Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலப்பு நீதிமன்றத்திற்கு இடமளிக்கப்போவதில்லை சர்வதேச நீதிபதிகளை கண்காணிப்பாளர்களாக ஏற்கலாம் என்கிறார் பிரதமர் "

Featured Replies

கலப்பு நீதி­மன்­றத்தை வலி­யு­றுத்­துவார் ஹுசைன்

12-b83b70253aa9b8c79a4f160ab9e2b9b184564b0e.jpg

 

இன்று விவாதம் ; உறுப்பு நாடுகள் பங்­கேற்கும்; இலங்கை பிர­தி­நி­தியும் உரை­யாற்­றுவார்
(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக அண்­மையில் வெளி­யிட்ட அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது மீண்டும் இலங்கை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய கலப்பு நீதி­மன்ற பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என செய்ட் அல் ஹுசைன் வலி­யு­றுத்­துவார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஜெனிவா நேரப்­படி 12 மணி­முதல் பகல் 3 மணி­வரை இந்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆரம்­பத்தில் இலங்கை தொடர்­பான உரையை மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் நிகழ்த்­துவார்.

இதன்­பின்னர் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­விற்­கான வதி­விடப் பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். தொடர்ந்து மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­நா­டு­களும் இலங்கை தொடர்­பான தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன.

அமெ­ரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­ய­நா­டுகள் இந்த விவா­தத்தில் பங்­கேற்று உரை­யாற்றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது உறுப்பு நாடு­களும் இலங்­கைக்கு யோச­னை­களை முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஆரம்ப உரையை நிகழ்த்­த­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் விரை­வான முன்­னேற்றம் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­துவார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கான விசா­ரணை பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும், சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­டனும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை செயிட் அல் ஹுசைன் வலி­யு­றுத்­துவார் . அத்­துடன் செய்ட் அல் ஹுசேன் ஏற்­க­னவே வலி­யு­றுத்­தி­யதைப் போன்று கலப்பு நீதி­மன்ற பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்கள் சட்­டத்­த­ர­ணிகள் பொறி­மு­றையில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் செய்ட் அல் ஹுசேன் வலி­யு­றுத்­துவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பான தனது அறிக்­கையை சில வாரங்­க­ளுக்கு முன்பு செயிட் அல் ஹுசைன் வெளி­யிட்­டி­ருந்தார்.

அதில் இலங்­கையின் நல்­லிணம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் கவ­லைக்­கு­ரிய வகை­யி­லான தாமதம் நில­வு­வ­தா­கவும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் போது­மா­ன­தாக இல்­லை­யென்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் விவாதம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. தமிழர் தரப்பு பிர­தி­நி­திகள் சிவில் சமூகம் மற்றும் அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள், புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜெனிவா வளாகத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-22#page-1

  • தொடங்கியவர்

கலப்பு நீதி­மன்­றத்­திற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை

Ranil2000-6604966a5b3c53534f56d77469a1eddf890fc9b1.jpg

 

சர்­வ­தேச நீதி­ப­தி­களை கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக ஏற்­கலாம் என்­கிறார் பிர­தமர் "
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்­னைய ஆட்­சியின் போது இலங்­கையில் இடம்­பெற்ற விட­யங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட தருஸ்மன் குழு­வி­ன­ருக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் இடையில் கடி­தங்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.

 குறித்த கடி­தங்­களை சபைக்கு முன்­வைக்­கின்றேன். தற்­போ­தைய சர்­வ­தேச நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு கூட்டு எதி­ர­ணியின் இணை தலைவர் ஜீ.எல் பீரிஸ் செய்த முறைப்­பாடே பிர­தான கார­ண­மாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் சுட்­டிக்­காட்­டினார்.

 சர்­வ­தேச நீதி­ப­திகள் இலங்கை நீதி­மன்ற கட்­ட­மைப்பின் கீழ் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. கலப்பு நிதி­மன்­றத்­திற்கு இட­ம­ளிக்க முடி­யாது. யுத்­த­வி­சா­ரணை நீதி­மன்­றங்­க­ளையும் ஸ்தாபிக்கப் போவ­தில்லை. எனினும் உள்­ளக விசா­ர­ணையை கண்­கா­ணிப்­ப­தற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிக்க முடியும் என்­பதை இந்த சபையில் பொறுப்­புடன் கூறு­கின்றேன் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்­சியின் ஆத­ரவு உறுப்­பி­ன­ரான தினேஷ் குண­வர்­தன எம்.பி நிலை­யி­யற்­கட்­டளை 23 இன் 2 கீழ் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிரதம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் கூறி­ய­தா­வது,

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்த கையோடு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஐக்­கிய நாடுகள் அமைப்பின் செய­லாளர் பான் கீ மூனுடன் செய்து கொண்ட இணக்­கப்­பாட்டின் விளை­வா­கவே தற்­போது வரைக்கும் நாம் சர்­வ­தே­சத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டுள்­ளது. யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் பொறுப்­பு­கூறல் விட­யத்தில் விசா­ரணை முன்­னெ­டுக்க வேண்டும் என கோரப்­பட்­டது. குறித்த இணக்­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இன்றை வரைக்கும் பிரே­ரணை நீடிக்­கின்­றது.

மனித உரிமை பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்­க­வுள்ள பிரே­ர­ணையின் ஊடாக ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது. அதே­போன்று வெளி­நாட்டு நீதி­ப­திகள் இலங்கை வந்து எமது நீதி­மன்­றத்தின் ஊடாக விசா­ரணை செய்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 2015 ஆம் ஆண்டு நாம் இணை அனு­ச­ரணை வழங்­கிய தீர்­மா­னத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் காரி­யங்­க­ளுக்கு பாராட்­டு­களே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஜன­நா­யகம், மனித உரிமை, நல்­லாட்சி மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு பாராட்­டு­களே முன்­வைக்­கப்­பட்­டன. எனினும் குறித்த பிரே­ர­ணையில் எதி­ர­ணி­யினர் உடன்­பா­டாத விடயம் ஒன்றும் உள்­ளது. அதா­வது ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்கும் பொறி­மு­றைக்கும் பாராட்­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன.

இதே­வேளை 2014 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மற்றும் மூதூரிர் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை செய்­யு­மாறு சர்­வ­தே­சத்­திடம் கோரி­யது முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­சரும் கூட்டு எதி­ர­ணியின் இணை தலை­வ­ரு­மான ஜீ.எல் பீரிஸ் ஆவார்.

அத்­துடன் யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் அமைப்­பினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தருஸ்­மனின் விசா­ரணை குழு­வுடன் கடந்த ஆட்­சி­யா­ளர்­களால் கடி­தங்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்­னைய ஆட்­சி­யி­னரே பொறுப்பு கூற­வேண்டும். எனவே பரி­மா­றப்­பட்ட கடி­தங்­களை நான் சபைக்கு முன்­வைக்­கிறேன் என்றார்.

கூட்டு எதி­ரணி இடை­யூறு

இந்த சந்­தர்ப்­பத்தில் கூட்டு எதி­ரணி எம்.பிக்­க­ளினால் பிர­த­மரின் உரைக்கு இடை­யூறு விளை­விக்­கப்­பட்­டது. பொய் கூற வேண்டாம் பொய் கூற வேண்டாம் என அனைத்து எம்.பிக்­களும் கோஷ­மிட்­டனர்.

தினேஷ் எம்.பி மீண்டும் கேள்வி

பிர­த­ம­ராக இருக்கும் நீங்கள் தேவை­யில்­லாத விட­யங்­களை குறிப்­பி­டாமல் சர்­வதே நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிப்­பீர்­களா? என்­ப­தற்கு பதில் தாருங்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வாக இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார். உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன? என்றார்.

பிர­த­மரின் நகச்­சுவைப் பதில்

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நீங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்தை சுட்­டிக்­காட்­டு­கின்­றீர்கள். அவ்­வா­றென்றால் அவ­ரு­ட­டைய கருத்­துடன் உடன்­ப­டு­கின்­றீர்கள் என்றால் எமது பக்கம் வாருங்கள். இதன்­போது சபையில் அனைத்து ஆளும் தரப்பு எம்.பிக்­களும் மேசையில் தட்­டி­ய­வாறே புன்­கைத்­தனர்.

தனது பதிலை தொடர்ந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

எது எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கோ, கலப்பு நீதி­மன்­றத்­திற்கோ, நாம் ஒரு­போதும் இணங்­க­மாட்டோம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அனைத்து கோரிக்­கை­க­ளுக்கும் நாம் இணங்­க­மாட்டோம். அத்­துடன் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான எந்­த­வொரு விட­யத்­தையும் செய்­ய­மாட்டோம். அர­சி­ய­ல­மைப்பு முர­ணான விட­யத்தை செய்ய வேண்­டு­மாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் அரசியலமைப்பு முரணான விடயங்களை ஏற்காமல் மக்கள் அதனை தோல்வி அடைய செய்வார்கள்.

எனவே அரசியலமைப்புக்கு முரணான எதனையும் நாம் செய்ய மாட்டோம். உள்ளக பொறிமுறையின் அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுப்போம். இதற்கு வேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பாளர்களை பெற்றுக்கொள்வோம்.

இதன்படி முன்னைய ஆட்சியினால் விட்டு சென்ற கடன் மிக்க பொருளாதாரத்தையும் சர்வதேச மனித உரிமை விவகாரத்தில் இருந்து நாட்டை நாமே பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விவகாரத்தில் இருந்து நாட்டை பாதுகாப்போம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.