Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் புலிகளின் பிரதிநிதியாக செயற்படுகிறார் சி.வி.; ஹெல உறுமய குற்றச்சாட்டு

Featured Replies

மாகாண அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­ட­வேண்டும்

01-a27b82e479ef2dd1e1c0b5d108f2155d686611e9.jpg

 

புலி­களின் பிர­தி­நி­தி­யாக செயற்­ப­டு­கிறார் சி.வி.;  ஹெல உறு­மய குற்­றச்­சாட்டு
(ஆர்.யசி )

ஒன்­பது மாகாண சபை­க­ளையும் ஒன்­பது பாரா­ளு­மன்­றங்­க­ளாக மாற்றும் மோச­ மான பிரே­ரணை தொடர்பில் முத­ல மைச்­சர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப் பட்­டுள்­ளது. இந்த தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­த­ப்ப­டு­மாயின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தனித்து செல்ல பிர­தான கார­ணி­யாக அமையும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்தார். வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனும் வட­மா­காண  சபையும் புலி­களின் பிர­தி­நி­திகள் எனவும் அவர் அவர் சுட்டிக் காட்­டினார்.  

ஜாதிக ஹெல உறு­மை­யவின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

மாகா­ண­ச­பை­க­ளிலும் பாரா­ளு­மன்ற நடை­மு­றை­களை கையாள வேண்டும் எனவும் மாகா­ண­சபை பொறுப்­புக்கள் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­களின் பிர­காரம் அமை­யப்­பெற்ற வேண்டும் எனவும் மாகா­ண­சபை முதல்­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் மாகா­ண­சபை அவை தலைவர் சபா­நா­யகர் எனவும், உப தலை­வரை பிரதி சபா­நா­யகர் எனவும், எதிர்க்­கட்சி தலைவர் எனவும் பாரா­ளு­மன்ற கட்­ட­மைப்பின் படி அமைக்­கப்­பட வேண்டும் என மாகா­ண­சபை முதல்­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தீர்­மா­ன­மா­னது மிகவும் மோச­மான ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. இப்­போது வரையில் மாகா­ண­ச­பையின் ஒரு­சில பத­விகள் மாகா­ண­சபை சட்ட மூலத்தின் பிர­காரம் அமை­ய­வில்லை. ஒரு­சில நட­வ­டிக்­கைகள் விதி­மு­றைக்கு அப்பால் செயற்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக எதிர்க்­கட்சி பத­விகள் என்­பன சுட்­டிக்­காட்­டப்­ப­டா­த­வை­யாகும். அவ்­வா­றான நிலையில் இப்­போது மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்­து­வது மட்டும் அல்­லாது தனித்து செயற்­ப­டக்­கூ­டிய வகை­யி­லான செயற்­பா­டுகள் கையா­ளப்­ப­டு­வது நாட்டில் பிரி­வி­னை­வாத கொள்­கைளை மேலும் பலப்­ப­டுத்தும்.

 பாரா­ளு­மன்­றத்­திற்கு நிக­ரான வகையில் மாகா­ண­ச­பை­களை கொண்டு செல்ல முயற்­சிப்­பது பாரா­ளு­மன்­றத்தை அவ­ம­திக்கும் செயல் மட்டும் அல்­லாது, பாரா­ளு­மன்ற அதி­கா­ரங்­களை மிஞ்­சிய ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் அமையும். நாட்டில் பிரி­வி­னை­வா­தத்தை பலப்­ப­டுத்தும் எந்­த­வொரு யோச­னைக்கும் ஜாதிக ஹெல உறு­மைய இணங்­கிப்­போ­காது. வடக்கில் இருந்து பிரி­வி­னை­வாத கோட்­பா­டுகள் வந்­தாலோ அல்­லது தெற்கில் இருந்து பிரி­வி­னை­வாத கோட்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டாலோ அதை முதலில் நாம் எதிர்ப்போம். நாட்டில் எந்த திசையில் இருந்து பிரி­வி­னை­வாதம் வரு­வ­தையும் நாம் அனு­ம­திக்­க­மாட்டோம்.

மேலும் அதி­கா­ரத்தை பிரிக்க இட­ம­ளிக்க மாட்டோம், மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொடுக்­கப்­பட கூடாது என வெளியில் தெரி­விக்கும் நபர்கள் மாகா­ண­ச­பைக்குள் இருந்­து­கொண்டு நாட்டை பிரிக்கும் யோச­னை­களை முன்­வைக்­கின்­றனர். நாட்டை நேசிப்­ப­தாக கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களே இந்த பிரி­வி­னை­வாத சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வந்­துள்­ளனர். வடக்கு மாகா­ண­சபை எப்­போதும் பிரி­வி­னை­வாத யோச­னை­களை முன்­வைக்­கின்­றது. அதில் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்றும் இல்லை. ஆனால் நாட்டை நேசிப்­ப­தாக கூறிக்­கொண்டு செயற்­படும் மஹிந்த தரப்­பி­னரும் பிரி­வி­னை­வாத பக்­கமே உள்­ளனர்.

இப்­போது இருக்கும் மாகா­ண­ச­பை­களை ஒன்­பது பாரா­ளு­மன்ங்­க­ளாக மாற்­றப்­படும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இப்­போது மாகா­ண­ச­பைகள் தமது அதி­யுச்ச அதி­கா­ர­களை கோரியும் அதேபோல் பாரா­ளு­மன்ற கட்­ட­மைப்பில் மாகா­ண­ச­பைகள் செயற்­பட வேண்டும் எனவும் தீர்­மா­னித்­துள்ள நிலையில் அடுத்­த­தாக முத­ல­மைச்சர் மாகாண பிர­த­மா­ராக மாற்­றப்­ப­டுவார். அதன் பின்னர் இலங்­கையின் ஒன்­பது மாகா­ண­ச­பை­க­ளுக்கும் ஒன்­பது பிர­த­மர்கள் உரு­வக்­கப்­ப­டுவர். இதுவே நாட்டின் அதி­யுச்ச பிரி­வி­னை­வாத கொள்­கை­யாக அமையும். இந்த யோச­னைக்கு பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைக்கம் தெரி­விக்கும் வகையில் மாகா­ண­ச­பையில் இணக்கம் கண்­டுள்­ளனர். எனினும் ஜாதிக ஹெல உறு­மைய மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய இரண்டு கட்­சி­களும் முழு­மை­யாக இந்த யோச­னையை எதிர்த்து வாக்­க­ளித்­துள்­ளன .

பிரி­வி­னை­வாதம் என்ற முறை­யற்ற குழந்தை சிறிது சிறி­தாக வளர ஆரம்­பித்­துள்­ளது. இன்னும் சிறி­து­கா­லத்தில் நாட்டில் மிகவும் மோச­மான பிரி­வி­னை­வாதம் உரு­வாக்­கப்­படும். மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் வாக்­கெ­டுப்பு நடத்­து­மாயின் முதலில் கைதூக்கும் நபர்கள் நாங்­க­ளா­கவே இருப்போம். மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் அல்­லது மாகா­ண­சபை நகர்­வுகள் என்­பது நாம் கேட்­டுக்­கொண்ட ஒன்­றல்ல. எமக்கு இந்­தியா பல­வந்­த­மாக திணித்த ஒன்­றாகும். மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் இந்­தியா கொண்­டு­வந்த ஒன்­றாகும். இன்று மாகா­ண­ச­பைக்­கான செல­வுகள் மிகவும் அதி­க­மாகும். சரி­யாக கொண்­டு­செல்ல முடி­யாது உள்­ளது. இவ்­வாறு மோச­மான வகையில் மாகா­ண­ச­பைகள் செயற்­படு வரு­கின்­றன.

இந்த நகர்­வுகள் மூலம் நாட்டில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. ஆகவே இந்த செயற்­பாட்டை அர­சாங்கம் நிறுத்த வேண்டும். அர­சாங்­கமே இந்த நகர்­வு­களை முன்­னெ­டுத்து செல்­லக்­கூ­டாது. அவ்­வாறு இல்­லா­விடின் இது பொரு­ளா­தார பிரி­வினை வரையில் கொண்டு செல்லும் என்­பதே உண்­மை­யாகும். மாகா­ண­ச­பையில் வர­வு­செ­லவு திட்டம் நிறை­வேற்றல் என்­பன கையா­ளப்­படும். குறிப்­பாக வடக்கு மாகா­ண­சபை பொரு­ளா­தார பிரி­வி­னை­வாத திட்­டத்தில் செயற்­பட்டு வரு­கின்­றது. அண்­மையில் அவர்கள் முன்­வைத்த யோச­னையின் மூலம் தெற்கின் கள் வடக்கில் அனு­ம­திக்கக் கூடாது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் வடக்கு கட­ற­ட­ப­ரப்பில் தெற்கின் மீன­வர்கள் மீன்­பி­டிக்கக் கூடாது என தெரி­விக்­கின்­றனர். ஆனால் இந்­திய மீன­வர்கள் மீன் பிடிக்க முடியும். இவ்­வா­றான ஒரு பிரி­வி­னை­வாத நிலைப்­பாட்டில் அவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்த நிலைப்­பாட்டில் இருந்து கொண்டு வடக்கின் வெங்­காயம் எமக்கு வேண்டாம் என்று நாம் தீர்­மானம் எடுத்­தாலோ அல்­லது வடக்கில் உற்­பத்தி செய்யும் எந்த பொருட்­களும் எமக்கு வேண்டாம் என நாம் தீர்­மானம் எடுத்­தாலோ வடக்கின் நிலைமை என்­ன­வாகும்.

ஆரம்­பத்தில் வட­மா­கா­ண­சபை 2013ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட போதே அவ்­வா­றான செயற்­பாட்­டினை முன்­னெ­டுக்க வேண்டாம் என நாம் அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தினோம். மாகாணசபை அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது எனவும் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது எனவும் தெரிவித்தோம். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாது அரசாங்கம் செயற்பட்டது. வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே விக்கினேஸ்வரனும் வடமாகாணசபை உறுப்பினர்களும் பிரிவினைவாத கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர். இப்போதும் புலிகளின் பிரதிநிதிகளாகவே இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் மாகாணசபைகள் பாராளுமன்றம் போன்று செயற்படவேண்டும் என தீமானிக்கப்படும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் முதலில் தமது ஆதரவை தெரிவிக்கும். இது நாட்டை துண்டாடும் நல்லதொரு அடித்தளமாக அமையும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-31#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.