Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை : விசாரணைக்கு கடற்படை தளபதி இடையூறு

Featured Replies

கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை : விசாரணைக்கு கடற்படை தளபதி இடையூறு

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்னவின் செயற்பாடுகள் இடையூறாக உள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது கடத்தப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் மற்றும் அவரது உறவினரான பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த இரத்னசாமி பரமானத்தன் ஆகியோரது கடத்தல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே குற்றப் புலனயவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் கடத்தல்கள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளருமான  பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கிக்கு அறிவித்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் அவர் இதன் போது நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.

http://www.virakesari.lk/article/18184

  • தொடங்கியவர்

கொட்­டாஞ்­சேனை தமி­ழர்கள் இருவர் கடத்தல் விவ­காரம் விசா­ர­ணைக்கு கடற்­படை தள­பதி இடை­யூறு

 

சி.ஐ.டி.மன்றுக்கு அறிக்கை

 (எம்.எப்.எம்.பஸீர்)

கொட்­டாஞ்­சே­னையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல் போகச்­செய்­யப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகியோர் கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­க­ப்படும் நிலையில், அது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை  தொடர்­வ­தற்கு தற்­போ­தைய கடற்­படை தள­பதி  வைஸ் அத்­மிரால் ரவீந்ர விஜே குன­ரத்­னவின் செயற்­பா­டுகள் இடை­யூ­றாக உள்­ள­தாக குற்றப் புல­னா­யவுப் பிரிவு நேற்று நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. 

2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி கொட்­டாஞ்­சே­னையில் இருந்து வெல்­லம்­பிட்­டிய பகு­தியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்­கத்தை உடைய வேனில் பய­ணித்த போது கடத்­தப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன் மற்றும் அவ­ரது உற­வி­ன­ரான பொரளை, வனாத்­த­முல்­லையைச் சேர்ந்த இரத்­ன­சாமி பர­மா­னத்தன் ஆகி­யோ­ரது கடத்தல் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. 

இதன் போதே குற்றப் புல­னா­யவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியும் கடத்­தல்கள் தொடர்­பி­லான சிறப்பு விசா­ர­ணை­யா­ள­ரு­மான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மன்றில் ஆஜ­ரான பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கிக்கு அறி­வித்தார்.

அத்­துடன் இந்த விவ­காரம் தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணைகள் தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரி­யுள்­ள­தா­கவும் அவர் இதன் போது நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டினார். நேற்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது ஏற்­க­னவே இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி லெப்­டினன் கொமான்டர் அனில் மாபா சிறை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். இந் நிலையில் பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்தார். 

இதன் போது விசா­ர­ணைகள் நிறைவு பெறாத நிலையில் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சட்ட மா அதி­பரின் அல­ஓ­ச­னையை நாடி­யுள்­ள­தாக இதன் போது பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க இதன் போது குறிப்­பிட்டு மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் சமர்ப்­பித்தார்.

 குறித்த மேல­திக அறிக்­கையில் விஷே­ட­மாக பின்­வ­ரு­மாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. ' இந்த விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுக்க தற்­போ­தைய கடற்­படை தள­பதி உரிய ஒத்­தா­சை­களை எமக்கு வழங்­கு­வ­தாக இல்லை. அவ­ரது செயற்­பா­டுகள் விசா­ர­ணை­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ளன. இதனால் இந்த விவ­காரம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­பதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை மன்­றுக்கு அறி­விக்­கின்றோம்' என அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்ப்ட்­டுள்­ளது. 

இத­னை­ய­டுத்து இந்த விவ­கா­ரத்தில் கைதா­கி­யுள்ள லெப்­டினன் கொமாண்டர் அனில் மாபா­வுக்கு பிணை கோரப்­பட்ட கோரிக்­கையின் மீதான தீர்ப்பு அவ­ரது சட்­டத்­த­ர­ணி­யான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவினால் எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் அது தொடர்பிலான அறிவித்தலை அடுத்த வழக்குத் தவணையில் அறிவிப்பதாக தெரிவித்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி, அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.