Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பங்களிப்பிருந்த போதிலும் தீர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை

Featured Replies

Page-20-5672011dc320c683d8dfd2be27566cfd

 

இந்தியாவின் பங்களிப்பிருந்த போதிலும் தீர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை

 

(நேற்றைய தொடர்ச்சி...)

2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய பிர­தமர் மன்­மோகன் சிங் கூறி­யவை இவைதான். 

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா லோக்சபாவில் வெளியிட்ட "சூ மொட்டு" (Suo Motu) அறிக்­கையில் கூறி­ய­வையை நான் மேற்கோள் காட்­டு­கின்றேன்.

"இலங்­கையில் மோதல்கள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டமை மூலம், தமி­ழர்கள் உட்­பட இலங்­கையில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளது இது­வரை தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தை­யிட்டு எமது நிலைப்­பாட்டை அர­சாங்கம் தெளிவாக எடுத்துக் கூறி­யுள்­ளது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளியி­டப்­பட்ட கூட்டுப் பத்­தி­ரிகைக் குறிப்பில், உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய செயற்­பா­டு­களை முன்­கொண்டு செல்­வ­தற்­காக அர­சியல் கண்­ணோட்­டத்­துடன் கூடிய மன­மொத்த உள்­ளீர்ப்­பு­டனும், புரிந்­து­ணர்வின் மூல­மா­கவும் இது­வரை தீர்வு காணப்­ப­டா­தி­ருக்கும் விட­யங்­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்­டிய விடயம் தெளிவாகத் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை அர­சாங்­கத்­துக்கும் தமிழ்க் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெறும் கலந்­து­ரை­யாடல் ஊடாக 13 ஆம் திருத்­தத்தில் இருந்து கட்­டி­யெ­ழுப்­பப்­படும் பகிர்வுப் பொதி மூலம் விரை­வா­னதும் உறு­தி­யா­ன­து­மான முன்­னேற்­றத்தைக் காணும் தனது அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பாட்­டையும் அத­னூ­டாக நல்­லி­ணக்­கத்­துக்­கான நிலை­மை­களை உரு­வாக்­கு­வதில் பங்­க­ளிப்புச் செய்­யக்­கூ­டிய வகையில் செயற்­படும் தமது அர­சாங்­கத்தின் உறு­தி­யையும் இலங்­கையின் வெளிவி­வ­கார அமைச்சர் உறு­திப்­ப­டுத்­தினார்.

அண்­மையில் பிர­தமர் கூறி­ய­தன்­படி, இலங்­கையில் தமிழர் சனத்­தொ­கை­யி­ன­ருக்கு நியா­ய­பூர்­வ­மான கவ­லைகள் இருக்­கின்­றன என்­பதும், தமிழ் மக்கள் தாமும் இலங்­கையில் சம­ உ­ரிமை கொண்ட பிர­ஜைகள் என உணரும் வகை­யிலும், கௌர­வத்­து­டனும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் தமது வாழ்வை அமைத்துக் கொள்­ளத்­தக்க வகை­யிலும் நிறுவ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட மறு­சீ­ர­மைப்பு முறை­யொன்றை இலங்கை அரசு முன்­னெ­டுத்துச் செல்­வதை ஊக்­கப்­ப­டுத்­து­வதே எமது அழுத்­த­மாக இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்­சினை தொடர்­பான மேலோட்­ட­மான எமது பார்­வை­யாகும்."

இவ்­வி­ட­யங்­களில் சில­வற்றை நான் பதிவு செய்­து­வைக்க விரும்­பு­கின்றேன். ஏனென்றால் இவ்­வி­ட­யங்­களில் சில­வற்றைப் பற்றித் தெரியா­தி­ருந்­தது. அதனால் இந்த விட­யத்தைப் பதிவு செய்து வைக்க வேண்­டு­மென நான் விரும்­பு­கின்றேன்.

அடுத்­த­தாக கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளியி­டப்­பட்ட பின்னர், 2011, டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி, இந்­தி­யாவின் சார்பில் அதன் பேச்­சாளர் ஒரு­வ­ரினால் ஓர் அறிக்கை வெளியி­டப்­பட்­டது. அவர் கூறி­ய­வற்றை நான் மேற்கோள் காட்­டு­கின்றேன்.

"இந்த விட­யத்தில், அர்த்­த­முள்ள வகையில் அதி­காரப் பகிர்வைச் செய்­வ­தற்கும், உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்­கா­கவும் இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தையும், அதற்கும் அப்பால் செல்­வது தொடர்­பா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட்ட எல்லாக் கட்­சி­க­ளு­டனும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள விரி­வான கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் அர­சியல் செயல்­மு­றை­யொன்றை முன்­னெ­டுக்கும் தனது உறு­திப்­பாடு பற்றிக் கடந்த காலத்தில் பல தட­வை­களில் இலங்கை அர­சாங்கம் எமக்கு உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யுள்­ளது."

அதன்­பி­றகு, இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு வந்தார். அவ்­வேளை இலங்கை வெளிவி­வ­கார அமைச்­சரின் முன்­னி­லையில் அவரால் அறிக்­கை­யொன்று வெளியி­டப்­பட்­டது. 2012 ஆம் ஆண்டு ஜன­வரி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் வெளிவி­வ­கார அமைச்சர் இலங்­கையில் தங்­கி­யி­ருந்தார். அவர் கூறி­ய­வற்­றி­லி­ருந்து நான் மேற்கோள் காட்­டு­கின்றேன்.

"அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வை அடையும் பொருட்டு இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் செய்­யப்­பட்ட 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதன் ஊடா­கவும், அதனை மேலும் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலமும் அர­சியல் தீர்வுச் செயற்­பா­டொன்றை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கு­மான தனது உறு­திப்­பாட்டை இலங்கை அர­சாங்கம் பல தட­வை­களில் எமக்குத் தெரியப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கலந்­து­ரை­யாடல் செயற்­பா­டு­களில் விரை­வான மற்றும் கருத்துச் செறி­வான வகையில் அணுகி முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­மென்றே நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம்."

அதன்­பி­றகு இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் லோக்சபாவில் தெரிவித்த விடயம் பற்றி 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திக­தி 'த ஹிந்து' பத்­தி­ரிகை வெளியிட்ட அறிக்­கை­யி­லி­ருந்து மேற்கோள் காட்­டு­கின்றேன்.

"ஜெனி­வாவில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வையின் 19 ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­வித்தல் தொடர்­பாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்குச் சார்­பாக வாக்­க­ளிக்கும் உறு­திப்­பாட்டை இந்­தியா கொண்­டுள்­ள­தாக பிர­தமர் மன்­மோகன் சிங் திங்கள் அன்று அறி­வித்தார்."

அவர் மேலும் தெரிவித்­த­தா­வது, "இலங்­கையில் வாழும் எதிர்­காலத் தமிழ்ச் சமூகம், சுய­ம­ரி­யாதை, கௌரவம், நீதி, சமத்­துவம் போன்ற அடை­யா­ளங்­க­ளுடன் வாழ்­வதை அடை­யும்­பொ­ருட்டு எமது நோக்­கங்­களை முன்­னெ­டுத்துச் செல்ல நாம் நம்­பிக்கை கொண்­டுள்ளோம்." 

ஆகவே, இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ்­மக்கள் சம அந்­தஸ்­துடன் வாழும் நிலையை அடைந்­து­கொள்­வ­தற்­காக இந்­தியா தமது நோக்­கங்­களை முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்­ளதை, பிரே­ர­ணைக்­கான இந்­தி­யாவின் ஆத­ரவு உறுதி செய்யும் என இந்­தியப் பிர­தமர் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தோடு இலங்கை அர­சாங்கம் சரி­யா­ன­வற்றைச் செய்­வ­தையும் ஊக்­கு­விப்­ப­தா­கவும் உள்­ளது.

2012 ஆம் ஆண் ஜுன் மாதம் 24 ஆம் திகதி 'த நியூ சண்டே எக்ஸ்­பிரஸ்' என்ற பத்­தி­ரி­கையில் வெளியி­டப்­பட்ட கட்­டு­ரை­யொன்று பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது.

"தமிழ் மக்கள் அந்த நாட்டில் சம­மான பிர­சை­க­ளா­கவும் கௌர­வத்­து­டனும் தமது வாழ்வைக் கொண்டு செல்­வ­தற்­கான இய­லு­மையை அடை­வதில் இந்­தியா கொண்­டுள்ள அக்­க­றையின் அதிக முக்­கி­யத்­து­வத்தை பிர­தமர் மீண்டும் ஒரு­முறை கோடிட்டுக் காட்­டி­யுள்ளார். றியோ டி ஜெனி­ரோவில் பத்­தி­ரி­கை­யாளர் மத்­தியில் உரை­யாற்­றும்­போது இந்­திய வெளிவி­வ­கார செய­லாளர் ரஞ்சன் மத்தாய் இதனைக் கூறினார்."

ஆகவே, இது தான் இந்­தி­யாவின் முன்­ன­கர்­வு­களின் நிலை­வரம். இப்­பொ­ழுது நான், இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன் தனது இறு­தி­யான இலங்கை விஜ­யத்­தின்­போது கூறிய விட­யங்­களை ஆராய்­கின்றேன். 2012, ஜுன் மாதம் 30 ஆம் திகதி த ஹிந்து பத்­தி­ரி­கையில் இக்­கட்­டுரை வெளியி­டப்­பட்­டது.

"தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை ஓர் அர­சியல் செயற்­பாட்டின் ஊடா­கவே உள்­ள­டக்க முடியும். இது உள்­ளகச் செயற்­பா­டா­கவே இருந்­தது. நாங்­க­ளும்­கூட அதனைக் கவ­னிக்­கின்றோம். இந்தச் செயற்­பா­டுகள் எங்கள் எல்­லோ­ரு­டனும் தாக்­கங்­களைக் கொண்­டுள்­ளது. அத்­துடன், இது இன்றோ அல்­லது நேற்றோ அல்­லது சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரோ ஆரம்­பித்த விடயம் அல்ல."

இது 60 வரு­டங்­க­ளுக்கு முன்பே ஆரம்­பித்­து­விட்­டது. அது­பற்றி இந்­தி­யா­வுக்கு நன்கு தெரியும். அந்தக் கட்­டுரை மேலும் தெரிவிப்­ப­தா­வது,

"நாங்கள் எதை விரும்­பு­கிறோம் என்­பதை நான் கூறி­விட்டேன். சகல சமூ­கங்­களும் திருப்­தி­ய­டையும் விதத்தில், தமது தலை­வி­தியைத் தீர்­மா­னிக்கும் பொறுப்பு தமது கட்­டுப்­பாட்டின் கீழேயே உள்­ள­தாக உணரும் வகை­யி­லான ஐக்­கிய இலங்­கை­யாகும்."

நான் இவ்­வி­ட­யங்­களை ஆவ­ணப்­ப­டுத்த விரும்­பு­கிறேன். ஏனென்றால், பிரி­வி­டப்­பட முடி­யாத, பிள­வு­ப­டாத ஐக்­கிய இலங்கை என்ற சட்­ட­கத்துள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க விதத்தில் ஓர் அர­சியல் தீர்வைப் பெறும் எமது நோக்­கத்தை அடையும் முயற்­சியில் அயல் நாடான இந்­தி­யாவும் தனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை நீண்­ட­கா­ல­மாக அளித்­து­வரும் போதிலும் நீண்ட செயல்­மு­றை­களூ­டாக நாங்கள் முடி­வின்றிச் சென்­று­கொண்­டி­ருப்­ப­தையும் எமது நோக்­கத்தை இது­வரை அடைய முடி­ய­வில்­லை­யென்­ப­தையும் இந்த நாடு அறி­ய­வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே. இந்­தியா, இலங்­கையின் ஆள்­புல ஒரு­மைப்­பாட்டின் மீது கொண்­டி­ருக்கும் உறு­திப்­பாட்டை மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்தி வந்­துள்­ளது. மேலும், 13 ஆவது திருத்தம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்­ப­துடன், அதனைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலம், தமிழ்­பேசும் மக்கள் தாங்கள் வாழு­கின்ற பிர­தே­சத்தில் தமக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யங்­களில் தமது தலை­வி­தியை நிர்­ண­யித்துக் கொள்ளும் கட்­டுப்­பாடு தம்­மி­டமே இருக்க வேண்டும் என்­ப­தோடு, தமிழ்­பேசும் மக்கள் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் கௌர­வத்­து­டனும் வடக்கு, கிழக்கில் வாழ்­வ­தற்­கான அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வை அடை­வது அவ­சி­ய­மாகும்.

நான் இணைத்­த­லை­மைகள் கூறி­ய­வற்­றுக்குச் செல்­கிறேன். இணைத்­த­லை­மை­க­ளும்­கூட இலங்­கையின் விவ­கா­ரத்தில் முக்­கி­ய­மான வகி­பா­கத்தைத் கொண்­டி­ருந்­தன. ஐரோப்­பிய ஒன்­றியம், நோர்வே, ஜப்பான், ஐக்­கிய அமெரிக்கா என்­பன இணைந்­ததே இணைத்­த­லை­மை­க­ளாகும். 2006, மே மாதம் 30 ஆம் திகதி இணைத்­த­லை­மைகள் கூறி­யவை இது தான். இலங்­கையைப் பற்­றியும், அர­சியல் தீர்வு பற்­றியும் இணைத்­த­லை­மைகள் கூறி­ய­வற்­றி­லி­ருந்து நான் மேற்கோள் காட்­டு­கின்றேன்.

"முஸ்­லிம்கள் உட்­பட சகல இலங்­கை­யர்­க­ளி­னதும் உரி­மை­களை உயர்த்­து­வ­தற்­கான புதிய அர­சியல் முறை­மை­யொன்றை உரு­வாக்கும் காத்­தி­ர­மான அர­சியல் மாற்­றத்­திற்குத் தயாராக இருப்­பதை அது காட்ட வேண்டும். அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தால் சர்­வ­தேச சமூகம் தேவை­யான ஆத­ரவை வழங்கும். அத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொள்­ளா­விட்டால் சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவு இல்­லாமல் போய்­விடும்."

இணைத்­த­லை­மைகள் மேலும் கூறி­ய­தா­வது,

"இலங்­கையில் வாழும் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் உள்ள கணி­ச­மா­னதும், நியா­ய­பூர்­வ­மா­ன­து­மான கவ­லைகள் போதி­ய­ள­வுக்கு இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை."

இதுதான் அவர்கள் கூறி­யது. இப்­பொ­ழுது நான், ஐக்­கிய அமெரிக்­காவின் தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க உதவிச் செய­லாளர்றிச்சாட் ஏ. பவுச்சர் தான் இலங்­கைக்கு மேற்­கொண்ட பல வரு­கை­களில் ஒன்­றின்­போது 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 1 ஆம் திகதி கூறிய கூற்­றி­லி­ருந்து மேற்கோள் காட்­டு­கின்றேன். 

"அர­சாங்கம், எதிர்­கால இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மான சாத­க­மான பார்­வையைக் கொண்­டி­ருக்க வேண்­டு­மென்றும், அத­னூ­டாக அவர்­க­ளு­டைய நியா­ய­பூர்­வ­மான கவ­லைகள் தீர்க்­கப்­பட்டு அவர்­க­ளு­டைய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றும் நாங்கள் கரு­து­கின்றோம். முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷ அதி­கூ­டிய அதி­காரப் பகிர்வு பற்றிப் பிரஸ்­தா­பித்­துள்ளார். முன்­னைய பேச்­சு­வார்த்­தை­களில் சமஷ்டிக் கட்­ட­மைப்­புக்குள் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை பற்­றிய இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும், இலங்கை என்ற ஒரே தேசத்துள் தங்கள் வாழ்­வையும் தலை­வி­தி­யையும் வடக்கு மற்றும் கிழக்கில் தமது கட்­டுப்­பாட்­டுக்குக் கீழ் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்­பிக்­கையை பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும் எண்ணம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது."

உதவி இரா­ஜாங்கச் செய­லாளர் .பவுச்சர் மேலும் பின்­வ­ரு­மாறு கூறினார்.

"தமி­ழீழ விடு­தலைப் புலிகள் பிர­யோ­கித்த முறை­களை நாங்கள் நிரா­க­ரித்­துள்ள போதும் தமிழ் சமூ­கத்­தி­னரால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தன்­படி அவர்­க­ளுக்கு நியா­ய­மான பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதும், தாம் பரம்­ப­ரை­யாக வாழு­கின்ற தமது பிர­தே­சத்தில் தமது வாழ்­வையும் தலை­வி­தி­யையும் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு, தமது தாய­கத்தை ஆளும் நியா­ய­புர்­வ­மான விருப்பம் ஏனை­ய­வர்­க­ளுக்கு இருப்­பதைப் போன்று அவர்­க­ளுக்கும் இருக்­கின்­றது."

இது தான் உதவி இரா­ஜாங்க செய­லாளர் பவுச்சர் கூறி­யது. ஆகவே, ஒரு பக்கம் இந்­தி­யாவும் மறு­பக்கம் இணைத் தலை­மை­களும் அதா­வது, ஐரோப்­பிய ஒன்­றியம், நோர்வே, ஜப்பான், ஐக்­கிய அமெ­ரிக்­காவும் உள்­ளன. ஐக்­கிய அமெரிக்கா தனி­யா­கவும் இவ்­வி­ட­யங்­களைத் தெரிவிக்­கின்­றது. இவை யாரோ ஒரு­வ­ரு­டைய கற்­ப­னை­யி­லி­ருந்து உரு­வான விட­யங்கள் அல்ல என்று நான் கூறு­வதன் காரணம் அது தான். இவை நீண்ட கால­மாக தமிழ்­மக்கள் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் அவர்­க­ளது கவ­லைக்­கு­ரிய விட­யங்­க­ளாகும்.

இந்த விட­யத்தை நான் முடி­வு­றுத்­து­வ­தற்கு முன்னர், இந்திய பிர­தமர் நரேந்­திர மோடி 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி இச் சபையில் உரை­யாற்­றிய போது குறிப்­பிட்ட விட­யத்தை வாசித்துக் காட்ட விரும்­பு­கின்றேன். 2015 மார்ச் மாதம் 13 ஆம் திக­திய ஹன்சாட் அறிக்­கையில் இருந்து காட்­டு­கின்றேன். அது தெரிவிப்­ப­தா­வது,

"இலங்­கையின் முன்­னேற்­றமும் சுபிட்­சமும் இந்­தி­யாவின் பலத்தின் மூலங்­க­ளாகும். ஆகவே, இலங்­கையின் வெற்றி இந்­தி­யா­விற்கும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­ப­தோடு, ஒரு நண்பன் என்ற வகையில் எமது நல்­லா­சிகள் மற்றும் எங்கள் உறு­திப்­பாடும் ஆத­ரவும் இலங்­கை­யோடு இருக்கும் அவை என்றும் உங்­க­ளோடு அவ்­வாறே இருக்கும். ஒரு தேசம் என்­பதை நாம் எந்­த­வ­கையில் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­யுள்ளோம் என்­ப­திலே எமது வெற்றி தங்­கி­யுள்­ளது என்­பதை இந்தப் பிராந்­தி­யத்தில் வாழும் நாங்கள் யாவரும் அறிவோம். இப்­பி­ராந்­தி­யத்தில் நாங்கள் எல்­லோரும், குறிப்­பாக வேறு­பட்ட ஒவ்­வொரு தேசமும், வித்­தி­யா­ச­மான எமது சமூ­கங்­களின் அடை­யாளம், உள்­ளீர்ப்பு, உரிமை, கோரிக்கை, கௌரவம் மற்றும் வாய்ப்­புக்கள் தொடர்­பான பிரச்­சி­னை­களைக் கையாண்டே வந்­துள்ளோம். நாங்கள் இவற்றின் பன்­மு­கப்­பட்ட வெளிப்­பா­டு­களைக் கவ­னித்தே வந்­துள்ளோம். பார­தூ­ரமான வன்­மு­றை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்­கின்றோம் கொடூ­ர­மான பயங்­க­ர­வா­தத்தைச் சந்­தித்­தி­ருக்­கின்றோம். அதே­போல வெற்­றி­க­ர­மான அமைதித் தீர்­வு­க­ளுக்­கான உதா­ர­ணங்­க­ளையும் கொண்­டி­ருக்­கின்றோம். நாங்கள் ஒவ்­வொ­ரு­வரும் இத்­த­கைய சிக்­க­லான பிரச்­சி­னை­களை எங்­க­ளுக்­கு­ரிய வழி­மு­றை­க­ளூடாகக் கையாண்­டி­ருக்­கின்றோம். எவ்­வா­றா­யினும் நாம் அவை­க­ளுடன் இணக்­கப்­பாட்டைக் கண்­டுள்ளோம். எனக்கு ஒன்று மட்டும் ெதளிவாகத் தெரிகின்­றது. அதா­வது, வேறு­பா­டு­கள்­கூட நாடுகள் பல­ம­டை­வ­தற்­கான மூலங்­க­ளா­கின்­றன.

எமது சமூ­கத்தின் எல்லாப் பிரி­வி­ன­ரதும் எதிர்­பார்ப்­புக்­களை நாம் உள்­ள­டக்கிச் செயற்­ப­டும்­போது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் பலத்­தையும் நாடு பெற்றுக் கொள்­கி­றது. மாநி­லங்­க­ளையும் மாவட்­டங்­க­ளையும் கிரா­மங்­க­ளையும் வலு­வூட்­டும்­போது எமது நாட்டை மேலும் மேலும் பல­ம­டையச் செய்­கின்றோம். இதனை நீங்கள் எனது தனிப்­பட்ட சார்புக் கருத்­தாகக் கொள்­ளலாம். நான் ஒரு முத­ல­மைச்­ச­ராக 13 ஆண்­டுகள் இருந்­துள்ளேன். பிர­தம அமைச்­ச­ராக ஒரு வரு­டத்­திற்கும் குறை­வான காலமே சென்­றுள்­ளது.

இன்று எனது முன்­னு­ரிமை, மாநில அர­சு­களைப் பலப்­ப­டுத்­து­வதே. கூட்டுச் சமஷ்டி முறை மீது நம்­பிக்கை கொண்ட ஒரு­வ­னாக நான் உள்ளேன். அதனால் மாநில அர­சு­க­ளுக்கு நாங்கள் மேலும் அதி­கா­ரங்­க­ளையும் வளங்­க­ளையும் பகிர்ந்­த­ளிப்­ப­தோடு தேசிய தீர்­மா­னங்­களை எடுக்­கும்­போது அவர்­க­ளையும் முறைசார் பங்­கா­ளர்­க­ளாக ஆக்­கி­யுள்ளோம்.

இலங்கை கொடூ­ர­மான வன்­மு­றை­க­ளுக்கும் முரண்­பா­டு­க­ளுக்கும் உட்­பட்ட தசாப்­தங்­களைக் கடந்து வந்­துள்­ளது. நீங்கள் பயங்­க­ர­வா­தத்தை வெற்­றி­க­ர­மாகத் தோற்­க­டித்து மோதலை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளீர்கள். இப்­போது நீங்கள், சமூ­கங்­களின் காயங்­களைக் குணப்­ப­டுத்தி அவர்­க­ளு­டைய உள்­ளங்­களை வென்­றெ­டுக்­கக்­கூ­டிய வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மான சந்­தர்ப்­ப­மொன்­றிற்குள் நிலை­கொண்­டுள்­ளீர்கள். இலங்­கையின் அண்­மையத் தேர்­தல்கள் நாட்டின் ஒட்­டு­மொத்தக் குரலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது, நல்­லி­ணக்கம், ஒரு­மைப்­பாடு மற்றும் மாற்­றத்­திற்­கான நம்­பிக்­கையே அது. அண்­மையில் நீங்கள் மேற்­கொண்ட செயற்­பா­டுகள் துணி­க­ர­மா­ன­வை­யா­கவும் பாராட்­டத்­தக்­க­வை­யா­கவும் அமைந்­துள்­ளன. அவை ஒரு புதிய ஆரம்­பத்தைப் பிர­தி­ப­லிக்­கின்­றன.

இலங்­கையின் எதிர்­காலம், ஒரு­மைப்­பாடு, கண்­ணியம், சமா­தானம், அமை­தி­யுடன் கூடிய ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­மான வாய்ப்­பையும் கௌர­வத்­தையும் கொண்­டி­ருக்கும் என்ற நம்­பிக்கை எனக்­குண்டு. அத்­த­கைய நிலையை அடை­யக்­கூ­டிய ஆற்றல் இலங்­கைக்கு உண்டு என நான் நம்­பிக்கை கொள்­கிறேன். இது எமது நாக­ரிக மர­பு­க­ளுடன் வேரூன்­றி­யுள்­ளது. முன்னே செல்­ல­வேண்­டிய பாதையைத் தெரிவு செய்ய வேண்­டிய பொறுப்பு இலங்­கையைச் சார்ந்­த­தென்­ப­தோடு, அத்­த­கைய தெரிவு சமூ­கத்­தி­லுள்ள சகல பிரி­வி­ன­ரையும் மற்றும் நாட்­டி­லுள்ள பல்­வேறு அர­சியல் நீரோட்­டங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான ஒட்­டு­மொத்த கூட்டுப் பொறுப்­பு­டை­ய­தா­கவும் இருக்க வேண்டும். ஆனால், நான் உறு­தி­யாகக் கூறு­வது என்­ன­வென்றால், இலங்­கையின் ஐக்­கியம், ஒரு­மைப்­பாடு என்­பன இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­ன­வை­யாகும். அது எமது அக்­க­றை­யுடன் வேரூன்­றி­யுள்­ளது. அது, இத்­த­கைய நோக்­கத்தின் அடிப்­படை நம்­பிக்­கை­யி­லி­ருந்தே உரு­வா­கி­யுள்­ளது."

இவற்­றை­விட உங்­க­ளுக்கு வேறென்ன வேண்டும்? இந்­தி­யாவின் பிர­தமர் இலங்­கைக்கு வந்து அர­சியல் தீர்வு விட­ய­மாக எமது பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­ய­போது குறிப்­பிட்­ட­வை­களே இவை. ஆகவே, நான் நிறைவு செய்­வ­தற்கு முன்­பாக அண்­மையில் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஒரு பகு­தியை வாசித்துக் காட்ட விரும்­பு­கின்றேன். அது அர­சியல் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிக்கும் இலங்­கையின் உறு­தி­யான நிலைப்­பாட்டை வர­வேற்­ப­துடன் 2015 ஒக்­டோ­பரில் நிறை­வேற்­றப்­பட்ட அதன் 16 ஆவது தீர்­மானம் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்­றது,

"மக்கள் தொகையின் எல்­லோ­ரி­னதும் மனித உரி­மை­களை முழு­மை­யாக அனு­ப­விக்கும் பொருட்டு, இன நல்­லி­ணக்­கத்தின் தவிர்க்க முடி­யாத அம்­ச­மான அர­சியல் அதி­காரப் பகிர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­மான இலங்கை அரசின் உறு­திப்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தோடு, தேவை­யான அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டு­க­ளி­னூ­டாக அர­சியல் தீர்­வொன்றைக் காணும் இலங்கை அரசின் உறு­திப்­பாட்­டையும் வர­வேற்­கின்­றது.

மக்கள் தொகை எல்­லோ­ரி­னதும் மனித உரி­மை­களை முழு­மை­யாக அனு­ப­விப்­பதை உறு­திப்­ப­டுத்­தவும், இன நல்­லி­ணக்­கத்தின் பிரிக்க முடி­யாத அம்­ச­மான அர­சியல் அதி­காரப் பகிர்­வுக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவும், அர­சி­ய­ல­மைப்பு ஊடாக அர­சியல் தீர்­வைக்­காண உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கு­மான உங்கள் உறு­திப்­பாட்டை அது வர­வேற்­கின்­றது."

இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வாக, மாகாண சபைகள் ஆக்­க­பூர்­வ­மாகச் செயற்­ப­டு­வதைத் தற்­போ­தைக்­கான உட­னடிச் செயற்­பா­டாகச் செய்­வ­தற்கு உங்­களை அவர்கள் ஊக்­கு­விக்­கின்­றனர். எனவே நீங்கள், பிராந்­தி­யங்­க­ளுக்கும் ஏனைய மக்­க­ளுக்கும் அர்த்­த­முள்ள வகையில் அதி­காரப் பகிர்வு செய்யும் பொருட்டு அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளீர்கள்.

இலங்­கையின் அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்­பாக இந்­தியா எதனைக் கூறி­யது? இந்­தியா கூறி­ய­வற்­றுக்கு இலங்­கையில் பிர­தி­வெளிப்­பாடு எவ்­வா­றா­னது? இணைத்­த­லை­மைகள் கூறி­யமை என்ன, ஐக்­கிய அமெ­ரிக்கா கூறி­யவை என்ன? ஐக்­கிய நாடுகள் சபையில் கூறப்­பட்­டவை என்ன என்­ப­வற்­றி­லி­ருந்தே நான் இங்கு மேற்கோள் காட்­டினேன். இவ்­வி­ட­யங்­களை எல்லாம் நான் ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்ளேன் என்றால், நாம் தற்­பொ­ழுது அர­சி­ய­ல­மைப்புச் செயல்­மு­றை­யொன்றை முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம் என்­ப­தாலும், இது நேற்றோ அல்­லது அதற்கு முதல் நாளோ ஆரம்­பித்த விடயம் அல்ல என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­தி­ருத்தல் வேண்­டு­மென நான் விரும்­பு­வ­தாலும், இது இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து சிறிது காலத்­துக்குள், அதா­வது 70 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆரம்­பித்த விட­ய­மா­கு­மென்­ப­தா­லுமே. இத்­த­கைய கருத்­துக்கள் சர்­வ­தே­சத்தின் அக்­க­றை­களைச் சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமை­கின்­றன.

புதிய அரசு சில ஆரம்பச் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டது. இந்த அரசு பத­வி­யேற்ற பின்பு வித்­தி­யா­ச­மான எதிர்­பார்ப்­புக்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இத்­த­கைய செயற்­பா­டுகள் உண்­மை­யா­கவும் நோக்கம் நிறை­வேறும் வகை­யிலும் தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட வேண்­டிய தேவை உள்­ளது. இந்த முயற்சி வெற்­றி­ய­டை­வ­தற்கு ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மா­கின்­றது.

இத் தேசியப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாமல் இப்­ப­டியே நீண்ட காலத்­திற்கு நிலைத்­தி­ருக்க முடி­யு­மென நான் எண்­ண­வில்லை. அது இந்த நாட்­டுக்கு நன்­மை­யா­கவும் அமைய மாட்­டாது. இந்த விடயம் சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­மை­யிலும் வேறு வேறு நபர்­களால் வேறு வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் கூறப்­பட்­டுள்ள நிலையில், வன்­மு­றைகள் மீள உரு­வாகும் நிலை­மைக்கு, அதா­வது மேலும் தமி­ழர்கள் கொல்­லப்­ப­டு­கின்ற, தமி­ழர்கள் மேலும் நாட்­டை­விட்டு வெளியே­று­கின்ற நிலை­மைக்கு நாம் செல்­லக்­கூடும் என நான் நினைக்­க­வில்லை. அத்­த­கைய நிலைமை எவ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டவும் மாட்­டாது. நாங்கள் வாழ்ந்து வரு­கின்ற ஆட்­பு­லத்தில், எமது தலை­வி­தியை நாங்­களே தீர்­மா­னித்துக் கொள்ளும் வகை­யிலும், இழந்த சுய­ம­ரி­யா­தை­யையும் கௌர­வத்­தையும் மீளப் பெறும் வகை­யிலும், பிரிக்­கப்­பட முடி­யாத, ஐக்­கி­ய­மான, பிரி­வு­ப­டாத இலங்கை என்ற வரை­ய­றைக்குள் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வைக்­காணும் முயற்­சி­க­ளுக்கு எமது ஒத்­து­ழைப்பை வழங்கத் தயா­ராக உள்ளோம்.

இந்த விட­யத்தைக் கருத்திற் கொள்­ளு­மாறு நாங்கள் அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­கின்றோம். இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் செயல்­களால் 1,500,000 அளவிலான தமி­ழர்கள் நாட்­டை­விட்டு வெளியே­றி­விட்­டனர். மேலும், குறைந்­தது 150,000 அளவிலான தமி­ழர்கள் கொல்­லப்­பட்டு விட்­டனர். படை வீரர்­களும் கொல்­லப்­பட்­டனர் என்­றாலும், எமது போரா­ளி­களும் கொல்­லப்­பட்­டனர், மற்­றைய சாதா­ரண மக்­களும் கொல்­லப்­பட்­டனர். அவற்றை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். ஏனென்றால், அங்கே வன்­முறைச் செயல்கள் நிகழ்ந்­தன. அங்கே ஆயுதப் போராட்­ட­மொன்று நடந்­தது. அந்த ஆயுதப் போராட்டம் நடை­பெற்­ற­மைக்­கான காரணம் பிரச்­சி­னை­க­ளுக்­கான அர­சியல் ரீதி­யான தீர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மை­யி­னா­லாகும். பிரச்­சி­னை­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுகள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடை­பெற்­றி­ருக்க மாட்­டாது.

ஆகவே இந்த விட­யங்­களைக் கருத்­திற்­கொண்டு பிரச்­சி­னை­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தீர்­வு­களை நாம் காண வேண்டும் என நான் கரு­து­கின்றேன்.

மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னங்கள் தொடர்­பாக நீண்­ட­நேரம் பேசு­வ­தற்கே நான் விரும்­பினேன். ஆனால், அதனைச் செய்ய முடி­யா­தென நான் நினைக்­கின்றேன். ஏனென்றால், ஏற்­கெ­னவே எனக்­கு­ரிய நேரத்தில் கணி­ச­மான பகு­தியை நான் எடுத்து விட்­டதால் அதற்­கான போதிய நேரம் கிடைக்­காது.

(தொடரும்...)

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-04#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.