Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு நாடகமா?

Featured Replies

கேப்­பாப்புலவு காணி விடு­விப்பு நாடகமா?

 

நாடெங்­கிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கில் போராட்­டங்­களையும் ஆர்ப்­பாட்­டங்­களையும் உண்­ணா­வி­ரத நிகழ்ச்­சி­களையும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களையும் மக்கள் தாமா­கவே முன்­வந்து அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நடத்திக் கொண்­டி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் கேப்­பாப்­புலவு மக்­களின் காணி­களை திரும்­பவும் கைய­ளிக்க முடியும் என்ற செய்தி தலைந­கரில் இருந்து வரும் பத்­தி­ரி­கை­களில் முன் பக்கச் செய்­தி­யாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­செய்­தியை வாசித்­த­வர்கள் கேப்­பா­ப்புலவு மக்­களின் போராட்டம் வெற்­றியைத் தந்­துள்­ளது, இனி­யா­வது அப்­ப­குதி வாழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ்க்கை நடத்­தலாம் என்று ஆறுதல் பெரு­மூச்சு விட்­டனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊன்­று­கோ­லாக விளங்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பிர­மு­கர்கள் இதனை சிலா­கித்து தங்­க­ளு­டைய சாத­னை­யாக சித்­த­ரித்து அறிக்­கை­களை தயா­ரித்­தனர். எனினும் சூட்­டோடு சூடாக கேப்­பா­ப்புலவு பிர­தே­சத்­திற்கு நேரில் சென்று பார்த்­த­வுடன் தான் உண்மை நில­வரம் விளங்­கி­யது. 

பல்­லாண்டு கால­மாக கேப்­பா­ப்புலவு மக்­களின் காணி­களை கப­ளீகரம் செய்து அம்­மக்­களின் வாழ்­வா­த­ாரங்­களை சூறை­யாடி இயற்கை வளங்­களை இல்­லாதொழித்து வளமும் செழு­மையும் நிறைந்த அக்­கா­ணி­களில் தாங்­களே தோட்­டமும் பயிரும் செய்து வந்த இரா­ணுவ படை­யினர் அவ்­வ­ளவு எளி­தாக இக்­கா­ணி­களை விட்­டு­விட மாட்­டார்கள் என்ற உண்மை விளங்­கி­யது. நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் (ஏறக்­கு­றைய 520 ஏக்கர்) விஸ்­தீ­ர­ணத்தைக் கொண்ட இக்­கா­ணியில் வெறு­மனே 42 ஏக்கர் காணியை மட்டும் விடு­வித்து மிகுதி நிலத்தை நிரந்­த­ர­மாக கைய­கப்­ப­டுத்தும்  நோக்­கு­டனும் ஜெனிவா விவா­தங்கள் ஆரம்­பித்­துள்ள இவ்­வே­ளையில் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு தவ­றான சமிக்­ஞைகள் கொடுத்து செய்­தி­ருக்கும் ஒரு நட­வ­டிக்­கையே இது என்­பது புல­னா­கி­யது. அர­சாங்­கத்­திற்கு வால்­பி­டிக்கும் தமிழ் அர­சியல் கட்­சி­களும் குழுக்­களும் இதை ஒரு வெற்­றி­யாக வெளிப்­ப­டுத்தி மக்­களின் போராட்ட உணர்­வு­களை மழுங்­க­டிப்­ப­தற்கு தயா­ராகி வரு­கி­றார்கள். 

முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் கடந்த 2 ஆம்

திகதி ஆட்­கொ­ணர்வு வழக்கு முடிவுற்றதன்

பின்னர் இறுதி யுத்தத்தில் சர­ண­டைந்து

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுடன் கிளிநொச்சி செல்லும் வழியில்

கேப்­பா­ப்புலவு மக்கள், தங்கள் காணிகள் விடு­விக்­கப்­பட்ட பின் எவ்­வாறு இருக்­கி­றார்கள் என்­பதை அறியும் விருப்­புடன் அங்கு சென்றிருந் தோம். ஒட்­டி­சுட்டான் நெடுஞ்­சா­லை­யி­லி­ருந்து பிரிந்து வற்­றாப்­ப­ளைக்கு செல்லும் வீதியில்  20 கிலோ மீற்றர்  கடந்து குறித்த இடத்­திற்கு 1 கி.மீ. தொலைவே இருக்கும் போது ஒரு இரா­ணுவ தடை முகாம் தென்­பட்­டது. அதி­லி­ருந்து சுற்று வழி­யாக மண்­பா­தையின் ஊடாக 4 கி.மீ. செல்­லு­மாறு கூறப்­பட்­டது. போகும் வழி­யெல்லாம் இரா­ணுவ அரண்­களும் கருங்கல் சுற்று மதில்­களும் பாரிய முகப்­பு­களும் வாயிற்கதவுகளும் ஆக்­கி­ர­மித்துக் கொண்டு இருந்தன. எனினும் உள்­பக்கம் நோக்­கி­ய­போது பெரிய கட்­ட­டங்கள் அமைந்த­தாக தெரி­ய­வில்லை. பூக்­க­ன்­று­களும் தோட்­டப்­ப­யிர்­களும் விளை­யாட்டு மைதானங்­க­ளுமே தென் பட்­டன. ஓரி­டத்தில் ஆகா­யப்­படை அதி­கா­ரி­களின் விடுறை இல்லம் (AIRMEN HOLIDAY HOME) என்ற பெய­ரி­டப்­பட்ட மதில் முகப்பைக் கண்­

ணுற்றோம். யாரு­டைய காணியை ஆக்­கி­ர­மித்து யார் விடு­மு­றையை உல்லாச வச­தி­க­ளுடன் அனு­ப­விக்­கி­றார்கள் என்ற ஆதங்கம் யாவர் மன­திலும் எழுந்­தது. இறு­தி­யாக குறித்த இடத்தை அடைந்த போது வீதியின் ஒரு மருங்கில் கிட்­டத்­தட்ட 100 பேர் அளவில் மக்கள் இன்­னமும் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. உங்­க­ளு­டைய காணி­களைத் தான் விடு­வித்­துள்­ளார்­களே, இன்னும் என்ன போராட்டம் எனக் கேட்ட போது அவர்கள் விரக்­தி­யு­டனும் விச­னத்­து­டனும் ஆத்­தி­ரத்­து­டனும் பதில் அளித்­தார்கள். இது வெறும் கண்­து­டைப்பு. வெறும் 42 ஏக்கர் நிலத்தை வேண்டா வெறுப்­பா­கவும் காலம் தாழ்த்­தியும் விடு­வித்து விட்டு 500 ஏக்­க­ரையும் விடு­வித்த மாதிரி அர­சாங்கம் நாடகம் ஆடு­கி­றது என ஆக்­ரோ­ஷத்­துடன் அம்­மக்கள் தெரி­வித்­தார்கள். அவர்கள் காட்­டிய திசையில் பாரிய மதி­லுடன் கூடிய வாயிற்கதவு காணப்­பட்­டது. காவ­லுக்கு இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்டு இருந்­தார்கள். இரா­ணுவ வாகனங்கள், ஜீப், லொறிகள் என்­பன போவதும் வரு­வ­து­மாக இருந்­தன. இவற்­றுக்கு மத்­தியில் கிரா­மத்து மக்கள் சளைக்­காமல் போராடி வரு­வதை உணர முடிந்தது. இந்த பாரிய மதிலின் பின்னால் குறிப்­பிட்டு சொல்லும் படி­யாக கட்­ட­டங்­களோ காரி­யா­ல­யங்­களோ இருந்ததைக் காண முடி­ய­வில்லை. இவை எல்லாம் இவர்­க­ளு­டைய பாரம்­ப­ரிய கிராமங்கள். எங்கள் வீடு­களும் தோட்­டங்­களும் மரங்­களும் பயிர்­களும் இம்­மதில் சுவரின் பின்னே இரு­கின்­றன. 150 குடும்­பங்கள் அங்கே இருந்­தன. அவ்­வ­ளவும் 6 தலை­மு­றைக்கு மேற்­பட்ட உறு­திக்­கா­ணிகள். இதோ இதன் அருகில் தான் எமது மூதா­தை­யரின் சுடு­காடு, உள்ளே ஒரு முருகன் கோவில், மாதா­கோவில் நாங்கள் படித்த பள்­ளிக்­கூடம் மற்றும் வீடுகள், தோட்­டங்கள் இருக்­கின்­றன எனக் காட்­டி­னார்கள். இதில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் 2 ஏக்கர், 3 ஏக்கர், 4,5 ஏக்கர். இருக்கு என்று காட்­டி­னார்கள். அனே­க­மா­ன­வ­ருக்கு கல்­வீ­டுகள் அவற்­றை­சுற்றி தென்­னந்­தோப்பு, வேம்பு, பலா, மா, தேக்கு மரங்கள் இருந்­தன என்­றார்கள். அவற்றின் தற்­போ­தைய கதி? வீடுகள் தரை­மட்­ட­மாக்கப்­பட்­டுள்­ளன. பாட­சா­லைக்­கட்­டடங்களில் பெண் இரா­ணு­வத்­தினர் தங்கி உள்­ளார்கள். கோவில்­களில் பூசை­களோ வழி­பா­டு­களோ இல்லை. அங்­குள்ள பரந்­த­ளவு தென்னந்­தோப்­பு­களை பயன்­ப­டுத்தி இரா­ணுவம் இலாபம் ஈட்­டு­கி­றது. எங்­க­ளுக்­கு­ரிய தென்­னை­ம­ரங்­களில் இருந்து இள­நீரை, தேங்­காய்­களை எங்­க­ளுக்கே விற்று இரா­ணு­வத்­தினர் பணம் சம்­பா­திக்­கின்­றனர். எங்­க­ளது காணியை அண்­மித்த கடல் பரப்பில் கடல் தொழில் செய்து மீன் வளத்தை சுரண்­டு­வ­துடன் எமது வாழ்­வா­தா­ரத்­தையும் நாச­மாக்­கி­விட்­டார்கள். சட்­ட­வி­ரோ­த­மாக டெட்­ட­னேட்டர் பாவித்து மீன் வளம் நச்­சுத்தன்மை அடை­கி­றது என்று பெரு­மூச்­சுடன் கூறினார் ஒரு பெரி­யவர். எங்கள் காணி­களை அடாத்­தாக பிடித்து வைத்துக் கொண்டு வெட்கம் ரோஷம் இல்­லாமல் சம்­பா­தித்து சாப்­பி­டு­கி­றார்கள். இவர்­க­ளுக்கு சூடு சுரணை கிடை­யாதா என அங்கு கூடி இருந்த பெண்­ம­ணிகள் கேட்­டார்கள்.

இப்­பி­ர­தே­சத்தின் சமீ­ப­கால வர­லாற்றைப் கேட்­ட­றிந்த போது, பரம்­பரை பரம்­ப­ரை­யாக இதில் வாழ்ந்­தி­ருந்த மக்கள் யுத்தம் உக்­கிரம் அடைந்த கால­கட்­டத்தில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் தமது பாரம்­ப­ரிய காணி­க­ளையும் இருப்­பு­க­ளையும் விட்டு  இடம்­பெ­யர நேர்ந்தது. யுத்தத்தின் கோரப்­பி­டியில் சிக்கித் தவித்து வன்னி நிலப்­ப­ரப்பில் வாழ்ந்த இதர மக்­களைப் போலவே சொல்­லொணா துய­ரத்­தையும் இழப்­பு­க­ளையும் சந்­தித்த பின்னர் யுத்தத்தின் இறு­தியில் மனிக் பாம் அகதி முகாம்­களில் அடைத்து வைத்­தி­ருக்­கப்­பட்­டார்கள். சர்­வ­தே­சத்தின் நெருக்­குதல் கார­ண­மாக மனிக் பாம் முகாம் மூடப்­பட்ட போது கேப்பாப் புலவு மாதிரிக் கிராமம் எனப் பெய­ரி­டப்­பட்ட இடத்தில் குடி­யமர்த்தி இருந்­தார்கள். இம்­மா­திரி குடி­யி­ருப்பில் ஒவ்­வொரு குடும்­பத்­திற்கும் 20 பேர்ச் காணி கொடுக்­கப்­பட்­டன. ஏக்கர் கணக்கு காணி­களில் குடி­யி­ருந்து பழக்­கப்­பட்ட எங்­க­ளுக்கு இந்த 20 பேர்ச் காணி­களில் வாழ்­வது சிரம­மாக உள்­ளது. நக­ரங்­களில் வாழ்­ப­வர்கள் தான் பேர்ச் கணக்கில் சிறிய நிலப்­ப­ரப்பில் வாழ்­ப­வர்கள். கிரா­மத்து மக்­க­ளா­கிய நாங்கள் இதற்கு பழக்­கப்­பட்­டவ ர்கள் அல்ல. தோட்டம் துரவு, தென்­னம்­தோப்பு, ஆடு, மாடு, கோழி, கால்நடைகள் என்பன எங்கள் வாழ்­வுடன் பின்னிப் பிணைந்­தவை என்­றார்கள். இவற்றைக் கேள்வியுற்ற போது மூன்று நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்க பழங்­குடி மக்­களின் நிலங்­களை அப­க­ரிக்க வந்த ஜரோப்­பிய ஆக்­கி­ர­மிப்­பா­ள­ரைப்­பார்த்து செவ்­விந்­திய பழங்­குடி மக்­களின் தலை­வ­ரான சியற்றில் (Chief SEATTLE) கூறிய வார்த்தைகள் நினை­வுக்கு வந்­தன. நிலம் எங்­க­ளுக்கு சொந்­த­மா­னது எனக் கூற முடி­யுமா? உண்­மையில் நிலத்­திற்கு நாங்கள் தான் உரி­மை­யாக்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பதே உண்மை. மண்ணில் இருந்து எம்மை பிரிக்­க­மு­டி­யாது. (“How can we say we own the land? How can we own something that will outlive us ? Truly , it's not we who own the land: rather it is the land which owns us “- chief Seattle (1786-–1866)) இதி­லி­ருந்து தங்கள் பாரம்­ப­ரிய நிலத்தின் மீது இந்த மண்ணைச் சேர்ந்த இம்­மக்கள் கொண்­டுள்ள பாசப்­பி­ணைப்பும் அபி­மா­னமும் நன்கு புல­னா­கின்­றது. எங்கள் சொந்த மண்ணில் குடி­யே­றி­விட்டால் யாரு­டைய தயவும் எங்­க­ளுக்கு தேவை­யில்லை. நாங்­களே சுய­ம­ரி­யா­தை­யு­டனும் தன்­னி­றை­வு­டனும் வாழ­மு­டியும் என்று அப­ரி­மி­த­மான தன்­னம்­பிக்­கை­யு­டனும் ஆக்­­ரோ­ஷத்­து­டனும் முழக்­க­மிட்­டார்கள். அக்கம் பக்­கத்தில் இரா­ணுவ வீரர்­களின் நட­மாட்டம் வெகு­வாக காணப்­பட்­டாலும் அதனை சற்றும் சட்டை செய்­யாமல் துணி­வுடன் பேசி­னார்கள். இவர்­க­ளு­டைய அச­ராத தன்­னம்­பிக்கை எங்­க­ளுக்கே மலைப்­பாக இருந்தது. 

கொதிக்கும் வெயி­லிலும் நிலை குலைய­வைக்கும் மழை­யையும் பொருட்படுத்­தாது இரவும் பகலும் ஆண்கள் பெண்கள், சிறு­வர்கள், முதி­யோர்கள், நடுத்­தர வய­தினர் என தங்கள் உரி­மைக்கு போராடும் இம் மக்கள் எழுச்சி நட­வ­டிக்­கை­களை கண்டு பெரு­மிதம் கொள்ளும் இதே நேரத்தில் இம்­மக்கள் உட்­பட வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று பத­வி­களில் அமர்ந்­துள்ள மக்கள் பிரதி நிதிகள் தங்­க­ளுக்கு வாக்க­ளித்த மக்களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­காமல் அம்­போ­என்று மக்களை நிர்க்­க­தி­யாக விட்­டது தான் மனதை நெரு­டு­கி­றது. கேப்­பாப்புலவு மக்­களும் இக்­க­ருத்­தி­னையே தங்கள் ஒளிவுமறை­வற்ற பேச்­சு­களால் பிர­திப லிக்­கி­றார்கள். 

இந்த இரா­ணுவ முகப்பில் காவல் காக்கும் சிப்­பாய்­க­ளிடம் சென்று நாங்கள் உள்­ளே­வந்து இந்த காணி­களை பார்­வை­யிட முடி­யுமா எனக்­கேட்ட போது அவர்கள் வின­ய­மா­கவும் பெள­வி­ய­மா­கவும் எங்­க­ளுக்கு மேலி­டத்தில் உத்­த­ரவு வந்தால் காணியை விட்டு விடு­வ­தா­கவும் தற்­போ­தைய நில­வ­ரத்தை சரி­வர அறிய வேண்­டு­மானால் அர­சாங்க அதி­பரை தொடர்பு கொள்­ளு­மாறு மிகுந்த மரி­யா­தை­யுடன் அறியத் தந்­தார்கள். இதற்கு மேலும் அவர்­க­ளுடன் விவா­திக்­காமல் திரும்­பவும் மக்கள் கூட­ாரத்­திற்கே வந்து சேர்ந்தோம். சிறிய கால அள­வுக்குள் நாம் கேப்­பா­ப்புலவு மக்­களை சந்­தித்து இருந்­தாலும் அம்­மக்களின் உணர்­வு­கள், கோரிக்­கைகள், சூழ் நிலைகள் என்­பன அவர்­க­ளுடன் காலத்­தையும் கடந்த உணர்வலை­க­ளையும் பாசப்­பி­ணைப்­பி­னையும் தோற்­று­வித்து இருந்­தன. எங்­க­ளுடன் வந்திருந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களும் மனம் நெகிழ்ந்து இருந்­தார்கள். எங்­களை உள­மார வர­வேற்று தங்கள் உள்­ளக்­கி­டக்­கையை தெரி­வித்த இம்­மக்­க­ளிடம் இருந்து கனத்த இத­யத்­துடன் விடை பெற்றோம்.

அடுத்­தாக அர­சாங்­கத்­திடம் இருந்து விடு­பட்ட 42 ஏக்கர் காணிக்­காக போராட்டம் நடத்­திய பிலவுக்­கு­டி­யி­ருப்பு அண்­மையில் தான் இருக்­கி­றது. அங்கு சென்­ற­போது ஒவ்­வொ­ரு­வரும் தங்கள் தங்கள் காணி­களை துப்­ப­ுரவு செய்­வ­திலும் தற்­கா­லிக குடில்­களை அமைப்­ப­தையும் அவ­தா­னித்தோம். தங்கள் காணி­களில் அமைந்திருந்த வீடுகள் தரை­மட்டம் ஆக்­கப்பட்­டி­ருப்­பதை காண்­பித்­தார்கள். வெளி­யா­ரது எந்த ஒரு உத­வி­யையும் எதிர்­பா­ராது தங்கள் வாழ்க்­கையை முன்­னெ­டுக்க துணிந்து நிற்கும் இவர்­களை பாராட்­டு­வ­தற்கு வார்த்­தைகள் இல்லை.

 இருந்த போதிலும் உங்­க­ளது வீடு­க­ளையும் காணி­க­ளையும் நிர்­மூ­ல­மாக்கி காணி­களின் பலன்­களை அனு­ப­வித்து வந்த இலங்கை இரா­ணு­வத்­தி­டமும் இலங்கை அர­சாங்­கத்­தி­டமும் கடந்த பல வரு­டங்­க­ளாக நீங்கள் பட்ட இழப்­பு­க­ளுக்கு நஷ்ட ஈட்டு தொகையைப் பெற்றுக் கொள்ள உங்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது என்ற எண்­ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விட்டு விடை­பெற்றோம். இவ்­வ­ளவு நேரமும் எங்கள் வாக­னத்தை முன்னும் பின்­னு­மாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்­தே­வந்­தனர். அவ்­விரு இளைஞர்களும் சி.ஐ.டி. யினர் என மக்கள் தெரிவித்தார்கள். 

அங்கு எவரும் சி.ஐ.டி. யினரைக் கண்டு அச்சப்பட்டதாக தெரியவில்லை. இன்றைய தினம் நேரில் பிரதேசத்தை பார்வையிட்டதிலும் மக்களுடன் அளவளாவியதில் இருந்து தெரிய வந்தது என்னவென்றால் இந்த இராணுவம் எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபடும் தேவை இருக்கவில்லை. இவர்களுடைய வியாபார நோக்கத்திற்காகவும் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து வருமா னத்தை அடாத்தாக ஈட்டிக்கொள்வதற்காகவும் மட்டுமே இராணுவம் அங்கு நிலை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

இது மக்களின் உரிமைகளை மீறுவது மட்டுமல்ல மனித நேயத்திற்கு எதிராக அரசாங்கமே மேற்கொள்ளும் நடவ டிக்கையாகவும் இனத்துவேஷத்தின் அடிப் படையில் தமிழ் மக்களுக்கு எதிராக அர சாங்கமே முன்னின்று நடாத்தும் பாரிய உரிமை மறுப்பாகவும் தென்படுகிறது. எனவே சிறிய அளவிலான காணியை விடுவித்து விட்டு முழுவதையும் விடுவித்தது போல் பாசாங்கு நாடகம் நடத்துவது சர்வதேசத்தை ஏமாற்றி திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படவேண்டும். இதற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் சிலர் துணைபோவது வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரிய விடய மாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-04#page-5

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.