Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட அனைவரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள்

Featured Replies

ஐ.நா. அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட அனைவரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள்

 

 

(க.கமலநாதன்)

ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதுடன் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்தாகவே குற்றம் சாட்டினார்கள் என ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவம் யுத்த குற்றம் இழைத்தாக கொண்டு வந்த அறிக்கை முழுமையாக பொய்யான காரணங்களை உள்ளடக்கியெத சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை  நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/18555

  • தொடங்கியவர்

ஐ.நா.வில் பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா உட்பட சகலரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினர்

Sp25-f3fb042b2bd808231df1cb33fd78bf4c69755cf4.jpg

 

சரத் வீரசேகர குற்றம் சாட்டுகிறார்

(க.கம­ல­நாதன்)

ஐக்­கிய நாடுகள் சபை அமர்வின் பக்க நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்த அனை த்து அரச­சார்­பற்ற நிறு­வ­னங்களின் பிர­தி­நி­தி­களும் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக பேசி­ய­துடன் இலங்கை இரா­ணுவம் போர்க்குற்றம் இழைத்த­தா­கவே குற்றம் சாட்­டி­னார்கள் என ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணையாளர், இலங்கை இரா­ணு வம் யுத்தக்குற்றம் இழைத்த­தாக கொண்டு வந்த அறிக்கை முழு­மை­யாக பொய்­யான கார­ணங்­களை உள்­ள­டக்­கி­யதென நான் சுட்­டிக்­காட்­டி­னேன் என்றும் அவர் குறிப்­பிட் டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் உத்­தி­யோ­கபூர்வ அலு­வ­ல­கத்தில்   இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்    கலந்­துக்­கொண்­டு உ­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.   

அவர் மேலும் தெரி­விக்­கையில், ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வை­யினால் இலங்கை இரா­ணுவம் மீது போர் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­றைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றை மறுத்து கூறும் வகை­யிலான அறிக்கை ஒன்றை சமர்­பிக்­கவே நான் ஜெனீவா சென்­றி­ருந்தேன். 

தேசப்­பற்­றுள்­ள­வர்கள் சார்பில் நான் அங்கு சென்­றி­ருந்தேன். இவ்­வா­றி­ருக்­கையில் யுத்தம் முற்று­பெற்ற காலத்தில் இலங்­கை மீது கொண்­டு­வரப்­பட்ட பிரே­ரணை இலங்­கையை ஆத­ரிப்­ப­தா­கவே இருந்­தது. உலகின் பல­மான தீவி­ர­வாத அமைப்­பினை தகர்த்­து­விட்­டனர் என்று எம்மை உலக நாடுகள் வாழ்த்­தின.

ஆனால் பிற்­பட்ட காலங்­களில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­களை இலங்­கைக்கு எதி­ரா­ன­தாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை டயஸ் போராக்கள் (புலம் பெயர் தமிழ் அமைப்­புக்கள்) மேற்­கொண்­டன.

இந்­நி­லையில் அண்­மையில் இடம்பெற் ஜெனீவா அமர்­வு­களின் போது இடம்­பெறும் உப நிகழ்வுகளில் கலந்­துக்­கொண்­டி­ருந்த பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து, நிமல்கா பெர்­னாண்டோ உள்­ளிட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை சேர்ந்­த­வர்கள் இலங்கை இரா­ணுவம் மீது பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தார்கள்.

குறிப்­பாக தமிழர் தாய­கத்தில் 1 இலட்­சத்து 80 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்­களை கொலை செய்­யப்­பட்­டார்கள், புனர்­வாழ்வு முகாம்­களில் இன்னும் தமி­ழர்கள் மீதான வதைப்­புக்கள் தொடர்­கின்­றன, பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளது, இரா­ணுவ முகாம்­களி தமிழ் பெண்கள் இன்றும் பாலியல் தொழி­லா­ளர்­க­ளாக மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர், என்­ற­வாறு பல விட­யங்­களை முன்­வைத்­தார்கள்.

இங்கு வந்­தி­ருந்­த­வர்­களில் எனது மூன்று நிமிட உரை­யினை தவிர ஏனைய உரைகள் அனைத்தும் புலி­க­ளுக்­குக்கும் தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு பக்­கச்­சார்­பா­ன­வை­யா­கவே அமைந்­தி­ருந்­தன. அதன் போது எனக்கு உரை­யாற்ற சந்­தர்ப்பம் அளிக்­பட்­ட­தை­ய­டுத்து மணி­வண்ணன் என்­பவர் என்னை யுத்த குற்றம் செய்தவன் என்றும் சிறையில் அடைக்கும் படியும் கோரிக்கை விடுத்து சத்­த­மிட்டார்.   

ஆனால் எனக்கு கிடைத்த சிறிது நேரத்தில் எனது அறிக்­கை­யி­லுள்ள விட­யங்­களை சுட்­டிக்­காட்ட வேண்­டி­யி­ருந்த கார­ணத்­தினால் மணி­வண்­ணனின் கோரிக்­கைக்கு நான் பதி­ல­ளிக்க விரும்­ப­வில்லை. இருப்­பினும் நிகழ்வின் இறு­தி­நே­ரத்தின் போது அவர் புலி­க­ளுக்கு பணம் வழங்கி வந்த ஒருவர் என்­பதை அறிந்­துக்­கொள்ள முடிந்­தது.

எவ்­வா­றா­யினும் இந்த இலங்கை அர­சாங்கம் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரனை வழங்­கி­யுள்­ளதால் பிரே­ர­ணையை எதிர்க்க முடி­யாத நிலை­யி­லுள்ள நாடு­களின் பிர­தி­நி­திகள் நிகழ்வின் நிறைவில் என்னை சந்­தி­ருந்­தார்கள்.

அவர்கள் எனது உரை­யினை கேட்­ட­தா­கவும் இலங்கை விவ­கா­ரத்தில் தாங்கள் எனது உரையின் பின்னர் ஒரு திருப்பு முனையை பார்ப்­ப­தா­கவும் கூறி­னார்கள்.

அதனால் அடுத்த அவர்வு இடம்­பெறும் போது நாம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளாக ஒருவர் செல்­லாமல் வேறு­பட்ட பல அமைப்­பினை பிர­தி­நி­தி­களை அழைத்துச் சென்று ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையில் சமர்­பிக்­க­ப்படும் இலங்கை இரா­ணுவம் யுத்த குற்றம் இழைத்­தது என்ற குற்­றச்­சாட்­டினை மறுத்து அறிக்கை சமர்­பிப்போம்.

அத்­துடன் இலங்கைக் எதி­ராக முற்­றிலும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய பிரே­ர­ணையை சமர்­பித்த ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் செய்த அல் ஹூசைனை கண்­கா­ணிக்க ஒரு பிர­தி­தி­நி­தியை நிய­மிக்க வேண்டும் என்ற கோரிக்­கையும் முன்­வைத்­துள்ளோம் என்றார்.

ஜி.எல்.பீரிஸ் கருத்து

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­றிய பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­விக்­கையில், ரியர் அட்­மிரால் சரத் வீர­சே­கர எமது நாட்­டிற்­காக பெரும் சேவை­யாற்­றி­யுள்ளார். இந்த சேவையை நல்­லாட்சி அர­சாங்கம் செய்­தி­ருக்க வேண்டும். அதற்கு மாறாக நல்­லாட்சி அர­சாங்கம் தோற்­று­வித்த குழப்­பத்­தினை சீர்­ப­டுத்­து­கின்ற வகையில் சரத் வீர­சே­க­ரவின் செயற்­பாடு அமைந்­துள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை என்று கூறு­கின்­றனர். அவர்கள் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் 2015 ஆண்டு அமர்வில் சமர்­பிக்­க­கப்­பட்ட பிரே­ர­ணையை அறி­யா­த­வர்கள் போல இவர்கள் பேசு­கின்­றனர்.

அந்த பிரே­ர­ணையில் 6ஆவது அத்­தி­யா­யத்தில் இந்த விடயம் சர்­வ­தேச நீதி­ப­திகள் வேண்டும் என்ற பரிந்­துரை இடம்­பெற்­றுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ரையும் குற்­ற­வா­ளி­க­ளாக நீதி­மன்­றத்தில் நிறுத்த வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த பிர­ரே­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரனை வழங்­கி­யது. அதே பிரே­ர­ணையை தான் அண்­மையில் இடம்­பெற்ற அமர்வின் போதும் இலங்கை அர­சாங்கம் 2 ஆவது முறை­யா­கவும் உறு­திப்­ப­டுத்­தி­யது.

இந்த பரிந்­து­ரைகள் அனைத்­தையும் திருத்­தங்கள் இன்றி நடை­மு­றைப்­ப­டுத்­தவே 2 வருட கால அவ­கா­சமும் அர­சாங்­கத்­திற்கு பெற்று கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் நாம் கால அவ­காசம் கோர­வில்லை. இலங்கை இரா­ணுவம் யுத்த குற்றம் இழைக்­க­வில்லை என்­பதை சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் எம்மால் உறு­திப்­ப­டுத்தி காட்ட முடியும். கடந்த மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் அத­னையே செய்­தது.   

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் அவை ஒன்­றையும் செய்­ய­வில்லை. மாறாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மை வெற்றிபெற செய்தமைக்கு தமிழ் புலம் பெயர் அமைப்புக்களுக்கு நன்றிகடன் செய்வதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

அதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினை முழுமையாக சமர்பிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அங்கு வந்திருந்த டயஸ் போராக்கள் (தமிழ் புலம்பெயர் அமைப்பினர்) சரத் வீரசேகரவை சிறையிடவும் கோரினார்கள்.

அவ்வாறிருக்கின்ற போதும் எமது செயற்பாடுகளை வலுவாகச் செய்து முடித்தார் இராணுவம் யுத்த குற்றம் இழைத்தது என்ற குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையிலான ஒரு அறிக்கையினை சமர்பித்தார என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.