Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சு.சாமி திடீர் கோரிக்கை ....

Featured Replies

பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது ஏன்?

 

பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் கார்கள் சில திடீரென தாக்கப்பட்டன. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் கார் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தனர்.

Why ADMK cadres clash in Bengaluru?


அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். சிறை வளாகம் வந்ததும் சசிகலாவின் கார் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. கூட வந்தவர்களின் கார்கள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அப்போது திடீரென சிலர் அந்தக் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.

 

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர். முக்கியச் சாலை என்பதால் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து டிவி சானல்களுக்கு பேட்டி அளித்த சசிகலா ஆதரவாளர்கள் சிலர், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதாக கூறினர். இங்குதான் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில், உண்மையில் தாக்குதல் நடத்தியவர்களும் அதிமுகவினர்தான். அவர்கள்தான் தாக்குதல் நடத்தினர். சசிகலாவுடன் வந்த வாகனங்கள் மட்டும்தான் தாக்கப்பட்டன. தமிழகப் பதிவெண் கொண்ட வேறு எந்த வாகனமும் தாக்கப்படவில்லை. அவை வழக்கம் போலத்தான் போய்க் கொண்டிருந்தன.

உண்மையில் இந்த தாக்குதலைக் காரணம் காட்டி சசிகலாவுக்கு பெங்களூரில் பாதுகாப்பு இல்லை என்று கூறி, அவரை பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்றும் திட்டமாக இது இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது போலத் தெரிகிறது. இரு மாநில பிரச்சினை போல மாற்றி சசிகலா உள்ளிட்டோரை தமிழக சிறைக்கு மாற்றும் திட்டத்தில் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

இதுபோல சிறை மாற்றம் சட்டப்படி சாத்தியம்தான். விஐபி கைதிகள், சொந்த ஊர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை பரிசீலிக்க சிறை நிர்வாகத்தால் முடியும். அந்த அடிப்படையில்தான் இப்படி ஒரு செட்டப் தாக்குதல் நடந்ததோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/why-admk-cadres-clash-bengaluru-274211.html

 

 

 

 

 

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சு.சாமி திடீர் கோரிக்கை

 

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 

 சென்னை: பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.

 

Sasikala should be shifted to a a jail in Tamil Nadu, said Subramanian Swamy


மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரது அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தார். அவரும் உரிய சோதனைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரணமாக இருந்த சுப்பிரமணியன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கையை முதல்வரானதும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

மேலும், இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை 2 நாட்களில் அணுக வேண்டும் என்றும் அந்த டிவிட்டில் பதிவிட்டுள்ளார். மற்றொரு டிவிட்டில் தன்னுடையே பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு பழனிச்சாமி என்றும் பதிவிட்டுள்ளார்.

சாமி ஆரம்பத்தில் சசிகாலவுக்குக் கொடி பிடித்தார். அவர் ஜெயிலிக்குப் போய் விட்ட நிலையில் சசி தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-should-be-shifted-a-jail-tamil-nadu-said-subramanian-swamy-274217.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சு.சாமி திடீர் கோரிக்கை...

Sasikala should be shifted to a a jail in Tamil Nadu, said Subramanian Swamy


சென்னை: பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்

http://tamil.oneindia.com

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா....tw_blush:

  • தொடங்கியவர்

சிறைக்குள் சசிகலா மீது தாக்குதல் நடைபெறலாம்.. உளவுத்துறை வார்னிங்..

 

பாதுகாப்பு அதிகரிப்பு நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

 

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலர் சசிகலா மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் திடீர் மரணம், சசிகலா மீது கோபமாக மக்களிடம் வெளிப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெண்களிடம். இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அப்படி செய்யாவிட்டாலும், சசிகலா தரப்பே திட்டமிட்டு ஒரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாம்.

 

இப்படி நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாம். நேற்று சசிகலா கோர்ட்டுக்கு வந்தபோது அவருடன் வந்த கார்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகின.

அப்படி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அது சசிகலா தரப்பின் நாடகம் என தெரியவந்தது. மத்திய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சசிகலா அடைக்கப்பட்டுள்ள பகுதியில் 10 பெண் போலீஸ்காரர்கள் எப்போதுமே இருக்கும்படி சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Read more at: http://tamil.oneindia.com/news/india/ten-constables-guard-sasikala-jail-fearing-she-may-be-attacked-274261.html

  • தொடங்கியவர்

அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!- சுப்பிரமணியன் சுவாமி

 

 
சுப்பிரமணியன் சுவாமி | கோப்புப் படம்.
சுப்பிரமணியன் சுவாமி | கோப்புப் படம்.
 
 

5 கேள்விகள் 5 பதில்கள்: சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு வித்திட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு, சசிகலா - பன்னீர்செல்வம் அதிகாரச் சண்டை, அதிமுகவின் எதிர்காலம் என்று எல்லாக் கேள்விகள் தொடர்பிலும் பதில் அளித்தார்.

தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நியாயம் கேட்டு நான் தொடுத்த வழக்கில் விரும்பிய தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மேல்முறையீட்டுக்குப் போக முடியாது. சீராய்வு மனு அளிக்கலாம். தீர்ப்பில் சட்டரீதியிலான தவறு இருந்தால், அதைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், திறமையான வழக்கறிஞரை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கறிஞர் செய்த ஒரு தவறால்தான் கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் தொடர்ச்சியை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அவர் பெற முடியாமல் போய்விட்டது.

அது எப்படி எல்லோரும் சசிகலாவை எதிர்த்தபோது நீங்கள் மட்டும், சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும் என்றீர்கள்?

எனக்கு சட்டம் முக்கியம். சட்டப்படி அவருக்குப் பெரும்பான்மை இருந்தது, அதனால் கூறினேன். தீர்ப்பு வரை காத்திருப்பது என்றெல்லாம் சொல்லி அவர் முதல்வராகும் உரிமையைப் பறிப்பது சரியல்ல. தண்டனை கிடைத்தால் ராஜினாமா செய்திருக்கப்போகிறார். இதே போன்ற சூழலில்தான் ஜெயலலிதா இரு முறை முதல்வர் பதவியேற்றிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்!

பன்னீர்செல்வத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பன்னீர்செல்வம் ஒரு மோசமான மனிதர். முதுகெலும்பற்றவர். ‘நிர்ப்பந்தம் காரணமாக ராஜினாமா செய்தேன்’ என்பவர் அன்றே அதை ஆளுநரிடம் சொல்வதற்கு என்ன? அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட அவருக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவல் சட்டப்படி பதவி இழப்பார்கள்.

சசிகலாவுக்கு எதிராகவும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் பாஜக பின்னிருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறதே?

அபத்தம். சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படவும் முடியாது; அதற்கான தேவையும் இல்லை. இந்த விவகாரத்தில் இரு மத்திய அமைச்சர்கள் தொடர்பாகச் சொல்லப்படும் புகார்களும்கூட அவர்களுடைய தனிப்பட்ட செயல்பாடு சார்ந்ததே தவிர, எங்கள் கட்சிக்கு இதில் சம்பந்தம் இல்லை.

சசிகலா, அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்?

இந்த ஒரு வாரத்தில் தான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று சசிகலா நிரூபித்திருக்கிறார். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சமின்றிப் பேசினார். கேள்விகளுக்கு நிதானமாக யோசித்துப் பதில் அளித்தார். சட்டசபை உறுப்பினர்கள் அவர் பிடியில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, காவல் ஆணையர் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டி பொய் என்று நிரூபித்தார். சசிகலா சிறை சென்றுவிட்டாலும் அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கர்நாடகச் சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு அவரை மாற்ற கட்சியினர் மனு அளிக்கலாம். அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் சிறையில் அவரைச் சந்தித்து, ஆலோசனைகளைப் பெற்று கட்சியை நடத்துவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. அவருடைய ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் போதிய அளவுக்கான பலம் இருக்கிறது. அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்!

http://tamil.thehindu.com/opinion/reporter-page/அதிமுகவிற்கு-நல்ல-எதிர்காலம்-இருக்கிறது-சுப்பிரமணியன்-சுவாமி/article9546183.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.