Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னைய அரசு இரவில் விழுந்த குழியில் இன்றைய அரசு பகலில் விழப் போகிறது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு

Featured Replies

முன்னைய அரசு இரவில் விழுந்த குழியில் இன்றைய அரசு பகலில் விழப் போகிறது

Dr-Dayan-small-copy-f6e65a51eb6f5eeee6e3a9ec413ff17b20e48822.jpg

 

- கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு

 எஸ்.கணேசன் 

இலங்­கையின் போர்க்­குற்றம் தொடர்­பான பொறுப்புக் கூறல் விட­யத்தில் இலங்­கைக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டமை எமது நாட்­டுக்கு ஆபத்­தா­னது. இறு­தியில் சர்­வதேச விசா­ர­ணை­யி­லேயே அனைத்தும் வந்து முடியும் என சிரேஷ்ட அர­சியல் ஆலோ ­ச­கரும் முன்னாள் ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி

தயான் ஜய ­தி­லக தெரி­வித்தார்.

2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அமெ­ரிக்­கா­விலும் பிரிட்­ட­னிலும் புதிய அர­சாங்­கங்கள் பத­வி­யேற்­றுள்­ளன. எனவே இந்த அர­சாங்­கங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இப் பிரே­ர­ணையை நீர்த்­துப்­போகச் செய்­தி­ருக்­கலாம். இச் சந்­தர்ப்­பத்தை இலங்கை அரசு தவ­ற­விட்­டுள்­ளது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில் .

2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட பிரே­ரணை மூலம் இலங்கை இரவில் விழுந்த குழியில் 2018 ஆம் ஆண்டு பட்­டப்­ப­கலில் தானா­கவே ஓடி வந்து விழப் போகின்­றது என்றே கூற வேண்டும்.

மேற்­கு­லக நாடு­களை வென்று விட்­ட­தாகக் கூறும் இந்த அரசு வெளி­நாட்டு நீதி­ப­திகள் அடங்­கிய கலப்பு நீதி­மன்­றங்­க­ளுக்குப் பதி­லாக நாங்­களே எங்­க­ளது நீதி­மன்­றங்கள் மூலம் யுத்த குற்­றங்கள் தொடர்­பாக விசா­ரணை செய்து கொள்­கின்றோம் எனத் தெரி­வித்­தி­ருக்­கலாம். இலங்­கையின் நட்பு நாடுகள் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்கும்.

இலங்­கைக்கு எதி­ரான முதல் பிரே­ர­ணையில் நிரா­க­ரிக்­கப்­பட்ட அனைத்­தையும் இரண்டாம் கட்­டத்தில் நிறை­வேற்­ற­றவும் விடு­தலைப் புலிகள் எதிர்­பார்க்கும் அனைத்­தையும் பெற்­றுக்­கொள்­ள­வுமே கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நகர்வை உட­ன­டி­யாக தடுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லை­யெனில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இலங்கை முகங்­கொ­டுக்க வேண்­டிய அபாயம் உள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்­காக இலங்­கைக்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கி­யி­ருப்­பதன் மூலம் ஆரம்­பத்தில் அர­சாங்கம் எதிர்த்த, நிரா­க­ரித்த விட­யங்­களை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

நட்­டுக்கு எதி­ராக கடந்த காலத்தில் சர்­வ­தேச தரப்பு கொண்டு வந்த பிரே­ர­ணையை மஹிந்த அர­சாங்கம் எதிர்த்த நிலையில் மைத்­திரி அர­சாங்கம் அதனை முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்த இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

பிர­பா­க­ரனை காப்­பாற்ற முயற்சி செய்த நபர்­களே இன்று ஜெனீவா பிரே­ர­ணையை கொண்டு வந்­துள்­ளனர். இதில் புலி­களை நியா­யப்­ப­டுத்­திய நபர்­களும் புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­களும் இறுதி யுத்­தத்தில் பிர­பா­க­ரனை காப்­பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரி­விக்கும். கருத்­துக்­க­ளையும் நிறை­வேற்­றவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.