Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

Featured Replies

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

NASA

பூமியைப் போன்ற 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.  

ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 

'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் வசிக்கும் சூரியக் குடும்பத்தின் ஆயுள் முடிவுக்கு வந்த பிறகும்கூட,  ட்ராப்பிஸ்ட் - 1 உயிர்ப்போடு இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/world/81739-nasa-says-they-have-found-7-new-earth-like-planets.html

  • தொடங்கியவர்

பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு

 
 

ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

அக்கிரகங்களில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.படத்தின் காப்புரிமைESO Image captionஅக்கிரகங்களில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1. நிறை குறைந்த இந்த நட்சத்திரத்தைத்தான் இந்த ஏழு கிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1 Image captionபூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1

இந்த கிரகங்கள் நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற சஞ்சிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்ஜியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டிராபிஸ்ட்-1 குறித்து நாசா தயாரித்துள்ள பயண போஸ்டர்படத்தின் காப்புரிமைNASA Image captionடிராபிஸ்ட்-1 குறித்து நாசா தயாரித்துள்ள பயண போஸ்டர்

மேலும், இந்த நட்சத்திரம் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராஜ்ஜியம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39061086

  • தொடங்கியவர்

சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழ இன்னொரு கேலக்ஸியா? #TRAPPIST1

ஒரு புதிய அறிவிப்பு வெளியாகவுள்ளது என்ற ஆச்சர்யத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது, நாசா. இதுவரை பல நட்சத்திரங்களையும் கோள்களையும் கண்டுபிடித்து அறிவித்த நாசா, இந்த முறை வெளியிட்டுள்ள செய்தி மிகவும் ஆச்சர்யமானது. பூமியைப்போல அளவுள்ள கோள்கள் ஒரு சூரியனைச் சுற்றிவரும் நிலையில், ஒரு புதிய அமைப்பைக் கண்டறிந்துள்ளது.

ஒற்றை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தக் குடும்பத்தின் நட்சத்திரத்துக்கு,  ட்ராப்பிஸ்ட் என நாசா பெயரிட்டுள்ளது. 7 கோள்களும் பூமியைப் போன்ற ஒரே அளவுடைய கோள்களாக உள்ளன. மேலும் 7 கோள்களுக்குள்ளும் பெரிதாக வித்தியாசமில்லை என்றும், ட்ராப்பிஸ்ட்டின் பார்வையில் அனைத்து கோள்களுமே குறைந்த தூரத்திலேயே இருப்பது ஒருவேளை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்தக் கண்டுபிடிப்பை  சிலியில் உள்ள தொலைநோக்கி மூலமாகவும், நாசாவின் ஸ்பிட்செர் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலமாகவும் கண்டறிந்ததாக நாசா கூறியுள்ளது. இதில், மூன்று கோள்கள் ஹாப்பிட்டபிள் பகுதி எனப்படும் வாழ்வாதாரங்கள் உள்ள பகுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. காரணம், அங்கு மலைகளும்  தண்ணீரும் இருக்கக்கூடும் என்பது தொலைநோக்கிகளின் உதவியால் தெரிவருகிறது.

These 7 Earth-sized planets were seen by @NASASpitzer around a nearby, ultra-cool dwarf star called TRAPPIST-1: https://t.co/G9tW3cJMnVpic.twitter.com/Z6gvaH96Tz

— NASA (@NASA) February 22, 2017

இந்த அமைப்பு, பூமியில் இருந்து 235 ட்ரில்லியன் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. ஒளி ஆண்டுகளோடு ஒப்பிட்டால், சுமார் 40 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தக் கோள்கள் உள்ளன. இந்த விவரங்களை நாசா சிலியில் உள்ள தொலைநோக்கி மூலமாகவே கண்டறிந்துவிட்டது. இதன் தொலைவு, இந்தக் கோள்கள் என்ன அடர்த்தியில் இருக்கும் என்ற தகவல்களையெல்லாம் மேம்படுத்தி, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாசா. சென்ற மார்ச் 2016ல் இருந்து நாசா இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

Take a trip 40 light-years away to one of the seven Earth-sized planets in the TRAPPIST-1 system.

Download poster: https://t.co/t8N2ZsMXWV pic.twitter.com/CMiNUSGppi

— NASA (@NASA) February 23, 2017

இந்தக் கோள்களின் கணிக்கப்பட்ட அடர்த்தியைக்கொண்டு பார்க்கும்போது, ஏழு மற்றும் கடைசிக் கோள், ஒரு பெரிய ஐஸ் கட்டியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மற்ற கோள்கள் பாறைகளால் ஆனது என்றும், தண்ணீர்த் தடங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

nasa_05594.jpg

ட்ராப்பிஸ்ட் 1 நட்சத்திரம், சூரியனிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது, முழுவதும் குளிர்ந்த நிலையில் உள்ள நட்சத்திரம். அதனால், இதற்கு அருகில் உள்ள கோள்கள் குளிர்ந்த நிலையில் இருக்கும். போகப் போக குளிர் குறைந்து காணப்படும் என்றும் கோள்கள் மிக நெருக்கமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. அதாவது, ஒருவர் ஒரு கோளில் நின்றுகொண்டால், அடுத்த கோளின் மேக நகர்வுகளைக்கூடக் காண முடியுமாம். 

 

பூமி மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களைப்போல அல்லாமல், சூரியனோடு ஒரே கோணத்தில் சுழலக்கூடியவையாக உள்ளன. அதாவது, ஒரு பகுதி சூரியனை நோக்கி உள்ளது என்றால், அதே பகுதிதான் இறுதி வரை சூரியனை நோக்கி இருக்கும். அப்படியானால், ஒரு பகுதி பகலாக மட்டுமே இருக்கும்; மற்றோரு பகுதி இரவாக மட்டுமே இருக்கும். அதிவேகமான காற்று, பகல் பகுதியிலிருந்து இரவுப் பகுதிக்கு வீசப்படும். மாறுபட்ட வெப்பநிலைகள் காணப்படும் என்கிறது நாசா.

The TRAPPIST-1 star & 7 Earth-sized planets orbiting it, are relatively close to us; located ~40 light-years away: https://t.co/QS80AnZ2Jg pic.twitter.com/GiKAFXyNvo

— NASA (@NASA) February 22, 2017

ஸ்பிட்செர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள்களை உறுதிசெய்ய, நாசா ட்ரப்பிஸ்ட் 1ஐ தொடர்ந்து 500 மணிநேரம் மேற்பார்வையிட்டு, இன்ஃப்ராரெட் கதிர்கள் மூலம் தொலைவைக் கண்டறிந்தது எனப் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்பே உறுதிசெய்ததாகக் கூறப்படுகிறது. 

இன்னொரு கிரகத்தைக் கண்டறிந்து, அதில் மனிதன் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருந்தாலே, என்றாவது ஒருநாள் பூமியைத் தாண்டி வெளியே ஒரு மனிதனையாவது சந்தித்துவிட மாட்டோமா என்ற ஆவல் மனித இனத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற செய்திகள் இன்னும் அதை அதிகப்படுத்துவதாக உள்ளன. இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடரும்போது, அங்குள்ள மனிதன் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தவனாக இருந்து, நம்மைத் தொடர்புகொண்டால் எப்படி இருக்கும்.

பூமியைப் போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறிவித்த நாசா, இந்தக் கிரகங்களின் 360 டிகிரி வீடியோவையும் வெளியிட்டுள்ளது. (காட்சிகள் சித்திரிக்கப்பட்டவை). இந்த விஷயத்தில், தேடல் தொடரும் என்கிறது நாசா.

Need a recap of today’s TRAPPIST-1 announcement? Learn about these 7 Earth-sized planets orbiting a single star here https://t.co/R9xd5Dytlppic.twitter.com/qWrE4R3flv

http://www.vikatan.com/news/information-technology/81729-nasa-telescope-reveals-largest-batch-of-earth-size-habitable-zone-planets-around-single-star.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.