Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை பேரவை அலுவலகத்தை வட.,கிழக்கு, கொழும்பில் திறக்க வேண்டும்

Featured Replies

மனித உரி‍மை ‍பேர‍வை அலுவலகத்‍தை வட.,கிழக்கு, கொழும்பில் திறக்க வேண்டும்

 

தமிழ் சமூகம் அறிக்‍கை
தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான மனித உரி­மைகள் மீறலை முடி­வுக்கு கொண்­டு­வந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்பில் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுத்­துள்­ளது.

இலங்கை தொடர்­பான மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ரணை கடந்த 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்­டது. இது தொடர்பில் எமது மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­விகள் எழுந்­தி­ருக்­கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், பிரித்­தா­னிய

மனித உரி‍‍மை

தமிழர் பேரவை, அமெ­ரிக்க தமிழர் அர­சியல் செய­லவை, கன­டிய தமிழர் பேரவை ஆகிய முன்று அமைப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து இவ்­வ­றிக்­கையை தங்கள் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றோம். 

இலங்கை அர­சாங்கம் 2015இல் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை­ய­னு­ச­ரணை வழங்கி எற்றுக் கொண்­டதை தாங்கள் அறி­வீர்கள். ஆனால் குறித்த பிரே­ர­ணையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­களை  இலங்கை அர­சாங்கம் இது­வரை நிறை­வேற்­ற­வில்லை. இந்த நிலை­யில்தான் ஏற்­க­னவே அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு வழங்­கிய  வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் மூலம் பொறுப்புக் கூறல் மற்றும் அர­சியல் மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் இலங்கை அர­சுக்­குள்ள சர்­வ­தே­சத்­திற்­கான பொறுப்பும் கடப்­பாடும் மீளவும் ஒரு­முறை சர்­வ­தே­சத்தின் முன்னால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை அர­சாங்கம் கால அவ­காசம் கோரி­யதன் மூலம் தானா­கவே ஒரு சர்­வ­தேச பொறிக்குள் அகப்­பட்­டி­ருக்­கி­றது. 

குறித்த பிரே­ரணை தொடர்பில் கருத்துத் தெரி­விக்கும் அமெ­ரிக்க தமிழர் அர­சியல் செய­ல­வையின் தலைவர் டாக்டர் காருண்யன் அரு­ளா­னந்தம் 'இந்தப் புதிய பிரே­ர­ணை­யா­னது இலங்கை தொடர்ந்தும் சர்­வ­தேச கண்­கா­ணிப்பின் கீழ் இருப்­ப­தற்­கான புறச் சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அந்த வகையில் இது ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாகும் எனினும், இது மட்டும் போது­மா­ன­தல்ல. அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, கனடா உள்­ளிட்ட உறுப்பு நாடுகள் பலவும், இலங்கை விவ­கா­ரத்தில் குறிப்­பி­டத்­தகு நேரத்­தையும் சக்­தி­யையும் செல­வ­ளி­தி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கவே, 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து, இலங்கை தொடர்பில் இது­வரை ஐந்து பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இலங்கை அரசு தொடர்ந்தும் முன்­னேற்­றங்­களை காண்­பிக்­காமல் இருக்க முடி­யாது” என கூறு­கின்றார். 

எனவே இது தொடர்பில்  சர்­வ­தேச சமூகம் தொடர்ந்தும் ஒரு நெகிழ்வுப் போக்கை கடை­பி­டிக்கக் கூடாது. இவ்­வாறு குறிப்­பிடும் காருண்யன், பிரே­ர­ணையில் உள்­ள­டங்­கி­யி­ருக்கும், அனைத்து விட­யங்­களும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நிதி, தொழில் நுட்ப ஆலோ­ச­னை­களை மேற்­படி நாடுகள் கொடுத்து ஒத்­து­ழைப்­பையும் நெருக்­கு­த­லையும் வழங்க வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

 

மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யா­ளரின் அறிக்­கையை தொடர்ந்தே, புதிய பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் குறித்த பிரே­ர­ணையின் கீழ் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும் விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு முழு அள­வி­லான வேலைத்­திட்டம் மற்றும் அதற்­கு­ரிய கால அட்­ட­வணை ஆகி­ய­வற்றை ஆணை­யாளர் தனது அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். உறுப்பு நாடுகள் பலவும் அவ­ரது கூற்­றினை ஆத­ரித்­துள்­ளன. அத்­துடன் அர­சாங்கம், இலங்­கையின் அனைத்து சமூ­கங்­களும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­வா­றான பரந்த வேலைத்­திட்டம் ஒன்­றையும் கைக்­கொள்ள வேண்டும்.

மேலும், முன்­னைய பிரே­ர­ணையின் (30/1) அமு­லாக்­க­மா­னது கவ­லை­ய­ளிக்கக் கூடிய அளவு மந்­த­மா­ன­தென ஆணை­யாளர் தனது அறிக்­கையில் சுட்டிக் காட்­டி­யி­ருக்­கிறார். இது தொடர்பில் அபிப்­பி­ராயம் தெரி­வித்­தி­ருக்கும் பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் பொதுச் செய­லாளர் ரவிக் குமார்: 'இலங்கை அரசின்  செயற்­பா­டுகள் தமிழ் மக்­களின் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய வகையில் அமைந்­தி­ருக்­க­வில்லை. அதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கி­றது. அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அதன் பொறுப்புக் கூறல் தொடர்­பான அனைத்து செயற்­பா­டு­க­ளுமே, தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் ஏமாற்­றத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. எனினும் அர­சாங்­க­மா­னது, குறித்த பிரே­ர­ணைக்கு, மீளவும் இணை­ய­னு­ச­ரணை வழங்­கி­யி­ருப்­பதன் ஊடாக பிரே­ர­ணையில் ஏற்றுக் கொண்­டி­ருக்கும் விட­யங்­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டிய தனது பொறுப்பு மீளவும் ஒரு முறை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தேச சமூகம் எதிர்­கா­லத்தில் இதனை விடக் குறை­வான எத­னையும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டாது என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் பிரித்­தா­னிய தமிழர் பேரவை, அமெ­ரிக்க தமிழர் அர­சியல் செய­லவை மற்றும் கன­டிய தமிழர் பேரவை ஆகிய மூன்று அமைப்­புக்­களும், வடக்கு கிழக்கில் வாழும் எமது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு செயல்­பூர்­வ­மான நன்­மைகள் துரி­த­மாகச் சென்­ற­டை­வ­தற்­கான வழி­வ­கை­களை உரு­வாக்க தொடர்ச்­சி­யாக செயற்­ப­டு­மென இந்த சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்­கின்­றன. அரசின் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக பாதிப்­புற்ற எம் மக்கள் அடைந்த பயன் மிகக் குறைவு. எனவே இது தொடர்பில் அர­சாங்கம் தனது நல்­லெண்­ணத்தை முதலில் நிரூ­பித்துக் காட்ட வேண்­டு­மாயின், அர­சாங்கம் பின்­வரும் விட­யங்­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டு­மென்று நாம் கோரிக்கை விடுக்­கின்றோம்:

கேப்­பாப்­பு­லவில் உள்ள காணிகள் உள்­ள­டங்­க­லாக மக்­களின் அனைத்து காணி­க­ளையும் உட­ன­டி­யாக மக்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும்.

· காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை (OMG) உடன் செயல்­பட வைக்க வேண்டும்.

· மிக மோச­மான பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்க வேண்டும்.

· பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சிறை­யி­லுள்ள அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் கால­தா­ம­த­மின்றி விடு­தலை செய்ய வேண்டும்.

· சித்­தி­ர­வ­தைகள், பாலியல் வன்­மு­றைகள் உட்­பட ஏனைய மனித உரிமை மீறல்கள் அனைத்தும் தடுக்­கப்­ப­டு­வ­துடன் இதனை மீறுவோர் தண்­டிக்­கப்­ப­டுவர் என்ற பொது அறி­வித்தல் வெளி வர­வேண்டும். 

· தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் பாது­காப்பு படை­யி­னரின் துன்­பு­றுத்­தல்கள், கண்­கா­ணிப்­புக்கள், பழி­வாங்கும்; நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் நிறுத்­து­வ­தற்­கான உத்­த­ர­வுகள் உடன் பிறப்­பிக்­கப்­பட வேண்டும். 

· அர­சாங்கம், மனித உரி­மைகள் பேர­வையின் (OHCHR) அலு­வ­ல­கத்தை, வட - கிழக்­கிலும் மற்றும் கொழும்­பிலும் திறப்­ப­தற்­கான அழைப்பை விடுக்க வேண்டும். 

கன­டிய தமிழர் பேர­வையின் தலைவர் ராஜ் தவ­ரட்­ண­சிங்கம் இது தொடர்பில் கருத்துக் தெரி­வித்­தி­ருக்கும் போது:  இலங்கை அர­சாங்கம், கலந்­தா­லோ­சனை செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அர­சாங்கம் அதனை புறக்­க­ணிக்­கு­மாயின், அது, ஆயி­ரக்­க­ணக்­கான பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­துக்­களை அவ­ம­திப்­ப­தா­கவே அமையும் என்றும் அர­சாங்கம் நிலை­மா­று­கால நீதி தொடர்­பிலும் தொடர்ச்­சி­யான கலந்­தா­லோ­ச­னை­களில் ஈடு­ப­ட­வேண்டும்.

அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்தில் இருப்­ப­வர்கள் தொடர்ச்­சி­யாக கலப்பு நீதி­மன்­றத்தை எதிர்த்து வரு­கின்­றனர். இந்த நிலை­யி­லேயே பேர­வையின் ஆணை­யாளர் தனது அறிக்­கையில் கலப்பு பொறி­மு­றைய மீளவும் கண்­டிப்­பாக வலி­யு­றுத்­தி­ருக்­கின்றார். இது தொடர்பில் டாக்டர் அரு­ளா­னந்தம் 'நீதி­யின்றி நல்­லி­ணக்கம் என்­பது சாத்­தி­ய­மில்லை. கலப்பு நீதி­மன்­றத்தின் ஒரு அங்­க­மாக அர­சாங்கம் உட­ன­டி­யாக சுயா­தீ­ன­மாகச் செயல்­படும் சாட்­சி­யங்­களை பாது­காக்கும் செய­லணி உரு­வாக்க வேண்டும், விசேட வழக்குத் தொடு­னர்­க­ளுக்­கான அலு­வ­லகம் ஒன்றை ஸ்தாபித்து, யுத்தக் குற்­றங்கள், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் இன­வ­ழிப்பு என்­ப­ன­வற்றை குற்­றங்­க­ளாக சட்­ட­மி­யற்றி அவற்­றினை விசா­ரிப்­ப­தற்­கான பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும். வெளி­நாட்டு நீதி­ப­தி­களை நிரா­க­ரிப்­பதன் மூலம் அர­சாங்கம் தன் வாக்­கு­று­தி­யினை மீறி­யுள்­ளது என்று குறிப்­பிடும் அரு­ளா­னந்தம், வடக்கு கிழக்கில் பாது­காப்பு கட்­ட­மைப்­புக்கள் மறு­சீ­ர­மைத்து, வடக்கு கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றி­னா­லன்றி நல்­லி­ணக்கம் என்­பது கானல் நீரே எனக் குறிப்­பிட்டார். 

கடந்த காலத்தில் இடம்­பெற்ற நிகழ்­வுகள், மீளவும் நிகழாமல் தடுப்பதற்காக புதிய அரசியல் யாப்பு மற்றும் நிலைமாறுகால நீதி ஆகிய இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். வருட இறுதிக்குள் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இலங்கை அரசாங்கம் சமஸ்டி கட்டமைப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கு நிரந்தரமான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராஜ் குறிப்பிட்டார். 

இவை அனைத்தினதும் சாராம்சமாக கூறுவதாயின்: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்பட்டுவரும் நாம், ஒரு தெளிவான பெறுபேறை எதிர்பார்த்து நிற்கின்றோம். இலங்கையில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்லிணக்கம் நிகழ வேண்டுமென்றால், கிடைத்திருக்கும் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இதற்கும் மேலதிகமான ஒரு கால அவகாசத்தை அரசாங்கம் கோர முடியாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.