Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்

Featured Replies

யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்

 

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக இம்­முறை நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வர­வேற்­ப­ளித்­தமை தொடர்பில் வடக்கு, கிழக்­கிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. வடக்கு மாகா­ணத்தில் ஒரு சில அர­சியல் கட்­சி­களும் சிவில் சமூக நிறு­வ­னங்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் இந்த ஆத­ரவு வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்தை விமர்­சித்­தி­ருந்­தன. அதா­வது அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கு­வதன் மூலம் மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்­டி­லி­ருந்து விலகிச் செல்­வ­தற்கு உத­வு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அது­மட்­டு­மன்றி புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­மைக்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஒரு சில அங்­கத்­துவக் கட்­சி­களும் கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­கான பிரே­ர­ணையை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வர­வேற்­றமை தொடர்பில் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தன. இதனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்குள் பிள­வுகள் ஏற்­பட்­டு­விடும் என்ற நிலைமை கூட உரு­வா­கி­யது. எனினும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தாம் ஏன் இந்தப் பிரே­ர­ணையை வர­வேற்றோம் என்­ப­தையும் கால அவ­காசம் வழங்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் மிகவும் நிதா­ன­மான முறையில் தெரி­வித்து வரு­கி­றது. அதா­வது உலக நகர்­வு­களின் யதார்த்தம் மற்றும் அந்த செயற்­பா­டு­க­ளுக்குள் தமிழ்­மக்­க­ளுக்­கான நீதி, எதிர்­கால நிலை­மைகள், பூகோள அர­சியல் யதார்த்­தங்­களில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் போன்ற நிலை­மை­களை எடுத்­துக்­காட்டி தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இந்த விட­யத்­திற்கு விளக்­க­ம­ளித்து வரு­கி­றது.

அந்­த­வ­கையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இம்­முறை ஜெனிவா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தற்­கான கார­ணத்தை தெளி­வு­ப­டுத்தும் வகையில் வடக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்துள்­ளது. அதன்­படி நேற்று முன்­தினம் முல்­லைத்­தீவில் இடம்­பெற்ற கூட்­டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன், கூட்­ட­மைப்பு ஜெனிவா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­மைக்­கான முக்­கி­ய­மான கார­ணங்­களை மக்­க­ளுக்கு மிகவும் தெளி­வான முறையில் எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டு­மா­க­வி­ருந்தால் சர்­வ­தே­சத்தின் உதவி எங்­க­ளுக்குத் தேவை என்று நாங்­களே கோரு­கின்றோம். அவ்­வாறு நாம் கோரு­கின்ற நிலையில் சர்­வ­தேசம் எங்­க­ளுக்கு முன்­பாக ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்­தி­ருக்­கின்­றது. அத­னுடன் இணங்கி அதற்கு அனு­ச­ர­ணை­யாக செயற்­பட வேண்­டி­ய தேவை­யொன்று எமக்கு ஏற்­ப­டு­கின்­றது. எங்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக முன்­வந்­துள்ள சர்­வ­தே­சத்­துடன் இணைந்து அந்த விட­யங்­களைக் கையாள வேண்­டி­யது அடிப்­படைப் புத்­தி­சா­லித்­த­ன­மாகும் என்று சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் சர்­வ­தே­சத்தின் உத­வியைக் கோரி­விட்டு அவர்கள் உத­வு­வ­தற்கு முழு­மை­யாக தலைப்­ப­டு­கின்ற போது, நாங்கள் சொல்­வ­தையே நீங்கள் (சர்­வ­தேசம்) செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­து­வது முட்­டாள்­த­ன­மா­ன­தாகும். உலக நாடுகள் அனைத்தும் எங்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க முன்­வந்­தாலும் அவர்­க­ளி­டத்தில் நாங்கள் கேட்­கின்ற வகை­யி­லேயே நடக்க வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்க முடி­யாது. தற்­போது வரையில் சர்­வ­தே­சத்தின் பார்வை அக­லாமல் இருப்­பது எங்­க­ளு­டைய அதிர்ஷ்டம் என்­றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் இல்­லா­மலில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

உண்­மையில் ஒரு நாட்டை எடுத்த எடுப்­பி­லேயே சர்­வ­தேச நீதி­மன்றில் நிறுத்­தி­வி­ட­மு­டி­யாது. கடந்த காலங்­க­ளிலே யுகோஸ்­லோ­வியா, ருவண்டா போன்ற நாடு­களில் நிகழ்ந்த சம்­ப­வங்கள் குறித்து விசேட தீர்ப்­பாயம் அமைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. தற்­போது வட­கொ­ரியா விட­யத்­தில்­கூட அந்­நாட்டை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­செல்ல உட­ன­டி­யாக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது. காரணம் பாது­காப்புச் சபையில் உள்ள ஐந்து நாடு­களும் இந்த விட­யத்தில் ஏகோ­பித்த முடி­வுக்கு வர­வேண்­டிய நிலை உள்­ளது எனவும் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்­து­ரைத்­துள்­ளது.

இதே­வேளை, அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­ற­தொரு சூழலில் நாம் ஒரு விட­யத்­திற்­காக ஏனைய அனைத்து விட­யங்­க­ளையும் கைவிட்டு சர்­வ­தே­சத்­துடன் முரண்­பட்­டுக்­கொண்­டி­ருக்க முடி­யாது. கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த விட­யத்தில் கடு­மை­யான மேற்­பார்­வையும் செய்­யப்­ப­ட­வுள்­ளது. அவ்­வாறு பார்க்­கும்­போது இலங்கை சர்­வ­தேசத்தின் பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது. ஆனால், எங்­களில் சிலர் இங்கே சர்­வ­தேச சமூகம் எதுவும் செய்­ய­வில்லை என்று புலம்பிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஐ.நா. எங்­களை கைவிட்டு விட்­டது என்று வாய் கூசாமல் சொல்­கின்­றார்கள். ஐ.நா எங்­களை எங்கே கைவிட்டு விட்­டது? என்றும் சுமந்­திரன் எம்.பி. கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். அந்­த­வ­கையில் ஜெனிவா பிரே­ர­ணையின் யதார்த்தம் மற்றும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­கான நீதி என்­ப­வற்றின் அடுத்­த­ கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் சுமந்­திரன் எம்.பி. உரை­யாற்­றி­யி­ருக்­கிறார். அர­சாங்கம் ஜெனிவா பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­விட்டு இலங்­கையில் அதி­லுள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்த மாட்டோம் என்று கூறி­வ­ரு­கின்ற நிலை­யிலும் அத­னூ­டாக தமிழ் மக்கள் கவ­லை­ய­டைந்து செல்­கின்ற சூழலிலும் பிர­தான எதிர்க்­கட்­சி­யான கூட்­ட­மைப்பு இந்தக் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளது. இவ்­வாறு தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு முன்­வைக்­கின்ற விட­யங்­களில் யதார்த்தம் இருக்­கத்தான் செய்­கின்­றது. தற்­போது கால அவ­காசம் வழங்­காமல் இலங்கை விவ­கா­ரத்தை விட்­டு­விட்டால் அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தேச கடப்­பாடு இல்­லாமல் போய்­விடும்.

ஒரு­சில அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் சமூக நிறு­வ­னங்கள் கூறு­வதைப் போன்று இலங்கை விவ­கா­ரத்தை ஐ.நா. பாது­காப்பு சபைக்கு கொண்டு சென்றால் அங்கே ஒரு சில நாடுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக செயற்­படும். குறிப்­பாக தற்­போ­தைய நிலை­மையில் ஐ.நா. பாது­காப்பு சபையின் ஐந்து உறுப்பு நாடு­களில் நான்கு உறுப்பு நாடுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கே ஆத­ரவு அளிக்கும் நிலைமை காணப்­ப­டு­கி­றது. எனவே பாது­காப்பு சபைக்கு இலங்கை விவ­கா­ரத்தை கொண்டு செல்­வதன் ஊடாக பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதியை பெற்­று­விட முடியும் என எதிர்­பார்ப்­பது தற்­போ­தைய நிலை­மையில் எந்­த­ளவு தூரம் பொருத்­த­மா­னது என தூர­நோக்­குடன் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். எனவே, நிலைமை இவ்­வா­றி­ருக்­கின்­றதன் கார­ண­மாக இலங்­கையை ஒரு கடப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொண்டு அதா­வது சர்­வ­தேச பொறி­மு­றை­யொன்­றுக்குள் இலங்­கையை வைத்­துக்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்­கான நீதியைப் பெறும் வழி­களை ஆராய்­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும். ஐ.நா. பாது­காப்பு சபையின் ஒரு­சில நாடுகள் முன்­னைய மஹிந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருக்கும் போதே அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கின.

அப்­ப­டிப்­பார்க்கும் போது தற்­போது இலங்கை அர­சாங்­கத்­திற்கு பொது­வா­கவே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவு காணப்­ப­டு­கி­றது. எனவே இலங்கை விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபை, பொதுச்­சபை என்­ப­வற்­றுக்கு சென்றால் அதில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு சார்­பான தீர்­மா­னங்கள் வரு­வ­தற்கே அதி­க­ள­வான சாத்­தி­யங்கள் உள்­ளன. எனவே இந்த சர்­வ­தேச கள யதார்த்த நிலைமை குறித்தும் நாம் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்டும். எவ்­வா­றெ­னினும் அந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கவேண்டும் என்ற அவசியமில்லை. தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க முடியும். அதற்கான செயற்பாடுகளையே தமிழர் தரப்பு முன்னெடுத்து செல்லவேண்டியது அவசியமாக இருக்கின்றது.

எனவே, தற்போதைய நிலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நின்று முரண்பட்ட கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வராமல் ஒன்றிணைந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்ய முடியும். அதனால் சர்வதேச தலையீடுகளை, யதார்த்த நிலைமைகளை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் தேவையைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.