Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பகத்தன்மைக்கு சர்வதேச நீதிபதிகள் மிகவும் அவசியம் மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார் செயிட் அல் ஹுசைன்

Featured Replies

நம்பகத்தன்மைக்கு சர்வதேச நீதிபதிகள் மிகவும் அவசியம்

12-a70bff0a114aea1978a305444871a0b0f7dc5711.jpg

 

மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார் செயிட் அல் ஹுசைன்
 (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

விசா­ரணைப் பொறி­மு­றை­யா­னது நம்­ப­கத்­தன்­மையாய் அமை­வ­தற்கு வெளிநாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், வழக்­கு­ரை­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அது­மட்­டு­மின்றி பாதிக்­கப்­பட்ட மக்­களும் நம்­பகத்தன்­மைக்­காக சர்­வ­தேச பங்­க­ளிப்பை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செயிட் அல் ­ஹுசைன் நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் தெரி­வித்தார். 

கடந்த கால மீறல்­களை ஆராயும் விட­யத்தில் நம்­ப­கத்­தன்மை மற்றும் பக்­க­சார்­பின்மை தொடர்பில் காணப்­படும் குறை­பா­டுகள் மற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான எதிர்­பார்ப்­பின்மை மற்றும் இய­லாமை என்­பன சர்­வ­தேச பங்­க­ளிப்­புக்­கான தேவையை அதி­க­ரித்து வரு­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விவா­தத்தில் இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சாரம்­சத்தை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே செயிட் அல்­ஹுசைன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இலங்­கையின் மனித உரிமை மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­களில் ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டு­கிறேன். இலங்­கையின் எனது அலு­வ­ல­கத்­து­ட­னான ஆரோக்­கி­ய­மான ஈடு­பாட்டை நான் வர­வேற்­கின்றேன்.

இலங்­கையின் விவ­கா­ரங்­க­ளுக்கு எமது பிர­சன்­னத்­துடன் தொடர்ந்து தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கு­கிறோம். ஐந்து விசேட ஐ.நா. அறிக்­கை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ளனர். குறிப்­பாக காணா­மல்­போனோர் விவ­காரம், நிலை­மாறு கால நீதி, சித்­தி­ர­வதை, சுயா­தீன நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் சிறு­பான்மை விவ­கா­ரங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான விசேட நிபு­ணர்கள் இலங்கை சென்­றி­ருந்­தனர்.

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புக்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் மக்­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்­டுள்­ளன. பிர­தான வழி­ந­டத்தல் குழுக்கள் அறிக்­கை­களை சமர்ப்­பித்­துள்­ளன. எனினும் இந்த அறிக்­கைகள் இது­வரை போது­மான கரி­ச­னை­களை பெற­வில்லை.

நீதி விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் தாம­த­மாக இருந்­தாலும் நல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்கை எனது இத­யத்தை தொட்­டது. எனவே அர்த்­த­முள்ள மக்கள் கலந்­தா­லோ­சனை நடத்­தி­யுள்ள நல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்­கையை தழு­விக்­கொள்­ளு­மாறு நான் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறேன்.

எனவே தற்­போது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்தி நீதிப்­பொ­றி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு பரந்­து­பட்ட நுட்­பங்­களும் கால அட்­ட­வ­ணையும் முன்­வைக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. எனவே இந்த அலு­வ­ல­கத்தை இயங்க வைப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணு­மாறு வலி­யு­றுத்­து­கிறேன்.

மக்கள் மத்­தியில் விசே­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் விரக்தி அதி­க­ரித்து வரு­வதால் உட­ன­டி­யாக நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­பட வேண்டும். அந்தச் செயற்­பாடு தாம­த­மா­கவே உள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட்­டாலும் மாற்றுச் சட்­ட­மா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டத்­திற்கு அமை­வாக இருக்க வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழான வழக்­குகள் பல இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

உண்­மையைக் கண்­ட­றிதல் மற்றும் நட்­ட­ஈடு வழங்­குதல் தொடர்­பான கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது குறித்த செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால் இந்த செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தி­னரின் பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

அது­மட்­டு­மன்றி குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாமல் இருக்கும் கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இதன்­மூலம் எதிர்­கா­லத்­திற்கு சிறந்த செய்தி வழங்­கப்­பட வேண்டும். குறிப்­பாக பாது­காப்பு படை­யி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான தயக்கம் தொடர்பில் நான் அவ­தானம் செலுத்­தி­யுள்ளேன்.

விசே­ட­மாக கடந்த கால மீறல்­களை ஆராயும் விட­யத்தில் நம்­ப­கத்­தன்மை மற்றும் பக்­க­சார்­பின்மை தொடர்பில் காணப்­படும் குறை­பா­டுகள் மற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான எதிர்­பார்ப்­பின்மை மற்றும் இய­லாமை என்­பன சர்­வ­தேச பங்­க­ளிப்­புக்­கான தேவையை அதி­க­ரித்து வரு­கி­றது. எனவே விசா­ரணைப் பொறி­மு­றை­யா­னது நம்­ப­கத்­தன்­மையாய் அமை­வ­தற்கு வெ ளிநாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், வழக்­கு­ரை­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அது­மட்­டு­மன்றி பாதிக்­கப்­பட்ட மக்­களும் நம்­பகத் தன்­மைக்­காக சர்­வ­தேச பங்­க­ளிப்பை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

தடுத்­து­வைத்தல் விட­யங்­களில் ஜனா­தி­பதி மட்­டத்­தி­லான நட­வ­டிக்­கை­களை நான் வர­வேற்­கின்றேன். எனினும் சித்­தி­ர­வதை என்­பன தொடர்ச்­சி­யாக பதி­வு­செய்­யப்­ப­டு­கின்­றன. எனவே பாது­காப்புப் படை­களின் அனைத்து கிளை­க­ளுக்கும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பாக தெளி­வான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட வேண்டும்.

தடுத்து த்து வைக்கப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட நேரத்திலிருந்து சட்ட உதவிகளைப் பெற இடமளிக்க வேண்டும். மேலும் இலங்கையின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்கள் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

இலங்கை விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மிகப்பெரிய வகிபாகம் ஒன்றை வகிக்க வேண்டியுள்ளது. அனைத்து விடயங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களே முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்காமல் நிரந்தர சமாதானத்தை அடைந்துவிட முடியாது. இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கு எனது அலுவலகம் தொடர்ந்து உதவும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.