E-4463-9905-0577F1E4579E_L_s

தேனீர் இடைவேளை முடிந்தபின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா கைக்குச் சென்றது. புஜாரா (57), கருண் நாயர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 49 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரகானே 46 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்தியா 221 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் நான்கு முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. தேனீர் இடைவேளைக்குப் பின் 68 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

7-வது விக்கெட்டுக்கு சகாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சகா 10 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா ஆஸ்திரேலியாவை விட 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளை 3-வது நாள் ஆட்டத்தில் சகா - ஜடேஜா ஜோடி 300 ரன்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினால், இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/26172016/1076142/Dharamsala-Test-2nd-day-stumps-india-248-for-six.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் போட்டிகளுக்காக கடைசி டெஸ்ட்டில் ஆட மறுத்தாரா கோலி?

Brad hodge

இந்திய கேப்டன் விராட் கோலி, இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையில் தர்மசாலாவில் நடக்கும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ப்ராட் ஹாட்ஜ், விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியை தவிர்த்தது ஐ.பி.எல் போட்டிக்காகவா என்று கேள்வியெழுப்பும் தொனியில் பேசியுள்ளார்.

இது குறித்து ப்ராட் ஹாட்ஜ், 'இதைப் போன்று ஐ.பி.எல் போட்டிகளுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்த சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். விராட் கோலியைப் பொறுத்த வரையில், ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு மிக அதிகமான பணம் கொடுக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 5-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கிறது. 

http://www.vikatan.com/news/sports/84628-brad-hodge-questions-kohlis-absence-in-fourth-test.html

  • தொடங்கியவர்

#Cricketupdates: 332 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்

cricket

தர்மசாலாவில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணி எதிரான 4-வது டெஸ்ட் போட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியாவை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில், ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புவனேஷ்வர் குமார் (0), குல்தீப் யாதவ் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். உமேஷ் யாதவ்  2 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து, களத்தில் இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களான லோகேஷ் ராகுல் மற்றும் செதேஷ்வர் புஜாரா, அரை சதம் விளாசியிருந்தனர். நதன் லயன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இதுவரை நடந்த போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒன்றில் வெற்றிபெற்றுள்ளதால், தொடரின் முடிவை நிர்ணயிக்கும் போட்டியாக இது மாறியுள்ளது. எனவே, தங்களுக்கு சாதகமான முடிவுக்காக இரு அணிகளும் முழு பலத்தைப் பிரயோகிக்கும் என்று தெரிகிறது.

  • தொடங்கியவர்

ஜடேஜாவின் அபார அரைசதத்துடன் இந்திய அணி 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு

 

 
4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அரைசதம் கண்ட ஜடேஜா. | படம். | ஏ.பி.
4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அரைசதம் கண்ட ஜடேஜா. | படம். | ஏ.பி.
 
 

தரம்சலா டெஸ்ட் போட்டியில் மேலும் விறுவிறுப்பு கூடியுள்ள நிலையில் 3-ம் நாளான இன்று இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரவீந்திர ஜடேஜா, பகைமையான, ஆக்ரோஷ பந்து வீச்சுக்கு எதிராக 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 95 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, சஹா (31) உடன் இணைந்து இருவரும் 96 ரன்களைச் சேர்த்தது இந்திய அணிக்குப் பலம் சேர்த்துள்ளது.

இன்று ஜடேஜா மிகவும் சவாலான ஹேசில்வுட், கமின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள நேரிட்டது, ஷார்ட் பிட்ச் பந்துகள் பிறகு புல் லெந்த் என்று அவர்கள் வீச கமினிஸ் பந்தில் சுமார் 4 முறை இன்ஸ்விங்கரில் உள்விளிம்பில் பட்டதால் தப்பித்தார், இருமுறை இன்ஸ்விங்கர் திசை ஸ்டம்புக்கு வெளியே இருந்ததால் அவர் எல்.பி.ஆகவில்லை. ஒருமுறை லயன் பந்தில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பைக் கடந்த் பவுண்டரி சென்றது.

சஹா மிகவும் கட்டுக்கோப்புடன் ஆடினார், ஜடேஜா கமின்சை ஒரே ஓவரில் தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரி என்றும் ஒரு ஹூக் ஷாட்டில் டாப் எட்ஜ் சிஸ்க் ஒன்றையும் எடுத்து அசத்தினார். முன்னதாக லாங் ஆனில் லயனை சிக்ஸ் தூக்கினார்.

அவரை ஆஸி.வீரர்கள், பவுலர்கள் கேலி கிண்டல் செய்தனர், ஆனால் அவர் புன்னகையுடன் ஆட்டத்தை ஆடி அரைசதம் எடுத்து மட்டையை வாள்போல் சுழற்றினார்.

ஆனால் தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளினால் ஜடேஜாவின் ஹெல்மெட்டைத் தாக்கினார் கமின்ஸ், அந்த ஓவரில்தான் கமின்ஸை அவர் சிக்சர், பவுண்டரி அடித்தார். ஆனால் கமின்ஸின் அடுத்த ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்நோக்கிய ஜடேஜாவுக்கு ஏமாற்றும் வெளியே செல்லும் பந்து ஒன்றை வீசினார் கமின்ஸ் அதைத் தொட்டார், கெட்டார் ஜடேஜா. காரணம் கால்களை நகர்த்தவில்லை, டிரைவ ஆட நினைத்து எட்ஜ் ஆகி பவுல்டு ஆனது. அருமையான இன்னிங்ஸ் ஜடேஜாவுடையது.

ஜடேஜாவின் 7 அரைசதங்கலில் 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்றுள்ளது ஒன்று டிரா ஆகியுள்ளது, இப்போது என்ன ஆகிறது என்று பார்க்கவேண்டும்.

சஹா, ஸ்மித்தின் அபார கேட்சிற்கு இரையானார். 31 ரன்கள் எடுத்த அவர் கமின்ஸின் அராஜகான முகத்தை குறிவைத்த பவுன்சரை ஆடாமல் விட என்னவோ செய்தார் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு 2-ம் ஸ்லிப் தலைக்கு மேல் செல்ல ஸ்மித் பின்னால் சென்று பாய்ந்து ஒரு கையால் பிடிக்க முயல அது நழுவப் பார்த்தது. ஆனால் விடுவாரா ஸ்மித், அருமையான கேட்ச், சஹா அவுட். குல்தீப் யாத 7 ரன்களுக்கு லயன் பந்தில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 2 ரன்கள் நாட் அவுட். இந்தியா 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

ஆஸி. அணியில் நேதன் லயன் 5 விக்கெட்டுகளையும் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ஜடேஜாவின்-அபார-அரைசதத்துடன்-இந்திய-அணி-332-ரன்கள்-எடுத்து-ஆட்டமிழப்பு/article9602197.ece?homepage=true

  • தொடங்கியவர்
Australia 300 & 32/3 (9.3 ov)
India 332
Australia lead by 0 runs with 7 wickets remaining
  • தொடங்கியவர்

ஜடேஜா அரை சதமெடுத்த டெஸ்டுகளின் முடிவு என்ன தெரியுமா?

 

 
jadejaxx

 

தர்மசாலா டெஸ்டில் இந்திய அணி ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

அவர்களுக்கு ஒரு நற்செய்தி.

இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அசத்தலாக அரை சதம் எடுத்துள்ளார். இதுவே ஒருவேளை வெற்றியையும் தேடித்தரலாம்.  

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அட்டகாசமாக விளையாடிய ஜடேஜா 95 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். அவருடைய இந்த அரை சதம்  டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இதுவரை 7 அரை சதங்கள் எடுத்துள்ளார் ஜடேஜா. அதில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தும் உள்ளது. அதாவது ஜடேஜா தனது பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்திய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.

அந்த ராசி தர்மசாலாவிலும் தொடருமா?

http://www.dinamani.com/

Australia 300 & 121/8 (49.2 ov)
India 332
Australia lead by 89 runs with 2 wickets remaining
  • தொடங்கியவர்

தர்மசாலா டெஸ்ட்: 137 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா - வெற்றியின் விளிம்பில் இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு சுருண்டு, இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 106 ரன்களை நிர்னயித்துள்ளது.

 
 
 
 
தர்மசாலா டெஸ்ட்: 137 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா - வெற்றியின் விளிம்பில் இந்தியா
 
தர்மசாலா:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

1CAC17D6-E8CA-4BD5-82A4-5E3EF72690DB_L_s

தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப மேக்ஸ்வெல் மட்டும் பொறுமையாக விளையாடி 45 ரன்களை சேர்த்தார்.

இறுதிகட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி  137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 106  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/27162057/1076379/australia-all-out-for-137.vpf

  • தொடங்கியவர்

137 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா; தொடரைக் கைப்பற்றும் வெற்றிப்பாதையில் இந்தியா

 
  • புவனேஷ் குமார் பந்தில் ஸ்மித்தின் ஆஃப் ஸ்டம்ப் பறக்கும் காட்சி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
    புவனேஷ் குமார் பந்தில் ஸ்மித்தின் ஆஃப் ஸ்டம்ப் பறக்கும் காட்சி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
  • இன்றைய ஆல்ரவுண்ட் நாயகன் ஜடேஜா, உமேஷ் யாதவ்வுடன். | படம். | ஏ.பி.
    இன்றைய ஆல்ரவுண்ட் நாயகன் ஜடேஜா, உமேஷ் யாதவ்வுடன். | படம். | ஏ.பி.
 

தரம்சலா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்சில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 106 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3-ம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது, 4-ம் நாளான நாளை வெற்றிக்குத் தேவை 87 ரன்களே என்ற நிலையில் லோகேஷ் ராகுல் 13 ரன்களுடனும் முரளி விஜய் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்புகள் மாறி மாறி வந்த தொடரில் இந்த டெஸ்ட் போட்டயில், முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இந்திய வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது, ஆஸ்திரேலியா ஏதாவது அதிசயம் நிகழ்த்தினாலோ அல்ல்து இந்தியா விவரிக்க முடியாத அளவுக்கு படுமோசமாக ஆடினாலோதான் ஆஸ்திரேலியாவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பு கிட்டும், மற்றபடி பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி மீட்க இன்னும் 86 ரன்களே தேவைப்படுகிறது.

இன்று காலை ஜடேஜாவின் தைரியமான அரைசதத்திற்குப் பிறகு 332 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து 32 ரன்கள் என்ற முக்கியமான முன்னிலை பெற்றது. முழு விவரம்: ஜடேஜாவின் அபார அரைசதத்துடன் இந்திய அணி 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு

உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சு, ரஹானேயின் அருமையான கேப்டன்சி, சஹாவின் பெரும்பங்களிப்பு செய்த விக்கெட் கீப்பிங் ஆகியவற்றினால் ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருட்டியது, இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ் குமார் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்ட பிறகு அதே ஷார்ட் பிட்ச் பந்தில் ஸ்மித் விக்கெட்டை பவுல்டு முறையில் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா தன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய போது முதல் இன்னிங்ஸ் போலவே டேவிட் வார்னருக்கு 3-வது ஸ்லிப்பில் கருண் நாயர் கையில் வந்த கேட்சைக் கோட்டை விட்டார், ரஹானே கேப்டன் என்பதால் அவர் பிழைத்தார், கோலி கேப்டனாக இருந்தால் உடனேயே கருண் நாயரை டீப் தேர்ட் மேன் அல்லது டீப் ஃபைன் லெக்கிற்கு பீல்ட் செய்ய அனுப்பியிருப்பார்.

ஆஸ்திரேலியா மடிந்த விதம்:

ஆனாலும் வார்னர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உமேஷ் யாதவ்வின் அருமையான அவுட் ஸ்விங்கரை வார்னர் ஆட முற்பட அது விளிம்பில் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது, வார்னர் 6 ரன்களில் வெளியேறினார். ஆஸி. 10/1.

ஸ்மித் களமிறங்கி உடனேயே ஒரு பவுண்டரியையும் புவனேஷ் குமாரை 2 பவுண்டரியையும் அடித்து 15 பந்தில் 17 என்று அச்சுறுத்தினார், ஆனால் புவனேஷ் குமார் 2 பவுண்டரிகள் சென்றாலும் ஷார்ட் பிட்ச் உத்தியை மாற்றாமல் அடுத்த பந்தையே ஷார்ட் பிட்ச் ஆக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசினார், ஸ்மித் புல் ஷாட முற்பட பந்து அவர் நினைத்த வாகிற்கு வரவில்லை, மட்டையின் அடி விளிம்பில் பட்டு ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

இந்த விக்கெட் இந்திய பவுலர்களுக்கு உற்சாகம் அளித்தது. மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா உமேஷ் யாதவ்வின் அருமையான மார்புயர பந்திற்கு ‘ஸ்கொயர்’ ஆனார், பந்து மட்டையின் விளிம்பைத் தொட்டு சஹாவிடம் தஞ்சம் அடைந்தது. ஆஸி. 31/3 என்று பதற்றமடைந்தது.

இந்நிலையில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், அதி தடுப்பு வீரர் ஹேண்ட்ஸ்கம்ப் இணைந்தனர், இதில் மேக்ஸ்வெல், குல்தீப் யாதவ்வை அடித்து ஆடத் தொடங்கினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 56 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களில் இருந்த ஹேண்ட்ஸ்கம்ப், அஸ்வின் வீசிய பந்திற்கு பின்னால் சென்றார், பந்து திரும்பும் என்று நினைத்தார் ஆனால் திரும்பவில்லை அப்படியென்றாலும் ஆடாமல் விட்டிருக்கலாம் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்று தெரியாத அவர் திரும்பாத பந்தை தொட்டார், ரஹானே மிக அருமையாக அதைக் கேட்ச் பிடித்தார்.

மார்ஷ் 1 ரன் எடுத்தபோது ரஹானேயின் அதி நெருக்கமான களவியூகத்தில் ஜடேஜாவின் பந்து ஒன்று அதிகமாகத் திரும்பி எழும்ப ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 92/5 என்று ஆஸ்திரேலியா தடுமாறியது.

கிளென் மேக்ஸ்வெல் அருமையாக ஆடி 60 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில், எந்த அடிப்படையில் அஸ்வின் ஓவர் த விக்கெட்டில் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை மட்டையில் ஆடாமல் கால்காப்பில் வாங்க முடிவெடுத்தார் என்று தெரியவில்லை, எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டது, இவரது மேல்முறையீடும் மறுக்கப்பட ஆஸ்திரேலியா ஒரு ரிவியூவையும் இழந்தது.

அடுத்தாக கமின்ஸ், 12 ரன்கள் எடுத்த இவருக்கு டெய்ல் எண்டருக்கு வீசும் அருமையான ஒரு பந்தை வீசினார் ஜடேஜா. அழகாக பிளைட் செய்து டிரைவ் ஆட வா வா என்று அழைத்தார், கமின்ஸ் இசைந்தார், எட்ஜ் எடுத்தது மீண்டும் ரஹானே கேட்ச். ஓகீஃப் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தை சில்லி பாயிண்டில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். லயன் ரன் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹேசில்வுட்டுக்கு அஸ்வின் ஸ்லிப்பில் குனிய முடியாமல் ஒரு கேட்சை விட்டார், பிறகு அஸ்வின் பந்தில் விஜய் ஒரு கேட்சை விட்டார். ஆனால் அடுத்து ஒரு பந்தை அஸ்வின் வேகமாக வீச எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டது, ரிவியூ வீணானது. மேத்யூ வேட் ஒரு முனையில் 90 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியா 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருண்டது, இந்திய தரப்பில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நாயகன் குல்தீப் யாதவ்வுக்கு 5 ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டது.

106 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் ஒரு அதிர்ஷ்ட பவுண்டரியுடன் மேலும் 2 அருமையான பவுண்டரிகளுடன் கமின்ஸ் ஓவரை அதிரடியில் தொடங்கினார். ஆட்ட முடிவில் இந்திய அணி 19/0. பார்டர்-கவாஸ்கர் கோப்பை கோலியின் கண்களின் முன் நிழலாடத் தொடங்கிவிட்டது.

http://tamil.thehindu.com/sports/137-ரன்களுக்குச்-சுருண்டது-ஆஸ்திரேலியா-தொடரைக்-கைப்பற்றும்-வெற்றிப்பாதையில்-இந்தியா/article9602881.ece?homepage=true

  • தொடங்கியவர்

தரம்சாலா டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற்ற 87 ரன்கள் இலக்கு

 

தரம்சாலாவில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மற்றும் தொடரில் வெற்றி பெற இந்தியாவிற்கு 87 ரன்கள் இலக்காக உள்ளது.

 
 
 
 
தரம்சாலா டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற்ற 87 ரன்கள் இலக்கு
 
தரம்சாலா:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி  332 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து 106  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 87 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டி மற்றும் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு தினங்கள் மீதம் இருப்பதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/27172101/1076398/india-need-87-more-runs-to-win.vpf

  • தொடங்கியவர்

தர்மசாலா டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

 

 
kohli55

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் 60, புஜாரா 57, கேப்டன் ரஹானே 46 ரன்கள் எடுத்து வெளியேற, பிறகு ஆடவந்த ஜடேஜா, 95 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருண்டது.  இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 106 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல், கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 13, முரளி விஜய் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது ஆஸி. அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முரளி விஜய் மிகவும் தடுமாறினார். பிறகு 8 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த புஜாரா எதிர்பாராதவிதமாக ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி எதுவும் கவலைப்படவில்லை. ரஹானே கம்மின்ஸின் ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தர்மசாலா டெஸ்ட் போட்டியை வென்றதோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. ராகுல் 52, ரஹானே 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்த ஹோம் சீஸனில் இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலிய ஆகிய அணிகளை எதிர்கொண்டது. இதில் அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது. ராஞ்சி டெஸ்ட் வரை இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தினார் கோலி. ஆனால் தர்மசாலா டெஸ்டில் கோலியால் விளையாத முடியாத நிலை உருவானபோதும் இந்திய  அணியை அருமையாக வழிநடத்தி வெற்றித் தேடித்தந்துள்ளார் ரஹானே. 

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.