Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால அவகாசத்திற்கான சுமந்திரனின் நியாயப்படுத்தலை நிராகரிக்கின்றோம்

Featured Replies

கால அ­வ­கா­சத்திற்கான சுமந்­தி­ரனின் நியா­யப்­ப­டுத்­தலை நி­ரா­க­ரிக்­கின்றோம்

N-b1eb2353f3b16b0a1b7e5d387c9ab0e6694df874.jpg

 

3 கட்­சி­களின் கருத்­துக்­களை கூட்­ட­மைப்பு புறக்­க­ணிக்­கின்­றது என்­கிறார் சிறி­காந்தா  
(எம்.நியூட்டன்)

அர­சியல் தீர்வைப் பொறுத்­த­மட்டில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது உட­னடிச் சாத்­தியம் இல்லை என்றும் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் இலங்கை அர­சுக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வதை நியா­யப்­ப­டுத்­தியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன்  தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­களை நாம் முற்று முழு­தாக நிரா­க­ரிக்­கின்றோம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லாளர் நாயகம்  ந.சிறி­காந்தா தெரி­வித்­துள்ளார்.  

கூட்­ட­மைப்பின் மூன்று கட்­சி­களின் கருத்­துக்­களைப் புறக்­க­ணித்து தன்­னிச்­சை­யா­கவும் சர்­வா­தி­காரத் தோர­ணை­யிலும் தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்பின் பெயரில் தொடர்ந்து செயற்­படப் போகின்­றது என்றால் அதனை கூட்­ட­மைப்பின் எதிர்­கால நலன் கருதி ஒரு அர­சியல் சவா­லாக எமது கட்சி ஏற்றுக் கொள்­ள­வேண்­டி­யி­ருக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள செய்திக் குறிப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு அர­சியற் தீர்வு காணும் விட­யத்தைப் பொறுத்­த­மட்டில், வடக்கு மாகா­ணமும் கிழக்கு மாகா­ணமும் இணைந்த தமிழ் மொழி வழி மாநி­லத்­துக்கு பூரண அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய சுயாட்சி வேண்டும் என்­பது தான் தமிழ் மக்­களின் அடிப்­படை அர­சியல் கோரிக்­கை­யாகும்.

இந்த அடிப்­படை நிலைப்­பாட்டில் அர­சியல் சம­ர­சத்­திற்கோ அல்­லது சந்­தர்ப்­ப­வாத விட்­டுக்­கொ­டுப்­பிற்கோ இட­மில்லை. இந்த நிலைப்­பாடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் அதற்கு முன்பு நிகழ்ந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளிலும் தமிழ் மக்கள் முன் வைக்­கப்­பட்டு அவர்­களின் மகத்­தான ஆணையை பெற்­றுள்­ளது.

ஆயினும் இரண்டு பெரும் சிங்­கள பேரி­ன­வாத கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருக்கும் இன்­றைய அர­சாங்கம், இலங்கைத் தீவு ஒரே நாடு என்ற வரை­ய­றைக்குள் ஒற்­றை­யாட்சி முறை­யினை அகற்றி தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களின் மரபு வழித் தாய­கத்தில் சுயாட்­சியை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இல்லை.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பி­லான தீர்­மா­னத்தின் பிர­காரம், வெ ளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பை கொண்ட கலப்புப் பொறி­மு­றை­யி­லான போர்க்­குற்ற நீதி விசா­ர­ணையை ஜனா­தி­ப­தியும் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தி­னரும் திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்து நிற்­கின்­றனர்.

ஆனால் அதே­நே­ரத்தில் போர்க்­குற்ற விசா­ர­ணைக்­காக அர­சாங்­கத்­தினால் கோரப்­படும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பெயரில் அதன் தலைவர் சம்­பந்­தனும் பேச்­சாளர் சுமந்­தி­ரனும் ஆத­ரித்து நிற்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்­சி­களின் நிலைப்­பாட்­டிற்கு முற்­றிலும் எதி­ரா­னது.

அது­மட்­டு­மன்றி போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு கோரப்­படும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை ஆட்­சே­பித்து ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் மன்­றத்­திற்கு மகஜர் ஒன்றை சமர்ப்­பித்­தி­ருக்கும் கூட்­ட­மைப்பின் சக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 11 பேரின் அர­சியல் விவே­கத்தை கேலி செய்யும் விதத்­திலும் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­தி­ரனால் கருத்­துக்கள் வெ ளியி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்­தைக்­கூட்டி முடிவு எதுவும் எடுக்­காமல் கூட்­ட­மைப்பின் பெயரில் மிக பார­தூ­ர­மான ஒரு நிலைப்­பாடு முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது கூட்­ட­மைப்பின் எதிர்­கா­லத்­தையே கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

அத்­துடன் பாதிக்­கப்­பட்ட நிலையில் நீதி­கோரி நிற்கும் வழக்­காளி ஒருவர், குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்கும் எதி­ரிக்கு ஆத­ர­வாக பேசு­வ­தைப்­போல போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் இலங்கை அர­சுக்கு ஆத­ர­வாக மறை­மு­க­மான முறையில் வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­நே­ரத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் எதிர்­ம­றை­யான ஒரு அர­சியல் கருத்­து­ரு­வாக்­கத்தை தமிழ் மக்கள் மத்­தியில் கொண்­டு­வரும் தோர­ணையில் பரப்­பு­ரைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் இப்­பொ­ழுது என்­னதான் நடந்து கொண்டு இருக்­கின்­றது என்ற கேள்வி எழுப்­பப்­ப­டு­வ­தற்கு வழி­ய­மைத்­தி­ருக்­கின்­றது.

யுத்­தத்தின் கோர வடுக்­களை சுமந்து நிற்கும் நிலை­யிலும் துவண்­டுபோய் விடாமல் அர­சியல் நீதியைத் தொடர்ந்து கோரி நிற்கும் தமிழ் மக்­களின் சார்பில் செயற்­பட்டு வந்­தி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் பேரத்­திற்கும் சந்­தர்ப்­ப­வாத திரை­ம­றைவு உடன்­பா­டு­க­ளுக்கும் பலி­யாகத் தொடங்­கி­யுள்­ளது என்­பது தெ ளிவாகத் தெரி­கின்­றது.

ஒற்­று­மையின் பெயரில் பல்­வேறு கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு நடு­விலும் எமது கட்சி பெரும்­பாலும் மௌனம் காத்து வந்­தி­ருக்­கின்­றது. தவிர்க்­கப்­ப­ட­மு­டி­யாத ஒரு­சில சந்­தர்ப்­பங்­களில் மாத்­தி­ரம்தான் எமது எதிர்­க­ருத்­துக்­களை நாம் வெ ளியிட்­டி­ருக்­கிறோம். அந்த வகையில் மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் எமது கட்­சியின் நிலைப்­பாடு திட்­ட­வட்­ட­மாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆயினும் கூட்­ட­மைப்பின் மூன்று கட்­சி­களின் கருத்­துக்­களைப் புறக்­க­ணித்து தன்­னிச்­சை­யா­கவும் சர்­வா­தி­காரத் தோர­ணை­யிலும் தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்பின் பெயரில் தொடர்ந்து செயற்­படப் போகின்­றது என்றால் அதனை கூட்­ட­மைப்பின் எதிர்­கால நலன் கருதி ஒரு அர­சியல் சவா­லாக எமது கட்சி ஏற்றுக் கொள்­ள­வேண்­டி­யி­ருக்கும்.

கூட்­ட­மைப்பு என்­பது அதில் அங்கம் வகிக்கும் எந்­த­வொரு கட்­சி­யி­னதும் தனிச் சொத்து அல்ல. தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு அமைவாக எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ கூட்டமைப்பின் கொடியின் கீழ் செயற்படமுடியவில்லை என்றால் அவர்களுக்கான உரிய வழிக்காக கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என்பதனை அழுத்தம் திருத்தமாக எமது கட்சி சொல்லி வைக்க விரும்புகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து தமிழரசுக்கட்சிக்குள் இருந்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய விரோத நடவடிக்கைகளை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதையும் எமது கட்சி தெரிவித்துக் கொள்கின்றது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-08#page-1

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

எதிர்க்கட்சித் தலைவருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,74,73,540 ரூபாவும் இந்த குறைநிரப்பு பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.

வயது போனவர்களை வருத்தக் கூடாது. சம்பந்தன் ஐயா இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளதாகக் கேள்வி, அரச சொகுசு வாழ்வும் தொடரமுடியாது முடிந்துவிடும். ஆகவே அந்தப் பெரியவரின் நலன்கருதி இந்த வாகனம் கிடைக்கும்வரையிலாவது உங்கள் சவாலை ஒத்திப்போட முடியுமா? தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லாளர் நாயகம்  ந.சிறி­காந்தா அவர்களே!! :rolleyes::rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ...ஐயாவின் புதுப் பிராடோவிட்கு ஆப்பு வைத்து போடாதேயுங்கோ ....கடைசிக்காலத்தில் தமிழர் தலைவிதியை பிராடோவை வைத்தாவது தீர்மானிப்பாரா ஐயா ....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.