Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த பாதுகாப்புடன் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்

Featured Replies

பலத்த பாதுகாப்புடன் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்

 


பலத்த பாதுகாப்புடன் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்
 

ஜெனிவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று வவுனியாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு முன்னர், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டல் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அத்துடன், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டலைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிரரந்திய செய்தியாளர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

 

http://newsfirst.lk/tamil/2017/03/பலத்த-பாதுகாப்புடன்-வவுன/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு மக்கள் பாதுகாப்பு கொடுத்த காலம் போய்

இப்போ மக்களுக்கு பயந்து பொலிஸ் பாதுகாப்பு.

  • தொடங்கியவர்

தீர்­மானம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­படல் வேண்டும்

 

ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறு­வப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­படல் வேண்டும் : கூட்­ட­மைப்பின் வவு­னியா மாநாட்டில் தீர்­மானம்
ஓமந்தை

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வவு­னி­யாவில் நேற்று நடத்­திய கூட்­டத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 2015 அக்­டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை அரசின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட அத்­தனை விட­யங்­க­ளையும் இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக அமுல்ப டுத்த வேண்டும்.

அத்­துடன்  
இவை கடு­மை­யான நிபந்­த­னை­களின் கீழ் நிறை­வேற்­றப்­ப­டு­வதை ஐ.நா. பேர­வையின் உயர் ஸ்தானிகர் அலு­வ­லகம் இலங்­கையில் நிறு­வப்­பட்டு கண்­கா­ணிக்க வேண்டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.   

மேலும் இலங்கை அர­சாங்கம் மேற்­சொன்ன விட­யங்­களை தகுந்த பொறி­மு­றை­களின் மூலம் நிறை­வேற்றத் தவ­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அந்த தீர்­மா­னத்தின் மூலம் கிடைக்க வேண்­டிய அனைத்து பெறு­பே­று­களும் கிடைப்­பதை ஐக்­கிய நாடுகள் பேரவை உறு­தி­செய்ய வேண்டும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணியின் செய­லாளர் நடேசு சிவசக்தி ஆனந்தன், 

''இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை'' என்று தெரிவித்தார் .

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நேற்றுக் காலை வவு­னி­யாவில் ஆரம்­ப­மா­ன­ கூட்­டத்­துக்கு மண்­ட­பத்­துக்கு வெளியே பலத்த பொலிஸ் பாது­காப்பு மற்றும் விசேட அதி­ரடிப் படை­யி­னரின் பாது­காப்பு என்­பன வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

  ஜெனீவா விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டம் வவு­னி­யாவில் காலை 10 மணிக்கு ஆரம்­ப­மா­கி­யது.

வவு­னியா இரண்டாம் குறுக்­குத்­தெ­ருவில் உள்ள வன்னி இன் விருந்­தினர் விடு­தியில் ஆரம்­ப­மான இக்­கூட்­டத்­துக்கு கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் பலரும் தமது நவீ­ன­சொ­குசு வாக­னங்­களில் வருகை தந்­தி­ருந்­தி­ருந்­தனர்.

கூட்டம் ஆரம்­ப­மான மண்­ட­பத்தை விசேட அதி­ரடிப் படை­யினர் முழு­மை­யான சோத­னைக்கு உட்­ப­டுத்­தினர்.அங்­கி­ருந்த பூச்­சா­டிகள் உட்­பட அனைத்து பொருட்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

கூட்டம் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மண்­ட­பத்­திற்குள் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்ட அதே­வேளை, கூட்டம் ஆரம்­ப­மா­கி­யதும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மண்­ட­பத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் ஆரம்­ப­மான இக்­க­லந்­து­ரை­யா­டலில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன், ஈ.சர­வ­ண­பவன், யோகேஸ்­வரன், கோடீஸ்­வரன்,செல்வம் அடைக்­க­ல­நாதன், சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன், சாந்தி சிறீஸ்­கந்­த­ராஜா மற்றும் வட­மா­காண அமைச்­சர்­க­ளான சத்­தி­ய­லிங்கம், ஐங்­க­ர­நேசன், குருகுலராஜா மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், கோவிந்தன் கருணாகரன், கஜதீபன், இந்திரராஜா, தியாகராசா, மயூரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதுனைத்தொடர்ந்து கூட்டம் மாலை 4 மணியளவில் நிறைவுற்றதுடன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஊடகவியலாளர்கள் மத்தியில் வாசித்து காட்டப்பட்டது.

சுமந்­திரன் உத்­தி­யோ­கப்­பூர்வ 

அறி­விப்பு

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்ட உத்­தி­யோ­க ­பூர்­வ­மான அறி­விப்பு வரு­மாறு, 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களும் இணைந்த கூட்டம் நடை­பெற்­றது. இந்தக் கட்­டத்தில் விசே­ட­மாக ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் தற்­போது இடம்­பெற்றுக் கொண்­டி­ருப்­பதால்

அதில் நடை­பெற்று வரும் விட­யங்கள் தொடர்­பாக அதி­க­ளவில் கவனம் செலுத்­தப்­பட்­டது. 

குறிப்­பாக இந்த கூட்­டத்­தொ­டரின் போது இலங்கை சம்­பந்­த­மான தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கின்­றது. 

இந்த சூழ்­நி­லையில் ஒரு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்­வைத்­தி­ருக்­கின்ற நிலை­மையில் இலங்­கையில் வாழு­கின்ற தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எங்­க­ளு­டைய நிலை­மையை ஒரு­மித்து எடுத்துச் சொல்­வ­தற்­காக நாள் முழு­வதும் நாங்கள் கருத்து பரி­மா­றல்­களைச் செய்­தி­ருந்தோம். அந்தக் கருத்­துப்­ப­ரி­மா­றல்­களின் ஈற்றில் தீர்­மா­னங்­களை எட்­டி­யி­ருந்தோம். 

அத்­தீர்­மா­னங்­க­ளா­வன 

ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையால் 2015 ஐப்­பசி முதலாம் திகதி இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட எச்.ஆர்.சி. 30-/1 என்ற தீர்­மா­னத்தில் இலங்கை நிறை­வேற்­ற­வேண்டும் என்று கூறப்­பட்ட அத்­தனை வழி­வி­ட­யங்­களும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

 இவை நிறை­வேற்­றப்­ப­டு­வதை கடு­மை­யான நிபந்­த­னையின் கீழ் ஐக்­கிய நாடுகள் பேர­வையின் உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் இலங்­கையில் நிறு­வப்­பட்டு, மேற்­பார்வை செய்­ய­வேண்டும். 

இலங்கை அர­சாங்கம் மேற்­சொன்ன விட­யங்­களை தகுந்த பொறி­மு­றை­களின் மூலம் நிறை­வேற்றத் தவ­றினால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அந்த தீர்­மா­னத்தின் மூலம் கிடைக்க வேண்­டிய அனைத்துப் பெறு­பே­று­களும் கிடைக்கும் வண்­ண­மாக அதற்­கு­ரிய பெறு­பே­று­களை ஐக்­கிய நாடுகள் பேரவை உறு­தி­செய்ய வேண்டும். 

இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி கட்­சியின் செய­லாளர் நடேசு சிவ­சக்தி ஆனந்தன் இந்த தீர்­மா­னத்­தோடு தங்­க­ளது கட்சி இணங்க உடன்­பா­டில்லை என்­ப­தையும் தெரி­வித்தார் என்றார். 

வட­மா­காண முதல்­வரின் 

மின்­னஞ்சல் அறி­விப்பு

இந்தக் கூட்­டத்தில் வடக்கு முதல்வர் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்­பிய மின்­னஞ்­ச­லொன்றை மாகாண அமைச்சர் ஐங்­க­ர­நேசன் வாசித்­துக்­காட்­டினார். 

குறிப்­பாக அமெ­ரிக்க தூது­வ­ரு­ட­னான சந்­திப்பின் போது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஐ.நா.வின் 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்கு ஒப்­புதல் அளித்து விட்டதாக கூறினர் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐங்கரநேசன் குறிப்பிட்டிருந்தார்.

தனித்தனியாக கருத்து

மேலும், இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தனித்தனியாக தமது கருத்தை முன்வைப்பதற்கு அனுமதி யளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.