Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பியுடன் மங்கள சமரவீர இரகசியப் பேச்சு.

Featured Replies

ஜே.வி.பியுடன் மங்கள சமரவீர இரகசியப் பேச்சு.

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய திரும்பிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சில மணி நேரத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்து அரசியல் உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பியின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முக்கிய உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க மங்கள சமரவீரவை இரவு 8.00 மணியளவில் அவரது வீட்டில் சந்தித்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு நள்ளிரவு கடந்தும் தொடர்ந்ததாகவும் மங்கள சமரவீரவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனுரகுமார திசநாயக்க, முதலில் மங்கள சமரவீரவின் ஸ்ரான்மோ கிறசன்ற் வீட்டிற்கு சென்றதாகவும் ஆனால் அங்கு காவற்கடமையில் இருந்த சிறிலங்கா காவல்துறையினர், குடும்ப அங்கத்தவர்களை தவிர யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என தமக்கு உயர் வட்டாரங்களில் இருந்து உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறி அவரை அனுமதிக்கவில்லை.

எனினும் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில், எனது நண்பனை நான் சந்திப்பதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என கூச்சலிட்ட பின்னர் காவல்துறையினர் அவரை சந்திப்பதற்கு அனுமதித்தனர்.

இச்சந்திப்பின் போது, ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசினால் விலக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் உறுதியான தீர்மானங்கள் எதுவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆனால் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தால் அதை ஜே.வி.பி எதிர்க்காது எனவும் ஜே.வி.பி மங்களவுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சுகவீனமுற்றிருந்த பேரழிவு நிவாரண அமைச்சர் அமீர் அலியை சந்திக்கச் சென்ற எரிபொருள் வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம் பொளசி மற்றும் தனது இல்லத்திற்கு சென்ற நீதித்துறை அமைச்சர் அமரசிறி தொடங்கொட ஆகியோர் மங்கள சமரவீரவை சந்திக்கச் செல்வதாக தவறாக எண்ணிய காவல்துறையினர் வழிமறித்ததாகவும். எனினும் கடும் வாக்குவாதங்களின் பின்னர் பௌசி மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

[இச்சந்திப்பின் போது, ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசினால் விலக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

என்னது தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஜேவிபி கூட்டணி ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.