Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991 - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991

”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN”

199-1991 காலக்கட்டத்தில் நோர்வீயிய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தேன். அக்காலக் கட்டத்தில் நோர்வீஜிய அமைப்பான நோராட் ஆதரவுடன் மட்டக்களப்பு அபிவிருத்தி எதிர் நோக்கும் சமூக பொருளாதார கலாச்சார வரலாறுப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். 1991 வசந்த காலத்தில் என் ஆய்வு அறிக்கையை எழுதி முடித்தேன். இந்த ஆய்வு நாட்டு நலனுக்கு எதிரானது என குற்றம்சாட்டி கொள்ளுப்பிட்டி பகுதிப் பொலிஸ் சுப்பிறீண்டன்ற் என்னை கைது செய்தார். நான் விடுதலை இயக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறேன் என அவர்கள் கருதியது காரணம்.

என் ஆய்வுப் பணிகளின் ஆரம்பத்தில் (1990 மார்ச்) இந்திய அமைதிப் படைகள் வெளியேறி யாழ்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்குமிடையில் நிலவிய தற்காலிக சமாதானம் 1990 ஜூன்மாதம் முறிவடைந்தது. சமாதானக் காலக் கட்டத்தில் நோர்வே - விடுதலைப் புலிகள் உறவுகளை பலப்படுத்தும் பணியிலும், இந்தியா- விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம்கள் - விடுதலைப்புலிகள் உறவுகளை மேம்படுத்தும் சிந்தனையிலும் ஆர்வம் கொண்டிருந்த சிலரில் நானும் ஒருவனாக இருந்தேன். 
 *
மேற்படி சமாதான காலக் கட்டத்தில் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் பத்திரிகையாளர் ஒய்வின் பியல்ஸ்ரட்டோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணத்துக்குச் சென்றேன். அது நோர்வேக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆரம்பகால தொடர்புகளில் முக்கியமான ஒரு பயணம். மேலும் பெண்கள் அமைப்பின் முகாம்களுக்குள் சர்வதேசப் பத்திரிகையாளர் அனுமதிக்கப் பட்ட முதல் நிகழ்வாகும். படங்கள் எடுத்ததுடன் தழபதி அகிலாவின் பேட்டியும் பதிவு செய்தோம்.

துர் அதிஸ்ட்ட வசமாக என் ஆய்வு முடிவடையுமுன்னமே பிரேமதாசா விடுதலைப் புலிகளிடையே நிலவிய சமாதானம் முறிவடைந்தது. தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு நானும் கொள்ளுப்பிட்டிப் பொலிசாரால் கடத்தப்பட்டேன். நோர்வீஜிய தூதரக பணியில் இருந்தததால் தப்பிக்க முடிந்தது. எனினும் என் பாதுகாப்புக் கருதி சில நாட்களுள் நோர்வீஜிய தூதரகம் ஒஸ்லோவுக்கு அனுப்பி வைத்தது.

இதனால் என் மட்டக்களப்பு அபிவிருத்தி பற்றிய ஆய்வு முதல் வரைவுடன் தடைப் பட்டது. என் ஆய்வுகள் தேச விரோதம் அல்ல என்று உணர்த்தும் வகையில் சிங்கள முற்போக்காளர்கள் சிலர் எனது ஆய்வின் முதல் வரைவின் ஒரு பகுதியை பின்வரும் குறிப்புடன் மக்கள் வங்கி சஞ்சிகையான பொருளியல் நோக்கில் மும்மொழிகளிலும் வெளியிட்டனர்.

ஆங்கிலத்தில் தலைப்பு பின் வருமாறு அமைந்தது.

”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN
V.I.S.Jayapalan, former president of the Jaffna university students council, is the leading Sri Lankan Tamil poet and is regarded as the finest Tamil intellectual of the younger generation - Economic Review (Peoples Bank, Sri Lanka) April 1991.”

துரதிஸ்ட்ட வசமாக என் முதல் வரைவின் பிரதிகளை நான் இழந்துவிட்டேன். கொழும்பு நோர்வே தூதரகத்திலும் கிடைக்கவில்லை. என்னிடமிருந்த கடைசிப் பிரதியை அப்போது கிழக்குப் பல்கலைக் கழக பொருளியல் துறை தலைவராக இருந்த காலம் சென்ற பேராசிரியர் நண்பர் தம்பையாவிடம் கொடுத்தேன்.

என் மட்டகளப்பு ஆய்வின் பிரதியை கண்டுபிடிக்க யாராவது உதவமுடிந்தால் மகிழ்வேன்.

என் முதல் வரைவின் ஒரு பகுதியான மட்டக்களப்பின் சமூக பொருளாதார வரலாறு மட்டும் இணையத்தில் கிடைத்தது. இதை வாசித்த பேராசிரியர் மவுனகுரு மட்டக்கலப்பு வரலாற்று ஆய்வில் ‘பிறேக் துறு’ என குறிப்பிட்டதாக அறிந்தேன். இணையத்தில் கிடைக்கும் பகுதியின் வலை இணைப்பு இதோ.

THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN

http://dl.nsf.ac.lk/bitstream/handle/1/13877/ER-17(1)-29.pdf?sequence=2

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.