Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச பொறிக்குள் அரசு உலக நாடுகளுடன் முரண்பட முடியாது என்கிறார் சுமந்திரன் எம்.பி.

Featured Replies

சர்­வ­தேச பொறிக்குள் அரசு

p11-c6cbb70f4ac1487d74ee256deeb6296641560a29.jpg

 

உலக நாடுகளுடன் முரண்­பட முடி­யா­து­ என்கிறார் சு­மந்­திரன் எம்.பி. 
 (கே.குமணன்)

இலங்­கையில் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள்,மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பான பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் தற்­போது இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர்

எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­மை­யா­னது அர­சி யல் சுய­லா­பங்­க­ளுக்­காக மக்கள் மத்­தியில் தவ­றாக பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­ மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜாவின் ஏற்­பாட்டில் நேற்று வியா­ழக்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு ஒட்­டு ­சுட்டான் தான்தோன்­றீஸ்­வரர் ஆலய முன்­றலில் நடை­பெற்ற சம­கால அர­சியல் தொட

ர்­பான மக்கள் தெளி­வூட்டல் நிகழ் வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே

அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,யுத்தம் நிறை­வ­டைந்த பின்­ன­ரான சூழலில்

  உட­னடிப் பிரச்­சி­னை­க­ளுக்கு கூட தீர்வை வழங்­காத நெருக்­க­டி­யா­ன­தொரு சூழல் காணப்­பட்­டி­ருந்து. இந்­நி­லையில் தான் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு அவ­சியம் என்று குறிப்­பிட்டு சர்­வ­தே­சத்­தி­டத்தில் நாம் நீதி கோரி­யி­ருந்தோம். 2012 இலி­ருந்து சர்­வ­தேசம் எங்­க­ளுக்குக் கைகொ­டுக்கத் தொடங்­கி­யது.

பொறுப்­புக்­கூறல் விட­யங்­களை முன்­னெ­டுக்­கு­மாறு அறி­வு­ரை­களை வழங்­கி­னார்கள். பல­வ­ழி­களில் அழுத்­தங்கள் அளிக்­கப்­ப­பட்­டன. எனினும் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டுகள் அற்ற நிலையில் தான் சர்­வ­தேச விசா­ரணை ஒன்று அவ­சியம் என்று 2014 இல் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது.

தொடர்ந்தும் படிப்­ப­டி­யாக பல்­வேறு தளங்­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­டுத்­தப்­பட்ட சூழலில் சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை 2015 செப்­ரெம்பர் 16 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டு­மா­க­வி­ருந்தால் சர்­வ­தே­சத்தின் உதவி எங்­க­ளுக்குத் தேவை என்று நாங்­களே கோரு­கின்றோம். அவ்­வாறு நாம் கோரு­கின்ற நிலையில் சர்­வ­தேசம் எங்­க­ளுக்கு முன்­பாக ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்­தி­ருக்­கின்­றது. அத­னுடன் இணங்கி அதற்கு அனு­ச­ர­ணை­யாக செயற்­பட வேண்­டி­யது தேவை­யொன்று எமக்கு ஏற்­ப­டு­கின்­றது.

எங்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக முன்­வந்­துள்ள சர்­வ­தே­சத்­துடன் இணைந்து அந்த விட­யங்­களைக் கையாள வேண்­டி­யது அடிப்­படைப் புத்­தி­சா­லித்­த­ன­மாகும். அவ்­வா­றி­ருக்­கையில் சர்­வ­தே­சத்தின் உத­வியைக் கோரி­விட்டு அவர்கள் உத­வு­வ­தற்கு முழு­மை­யாக தலைப்­ப­டு­கின்ற போது, நாங்கள் சொல்­வ­தையே நீங்கள் (சர்­வ­தேசம்) செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­து­வது முட்­டாள்­த­ன­மா­ன­தாகும்.

உலக நாடுகள் அனைத்தும் எங்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க முன்­வந்­தாலும் அவர்­க­ளி­டத்தில் நாங்கள் கேட்­கின்ற வகை­யிலே நடக்க வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்க முடி­யாது.

சர்­வ­தே­சத்தின் கவனம் இலங்­கையை விட்டு அகன்று விடும் என்றும் அச்சம் ஏற்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக யுத்­தத்தின் போது நிகழ்ந்த குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். 5 ஆண்­டு­க­ளாக அதற்கு அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் யுத்தம் முடிந்து விட்­டது. உலகில் வேறு பிர­தே­சங்­களில் யுத்தம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தேச சமூ­கத்தின் கவனம் இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பி­விடும். அதற்கு முன்னர் விட­யங்கள் நடை­பெற வேண்டும் என்று நாம் அங்­க­லாய்த்தோம்.

அவ்­வா­றான அச்சம் காணப்­பட்­டாலும் தற்­போது வரையில் சர்­வ­தே­சத்தின் பார்வை அக­லாமல் இருப்­பது எங்­க­ளு­டைய பாக்­கியம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் இல்­லா­மில்லை. இலங்­கையில் இருக்­கின்ற தமிழ் மக்­க­ளு­டைய விவ­கா­ரத்தில் சர்­வ­தே­சத்தின் ஈடு­பாடு வெற்­றி­ய­ளித்­தது என்ற முன்­னு­தா­ர­ணத்தைக் காட்ட அவர்கள் விரும்­பு­கி­றார்கள். அதற்­காக இந்த நாட்டின் மக்­களே ஆட் சியா­ளர்­களை மாற்­றி­னார்கள்.

இலங்­கையில் ஆட்­சி­யா­ளர்­களை மாற்­றி­னால்தான் அதனைச் செய்ய முடியும் என்று சர்­வ­தேச சமூகம் நம்­பி­யது. இலங்­கையில் ஆட்சி மாற்­றத்தை சர்­வ­தேச சமூகம் விரும்­பி­யது. இது எல்­லோரும் அறிந்த இர­க­சியம். தற்­போது 2015ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­ற­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்பில் தற்­போது மக்கள் மத்­தியில் அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக தவ­றாக பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

உண்­மையில் ஒரு நாட்டை எடுத்த எடுப்­பி­லேயே சர்­வ­தேச நீதி­மன்றில் நிறுத்­தி­வி­ட­மு­டி­யாது. கடந்த காலங்­க­ளிலே யுகொஸ்­லோ­வியா, ருவண்டா போன்ற நாடு­களில் நிகழ்ந்த விட­யங்கள் குறித்து விசேட தீர்ப்­பாயம் அமைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

தற்­போது வட­கொ­ரியா விட­யத்­தில்­கூட அந்­நாட்டை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­செல்ல உட­ன­டி­யாக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது. காரணம் பாது­காப்புச் சபையில் உள்ள ஐந்து நாடு­களும் இந்த விட­யத்தில் எகோ­பித்த முடி­வுக்கு வர­வேண்­டிய நிலை உள்­ளது. அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­ற­தொரு சூழலில் நாம் ஒரு விட­யத்­திற்­கான ஏனைய அனைத்து விட­யங்­க­ளையும் கைவிட்டு சர்­வ­தே­சத்­துடன் முரண்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

தற்­போது கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளதன் மூலம் 30.1 தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு கடு­மை­யான மேற்­பார்­வையும் செய்­யப்­ப­ட­வுள்­ளது. ஆகவே அந்த நிலை­மைளில் சர்­வ­தே­சத்தால் உரிய அவ­தா­னிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அதன் பிர­கா­ரமே அடுத்த கட்ட விட­யங்கள் அமையும்.

தற்­போது இலங்கை சர்­வ­சேத்தின் பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது. சர்­வ­தேச சமூகம் எங்­க­ளுடன் இருப்­பதைக் கண்டு அவர்கள் பயப்­ப­டு­கின்­றார்கள். ஆனால், எங்­களில் சிலர் இங்கே சர்­வ­தேச சமூகம் எதுவும் செய்­ய­வில்லை என்று புலம்பிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஐ.நா. எங்­களை கைவிட்டு விட்­டது என்று வாய் கூசாமல் சொல்­கின்­றார்கள். ஐ.நா எங்­களை எங்கே கைவிட்டு விட்­டது?

சர்­வ­தேச சமூகம் எங்­க­ளுடன் இருப்­பதை பலர் குழப்­பி­ய­டிக்க முயல்­கின்­றார்கள். சர்­வ­தேச சமூகம் எங்­க­ளுடன் இருப்­பதைக் கண்டு பயப்­ப­டு­கின்ற அர­சுக்கு, சர்­வ­தேச சமூ­கத்தை எங்­க­ளி­ட­மி­ருந்து விரட்­டி­ய­டிக்க எங்­களில் சிலர் முயல்­கின்ற செயற்­பா­டு­க­ளுக்கு மக்கள் இட­ம­ளிக்க கூடாது. மக்கள் இந்த யதார்த்­தத்­தினை புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­நேரம் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் நிறைவில் நாம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்புக் கோரு­வதை சிலர் பிழை என்­கின்­றார்கள். பெரும்­பான்மை சிங்­கள மக்கள் இருக்­கின்ற நாட்­டிலே பொது வாக்­கெ­டுப்பில் வெல்ல முடி­யுமா என்று கேட்­கின்­றார்கள்.

சிங்­கள தேசத்­திற்­கான யுத்­தத்தில் வெற்றி பெற்று யுத்த வெற்றி மம­தையில் ஆட்­சியை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­த­வர்கள் யாருமே எதிர்­பா­ராத வகையில் ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டார்கள். தமிழ் - முஸ்லிம் மக்களின் நூறு சதவீத வாக்குகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வந்திருந்தாலும் அவரை அகற்றியிருக்க முடியாது.

சிங்கள வாக்காளர்களில் 48 சதவீதத்தினர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். அதாவது சிங்கள தேசத்தை மீட்டெடுத்த மீட்பருக்கு எதிராக, அந்த வெற்றியைப் பெற்ற 5 வருடத்திலேயே அவருக்கு எதிராக வாக்களித்தனர். அதனை நாம் கண்டுகொள்ளாமல் விடமுடியாது.

இவ்வாறான நிலையில் நியாயமான தீர்வு, நாட்டின் சுபீட்சத்துக்கான நிரந்தர தீர்வு முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்களும் ஆதரவு வழங்குவார்கள். யுத்த வெற்றி அட்சியாளரையே தூக்கி எறிந்த 48 சதவீதமான சிங்கள மக்கள், நியாயமான விடயத்துக்காக ஏன் ஆதரவு வழங்கமாட்டார்கள் ?

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். அது சிங்கள மக்களுக்கும் தேவை என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-31#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.