Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதிர் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
Sri Lanka 338 & 137/1 (43.0 ov)
Bangladesh 467
Sri Lanka lead by 8 runs with 9 wickets remaining
  • தொடங்கியவர்

சதம் கடந்தார் திமுத்; இலங்கை அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கும் பங்களாதேஷ்

 
SL v BAN, 2nd Test, 4th Day
singer-league-2017-728.jpg

P.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று, பங்களாதேஷின் சிறந்த பந்து வீச்சு காரணமாக இலங்கை அணிக்கு எதிரணியைவிட 139   ஓட்டங்களால் மாத்திரமே முன்னிலை பெற முடிந்துள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்டிருந்ததுடன், பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி நல்ல ஆரம்பத்துடன், விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை தமது இரண்டாம் இன்னிங்சுற்காக பெற்றிருந்தது.

போட்டியின்  நான்காம் நாளான இன்று தாம் பங்களாதேஷின் முதலாம் இன்னிங்சின் காரணமாக பின்தங்கியிருந்த 75 ஓட்டங்களினை தாண்டி சவாலான வெற்றி இலக்கொன்றினை வைக்கும் நோக்கத்துடன், களத்தில் நின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க (25) மற்றும் திமுத் கருணாரத்ன (25) ஆகியோர் ஒரு சிறப்பான நாளினை எதிர் நோக்கிய வண்ணம் போட்டியினை ஆரம்பித்தனர்.

எனினும், இன்றைய நாளில் வீசப்பட்ட இரண்டாவது ஓவரில் துல்லியமான சுழல் பந்துவீச்சின் மூலம் உபுல் தரங்கவை மெஹதி ஹஸன் போல்ட் செய்து அதிரடி ஆரம்பத்தினை பங்களாதேஷ் அணிக்குப் பெற்றுத்தந்தார்.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோன, உபுல் தரங்க இன்றைய நாளில் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் குவித்து மொத்தமாக 26 ஓட்டங்களுடன் ஓய்வறையை நோக்கி சென்றார்.

இதனையடுத்து களம் நுழைந்த குசல் மெண்டிஸ், கருணாரத்னவுடன் கைகோர்த்து பங்களாதேஷின் பந்துகளை தடுத்தாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையின் மந்த கதியில் கட்டியெழுப்பியதுடன், போட்டியின் மதிய போசண இடைவேளை வரை இருவரும் ஆட்டமிழக்காது பங்களாதேஷ் அணி முதலாம் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த ஓட்டங்களையும் (129) தாண்டினர்.

மதிய போசண இடைவேளைக்குப்பின், பங்களாதேஷிற்கு வெற்றி இலக்கு ஒன்றினை வைக்க களம் நுழைந்த குசல் மெண்டிஸ், பங்களாதேஷின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் மூலம் விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீமிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார்.

குசல் மெண்டிஸ் இரண்டாம் விக்கெட்டிற்காக வலுவான இணைப்பாட்டம் (86)  ஒன்றினை அரைச்சதம் கடந்து நின்ற திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்து வழங்கியதோடு 91 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36  ஓட்டங்களினை குவித்திருந்தார்.

மூன்றாம் நடுவர் வரை சென்ற மெண்டிசின் ஆட்டமிழப்பு போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது.

இதனையடுத்து முதலாம் இன்னிங்சில் சதமடித்த சந்திமால் களம் நுழைந்து இலங்கை அணி, 160 ஓட்டங்களினை கடந்திருந்த வேளையில் மீண்டும் பந்து வீசிய முஸ்தபிசுர் ரஹ்மானினால், அணித்தலைவர் ரஹீமிடம் திரும்பவும் பிடிகொடுத்து வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்ன களத்தில் நிற்க, தொடர்ந்து ஆடுகளம் விரைந்த துடுப்பாட்ட வீரர்களான அசேல குணரத்தன (7), தனன்ஞய டி சில்வா (0), நிரோஷன் திக்வெல்ல (5) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் மூலம் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி, போட்டியின் தேநீர் இடைவேளைக்குள் மொத்தமாக, 62 ஓட்டங்களினை மாத்திரம் கொடுத்து இலங்கையின் முக்கியமான 5 விக்கெட்டுகளை சாய்த்து இன்றைய நாளிற்குரிய முழு ஆதிக்கத்தையும் தன்னதகத்தே எடுத்துக்கொண்டது.

தேநீர் இடைவேளைக்கு முன்பாக பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களினை சமாளித்து ஆடியிருந்த திமுத் கருணாரத்ன தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து இலங்கை அணியின் ஓட்டக்குவிப்பில் பெரும் பங்கிற்கு சொந்தக்காரராகி இருந்தார்.

பின்னர், களத்ததிற்கு வந்த தில்ருவான் பெரேரா உடன் கூட்டுச்சேர்ந்த கருணாரத்தன போட்டியின் மூன்றாம் இடைவெளியில் எடுக்கப்பட்ட புதிய பந்தில் செளம்யா சர்க்கர் எடுத்த கச்சிதமான பிடியெடுப்பு மூலம் சகீப் அல் ஹஸனினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.

இதனால், தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இலங்கை சார்பாக அரைச்சதம் எட்டியிருந்த ஒரே வீரரான திமுத், இப்போட்டியில் நீண்ட நேர போராட்டம் ஒன்றை வெளிப்படுத்தி 244 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 126 ஓட்டங்களினை குவித்து தனது துடுப்பாட்டத்தினை முடித்துக்கொண்டார்.

பின்னர், பங்களாதேஷ் அணியின் பந்துகளை தடுத்தாடிய தில்ருவான் பெரேரா உடன் சேர்ந்த இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இலங்கையின் மத்திய வரிசை வீரர்களை விட அதிகமாக ஓட்டங்களை (9) பெற்று ஆட்டமிழந்தார்.

முடிவில், தில்ருவான் பெரேராவின் சிறந்த தடுப்பாட்டத்துடன் இன்றைய நாள் நிறைவில் இலங்கை அணி, 8  விக்கெட்டுகளை இழந்து 100  ஓவர்களிற்கு 268 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

களத்தில் தில்ருவான் பெரேரா 26 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 16  ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.

மொசதிக் ஹொசைன் வீசிய இன்றைய நாளின் இறுதிப்பந்தில் பங்களாதேஷ் அணி விக்கெட் ஒன்றிற்கான (லக்மால்) முறைப்பாடொன்றினை மூன்றாம் நடுவரிற்குச் செய்திருந்தும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியினை வீழ்த்தாத பங்களாதேஷ் அணி, தாம் விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் அதிசிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டி இலங்கை அணியை வெல்லும் சந்தர்ப்பம் ஒன்றினைப் பெற்றுள்ளது.

இன்றைய நாளில், பங்களாதேஷ் அணி சார்பாக சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.

 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: வெற்றி பெறுமா வங்காள தேசம்?

 

 
 

கொழும்பு டெஸ்டில் நான்காவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 139 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வங்காள தேசம் வெற்றியை ருசிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 
 
 
 
பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: வெற்றி பெறுமா வங்காள தேசம்?
 
இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 338 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் சண்டிமல் (138) சதம் அடித்தார். வங்காள தேச அணி சார்பில் மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி 467 ரன்கள் குவித்தது. சாஹிப் அல் ஹசன் 116 ரன்கள் சேர்த்தார். புதுமுக வீரர் மொசாடெக் ஹொசைன் 75 ரன்கள் குவித்தார். இலங்கை அணி சார்பில் ஹெராத், சண்டகான் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

வங்காள தேசம் அணி முதல் இன்னிங்சில் 129 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்திருந்தது. கருணாரத்னே 25 ரன்னுடனும், உபுல் தரங்கா 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

CBAB28EC-7EBA-4D0A-8E27-48F3A2924911_L_s

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. உபுல் தரங்கா மேலும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, 26 ரன்னில் மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து குசால் மெண்டிஸ் களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக தொடக்க வீரர் கருணாரத்னே வெகுசிறப்பாக ஆடினார். மெண்டிஸ் 36 ரன்னில் வெளியேறினார். அதன்பின் இலங்கை விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஆனால் கருணாரத்னே தன்னம்பிக்கையுடன் விளையாடி 126 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இவரது சதத்தால் 4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்டாபிஜூர் ரஹ்மான், சாஹிப் அல் ஹசன் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

637F81F3-75F2-42C0-885E-840164BD6026_L_s

தற்போது வரை இலங்கை அணி 139 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதும், 2 விக்கெட்டுக்களை விரைவில் கைப்பற்றி 150 ரன்னிற்குள் இலங்கையை சுருட்டினால், வங்காள தேசம் அணி 150 ரன்களைதான் சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஐந்தாவது நாள் ஆடுகளம் கடினமாக இருந்தாலும், தாக்குப்பிடித்து 150 ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளைய ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/18211326/1074610/colombo-test-Sri-Lanka-lead-by-139-runs-with-2-wickets.vpf

  • தொடங்கியவர்

மீண்டும் சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் வீரர்களுக்கும் இடையே மோதல்

Published by MD.Lucias on 2017-03-19 13:42:06

 

 

 

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இடையில் மீண்டும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.new-000_MR9HC.jpg

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் (16ஆம் திகதி) ஆட்டத்தில் இறுதியாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரரான சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் அணி வீரரான ஷகிப் அல் ஹசனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.New-000_MR9KS.jpg

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாளான நேற்றைய(18) ஆட்டத்தின் போதும் சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் பந்தை எதிர்கொண்ட சுரங்க லக்மால் ஆடுகளத்தில் ஓடியதால் ஷகிப் அல் ஹசன் லக்மாலை திட்டினார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட நடுவர்கள் தலையிட்டு நிறுத்தினர்.New-000_MR9HA.jpg

இந்நிலையில் நேற்று இரண்டாம் இன்னிங்ஸில் 91.3 ஓவரை, லக்மால் எதிர்கொண்ட போது இரு அணி வீரர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடுவர்களை தலையிட்டு அதனை நிறுத்தியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/17956

Sri Lanka 338 & 319
Bangladesh 467 & 191/6 (57.5 ov)
Bangladesh won by 4 wickets
  • தொடங்கியவர்

பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் பொன்னான நாள் : தோல்வியை தழுவியது இலங்கை

Published by Gnanaprabu on 2017-03-19 17:29:55

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

SLvsBAN-000_MS8SM.jpg

இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு நூறாவது போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கில் விளையாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுகளால் இலங்கையினை வீழ்த்தி தனது வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியினை பதிவுசெய்தது.

இதற்கு முன்னர் ஒரு போதும் பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கையை அணியினை வெற்றிகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பிரதான மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்களாக இலங்கை வீரர்களாக சந்திக ஹத்துருசிங்க மற்றும் திலான் சமரவீர ஆகியோர் செயற்படுகின்றனர். 

SLvsBAN-000_MS8TE.jpg

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்து களமிறங்கியது. அதன்படி முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.அதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 467 ஓட்டங்களை பெற்று கொண்டது. 

SLvsBAN-000_MS8U6.jpg

தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணியினை பங்களாதேஷின் பந்து வீச்சாளர்கள் தடுமாற செய்ய சகல விக்கட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 126 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.

SLvsBAN-000_MS8UF.jpg

இதன்படி 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி கடைசி நாளான இன்று களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பாலின் 82 ஓட்டங்களினால் பலமடைந்து 6 விக்கட்டுக்களை இழந்து தனது வரலாற்று போட்டியில் வரலாற்று சாதனையினை படைத்துள்ளமை பங்களாதேஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SLvsBAN-000_MS8UF.jpg

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அடைந்த வெற்றியினால் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என பங்களாதேஷ் அணி சமநிலை செய்துள்ளது.போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டார்.

SLvsBAN-000_MS93U.jpg

http://www.virakesari.lk/article/17967

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.