Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி சுமந்திரன் சாடல்

Featured Replies

முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி சுமந்திரன் சாடல்

Published by Priyatharshan on 2017-03-13 10:14:48

 

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

17269917_1649176061777014_196761182_o.jp

தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன்,

 

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி போரின் இறுதிக்கட்டத்தில் பாரிய மனித உரிமை மீறல்களும் பாரிய சர்வதேச குற்றங்களும் இந்த நாட்டிலே இழைக்கப்பட்டன எனப் பல குற்றச்சாட்டுகள் மனித உரிiமைப் பேரவையை சென்றடைந்தன.

இலங்கையில் நடந்த இந்த சம்பவங்கள் சம்பந்தமாக ஒரு விஷேட கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு மே மாதமே போர் முடிவடைந்து ஐந்து நாட்களுக்குள்ளே கூட்டத்தொடர் ஆரம்பமானது.

அந்த வேளையில் இலங்கை பல வாக்குறுதிகளை கொடுத்தது. இலங்கைக்கு அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பான் கீ மூன் வந்த போது மூன்று வாக்குறுதிகளையும் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

அவற்றையெல்லாம் அவதானித்து உறுப்பு நாடுகள் இலங்கையின் பக்கம் சாய்ந்தன. இலங்கையை கண்டிப்பதற்கென கூட்டப்பட்ட விஷேட கூட்டத்தொடரிலே பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் அது நடைபெற்றது. வாக்குறுதிகள் வழங்குவது அரசியல்வாதிகளுக்கு சகஜமான விடயம். மகிந்த ராஜபக்ஸவும் மக்களுக்கு தாராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

ஆனால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பது தெரியாது.  நிறைவேற்றத் தவறினால் அடுத்த நாள் தண்டனை வழங்கப்பட மாட்டாது. சர்வதேச பொறிமுறைகள் அவ்வாறு வழங்கமுடியாது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் யுத்தக்குற்றச்சாட்டுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. அரச படைகளினால் மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக ஐந்து குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையையோ சர்வதேச ஆதரவுடனான விசாரணையோ செய்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறியதன் காரணமாக 2012 ம் ஆண்டு இலங்கை தொடர்பில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் என்பது ஒரு சபையாகும். அங்கு வழக்கு நடாத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். ஐ.நா.சபை மூலம் மகிந்தவை சிறையில் அடைக்கலாம் என கருதுகின்றனர். அவ்வாறு அடைக்க முடியாது.

கம்போடியாவில் 30 வருடத்திற்கு பின்பே போர்க்குற்ற விசாரணை ஆரம்பித்தது என்ற உதாரணத்தை நான் கூறியதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரண்டு தடவைகள் அவகாசம் வழங்கியும் இலங்கை தனது சுயாதீனத்தை பிரயோகித்து ஒரு விசாரணையை நடாத்ததன் காரணத்தினால் 2014 ம்ஆண்டு உள்நாட்டு விசாரணையொன்று நடைபெறவேண்டும் அதற்கு சமாந்தரமாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு யாழ் மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம் மற்றும்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் மக்கள் என  பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்தது.

http://www.virakesari.lk/article/17687

  • தொடங்கியவர்

முதுகெலும்பிருந்தால் விசாரணைக்கு பயந்தோட வேண்டாம்

22222-fd125fb18afde061a0f1820d2e021bc27fd35527.jpg

 

ஜனா­தி­ப­திக்கு சுமந்­திரன் அறை­கூவல்

(வவு­ண­தீவு நிருபர்)

முது­கெ­லும்­பி­ருந்தால் எந்த விசா­ர­ணைக்கும் பயந்­தோட வேண்­டி­ய­தில்லை என்று ஜனா­திப­திக்குத் தான் அறை­  கூவல் விடுப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்ப்­பாண மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர், சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். 

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் கல்­குடாத் தொகுதி முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பி.மாணிக்­க­வா­ச­கத்தின் 41வது மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்­பந்­த­மூர்த்­தியின் 28வது நினைவு தின நிகழ்வு

 நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை செங்­க­லடி சீனிப்­போ­டியார் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் கிழக்கு மாகாண சபை விவ­சாய அமைச்­ச­ரு­மான கே. துரை­ரா­ஜ­சிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற நிகழ்வில் சர்­வ­தேச நடப்­புக்கள், ஜெனீவாத் தீர்­மானம் மற்றும் சம­கால முன்­னெ­டுப்­புக்கள் நகர்­வுகள் பற்றி தொடர்ந்து உரை­யாற்­றிய சுமந்­திரன்,

இலங்கை ஜனா­தி­ப­திக்கும் ஒரு செய்­தியை அழுத்தம் திருத்­த­மாக நான் இந்தப் பேரு­ரை­யிலே சொல்லி வைக்க விரும்­பு­கின்றேன் சமீ­பத்தில் பலா­லி­யிலே ஜனா­தி­ப­தி­ய­வர்கள் படை­யி­ன­ருக்கு மத்­தி­யிலே பேசும்­போது எனக்கு முது­கெ­லும்பு இருக்­கி­றது நான் எந்த இரா­ணுவ வீர­னுக்கும் எதி­ராக வழக்குத் தொடுக்க விட­மாட்டேன் என்று சொல்­லி­யி­ருக்­கின்றார். இது முது­கெ­லும்பு இருக்­கிற ஒருவர் சொபல்­லு­கின்ற செய்தி அல்ல. எந்த விசா­ர­ணை­யையும் நாங்கள் சந்­திக்கத் தயார் என்று சொல்­லு­கின்ற ஒரு­வ­ருக்­குத்தான் முது­கெ­லும்பு இருக்­கி­ற­தென்று அர்த்தம். விசா­ர­ணைக்குப் பயந்து ஓடு­கின்ற ஒருத்தர் முது­கெ­லும்பு இருப்­தாக பேச தகு­தி­யில்லை.

ஜெனீவாத் தீர்­மா­னத்­திலே உள்ள அத்­தனை வாச­கங்­க­ளையும் கடைப்­பிடித் தொழு­கு­வ­தற்கு நாங்கள் செய­லாற்­றுவோம்.இந்தப் போராட்­டத்­திலே எங்­களைச் சேர்ந்­த­வர்­களே படகைக் கவிழ்ப்­ப­தற்கு நாங்கள் விட­மாட்டோம். ஏனென்றால் இது எங்­க­ளு­டைய மக்­களின் நன்­மை­யின்­பாற்­பட்­டது.

எங்­கேயோ விழுந்து கிடந்த எங்­க­ளு­டைய இனத்தை ஜெனீவாத் தீர்­மானம் இப்­பொ­ழுது இலங்கை அர­சாங்­கத்­தோடு சம­மாகக் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது.இதி­லி­ருந்து யார் பெறுப்­போடு முன்­னே­று­கி­றார்கள் என்­பதை சர்­வ­தேச சமூகம் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. 18 மாதம் கடந்தும் இலங்கை அர­சாங்கம் ஏதோ ஒன்­றி­ரண்டைத் தொட்டு விட்டு இப்­பொ­ழுது கீழே போய் விட்­டி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திலே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உருப்­ப­டி­யா­கத்தான் செயற்­ப­டு­கி­றது. இன்னும் அப்­ப­டியே செயற்­பட்டு நாம் எமது சமூ­கத்­தி்ற்கு விடிவை எடுத்துக் கொடுப்போம். கத்­தியைக் காட்டி உன்னை சுடப்­போ­கின்றேன் என்று மிரட்டும் கேலி நிலைக்கு நாம் அறி­வி­ழந்து செயற்­பட்டு விடக்­கூ­டாது.இலங்கை அரசின் தோள்­க­ளிலும் பாரிய சுமையைச் சுமத்­தி­யி­ருக்­கின்றோம் இதுவும் ஒரு பாரிய வெற்றி என்றே கொள்ள வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திலே நாங்கள் நியா­ய­மாக விட்டுக் கொடுப்­புடன் நடந்து கொண்­டுள்ளோம் என்­பதை சர்­வ­தேச சமூகம் நம்­பு­கின்­றது. நாங்கள் தீர்வு விட­யத்­திலே விலகி ஓட­வில்லை.

இதுதான் வெற்றி. நாம் விட்டுக் கொடுப்­புடன் நடந்து கொள்­ளாமல் விட்­டி­ருந்தால் எல்லாப் பழி­களும் எங்கள் மீது சுமத்­துப்­பட்டு விடும்.அர­சாங்கம் எங்கள் மீது சுட்டு விரலை நீட்டி இவர்­கள்தான் இனப்­பி­ரச்­சினைத் தீர்வைக் குழப்­பி­ய­டித்­தார்கள் என்று சொல்­லா­த­ள­வுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்­க­ளுக்கு இக்­கட்­டான சூழ்­நி­லையை நாம் உரு­வாக்கி விட வேண்டும். அது முழு­மை­யாக நடக்க வேண்டும்.இரண்டு வருட காலத்­திற்­குள்­ளேயே அவர்கள் எதை­யா­வது செய்­தாக வேண்டும்.நாம் எழு­வ­தாக நினைப்­பது அவர்­களை எழப்­பண்­ணு­வ­தற்குத் தோதாக அமைந்து விடக் கூடாது.

இந்தப் பொறுப்பு அர­சாங்­கத்தின் மீது சுமத்­தப்­ப­டு­வதைத் தடுத்து அர­சாங்­கத்தின் மீது பழி விழாமல் இருப்­ப­தற்குத் தோதாக பலர் நடந்து கொள்­கின்­றார்கள்.போகிற போக்கு அப்­ப­டித்தான் இருக்­கி­றது.

இந்த முன்­ன­றிவு எச்­ச­ரிக்கை நாம் சொன்னால் தமிழ் சமூகத் துரோ­கிகள் என்று எம்மை முத்­திரை குத்­து­கி­றார்கள். அவர்கள் எழாமல் நாம் கவ­ன­மாக பார்த்துக் கொள்ள வேண்டும். நமது எழுகை அவர்­களை எழப்­பண்ணி விடக் கூடாது. 

கசப்­பாக இருந்­தாலும் பொறுப்­பாக செயற்­பட வேண்டும். மக்­க­ளுக்கு விட­யங்­களை விளக்­கு­கின்ற பொறுப்­பையும் நாம் செய்ய வேண்டும்.தொடர்ச்­சி­யாக எங்கள் மத்­தி­யி­லேயே தவறு என்று கூறு­ம­ள­வுக்கு நாம் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுக்க முடி­யாது, 

மக்கள் சுய­மாக நீதி கேட்டு வீதிக்கு வருவதை நாங்கள் மறுக்க வில்லை. ஆனால் இதனை திசை திருப்பி விட பலர் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி நடந்தும் இருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.

நம்மவர்களில் எவராவது சரியாக மக்களை வழி காட்டத் தவறுவார்களாக இருந்தால் அவர்கள் தான் மிக மோசமான சமூகத் துரோகிகளாக இருப்பார்கள். அது கறைபடிந்த அத்தியாயமாக இந்த சமூகத்திற்கு வந்து விடும். என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-13#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளின்ரை விசேட பாதுகாப்பை இப்ப ஜனாதிபதி விலக்கப்போரார் அப்ப இருக்குது கூத்து !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.