Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் பிக்குகள் தலைமையிலான நான்கு அமைப்புக்கள் சூளுரை

Featured Replies

அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பியே தீருவோம்

02-192e4fc7c9889c421f22ed1526ad64f5630e4e33.jpg

 

 பிக்­குகள் தலை­மை­யி­லான நான்கு அமைப்­புக்கள் சூளுரை
(க.கம­ல­நாதன்)

நாட்டின் தற்­போ­தைய அர­சாங்கத்­தினர் வளங்­களை சீனா­விற்கும் இந்­தி­யா­விற் கும் விற்பனை செய்­கின்றனர், மறு­பு­றத்தில் வடக்கு, கிழக்­கி­லுள்ள இராணுவம் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளதால் புலி­களும் தமிழ்ப் பிரி­வி­னை­வாத அமைப்­புக்­களும் மீண் டும் தலை­தூக்­கி­யுள்­ளன. எனவே தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டிற்கு  

அனுப்ப வேண்­டிய அவசியம் தோன்­றி­யுள்­ளதை நாம் உணர்ந்­துள்ளோம். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­திற்குள்15 பிக்­குகள் சங்­கங்­களை  திரட்­டிக்­கொண்டு தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டிற்கு அனுப்­புவோம் என பொது­பல சேன, ராவணா பலய, சிங்­கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய அமைப்­புக்கள் ஒரு­மித்து சூளு­ரைத்­துள்­ளன. . 

நாரா­ஹேன்­பிட்டி அப­ய­ராம விஹா­ரையில் நேற்று இடம்­பெற்ற மேற்­படி அமைப்­புக்­களை சேர்ந்த பிக்­குகள் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவ்­வ­மைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு சூளு­ரைத்­தார்கள்.

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உரை­யாற்­று­கையில்

இன்று நாங்கள் மிக வேத­னை­யுடன் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கின்றோம். நாம் கல்வி கற்ற காலத்தில் ஒரு கவி­தையில் குழந்­தை­யில்­லாத ஒரு பெண்­ணினால் தாயின் பிர­சவ வழி­யினை அறிந்து கொள்ள முடி­யாது எனக் கற்­றுள்ளோம். அவ்­வா­றான நிலை­மைதான் இன்று எமது நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­யிட்டே நாங்கள் வருந்­து­கின்றோம்.

2014 ஆம் ஆண்டில் நாம் எமக்­கான மரண சான்­றி­தழ்­களை கையில் வைத்­துக்­கொண்­டி­ருந்தோம். அது தீவி­ர­வாதம் நாட்­டிற்குள் உச்ச நிலையை அடைந்­தி­ருந்த தரு­ண­மாகும். ஆனால் அத்­த­கைய அச்­சு­றுத்­த­லான சூழ­லுக்கு முகம்­கொ­டுத்தும் கூட நாம் யுத்­தத்­தி­னையும் வெற்­றிக்­கொண்டோம்.

அவ்­வாறு யுத்­தத்­தினை வெற்­றிக்­கொள்ள முன்­னி­லையில் இருந்த அர­சியல் தலை­மைத்­து­வங்­களில் விமல் வீர­வன்ச குறிப்­பிட்டு கூறக்­கூ­டி­யவர் ஆவார். நாடு பற்­றிய உணர்­வுள்­ளவர். உள்­ளார்ந்த அடிப்­ப­டையில் தேசப்­பற்­றுள்ள அர­சி­யல்­வா­தி­யாவார்.

ஆனால் யுத்­தத்தின் போது தொப்­பி­கல பகு­தியை ஒரு தனிக்­காடு அதில் யார் வேண்­டு­மா­னாலும் யுத்தம் செய்­யலாம் என்று அச­மந்த போக்கில் செய­பட்­ட­வர்­களே இன்று நாட்டில் ஆட்­சி­பு­ரியும் தலை­மை­க­ளாக உள்­ளனர்.

அதனால் நாட்டில் ஒரு யுத்­தமே இடம்­பெ­ற­வில்லை என்­பது போன்­றுதான் அவர்கள் நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். நல்­லாட்சி என்­பது அழ­கான பெய­ராக இருந்­தாலும் ஆட்­சி­ய­ளார்­களின் செயற்­பா­டுகள் அழ­கா­ன­தா­கவும் தூய்­மை­யா­ன­தா­கவும் இல்லை.

 இன்று காட்டில் விறகு திருடும் முதி­ய­வ­ருக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் சட்­ட­மா­னது காத்­தான்­கு­டியில் இது தான் எங்கள் சட்டம் என்று கூறிக்­கொண்டு இளை­ஞர்­களை அடித்­துக்­கொள்­ப­வர்­க­ளுக்கும் தேசிய வனத்­தி­லுள்ள மரங்­களை வெட்­டி­ய­ளிக்கும் அமைச்சர் ரிஷாட் பதி­யூ­தீ­னுக்கும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அதேபோல் மறு­பு­றத்தில் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் இந்த ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டா­னது ஆடை­யின்றி இருக்கும் ஒருவன் மற்­ற­வனை பார்த்து ஆடை­ய­ணி­யாமல் உள்ளான் என்று கேளிக்கை செய்­வது போன்­றுள்­ளது. நாட்டின் பிர­தமர் பெயரும் இந்த விவ­கா­ரத்தில் பேசப்­ப­டு­வது வெட்­கத்­து­கு­ரிய செய­லாகும்.

இவ்­வா­றான ஓரு அர­சாங்­கத்­தினால் வடக்கு கிழக்கில் இரா­ணுவம் முடக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் புலிகள் உட்­பட தமிழ் பிரி­வி­னை­வாத சக்­திகள் சக­லரும் சர்­வ­தேசம் வரை சென்று செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். ஆகவே இந்த ஆட்சி நீடித்தால் இலங்­கையும் லிபியா, சூடான் ஆகிய நாடுகள் போன்று ஆகி­விடும்.

ஆட்­சி­யா­ளர்கள் ஆண்கள் என்றால் நேர­டி­யாக மோதலாம். இவர்கள் இரண்டும் கலந்த ஒரு பிறப்பு என்­பதால் அவர்­களை தாக்­கு­வது கடி­ன­மாகும். அவர்கள் தாக்­கிய பின்பே எமக்கு வலிக்­கின்­றது. அவர்கள் தாக்­குதல் நடத்­திய முறை­மையும் அறிய முடி­ய­வில்லை என்றார்.

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் சிங்­கள ராவய அமைப்பின் உறுப்­பினர் அக்­னீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­விக்­கையில்,

தற்­ச­மயம் நாட்டில் சட்டம் என்ற ஒன்று நடை­மு­றையில் உள்­ளதா? என்ற கேள்வி எழு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பில் மாத்­தி­ரமே சட்டம் உள்­ளது. அதனை நடை­மு­றைப்­ப­டுத்த எவரும் இல்லை. தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச செய்­த­தாக கூறப்­படும் குற்­றத்­தினை செய்­த­வர்கள் பலர் உள்­ளனர். அர­சாங்­கத்­தி­னுள்ளும் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. விமல் மாத்­திரம் சிறை­யி­டப்­பட்­டுள்ளார்.

அமைச்­சர்கள் சிலர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் முட்­டாள்கள் போல பதி­ல­ளிக்­கின்­றார்கள். அவர்­களை முதலில் சிறை­யி­லிட வேண்­டும. இந்த ஆட்­சியை உரு­வாக்க பேரா­சி­ரி­யர்கள் பலர் அரும்­பாடு பட்­டார்கள். அவர்கள் இன்று மெளனம் சாதிக்­கின்­றார்கள். நல்­லாட்­சியில் தேரர்­க­ளுக்கு கூட சுதந்­திரம் இல்லை. கருத்தை சுதந்­தி­ர­மாக கூற முடி­யா­துள்­ளது என்றார்.

 ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ராவணா பலய அமைப்பின் தலைவர் ஹிந்­தே­கந்தே சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­விக்­கையில்,

இரு வரு­டங்கள் இந்த ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டு­களை நாம் பொறுத்­தி­ருந்து பார்தோம். அதற்­க­மைய தற்­போ­தைய ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற தேவை­யினை நாம் உணர்ந்­துள்ளோம். ஏப்ரல் மறறும் மே மாதங்­களில் சித்­திரை வரு­டப்­பி­றப்பு, வெசாக உள்­ளிட்ட பண்­டி­கைகள் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளன.

எனவே பண்­டிகை காலம் முடிந்த பின்னர் எதி­ர­வரும் ஆகஸ்ட் மாதம் அளவில் இந்த ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு துரத்­தி­ய­டிப்போம். அதற்­கான செயற்­பா­டு­களை இன்­றி­லி­ருந்தே ஆரம்­பிப்போம். நாம் இவ்­வாறு செய்­யா­விடின் சீனா மற்றும் இந்­தி­யா­விற்கு இந்­நாடு கூறிட்டு விற்­பனை செய்­யப்­படும்.

தற்­போது அமெ­ரிக்­காவில் வய­தா­ன­வர்­களை இளை­மை­யாக்­கு­வ­தற்­கான ஊசி மருந்­தொன்று கண்­டு­ப­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் இந்த ஆட்­சி­யா­ளர்­களை இள­மை­யாக்கி மீண்டும் ஆட்­சி­ய­மைக்க செய்­வார்­களோ என்ற அச்சம் எமக்கு தோன்­று­கின்­றது.

இன்று நாட்டில் சட்டம் சரி­யாக நடை­மு­றையில் உள்­ளது என்றால் விமல் வீர­வன்ச இருக்கும் கூண்­டுக்கு அடுத்­த­தாக இருக்கும் சிறைக்­கூட்டில் அர்­ஜுன மகேந்­தி்­ரனும் அவ­ரது மரு­ம­கனும் இருக்க வேண்டும். இந்த ஆட்­சி­யிலும் திரு­டர்கள் பலர் உள்­ளனர். மஹிந்த ஆட்­சியில் இருந்­தாக கூறப்­படும் சகல திரு­டர்­களும் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் உள்ளார்கள்.

அதனால் இந்த ஆட்சியாளர்களை ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் போராட்டத்தில் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் தீக்குளிக்கவும் தேரர்கள் தயாராகவுள்ளனர். எனவே அரசாங்கத்தினை ஆகஸ்ட் மாதத்தில் வீட்டிற்கு அனுப்பியே தீருவோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முத்தெடுவே ஆனந்த தேரர் தெரிவிக்கையில்,

இந்த விவகாரத்தில் மஹா சங்க தேரர்களை கருத்திற் கொள்ள நாம் தயாரில்லை. அவர்களை சந்தித்து பேசுவோம். அவர்கள் வழமை போலவே அவர்களின் ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை மாத்திரம் கூறிவிட்டு இருக்கட்டும். எமது மேலதிகச் செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.