Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பு பதற்றங்களும் தடுமாற்றமான செய்திகளும்

Featured Replies

அரசியலமைப்பு பதற்றங்களும் தடுமாற்றமான செய்திகளும்

 

– ராஜன் பிலிப்ஸ்

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புகள் ஆபத்து நிறைந்­தவை அத்­துடன் எவ்­வாறு அமை­யக்­கூ­டி­யவை என்று முன்­ன­றிந்து கூறவும் முடி­யா­தவை. ஏனென்றால் எந்­த­வொரு வாக்­கா­ளரும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்­துக்­காக அல்­லாமல் தன்னால் எதிர்­நோக்­கப்­ப­டு­கின்ற அல்­லது தனது சிந்­த­னையில் இருக்­கின்ற வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­துக்­கா­கவும் வாக்­க­ளிக்­கக்­கூடும். குறிப்­பிட்ட ஒரு பிரச்­சி­னையை முன்­னி­றுத்தி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் போது அந்த வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்ற அர­சாங்­கத்­துக்கு அல்­லது தலை­வ­ருக்கு எதி­ராக மக்கள் வாக்­க­ளிக்கும் போக்கை அடிக்­கடி அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்கள் மீதான அர­சாங்­கத்தின் கடப்­பாட்டை பொறுத்­த­வரை பெரி­தாக எது­வுமே நிறை­வே­றாமல் போய்­வி­டுமோ என்று எண்­ண­வேண்­டி­யி­ருந்த நிலை­வ­ரத்­துக்கு மத்­தியில், கடந்த வாரத்தில் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்த புதிய நிகழ்வுப் போக்­குகள் மகிழ்ச்சி தரு­ப­வை­யா­கவும் அர­சியல் ரீதியில் நம்­பிக்­கை­யூட்­டு­ப­வை­யா­கவும் அமைந்­தி­ருந்­தன.  

பெப்­ர­வரி 8 புதன்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சுமார் 50 சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய சந்­திப்­பொன்றில் இருந்தே நம்­பிக்­கைக்­கான முத­லா­வது அறி­குறி வெளிப்­பட்­டது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு கொழும்பில் உள்ள வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் சங்­கத்­தி­ன­ருடன் வெளி­யு­றவு அமைச்சர் மங்­கள சம­ர­வீர நடத்­திய சந்­திப்பில் இருந்து இரண்­டா­வது அறி­குறி வெளிப்­பட்­டது? அர­சி­ய­ல­மைப்பு முன் முயற்­சிக்­கான மூன்­றா­வது நம்­பிக்கை அறி­குறி முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ரண துங்­க­வி­ட­மி­ருந்து வந்­தது. ஆனால், போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் வெளி­யிட்ட கருத்­துக்கள் கார­ண­மாக அவர் தனக்­கே­யொத்த பாணியில் அதை சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக்கி விட்டார்.

ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுடன் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பா­கவே கூடு­த­லான நேரம் கலந்­து­ரை­யா­டி­னார்கள் என்­ற­போ­திலும், இறு­தியில் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் அவர்கள் அக்­கறை காட்­டி­னார்கள். சுமார் 2 மணித்­தி­யா­லங்­க­ளாக நடந்த இச்­சந்­திப்பு 2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பிறகு சிவில் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுடன் ஜனா­தி­பதி நடத்­திய அத்­த­கைய மூன்­றா­வது சந்­திப்­பா­கவும் அமைந்­தது.

சிவில் சமூக அமைப்­புகள் இது­போன்ற பல சந்­திப்­பு­களை ஜனா­தி­ப­தி­யுடன் நடத்த வேண்டும். மாத­மொரு சந்­திப்­பா­வது இடம்­பெற வேண்டும். சில­ருடன் அடிக்­கடி சந்­திப்­பு­களை நடத்தி கலந்­து­ரை­யா­டு­வதன் மூல­மாக கெடு­தி­யான சக்­தி­களின் பாதிப்பில் இருந்து அவரை விலக்கி வைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் பங்­கேற்ற சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தி­ருக்கும் தக­வல்­களின் படி நோக்­கு­கையில் அவர் ஜனா­தி­பதி என்ற வகை­யிலும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற வகை­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபைப் பூர்த்தி செய்து தேசிய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக மக்­க­ளிடம் செல்­வதில் மிகுந்த உறு­திப்­பாட்­டுடன் இருக்­கிறார் என்று தெரி­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு வரைபை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடு­வது பற்றி வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் வெளி­யு­றவு அமைச்­சரும் உறு­தி­யான கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அவ­ரது சகா­வான உயர்­கல்வி, நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வுடன் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­புக்கு செல்­வதில் ஐக்­கிய தேசியக் கட்சி உறு­தி­யாக இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் முத்­தாய்ப்பு வைத்­தாற்­போல சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு யோச­னையை தானும் ஆத­ரிப்­ப­தாக உறுதி செய்­தி­ருக்­கிறார். இவை­யெல்­லா­வற்­றையும் நோக்கும் போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபு விவ­கா­ரத்தில் என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற கேள்வி தவிர்க்க இய­லாமல் எழு­கி­றது.

ஜனா­தி­ப­தி­யி­னாலும் அமைச்­சர்­க­ளி­னாலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட மேற்­கூ­றிய நிலைப்­பா­டுகள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றைத் தவிர்க்­கக்­கூ­டி­ய­தாக அர­சி­ய­ல­மைப்பு முயற்­சி­களின் பரப்­பெல்­லையை குறுக்­கு­வ­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற முயற்­சிகள் தொடர்பில் ஒருங்­கி­ணைந்த வகையில் வெளிக்­காட்­டப்­ப­டு­கின்ற பிர­தி­ப­லிப்பா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் உள்ள 13 ஆவது திருத்­தத்தை உள்­ள­வாரே தொடர்ந்தும் வைத்­தி­ருக்க விரும்­பு­வ­துடன் தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்­டு­வ­ரு­கின்ற ஏற்­பாட்­டுடன் அர­சி­ய­ல­மைப்பு மாற்ற செயன்­மு­றை­களை குறுக்­கு­வதில் நாட்டம் கொண்­டி­ருக்­கி­றார்கள். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை ஒழிப்­ப­தற்கு இந்த அமைச்­சர்கள் விரும்­ப­வில்லை. ஒருவர் இரு பதவிக் காலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே ஜனா­தி­ப­தி­யாக இருக்க முடி­யு­மென்ற மட்­டுப்­பாடு தொடர்­பான ஏற்­பாடு அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்­தத்தின் மூல­மாக மீண்டும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை தொடர்ந்தும் வைத்­தி­ருக்க இவர்கள் விரும்­பு­கி­றார்கள். தங்­க­ளது இந்த நிலைப்­பாட்­டுக்கு ஜனா­தி­பதி சிறி­சே­னவின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட அவரை சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ள­ராக்­கு­வது குறித்துப் பேசி இவர்கள் ஆசை காட்­டு­கி­றார்கள்.

இவர்கள் 2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறி­சேன நாட்டு மக்கள் முன்­னி­லையில் வைத்த விஞ்­ஞா­ப­னத்தின் உணர்­வு­களைப் பற்றி அக்­கறை காட்­டாமல், வெறு­மனே இதில் உள்ள வாக்­கி­யங்­களின் பாது­காப்பு காவ­லர்­க­ளாக மாறி­யி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்­றுக்கு போகாமல் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­ப­டக்­கூ­டி­ய­வை­யாக அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை மட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­யப்­ப­டாத அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளையே கொண்டு வர­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­து­கின்ற இந்த சுதந்­திரக் கட்சி அமைச்சர் பெரு மக்கள் எல்­லோரும் 2015 ஜன­வ­ரியில் ராஜபக் ஷ பக்­கமே நின்­றார்கள். அதைப் பற்றி இவர்கள் சிந்­திப்­ப­தாக இல்லை. அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களின் முத­லா­வது கட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட 100 நாள் காலக்­கெடு பற்றி இங்கு பேச­வேண்­டி­ய­தில்லை.

கூட்டு எதி­ர­ணியில் இப்­போது அங்­க­மாக இருக்கும் முன்னாள் சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் உட்­பட அக்­கட்­சியின் அமைச்­சர்கள் ஒவ்­வொரு விவ­கா­ரத்­திலும் பிரச்­சி­னை­யிலும் சகல பக்­கங்­க­ளிலும் இருந்­தி­ருக்­கி­றார்கள். ஒரே பிரச்­சினை தொடர்பில் வெவ்­வேறு நேரங்­களில் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். இதுவே இவர்கள் தொடர்பில் உள்ள சிக்கல்.

அர­சாங்­கத்­திற்குள் இருந்தோ அல்­லது வெளியில் கூட்டு எதி­ர­ணிக்குள் இருந்தோ அர­சி­ய­ல­மைப்பு வரைபு முயற்­சி­க­ளுக்கு இவர்­க­ளி­ட­மி­ருந்து வரு­கின்ற எதிர்ப்பு ஒரு கோட்­பாட்டின் அடிப்­ப­டை­யா­னதோ அல்­லது விவே­க­மான முறை­யி­லான சந்­தர்ப்­ப­வா­த­மா­ன­தா­கவோ இல்லை. இவர்­க­ளது அர­சி­யலை மந்­தி­ரத்­தினால் மீட்­டு­யிர்ப்­பிக்­கப்­பட்ட பிணத்தின் அர­சியல் என்­றுதான் வர்­ணிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சியல் முறை­யி­னதும் இவர்­க­ளிடம் அர­சியல் செய­லூக்­கமோ தூண்­டு­தலோ இல்­லாத தன்­மை­யி­னதும் கூட்டு விளை­வா­கவே இவர்­களின் நிலையை பார்க்க முடி­கி­றது. இவர்­க­ளிடம் ஒரு அர­சியல் இலட்­சி­யமோ குறிக்­கோளோ கிடை­யாது. ஆனால், பாரா­ளு­மன்­றத்தில் இவர்­களின் எண்­ணிக்கை ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுக்கு தேவை­யாக இருக்­கி­றது. தற்­போ­தைய முறை­மையில் உள்ள முட்­டுக்­கட்டை நிலையை அகற்­று­வ­தற்குத் தான் அந்த எண்­ணிக்கை தேவைப்­ப­டு­கி­றதே தவிர, அதை நீடிப்­ப­தற்கு அல்ல. ஜனா­தி­ப­திக்கு இவர்கள் தேவைப்­ப­டு­வதைக் காட்­டிலும் கூடு­த­லான அள­வுக்கு இவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி தேவைப்­ப­டு­கிறார் என்­றுதான் கூற வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் முற்­று­மு­ழு­வ­து­மாக உற்­சா­கத்தைத் தரக்­கூ­டிய அணு­கு­மு­றையைக் கடைப்­பி­டிக்கும் ஒரு கூட்டம் அல்ல. அவர்­க­ளிடம் ஒரு இலட்­சி­யமோ இலக்கோ இல்லை. ஆனால் 1978 ஆம் ஆண்டில் முன்­னைய ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­வர்­க­ளினால் நாட்டின் மீது திணிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்புச் சேதங்­களின் பெரு­ம­ள­வா­ன­வற்றை இல்­லாமல் செய்ய வேண்­டிய நிலைக்கு அவர்­களை அர­சியல் சூழ்­நி­லைகள் கொண்­டு­வந்து விட்­டி­ருக்­கின்­றன. அதை அவர்கள் செய்­வ­தற்குத் தயா­ரா­யி­ருக்­கி­றார்கள் என்­பதை பாராட்­டவே வேண்டும். அத்­துடன் மந்­தி­ரத்தால் மீட்­டு­யிர்ப்­பிக்­கப்­பட்ட பிணங்கள் போன்று இருக்கும் சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெறு­வ­தற்­காக தங்­க­ளுடன் இழுத்துக் கொண்டு செல்­லவும் தயா­ரா­யி­ருக்­கி­றார்கள்.

சர்­வ­சன வாக்­கெ­டுப்பில் மக்­களின் அங்­கீ­கா­ரத்தை நாடவும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தயா­ரா­கி­யி­ருக்­கி­றார்கள். அர­சி­ய­ல­மைப்பு மீதான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்றி சாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யது என்று மங்­கள சம­ர­வீர நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருக்­கின்ற அதே­வேளை அதில் ஆபத்­துகள் இருப்­ப­தையும் ஏற்­றுக்­கொள்­கிறார். ஆனால் அந்த ஆபத்­து­க­ளுக்கு முகங்­கொ­டுப்­பது பெறு­ம­தி­யா­னது என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாகும். ஜனா­தி­பதி சிறி­சே­ன­வு­ட­னான சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களின் சந்­தப்பில் பங்­கேற்ற அர­சாங்கத் தாதிகள் சங்­கத்தின் தலை­வ­ரான சமான் ரத்­ன­பி­ரிய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்­றியைப் பெறு­வ­தற்­காக முழு வீச்சில் பிர­சாரம் செய்ய நாங்கள் தயா­ரா­கி­யி­ருக்­கிறோம் என்று உற்­சா­கத்­துடன் பிர­க­டனம் செய்­தி­ருக்­கிறார்.

 

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் இடர்­பா­டுகள்

 

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புகள் ஆபத்து நிறைந்­தவை அத்­துடன் எவ்­வாறு அமை­யக்­கூ­டி­யவை என்று முன்­ன­றிந்து கூறவும் முடி­யா­தவை. ஏனென்றால் எந்­த­வொரு வாக்­கா­ளரும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்­துக்­காக அல்­லாமல் தன்னால் எதிர்­நோக்­கப்­ப­டு­கின்ற அல்­லது தனது சிந்­த­னையில் இருக்­கின்ற வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­துக்­கா­கவும் வாக்­க­ளிக்­கக்­கூடும். குறிப்­பிட்ட ஒரு பிரச்­சி­னையை முன்­னி­றுத்தி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் போது அந்த வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்ற அர­சாங்­கத்­துக்கு அல்­லது தலை­வ­ருக்கு எதி­ராக மக்கள் வாக்­க­ளிக்கும் போக்கை அடிக்­கடி அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இலங்­கையைப் பொறுத்­த­வரை முக்­கி­ய­மான அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தானால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வதைத் தவிர வேறு­மாற்று வழி கிடை­யாது. அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களைச் செய்­வ­தற்கு குறிப்­பிட சில சூழ்­நி­லை­களில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்­றுக்கு பதி­லீ­டாக தேர்தல் ஒன்றில் பெற்­றி­ருக்­கக்­கூ­டிய பரந்­த­ள­வான ஆணை­யையும் பயன்­ப­டுத்த முடியும்.

ஆனால் இலங்­கையில் நாம் கொண்­டி­ருக்கும் இரு தேசிய தேர்தல் முறையை (ஜனா­தி­பதித் தேர்தல், பாரா­ளு­மன்றத் தேர்தல்) அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கும்­போது அது நடை­மு­றையில் சாத்­தி­ய­மில்லை. பாரா­ளு­மன்­றத்தில் முன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்றிக் கொள்­ளக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளுடன் அர­சியல் சீர்­தி­ருத்­தங்­களை மட்­டுப்­ப­டுத்திக் கொள்­வதே சர்­ஜன வாக்­கெ­டுப்பைத் தவிர்ப்­ப­தற்­கான ஒரே­யொரு வழி­யாகும். கடந்த வாரம் ஜனா­தி­பதி சிறி­சே­னவைச் சந்­தித்துப் பேசிய சிவில் சமூக அமைப்­பு­களின் விருப்பம் நிச்­ச­ய­மாக அது­வல்ல.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சிவில் சமூ­கத்தின் இன்­றைய விருப்­பமும் அக்­க­றையும் முன்னர் 1972 ஆம் ஆண்­டிலும் 1978 ஆம் ஆண்­டிலும் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களைக் கொண்­டு­வரத் தூண்­டிய நிர்ப்­பந்­தங்­களில் இருந்து முற்­றிலும் வேறு­பட்­ட­வை­யாகும். அந்த இரு அர­சி­ய­ல­மைப்­பு­களும் அர­சாங்­கங்கள் தாங்­க­ளாகக் கொண்­டு­வந்­த­வை­யாகும்.

அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வ­தற்­கான ஆணை­யாக பொதுத் தேர்­தல்­களில் காணப்­பட்ட வெற்­றி­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டன. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழிப்பு மற்றும் ஏனைய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களைக் கோரும் இயக்கம், அர­சியல் அதி­கார வர்க்­கத்­துக்கு வெளியில் இருந்­தது. அதா­வது ஜனா­தி­ப­தியின் மிகை­யான அதி­கார குவிப்பு, அதி­கார துஷ்­பி­ர­யோகம் மற்றும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தி­னூ­டாக வளர்ந்த படு­மோ­ச­மான ஊழல் கலா­சாரம் ஆகி­ய­வற்­றுக்­கான எதிர்ப்பில் இருந்து தோன்­றி­ய­தாகும். 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றியும் பிறகு அதே­வ­ருடம் ஆகஸ்டில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சிறி­சேன, விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கு கிடைத்த வெற்­றியும் தூய்­மை­யான அர­சாங்கம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை வேண்டி நின்ற சிவில் சமூ­கத்தின் அழைப்­புக்­கான அர­சியல் பிர­தி­ப­லிப்­பு­க­ளாகும். ஊழ­லற்ற தூய்­மை­யான அரச நிர்­வாகம் ஒன்றை நடத்­தாமல் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான நம்­ப­கத்­தன்­மையை தாங்கள் மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­போ­வ­தில்லை என்­பதை அர­சாங்­கத்தின் தலை­வர்கள் புரிந்­து­கொள்­ள­வில்லை. இதுவே அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாகும்.

தூய்­மை­யான அரச நிர்­வா­கமும் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளுக்­கான செயன்­மு­றை­களும் ஒன்­றுடன் ஒன்று இசை­வா­ன­தாக சேர்ந்து செல்ல வேண்டும். அல்­லது இரண்­டுமே சாத்­தி­ய­மா­ன­தாகப் போவ­தில்லை அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களைத் தடுப்­ப­தற்கு சூழ்ச்­சித்­த­ன­மான காரி­யங்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் செய்­யக்­கூ­டி­ய­தாக இருப்­ப­தற்­கான கார­ணங்­களில் அர­சாங்க இயந்­தி­ரத்தை தூய்­மைப்­ப­டுத்த அர­சாங்கத் தலை­வர்கள் தவ­றி­யதும் ஒன்­றாகும்.

பெறு­ம­தி­யான எந்­த­வொரு அர­சியல் மாற்று யோச­னை­க­ளையும் முன்­வைக்­காமல் கூட்டு எதி­ர­ணி­யினர் தங்­களின் அர­சியல் உயிர்­வாழ்­வுக்கு அமு­தத்தை பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருப்­ப­தற்கும் இதுவே கார­ண­மாகும். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை முதலில் தூய்­மைப்­ப­டுத்­தாமல் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளுக்கு அங்­கீ­கா­ரத்தை கேட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு அர­சாங்கம் செல்­லு­மானால் மக்கள் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­காரம், துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முகம் குத்­தகை, பெரு­ந­கர திட்­டங்கள், கிரா­மங்கள் புறக்­க­ணிப்பு போன்ற பெரு­வா­ரி­யான பிரச்­சி­னைகள் தொடர்பில் தங்­க­ளுக்கு இருக்கும் மனஸ்­தா­பங்­களை வெளிக்­காட்­டு­வ­தற்கே வாக்­க­ளிக்கும் நிலை தோன்றும்.

அதி­காரப் பர­வ­லாக்கல் விவ­காரம் தொடர்பில் அர­சாங்கம் இரு­பக்­கமும் கூரான வாளைச் சமா­ளிக்­கவே வேண்­டி­யி­ருக்­கி­றது. அதி­காரப் பர­வ­லாக்கல் ் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு தீர்வைக் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகளுடனான முழுமையான அரசியலமைப்புத் திட்டத்தை முன்வைத்து மக்களிடம் அதற்கு அங்கீகாரத்தைக் கேட்பது பற்றி அரசாங்க அமைச்சர்களும் சிவில் சமூகத் தலைவர்களும் நம்பிக்கையுடன் பேசுவது ஒரு சாதகமான அறிகுறியே. முன்னர் இவ்வாறு நடந்ததில்லை. தலைவர்களுக்கிடையிலான உடன்படிக்கைகளின் மூலமான தீர்வு முயற்சிகளை காட்டிலும் மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றைக் காண்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் அக்கறை காட்டுகிறார்கள்.

அரசாங்கத் தலைவர்களும் தமிழ் தேசியத் தலைவர்களும் முகங்கொடுக்க வேண்டிய எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினதும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் நெருக்குதல்களுக்கு அரசாங்கம் பணிந்து போகின்றது என்ற நோக்கில் இருந்துவருகின்ற விமர்சனங்களுக்கு அரசாங்கத் தலைவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோன்றே அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து வருகின்ற புதிய செய்திகள் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரைச் சமாளிப்பதற்கான ஒப்பனைகளே என்று நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துகிறவர்கள் தமிழர்கள் மத்தியில் இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை மேலும் தளர்த்துவதற்கு அல்லது அதை இல்லாமற் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் ரொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை அணுக விரும்புகிறது என்ற ஒரு சிந்தனைப் போக்கும் இருக்கிறது. இங்கு இரு சிக்கல்கள். ஜெனீவாவில் உள்ள தற்போதைய தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படாத பட்சத்தில் இந்த இணை அனுசரணை இல்லாமற் செய்யப்படப் போவதில்லை. ஜனாதிபதி ட்ரம்பை அணுகுவதென்பதைப் பற்றி குறைந்த பட்சம் இப்போதைக்காவது எவ்வளவு குறைவாக பேசுகின்றோமோ அவ்வளவுக்கு நல்லது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-18#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.