Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா?

ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் அவுஸ்திரேலிய - ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம்

[Wednesday February 14 2007 07:04:03 AM GMT] [thinakkural.com]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும்.

இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து 2008 நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்கும் பட்சத்தில் அந்நிகழ்வு அமெரிக்க அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் என்பது நிச்சயம்.

வெள்ளைமாளிகையில் ஏற்கனவே 8 வருடகாலம் கணவருடன் வாழ்ந்த ஹிலாரி தேர்தலில் வெற்றிபெற்று உலகில் அதிவல்லமை கொண்ட நாட்டின் ஜனாதிபதியாக அதே மாளிகைக்குள் பிரவேசிப்பாரானால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையைத் தனதாக்கிக் கொள்வார். கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்தால் அதிலும்கூட, 59 வயதான ஹிலாரிக்கு ஒரு `முதல் அந்தஸ்து இருக்கவே செய்யும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாவது முன்னாள் முதல் பெண்மணி என்பதே அந்த அந்தஸ்தாகும்.

சட்டத்துறைப் பேராசியரான ஒபாமா (வயது 45) ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்து தேர்தலிலும் வெற்றிபெறுவாரேயானால், அவர் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்று வரலாறு படைப்பார். நியமனத்தை பெறுவதற்கான தனது பிரசார இயக்கத்தை ஹிலாரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். இரு தடவைகள் நியூயோர்க் மாநில செனட்டராக தெரிவான ஹிலாரி அரசியலில் அனுபவம் கொண்ட கணவரின் ஆலோசனைகளுடன் ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அதேவேளை, பில் கிளின்டனுக்கு பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் ஒரேயொரு கறுப்பின செனட்டரான ஒபாமா கடந்த சனிக்கிழமை தனது பிரசார இயக்கத்தை இலினோயிஸ் மாநிலத்தின் தலைநகர் ஸ்பிறிங்ஃபீல்டில் சட்டப்பேரவைக்கு வெளியே ஆரம்பித்தார்.

தனது பிரசார இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு ஒபாமா தெரிவு செய்த இடத்துக்கும்கூட அமெரிக்க அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. `தனக்குள்ளேயே பிளவுபட்டிருக்கும் சமுதாயம் நிமிர்ந்து நிற்க முடியாது என்று பிரகரடனம் செய்து ஏபிரஹாம் லிங்கன் 1858 இல் எந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உரையாற்றி அடிமைத்தனத்துக்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பித்தாரோ, அதே கட்டிடத்துக்கு வெளியேதான் (அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு 140 வருடங்களுப் பிறகு) ஒபாமா `புதிய தோர் அரசியலுக்கான பக்கமொன்றைப் புரட்டுவோம் என்ற பிரகடனத்துடன் பிரசார இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்.

கறுப்பினத்தவர் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகுவதற்கு போட்டியிடக் கூடியதாக இருக்கின்ற நிலைமை 1950 களில் காணப்பட்ட இன ஒதுக்கல் சர்ச்சைகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றத்தை பிரகாசமாகப் பிரதிபலிக்கின்றபோதிலும், கறுப்பர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா என்ற கேள்வி உலக அரங்கில் இயல்பாகவே கிளம்பியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யக்கூடிய அளவுக்கு அமெரிக்க வெள்ளையர்கள் மத்தியில் ஜனநாயக தாராளவாதம் செழித்து நிற்கிறதா?

ஒபாமாவின் தந்தையார் ஆபிரிக்காவின் கென்யா நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் ஹொனலூலுவில் கன்சாஸைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகளே ஒபாமாவின் தாயார். தந்தையார் ஒரு முஸ்லிம் என்பதால் ஒபாமாவுக்கு ஹுசெய்ன் என்ற ஒரு நடுப்பெயரும் இருக்கிறது. மகனுக்கு இருவயதாக இருக்கும்போதே தம்பதியர் விவாகரத்துச் செய்து கொண்டனர். பின்னர் தாயார் இந்தோனேசியர் ஒருவரை மணந்து ஜகார்த்தாவில் வசித்துவந்தார். வளர்ப்புத் தந்தையாரால் ஒபாமா ஒரு முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டு ஒரு மதரசாவில் குறைந்தது நான்கு வருடங்கள் கல்விகற்றதாகவும் 10 வயதிலேயே அவர் றோனலூலுவுக்குத் திரும்பி தாயார்வழி பாட்டன் பாட்டியுடன் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தனது தாயாரை ஒரு மதசார்பற்ற பெண்மணி என்று வர்ணிக்கும் ஒபாமா இப்போது சிக்காகோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்தவ ஆராதனைகளில் கலந்து கொள்கிறார். `இஸ்லாமியப்பயங்கரவாதம் குறித்தும் `நாகரிகங்களுக்கு இடையேயான மோதல் குறித்தும் பேசுகின்ற இன்றைய அமெரிக்கர்கள் மத்தியில் ஒபாமாவின் பூர்வீகம் குறித்து அவரது அரசியல் எதிரிகள் சர்ச்சைகளைக் கிளப்பி அரசியல் இலாபமடைவதற்கு முயற்சிக்க மாட்டார்களா? எதிர்வரும் நாட்களில் பிரசார இயக்கங்கள் எத்தகைய பாணியில் முன்னெடுக்கப்படும் என்பதை இதுவிடயத்தில் அவதானிக்க வேண்டியிருக்கிறது.

ஈராக் போரைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் ஒபாமா 2008 மார்ச் மாதமளவில் ஈராக் நெருக்கடியில் அமெரிக்க இராணுவத்தின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்புக் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் வெளிப்படுத்தியிருக்கும் பிரதிபலிப்பு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் செனட்டர் ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் என்று ஹோவார்ட் கூறியிருக்கிறார். இதற்கு அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றபோதிலும், தான் கூறியதை தவறு என்று வருத்தம் தெரிவிப்பதற்கு மறுத்ததுடன் மாத்திரம் ஹோவார்ட் நின்றுவிடவில்லை. அவுஸ்திரேலியாவின் நலன்களுக்காக மீண்டும் அவ்வாறு கூறப்போவதாக அவர் சூளுரைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இத்தடவை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டிகளில் உலகம் சர்ச்சைக்குரியதும் சுவாரஸ்யமானதுமான பல விடயங்களை காணக்கூடியதாக இருக்கும்!

நன்றி- தினக்குரல்

யார் வந்தாலும் குணம் மாறாது. பன்றியின் குணம் தான். பன்றியுடன் சென்ற கன்றும் மலம் தின்னும் என்பார்கள் அதுபோல் தான். அமெரிக்காவில் ஜனாதிபதி ஆக வருபவரின் நிலை.

உ+ம். பழைய கறுப்பின வெளிநாட்டு அமைச்சர்.

இப்போதைய வெளிநாட்டு அமைச்சர்.

ஏன் முடியாது அறிமுகத்தில நம்ம லக்கியைப்பாருங்கோ அரச்சண்டுகொண்டுதான் இருக்கிறார். 1000 வெள்ளைகளை மேக்கிறதெண்டால் ஒரு தமிழனால் முடியுது ஆக ஒரு என்னும் மேல அட்வான்ஸா போன ஒரு கருப்பனால ஆள முடியாதா. லக்கியும் கறுப்பு தானே.

ஆஸ்திரேலிய அதிபரின் கூற்று மிகவும் கண்டிக்கத் தக்கது.நிறவெறி பிடித்த வெள்ளை என்பதுதான் உண்மை.இப்படித்தான் அனேகமானவர்கள்.யாராயினும் அமெரிக்கா ஜனாதிபதியாக வரட்டும் தங்கள் நாட்டை பாதுகாக்கட்டும்.அவர்களின் சொந்தபாதுகாப்புக்காக வேறு நாடோ மக்களோ பாதிக்கப்படக்கூடாது.மற்றவர்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் தலைவராக வந்தால் அது ஒரு பகல் கனவு தான்.ஒரு வெள்ளைச்சி வந்தாலே அது பெரிய உலக அதிசயம். இதிலே கறுப்பர் வேறெ வாறதாவது. கடந்த 250 அமெரிக்க வரலாறு இதற்கு சான்று.If it happends it will be a mirracle.

தற்போது வெற்ரிவாய்ப்பு அதிகமாக இருந்தாலும் இவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்களா என்று தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் ஒரு கறுப்பர் தலைவராக வந்தால் அது ஒரு பகல் கனவு தான்.ஒரு வெள்ளைச்சி வந்தாலே அது பெரிய உலக அதிசயம். இதிலே கறுப்பர் வேறெ வாறதாவது. கடந்த 250 years அமெரிக்க வரலாறு இதற்கு சான்று.If it happends it will be a mirracle.

அதுகள் இங்கிலாந்தில உதவாததுகள் என்டு நாடு கடத்தப்பட்ட கிரிமினல் களின் வம்சம் தானே. சிங்களவனைப்போல

ஆஸ்திரேலிய அதிபரின் கூற்று மிகவும் கண்டிக்கத் தக்கது.நிறவெறி பிடித்த வெள்ளை என்பதுதான் உண்மை.இப்படித்தான் அனேகமானவர்கள்.யாராயினும் அமெரிக்கா ஜனாதிபதியாக வரட்டும் தங்கள் நாட்டை பாதுகாக்கட்டும்.அவர்களின் சொந்தபாதுகாப்புக்காக வேறு நாடோ மக்களோ பாதிக்கப்படக்கூடாது.மற்றவர்

ஏன் முடியாது அறிமுகத்தில நம்ம லக்கியைப்பாருங்கோ அரச்சண்டுகொண்டுதான் இருக்கிறார். 1000 வெள்ளைகளை மேக்கிறதெண்டால் ஒரு தமிழனால் முடியுது ஆக ஒரு என்னும் மேல அட்வான்ஸா போன ஒரு கருப்பனால ஆள முடியாதா. லக்கியும் கறுப்பு தானே.

ஏனப்பா லக்கி என சொல்கிறீர்கள் நினைத்ததை முடிப்பவன் எனவே சொல்லுங்கோவன் நீங்கள் லக்கி என களத்தில் எல்லோருக்கும் தெரியும் ஏன் பழையபடி குழம்பாமல் நல்லதாக எழுதுவீர்கள் என நம்புகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.