Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன்

Featured Replies

இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன்

 

தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன்.

தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது.

Kamal's tweet on Edappadi Palanisamy govt's floor test


சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல்.

இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், கமல் போட்டுள்ள ட்வீட் இது: "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை.

Kamal Haasan ✔ @ikamalhaasan இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம். 7:39 PM - 17 Feb 2017 3,049 3,049 Retweets 6,937 6,937 likes

Read more at: http://tamil.filmibeat.com/heroes/kamal-s-tweet-on-edappadi-palanisamy-govt-s-floor-test-044796.html

 

வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்." கமலின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து இயக்குநர் சீனு ராமசாமி, "இரவில் ரசியமாக நரிகள் பரியானது சொக்கப்பன் நாட்டில்....பொதுவில் பகலில் உருமாறுமா.. நரிகளுக்கும் வெடகமுண்டு மனசாட்சியுண்டு," என்று கூறியுள்ளார். 

Read more at: http://tamil.filmibeat.com/heroes/kamal-s-tweet-on-edappadi-palanisamy-govt-s-floor-test-044796.html

  • தொடங்கியவர்

ஊடகங்கள் சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கக்கூடாது: கமல் அறிவுரை

 
kamal1_jpg_1597505f.jpg
 
 
 

ஊடகங்கள் சம்பவங்களை மிகவும் ஊதிப் பெரிதாக்கக்கூடாது என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமணியிடம் கலந்து ஆலோசிக்காமல் நான் துணிச்சலாக சொல்கிறேன். திராவிட கழகம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் இல்லையென்றால் சும்மா இருக்க வேண்டும். இது அனைத்து திராவிட இயக்கத்துக்கும் பொருந்தும்.

ஊடகங்கள் சம்பவங்களை மிகவும் ஊதிப் பெரிதாக்கக்கூடாது. இதைவிட எல்லாம் தமிழக சட்டப்பேரவை சந்தித்துள்ளோம்.(நான் உட்பட) சோம்பேறிப் புரட்சியாளர்கள் இப்போது மட்டும் ஏன் அதிர்ச்சிடைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/ஊடகங்கள்-சம்பவங்களை-ஊதிப்-பெரிதாக்கக்கூடாது-கமல்-அறிவுரை/article9549959.ece?homepage=true

  • தொடங்கியவர்

வாழ்க கேலிக்கூத்து நாயகம்: கமல்

 

 
நடிகர் கமல்ஹாசன் (படம்: வேதன்)
நடிகர் கமல்ஹாசன் (படம்: வேதன்)
 
 

வாழ்க 'கேலிகூத்து நாயகம்' என்று தமிழக நிகழ்வுகள் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கமல்ஹாசன், "நீங்கள் யாரென்று காட்டிவிட்டீர்கள். மற்றொரு முதலமைச்சர் நமக்கு கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. வாழ்க கேலிகூத்து நாயகம். தமிழக மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ, அப்படிப்பட்ட வரவேற்புடன்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/வாழ்க-கேலிக்கூத்து-நாயகம்-கமல்/article9550017.ece?homepage=true

  • தொடங்கியவர்

நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது: சித்தார்த் காட்டம்

 

 
சித்தார்த் | கோப்பு படம்
சித்தார்த் | கோப்பு படம்
 
 

நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சித்தார்த், "ஜெயிலில் சசிகலாவுக்கு ஒரு லேப்டாப் கொடுங்கள். 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பலுக்கும் 4 ஆண்டுகளுக்குப் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்துங்கள். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/நமது-உணவில்-இன்னும்-அதிகமான-உப்பைப்-போட-வேண்டிய-நேரமிது-சித்தார்த்-காட்டம்/article9550018.ece?homepage=true

  • தொடங்கியவர்

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு

 
Kamal1_1646069f.jpg
 
 
 

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள் விடுத்திருப்பதற்கு சமூகவலைதளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது "Rajbhavantamilnadu@gmail.comங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலாக அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது சட்டப்பேரவை அல்ல. ஆளுநர் வீடு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்.

இதற்கு திரையுலகினர் பலரும் கமல் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், கமலின் வெளிப்படையான கருத்துக்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

"மோடிக்கு மட்டும் வாழ்த்து சொல்ற நடிகர் மத்தியில் தமிழனுக்கு ஒண்ணுனா வர கமல் க்ரேட்", "மெரினா வாங்க மக்கள் நம்ம ஒண்ணு கூடுவோம்", "வேற லெவல் சார்", "எந்த நடிகனும் வாய்திறக்க பயப்படும்போது அவர் தைரியமா பேசுறாரே அதுவே போதும்" என்று பலரும் கமலின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/மின்னஞ்சல்-அனுப்ப-கமல்-வேண்டுகோள்-சமூகவலைதளத்தில்-வரவேற்பு/article9550074.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

16649030_1442360545783270_59052678918028

:D:

  • தொடங்கியவர்

'இப்போது மிக்சர் சாப்பிடுவது நாம்தான்' - சூர்யா

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றார். இதற்கிடையே, சட்டசபையில் இருந்து தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது.

Suriya

இதையடுத்து, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே' என்று கூறியுள்ளார

 

இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே....

http://www.vikatan.com/news/viral-corner/81280-actor-suriyas-timing-tweet-going-viral.html

  • தொடங்கியவர்

எம்.எல்.ஏ.க்களை கவனியுங்கள்! தொகுதி மக்களுக்கு கமல் அட்வைஸ்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு இடையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்கள் மூலம் தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.

KamalHaasan

இந்நிலையில், கமல் தனது ட்விட்டரில், 'ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு Rajbhavantamilnadu@gmail.com என்ற விலாசத்துக்கு, நம் மன உளைச்சலை, மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது அசம்பளியல்லை. கவர்னர் வீடு' என கூறியுள்ளார்

இந்நிலையில், கமல் அவரது மற்றொரு ட்வீட்டில், 'தமிழக மக்களே தொகுதிக்கு திரும்பும், உங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு, அவர்களுக்குரிய மரியாதையளித்து, வரவேற்பு கொடுங்கள்' என்றார்.

 

http://www.vikatan.com/news/viral-corner/81264-kamalhaasans-advice-to-tn-people.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.