Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டுக் கும்பலின் அச்சுறுத்தலால் கோவிலில் தஞ்சமடைந்தனர் மக்கள் :

Featured Replies

வாள் வெட்டுக் கும்பலின் அச்சுறுத்தலால் கோவிலில் தஞ்சமடைந்தனர் மக்கள் :
 
 
வாள் வெட்டுக் கும்பலின்  அச்சுறுத்தலால் கோவிலில் தஞ்சமடைந்தனர் மக்கள் :  வடமராட்சியில் நேற்றிரவு சம்பவம்
வாள்­வெட்­டுச்  சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் கைது செய்­யப்­ப­டும் வரை, பாது­காப்­புக்­காக  ஆல­யத்­தில் படுத்­து­றங்­கு­வோம் என்று தெரி­வித்த  வட­  ம­ராட்­சிப் பகு­தியை சேர்ந்த பத்­துக்­கும் மேற்­பட்ட குடும்பங்கள்,   நேற்று இரவு  பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள இந்து ஆலயத்தில் தங்கி யிருந்தனர். பொலிஸாரின் உத்தரவாதத்தையடுத்து நேற் றுப் பின்னிரவு அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர்.
 
வடமராட்சி, அல்வாய்  பகுதியில் நேற்றுமுன்தினமிரவு  இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் பொலிஸாரால் நேற்றிரவு வரை கைதுசெய்யப்பட வில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.   
 
இந்த வாள் வெட்டு சம்பவங்களால்  வடமராட்சி, அல்வாய்  பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. எந்த நேரம் என்ன நடக்கும் என்பது தெரியாது என்று தெரிவித்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள்,  நேற்று  மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்றனர். வாள்களுடன் திரிபவர்க ளைக் கைதுசெய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
அத்தோடு, கும்பல் கைதுசெய்யப்படும் வரை தமக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த அவர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்பாக உள்ள ஆலயம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.   எனினும் இரவு 9. 30 மணிக்கு கோவிலுக்கு பருத்தித் துறைப் பொலிஸார் வந்தனர்.
 
மக்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும், மக்களை வீட்டுக்குச் செல்லுமாறும் பொலிஸார் கோரி னர். அவர்களின் உத்தரவாதத்தை ஏற்க மக்கள் மறுத் தனர். பொலிஸாரின் கடும் முயற்சியால் மக்கள் வீடுக ளுக்குத் திரும்பினர். வாள் வெட்டுச் சம்பவங்கள் மோசமாகிவிட்டன. இதுவரை  பொலிஸார் யாரையும் கைது செய்யவில்லை. 
 
வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தன் பின்னரே மீண்டும் ஒரு வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனவே எங்களுக்கும் அவ்வாறு இடம்பெறமாட்டாது என்று கூறமுடியாது. எமக்கு பாதுகாப்பு வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தோம். இப்போது பொலிஸார் உத்தரவாதம் அளித்துள்ளனர். எமக்கு ஏதாவது நடந்தால் அது பொலிஸாரையே சாரும்”  என்று அந்த மக்கள் தெரிவித்தனர்.            

http://www.onlineuthayan.com/news/25042

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.