Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றுறுதியில் பின்வாங்கினால் நன்மதிப்பை இழக்க நேரிடும்/// உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்

Featured Replies

பற்றுறுதியில் பின்வாங்கினால் நன்மதிப்பை இழக்க நேரிடும்

 

"எதிர்­கால  சந்­த­தி­யினர் பாது­காப்­பு­டனும் அமை­தியும் சமா­தா­ன­மு­மான இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக வாழ­வேண்­டு­மானால் புதிய அர­சியல் யாப்­பினை அமுல்­ப­டுத்­து­வது மட்­டுமே நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய ஒரே வழி. 

 

அர­சாங்கம் அதன் பற்­று­று­தியில் பின்­வாங்­கு­மாக இருந்தால், சர்­வ­தேச சமூ­கத்­திற்குள் நன்­ம­திப்பை இழக்க நேரிடும் என தெரி­வித்­துள்ள உல­கத்­த­மிழர் பேர­வையின் பேச்­சாளர் சுரேன் சுரேந்­திரன் அவ்­வா­றான சம­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சுக்கு கிடைத்த அதே நிலை­யே இந்த அர­சாங்­கத்­திற்கும் ஏற்­படும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், ஐ.நா.மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் மற்றும் சம­கால அர­சியல் சமூக நிலை­மைகள் தொடர்­பாக உல­கத்­த­மிழர் பேர­வையின் பேச்­சாளர் சுரேன் சுரேந்­திரன் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

Q ஆட்­சி­மாற்றம் நடை­பெற்று 18 மாதங்கள் கடந்­தி­ருக்­கின்ற நிலையில் புதிய தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எவ்­வாறு பார்க் கின்­றீர்கள்?

இந்தக் கேள்­விக்கு நான் ஒரு­வ­ரியில் பதி­ல­ ளிக்க வேண்­டு­மாக இருந்தால் தவிர்க்­க­மு­டி­யாத ஏமாற்றம் அளிக்­கி­றது என்­றுதான் சொல்­ல­வேண்டும். அர­சாங்கம் அளித்­தி­ருந்த வாக்­கு­று­திகள் பல­வற்றை நிறை­வேற்­றா­ததன் கார­ண­மாக பொது­வாக அநே­க­மான இலங்­கை­யர்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளனர். 

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­பொ­ழுது கடந்த அர­சாங்­கத்தில் நடை­பெற்ற ஊழல் மற்றும் நிர்­வாகச் சீர்­கே­டு­களை சுத்­தப்­ப­டுத்­துவோம் என்றும் பல்­வேறு வழி­க­ளிலும் தங்­க­ளது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்த அதி­கா­ரி­களை சட்­டத்­தின்முன் நிறுத்தி நீதியை நிலை­நாட்­டுவோம் என்றும் கூறி­யது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவ்­வா­றா­ன­வர்­களை சட்­டப்­படி தண்­டிக்க முடி­யாமல் போன­துடன், இவ் அர­சாங்­கத்தின் மீதும் பல்­வேறு வித­மான பாரிய ஊழல் குற்­றச்­சாட்­டுகளும் நிர்வாக சீர்­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

வடக்­கு, -­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் ஜனா­தி­ப­திக்கு பெரு­ம­ளவில் திரண்டு வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற வைத்­தனர். அவர்கள் புதிய அர­சாங்கம் அர­சியல் யாப்பில் சீர்­தி­ருத்­தங்­களைச் செய்து பல தசாப்­தங்­க­ளாக நீடித்­தி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் என்றும் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமைய நீதி­கி­டைக்கும் என்றும் அந்த மக்கள் நம்­பினர்.

கடந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற பாலியல் வன்­முறை மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்து குறிப்­பாக பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தி­னரால் நிகழ்த்­தப்­பட்ட அத்­த­கைய குற்றச் செயல்கள் குறித்து உரி­ய­மு­றையில் தலை­யிட்டு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை எதிாத்து பெரு­ம­ளவில் வெளிப்­ப­டை­யான கண்­டனக் குரல்­கொ­டுப்­பார்கள் என்ற எதிர்­பார்ப்­புடன் இருந்­தார்கள்.

அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் ஒரு­சில மாதங்­க­ளுக்குள் சட்­ட­பூர்வ உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டு­விடும் என்றும், உள்­ளக இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்றும், நாட்டின் ஏனைய பகு­தி­களில் உள்­ளதைப் போன்று வடக்­கு, -­கி­ழக்­கிலும் இரா­ணு­வத்தின் பிர­சன்னம் குறைக்­கப்­படும் என்றும், அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் அல்­லது நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் விலக்­கிக்­கொள்­ளப்­படும் என்றும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பிரதேசங்களுக்கு விசேட முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு அவை­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கேற்ப முத­லீ­டு­களை மேற்­கொண்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை எட்­டு­வ­தற்கு வழி­வகை செய்­யப்­படும் என்றும் குறைந்­த­பட்சம் இலங்­கையின் ஏனைய பிர­தே­சங்­களைப் போன்­றா­வது ஒரு முன்­னேற்றம் ஏற்­படும் என்றும் தமிழ் மக்கள் நம்­பினர்.

இத்­த­கைய சமூ­கங்­களின் தற்­போ­தைய ஏமாற்­ற­க­ர­மான உள்­ளக்­கி­டக்­கையைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவே கடந்த பல மாதங்­களின் செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும், ஒட்­டு­மொத்­தத்தில் போகும்­வழி சரி­யா­ன­தா­கவே தெரி­கி­றது. இந்த அர­சாங்கம் அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஜன­நா­யக வெளியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. பொது­வாக அனைத்து சுயா­தீன ஜன­நா­யக நிறு­வ­னங்­களும் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த 18ஆவது அர­சியல் யாப்புத் திருத்­தத்தை இல்­லாமல் செய்­தி­ருக்­கி­றது. நாட்­டிற்கு ஒரு புதிய அர­சியல் யாப்பை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­ய­கத்தின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­ட­துடன், ஐ.நா.வுடன் நெருக்­க­மாக இணங்கிச் செயற்­ப­டு­வ­திலும் ஏனைய உலக நாடு­க­ளுடன் நெருக்­கத்தைப் பேணு­வ­திலும் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய அளவில் ஈடு­பட்டு ­வ­ரு­கி­றது. இரா­ணுவம் மற்றும் இதர அரச நிறு­வ­னங்­க­ளினால் சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் சில­வற்றை விடு­வித்­து­வ­ரு­கி­றது. சில அர­சியல் கைதி­களை விடு­வித்­துள்­ள­துடன், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு சிவில் சமு­கத்தைச் சேர்ந்­த­வர்கள் ஆளு­நர்­க­ளாக அறி­மு­கப்­ப­டுத்­தி­வ­ரு­கி­றது.

Qஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர சாங்கம் குறித்து உல­கத்­த­மிழர் பேரவை தனது நிலைப்­பாட்டை மாற்­றி­ய­மைக்கு காரணம் என்ன?

உலகத் தமிழர் பேர­வை­யி­ன­ரா­கிய நாம் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. இலங்­கையின் ஆட்சி மாற்­றத்தில் நாமும் ஒரு சிறிய பங்­காற்­றி­யுள்ளோம் என்று நினைக்­கிறோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் உலகத் தமிழர் பேரவை மட்­டுமே ராஜ­பக்­சவை வீழ்த்­து­வ­தற்கு அதிக அளவில் தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­மாறு எமது மக்­க­ளுக்கு அறை­கூவல் விடுத்­தது.

இணைந்த மற்றும் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாட்டின் மூலம் எதிர்­கா­லத்தில் நிக­ழக்­கூ­டிய மாற்­றங்­களில் செல்­வாக்கு செலுத்த முடியும் என்று உலகத் தமிழர் பேரவை நம்­பிக்கை கொண்­டுள்­ளது. நாம் வெளியு­றவு அமைச்சர் மற்றும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ர்­களை பல­முறை சந்­தித்­துள்­ள­துடன் இரண்­டு­முறை ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்­துள்ளோம். அர­சாங்­கத்தின் முற்­போக்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கின்ற அதே­வேளை அர­சாங்­கத்தின் ஒடுக்­கு­முறை அல்­லது பிற்­போக்­குத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை பகி­ரங்­க­மாக விமர்­சிப்­ப­தி­லி­ருந்து உலகத் தமிழர் பேரவை வெட்­கப்­பட்டு ஒதுங்­கி­யி­ருக்­காது.

Qஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர வையின் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ ரப்­பட்டு தேசிய அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் பரிந்­து ரைகள் உங்­க­ளது மதிப்­பீட்டின் பிர­காரம் எவ்­வ­ளவு தூரம் நடை­மு­றைப்­ப­­டுத்­தப்­பட்­டுள்­ளன என கரு­து கின்­றீர்கள்?

செயற்­பா­டுகள் மிகவும் மந்­த­க­தியில் நடை­பெ­று­வ­துடன், குறை­வா­கவும் உள்­ளன. மனித உரி­மைகள் ஆணை­யாளர் தமது அறிக்­கையில் கவலை அளிக்­கும்­வி­தத்தில் மெது­வா­னது என்று குறிப்­பிட்­டுள்ளார். இலங்கை அர­சாங்கம் ஐ.நா. தீர்­மா­னத்தின் A/HRC/30/L.29 ஆவது பிரிவை நடை­மு­றைப்­ப­டுத்தும் செயற்­பாடு இன்­ன மும் தொடர்­கி­றது. எனவே, தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­றும்­வரை, இலங் கை மனித உரிமை ஆணை­ய­கத்தின் கண்­கா­ணிப்பில் இருப்­பது அவ­சி­ய­மாகும். முறை ­யான கண்­கா­ணிப்பையும் அவ­தா­னிப்பையும் பிறிதொரு தீர்­மா­னத்தின் வழி­யா­கத்தான் மேற்­கொள்ள முடியும் என்­ப­தால் தான் அதனை ஆத­ரித்தோம்.

அர­சாங்கம் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கியும் நாட்டு மக்­களின் சார்­பாக தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்குப் பொறுப்­பா­ன­தா­கவும் திகழ்­கி­றது. இலங்கை தொடர்ந்தும் 30/1 தீர்­மா­னத்தை நிலு­வை­யின்றி தவ­றாமல் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு வெளிவி­வ­கார அமைச்சர் ஆற்­றிய உரையை இங்கு நினை­வு­கூர்­வது பொருத்­த­மாக இருக்கும் என்று நினைக்­கிறேன். அவர் அங்கு உரை­யாற்­று­கையில், கடந்­த­கால நிறை­வேற்­றப்­ப­டாத வாக்­கு­று­தி­க­ளையும், அனு­ப­வங்­க­ளையும் குத்­துக்­க­ர­ணங்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு எங்­களை எடை­போ­டா­தீர்கள். கன­வான்­களே, சீமாட்­டி­களே, என்­னு­டைய தாழ்­மை­யான வேண்­டுகோள் என்­ன­வென்றால், முன்­னேற்­றத்­திற்குத் தேவை­யான வேகத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் முற்­போக்­காக முன்­னேறிச் செல்­வ­தற்கும், அர்த்தம் பொதிந்த நிலை­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைளை மேற்­கொண்டு ஒரு புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்கும் எங்­களை நம்­புங்கள், நாம் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வ­தற்­காக எங்­க­ளுடன் கைகோ­ருங்கள் எனக் கோரி­யி­ருந்தார்.

செய­லாற்­றலில் ஏற்­பட்ட பின்­ன­டை­விற்கு இலங்கை அர­சாங்கம் நாட்டின் அர­சியல் யதார்த்த நிலையை ஒரு கார­ண­மாக முன்­வைக்­கலாம். இந்த தீர்­மானம் நிறை­வேற்­று­வதில் தாம­தித்­த­மைக்கு ராஜ­பக்­ ஷவையும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரையும் மட்­டுமே கார­ணி­யாக முன்­வைப்­பது ஒட்­டு­மொத்­தத்தில் பிழை­யான கற்­பி­த­மாகும். பாரா­ளு­மன்­றத்தின் மொத்த உறுப்­பி­னர்­களில் கூட்டு எதி­ர­ணி­யி­னர் வெறும் 51 உறுப்­பி­னர்கள் மட்­டுமே. உண்­மையில் கூட்டு எதி­ர­ணி­யி­னரால் இது­வரை காலமும் அர­சாங்­கத்தை அச்­சு­றுத்­தக்­கூ­டிய வகையில் எத்­த­கைய செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்ற முடி­ய­வில்லை.

இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் 2015ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாத தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போது நாம் அதனை ஊக்­கு­வித்­தி­ருந்தோம். அத்­தீர்­மானம் யுத்­தத்­தின்­போது இரு­த­ரப்­பி­னரும் பாரிய குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­மையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது இலங்­கையின் மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் பாரிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தி­ருந்­தது. மே 18 அன்று தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்­கான வாய்ப்பு அளிக்­கப்­பட்­டி­ருந்­த­மையை நாம் வர­வேற்­றி­ருந்தோம்.

அத்­துடன் மனித உரி­மைகள் பொறி­மு­றையில் குறிப்­பி­டத்­தக்க அளவில் ஐ.நா.வின் முக­வ­ரங்­கங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தையும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கான முன்­னெ­டுப்பில் ஈடு­பட்டு 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­தையும் நாம் வர­வேற்­றி­ருந்தோம். ஆனால் ஏழு­மா­தங்கள் கடந்த பின்­னரும் இன்­று­வரை அது வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­ப­ட­வில்லை. வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­ப­டு­வ­தா­னது நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குக்­கின்­றது.

உலகத் தமிழர் பேரவை ஆலோ­சனை செய­ல­ணி­யினால் ஜன­வரி 3, 2017அன்று வெளியி­டப்­பட்ட நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான பரிந்­து­ரை­களை முறைப்­படி வர­வேற்­றி­ருந்­தது.

இருப்­பினும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் மிகக் குறைந்த அளவே நடை­பெற்­றி­ருப்­பதை கண்­கூ­டாகக் காண­மு­டி­கி­றது. உலகத் தமிழர் பேரவை நெருக்­கடி நிலையை தணிப்­ப­தற்­கான நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றை­களை முன்­னெ­டுத்துச் செல்­வதில் அர­சாங்­கத் தின் முயற்­சிகள் போது­மா­ன­தாக இல்­லா­த­தை­யிட்டு ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளது.

பாது­காப்­புத்­துறை மறு­சீ­ர­மைப்பு, சாட்­சி­களைப் பாது­காப்­ப­தற்­கான சட்ட ஏற்­பாடு உள்­ளிட்ட நிறு­வன சீர்­தி­ருத்­தங்கள் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. ஆனால் தற்­போ­தைய சூழலில் அவை தேவைப்­ப­டு­வ­தை­விட மிகவும் குறை­வா­கவே உள்­ளன. மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டனும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரு­டனும் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதி­வ­ழங்­கு­வ­தற்­கு­மான செயற்­பா­டு­களின் ஒவ்­வொரு நிலை­யிலும் இத­ய­சுத்­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை கடைப்­பி­டிப்­ப­தற்கு அர­சாங்கம் தாம­த­மின்றி முன்­வ­ர வேண்டும்.

யுத்தக் குற்­றங்கள் மற்றும் மானு­டத்­திற்கு எதி­ரான குற்றச் செயல்­களில் இரண்டு தரப்­பி­னரும் ஏரா­ள­மாகக் குற்­ற­மி­ழைத்­தி­ருப்­ப­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இவை தற்­போ­தைய நீதிப்­பொ­றி­மு­றையில் குற்­றங்­க­ளாக அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. இவை குற்­றங்கள் என அடை­யாளம் காணும் வகையில் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மி­யற்­றப்­ப­ட­வேண்டும். இவை இன்­னமும் ஆரம்­பிக்­கப்­ப­டக்­கூட இல்லை. நஷ்­ட­ஈடு வழங்­கு­வது குறித்து இது­வரை கலந்­து­ரை­யா­டல்­கள் ­கூட ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அல்­லது குறைந்த அளவில் நடை­பெற்­றுள்­ளது என்­பதும் முக்­கி­ய­மா­னது.

Qஇரண்டு வருட கால அவ­கா­சத்தில் அர சாங்கம் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை மு­றைப்­ப­டுத்தும் எனக் கரு­து­கின்­றீர்­களா?

கடந்த பதி­னெட்டு மாத­கால அனு­ப­வத்தைச் சீர்­தூக்கிப் பார்க்­கையில், அர­சாங்கம் 30/1 தீர்­மா­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து கோரிக்­கை­க­ளையும் நிறை­வேற்றும் என்று நம்பி நான் என்­னிடம் உள்ள கடைசி நாண­யத்­தையும் பந்­த­ய­மாக வைக்க விரும்­ப­வில்லை. இருப்­பினும், தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள 34/1 இன் தீர்­மா­னத்­திற்கும் அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம், மீண்டும் ஒரு­முறை அது சர்­வ­தே­ச­ரீ­தியில் பற்­று­று­தி­யுடன் செயற்­ப­ட­வேண்டும்.

இந்த இடத்தில் நான் மீண்டும் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இலங்­கையின் வெளிவி­வ­கார அமைச்­சரின் உரையை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறேன். ஆகவே அர­சாங்கம் அதன் பற்­று­று­தியில் பின்­வாங்­கு­மாக இருந்தால், அது சர்­வ­தேச சமூ­கத்­திற்குள் நன்­ம­திப்பை இழக்க நேரிடும் என்­ப­துடன் அதே சம­யத்தில் ராஜ­பக் ஷ அர­சுக்கு கிடைத்த அதே நிலையை இந்த அர­சாங்­கத்­திற்கும் ஏற்­ப­டுத்தும்.

Qகலப்பு பொறி­மு­றையை அர­சாங்கம் தொடர் ச்­சி­யாக நிரா­க­ரித்து வரு­கின்ற நிலையில் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கப்பட்ட பின் னரும் இந்­தப்­ப­ரிந்­து­ரைகள் நடை­முறைப்­ப­டுத்­ த­ப்ப­டா­தி­ருந்தால் நீதியைப் பெற்­றுக்கொடுப்­ப­தற் காக எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுப் பீர்கள்? 

இலங்­கைக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்ட நாடுகள், அர­சாங்­கங்கள், ஐநா, ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் பொது­ந­ல­வாய நாடுகள் போன்ற சர்­வ­தேச நிறு­வ­னங்களிடம் இலங்கை அர­சாங்கம் 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்­மா­னங்­க­ளுக்கு இணை­ அ­னு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் தான் ஏற்­றுக்­கொண்ட பொறுப்பை நிறை­வேற்ற எடுத்­துக்­கூ­றும்­படி நாம் தொடர்ந்தும் பிர­சாரம் செய்வோம்.

அத்­துடன் அடுத்த சில மாதங்­களில் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற பொரு­ளா­தார உத­விகள் வழங்­கப்­பட்டால் அவற்றை மீளப்­பெ­றும்­படி கோருவோம். ஒரு அமைப்பு என்ற வகையில் அந்­தந்த காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களை மதிப்­பிட்டு தக­வல்­களின் அடிப்­ப­டையில் எமது அடுத்த கட்ட பணி­களை உரு­வாக்­குவோம்.

Qசமஷ்டிக் கோரிக்கை, வடக்கு, கிழக்கு இணைப்பு ஆகி­ய­வற்றை நிரா­க­ரித்­துள்ள தேசிய அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வை வழங்கும் என கரு­து­கின்­றீர்­களா?

எதிர்­கால சந்­த­தி­யினர் பாது­காப்­பு­டனும் அமை­தியும் சமா­தா­ன­மு­மான இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக வாழ­வேண்­டு­மானால் புதிய அர­சியல் யாப்­பினை அமுல்­ப­டுத்­து­வது மட்­டுமே நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய ஒரே வழி­யாகும். மித­வாத கண்­ணோட்­ட­முள்ள தலை­வர்­களை உள்­ள­டக்­கிய ஒரு ஐக்­கிய அர­சாங்கம் பத­வியில் இருப்­பதும் மிகவும் பொருத்­த­மான தமிழ் தலைமை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக இருப்­பதும் கடந்த இரண்டு பாரிய தேர்­தல்­க­ளிலும் இரண்டு சமூ­கங்­க­ளி­னதும் தீவி­ர­வாத சக்­தி­களை மக்கள் பெருந்­தி­ர­ளாக ஏற்க மறுத்­தி­ருப்­ப­து­மான இன்­றைய அர­சியல் சூழலில், ஒரு புதிய அர­சியல் யாப்பை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே சரி­யான தரு­ண­மாகத் தெரி­கி­றது. ஆகவே நாம் மிகவும் நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறோம்.

Qவடக்கு, கிழக்கில் இரா­ணு­வப்­பி­ர­சன்னம், காண­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான விடயம், அர­சியல் கைதிகள் விட­யத்தில் எவ்­வி­த­மான முன் னேற்­றங்­களும் ஏற்­பட்­டி­ருக்­காத நிலையில் அடுத்த கட்­ட­மாக எவ்­வா­றான முன்­னெ­டுப்­புக்­களை மேற் கொள்ள முடியும் என கரு­து­கின்­றீர்கள்?

ஒரு நிறு­வனம் என்ற வகையில் உலகத் தமிழர் பேரவை அர­சாங்கத்தின் செய­லாற்­றல்­களில் தொடர்ச்­சி­யாக ஏற்­படும் பின்­ன­டை­வு­களை தொடர்ந்தும் அம்­ப­லப்­ப­டுத்தும். சாத்­தி­யப்­படும் போதெல்லாம் நாம் எமது ஏமாற்­றங்­களை அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்தும் தெரி­விப்போம். இலங்கை தனது மக்­களின் குறை­களை நிவர்த்தி செய்­யாத வரையில், இலங்­கையின் நன்­ம­திப்பு சர்­வ­தேச அரங்கில் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­வ­துடன் வெளிநாட்டு மூல­த­னங்கள் மற்றும் முன்­னு­ரிமை வழங்கி கவ­னிக்­கப்­படும் விட­யங்கள் எதிர்­கா­லத்தில் இல்­லாமல் போய்­விடும்.

Qஎதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் நகர் வுகள் சரி­யான பாதையில் செல்­கின்­ற­தெனக் கரு து­கின்­றீர்­களா?

இரண்டு பாரிய தேர்­தல்­க­ளிலும் இரண்டு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த தீவி­ர­வாதப் போக்­கு­டை­ய­வர்­களை மக்கள் திரண்­டெ­ழுந்து நிராக­ரித்து மிகவும் பொருத்­த­மான தமிழ் தலைமை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக உள்­ளமை இலங்கை வர­லாற்றில் மிகவும் சிறப்­பான கால­மாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்­தல் ­தொ­கு­தி­களில் அதி­க­ரித்­துள்ள ஆத­ரவின் மூலம் அது தனது நன்­ம­திப்பை இலங்­கையில் நிரூ­பித்­தது மட்­டு­மன்றி, சர்­வ­தேச சமூ­கத்­தி­னுள்ளும் தனது அர­சியல் தந்­தி­ரத்தின் மூலம் பெரு­வா­ரி­யான நன்­ம­திப்பைப் பெற்­றுள்­ளது.

Qகூட்­ட­மைப்­பினுள் சில முரண்­பா­டான கருத் தியல் நிலை­மைகள் அண்­மைக்­கா­ல­மாக காணப்­ப­டு­கின்­றன. அக்­கட்­டமைப்பை வலுப்­ப­டுத்­து வதில் உங்­களின் வகி­பாகம் எவ்­வா­றுள்­ளது?

கட்­சி­க­ளுக்­கி­டையில் அவ்­வப்­போது மனக்­க­சப்­புக்கள் வரு­வது இயல்பு. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பதை பல கட்­சி­களைக் கொண்ட அமைப்­பாகும். ஆகவே குறிப்­பிட்ட சில பிரச்­சி­னை­களில் ஒத்­துப்­போ­காத நிலை என்­பது ஒரு ஜன­நா­யக குழுச் செயற்­பாட்டில் ஆரோக்­கி­ய­மான விட­ய­மா­கவே இருக்க வேண்டும். இவை­யெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உட்­கட்சிப் பிரச்­சினைகள் இவற்றை வெளிச்­சக்­தி­களின் துணை­யின்றி காத்­தி­ர­மாகக் கையாளும் வல்­லமை அதன் தலை­மைக்கு இருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் ஏதேனும் தவ­றான புரிந்­து­ணர்­வுகள் எஞ்­சி­யி­ருக்­கு­மானால் அத­னையும் பொருத்­த­மான முறையில் தீர்த்­துக்­கொண்டு எதிர்­கால ஜன­நா­யக சோத­னை­களில் வெற்­றி­க­ர­மாக முன்­னேறிச் செல்லும் ஆற்றல் அதற்கு இருக்­கின்­றது என்­பதில் நான் மிகவும் நம்­பிக்­கை­யுடன் உள்ளேன்.

Qபுலம்­பெயர் தேசங்­களில் புலி­களின் ஆத­ர வா­ளர்கள் செயற்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திக்கு முன்னாள் விடு­த­லைப் போ­ரா­ளி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் கொலை அச்­சு­றுத்­தல் விடயம் சம்­பந்­த­மாக உங்­க­ளது அமைப்பு பிரத்­தி­யே­க­மாக நட­வ­டிக்­கை­கள் எதுவும் எடுத்ததா? 

 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மீது இலங்­கையின் வடக்கில் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டை உலகத் தமிழர் பேரவை எத்­த­கைய தயக்­க­மு­மின்றி கண்­டித்­தி­ருந்­தது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ரனை யாழ்ப்­பா­ணத்தில் வைத்துக் கொலை­செய்­வ­தற்கு திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்ற செய்­தியைக் கேள்­விப்­பட்­ட­துடன் உலகத் தமிழர் பேரவை மிகவும் அதிர்ச்­சியும் ஏமாற்­றமும் அடைந்­தது. அத்­த­கைய கீழ்த்­த­ர­மான திட்­டத்தை செயற்­ப­டுத்த முயற்­சித்­த­வர்­க­ளுக்கு நாம் எமது கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன் முழு­மை­யான விசா­ர­ணை­களை நடத்தி திட்டம் தீட்­டி­ய­வர்­களை இனங்­கண்டு சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்டும் என்றும் கேட்­டுக்­கொண்­டிருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் சுமந்­திரன் 2009 இற்குப் பின்­ன­ரான தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலில் முக்­கி­ய­மான பாத்­தி­ர­மேற்­றுள்­ள­துடன், இலங்­கையில் அதிலும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறல் மற்றும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­காக பாரிய முயற்­சி­க­ளையும் எடுத்து வரு­கின்றார். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை அமை­தி­யான முறையில் தீர்ப்­ப­தற்­காக அவர் துணிச்­ச­லு­டனும், உற்­சா­கத்­து­டனும் சட்­ட­ரீ­தி­யான அணு­கு­மு­றையைக் கடைப்­பி­டிப்­ப­த­னூ­டா­கவும் குறிப்­பாக அர­சியல் யாப்­பி­னூ­டான செயற்­பா­டுகள் மூலம் மேற்­கொள்­வ­தற்கு உலகத் தமிழர் பேர­வையும் புலம்­பெயர் தமி­ழர்­களும் நன்றி செலுத்­து­கின்­றனர்.

Qஉல­கத்­த­மிழர் பேரவை இலங்கை தமிழர் விட­யத்தில் நியா­யமான தீர்­வுக்­காக எவ்­வா றான செயற்­பா­டு­களை தற்­போது மேற்­கொள்­கின்றது?

இலங்­கையின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தமிழ் பிர­தி­நி­தி­க­ளுடன் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நெருக்­க­மான உறவைப் பேணி­வ­ரு­வதில் உலகத் தமிழர் பேரவை புலம்­பெயர் அமைப்பு என்ற வகையில் பெரு­மிதம் கொள்­கி­றது. வெளிநா­டு­களில் வாழ்­கின்ற தமிழ் மக்கள் மத்­தியில் நாம் தமி­ழர்­களின் மீது கூர்ந்த பார்­வை­யுடனும் தீட்­டிய காது­க­ளு­டனும் செய­லாற்றி வரு­கின்றோம்.

சர்­வ­தேச அரங்கில் நாம் தமிழ் மக்­களின் நலன்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றோம். நாம் தற்­போ­தைய அர­சாங்­கத்­து­டனும் பல்­வேறு அர­சாங்­கங்­க­ளு­டனும் அரசு சாரா நிறு­வ­னங்­க­ளு­டனும் இலங்­கையில் உள்ள நிறு­வ­னங்­க­ளு­டனும் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றோம்.

சட்­டத்­த­ரணி லால்­ வி­.ஜே­நா­ய­க்கவின் தலை மை­யி­லான பத்­தொன்­ப­துபேர் கொண்ட மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவிடம் நாம் அர­சியல் யாப்பு மறு­சீ­ர­மைப்பு தொடர்­பாக எமது முன்­மொ­ழி­வு­களை வழங்­கி­யுள்ளோம்.  

Q கொள்கை ரீதியில் புலம்­பெயர் அமைப்­புக்கள் வேறு­பட்­டுள்ள நிலையில் ஒரு­மித்து பய­ணிப் ப­தற்­காக நட­வ­டிக்கைகள் எதுவும் எடுத்­தீர்­களா?

இலங்­கையில் வாழும் எமது மக்கள் அனை­வரின் நலன்­சார்ந்த அடிப்­ப­டையில் அனைத்து அமைப்­புக்­களும் நல்ல நம்­பிக்­கை­யுடன் பாடுபடு­கின்­றன. எமது மக்­களின் நியா­ய­மான குறை­களைத் தீர்ப்­ப­தற்கு ஒரு நிலை­யான அர­சியல் தீர்வை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது என்­பது குறித்­தான அணு­கு­முறை மற்றும் தந்­தி­ரோ­பா­யங்­களில் வேண்­டு­மானால் வித்­தி­யா­சங்கள் இருக்­கலாம். ஒட்­டு­மொத்த திட்­டத்தில் இத்­த­கைய வித்­தி­யா­சங்கள் சில வேளை­களில் ஆரோக்­கி­ய­மா­ன­வை­யா­கவும் இருக்­கலாம் என்று ஒரு நிறு­வனம் என்ற வகையில் நாம் நம்­பிக்கை கொண்­டுள்ளோம்.

உலகத் தமிழர் பேரவை இலங்­கையில் உள்ள தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கும் இடையில் பொது­வான வேலைத்­திட்­டத்தை முன்­வைத்து இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான ஒப்­பந்தம் ஒன்றை தயா­ரிப்­பதில் முனைப்­புடன் ஈடு­பட்­டி­ருந்தோம். நாம் இரு­பத்­தொரு விட­யங்­களுக்கு இணங்­கி­யி­ருந்தோம். இருப்­பினும் இரண்டு அடிப்­படை விட­யங்­களில் கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது.

இந்த வேலைத்­திட்டம் மூல­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் உல­கத்­த­மி ழர் பேர­வையும் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­தி லும் இணைந்து செயற்­ப­ாடு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு எல்­லைக்­கல்­லாக அமைந்­தது.

Qவடக்கு, கிழக்கில் அடிப்­படைத் தேவைகள் உள்­ளிட்­ட­ பல்­வேறு தேவைப்­பா­டுகள் காணப் ப­டு­கின்ற நிலையில் அதற்கு உங்­க­ளது அமைப்பு எவ் வா­றான உத­வி­களை அளித்­துள்­ளது? அல்­லது அது தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்­கவுள் ளது?

 இலங்கை மக்­களின் சமூக, பொரு­ளா­தார தேவை­களைப் பூர்த்­தி­செய்­வ­தற்­கான பணியில், அதிலும் குறிப்­பாக யுத்­தத்­தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச உதவியுடன் பணியாற்றுவதும் உலகத் தமிழர் பேரவையின் நான்கு பிரதான தந்திரோபாய நோக்கங்களில் ஒன்று.

உலகம் முழுவதிலும் சுமார் ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமனான அல்லது அதைவிட கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான தகுதி எம்மிடம் இருக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுகாதார நிபுணர்களாகவும், பொறியியலாளர்களா கவும், விஞ்ஞானிகளாகவும், வங்கியியலா ளர்களாகவும், சமூக ஊழியர்களாகவும், பொரு ளியல் நிபுணர்களாகவும், ஆசிரியர்களாக வும், தொழில்நுட்பவியலாளர்களாகவும், இயந்திர வல்லுநர்களாகவும், கலைஞர் களாகவும் இன்ன பிற துறைசார்ந்த வல்லுநர் களாகவும் திகழ்கின்றனர். 

இரண்டாவது மற்றும் மூன்றாவது தலை முறையைச் சேர்ந்த தமிழ் குழந்தைகளில் 85 சதவீதம் உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். அமைதியான பாதுகாப்பான சமாதானமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பல்வேறு வழிகளில் ஆதரவளிக்க முடியும். ஒரு சமூகம் வெற்றி பெறுவதற்கு அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டெழுவதற்கு பொருளாதார மற்றும் சமூக வேலைவாய்ப்பு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சிறிய அளவிலான முதலீடுகள்கூட வடக்கு, -கிழக்கு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப உதவும். 

ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யுத்தத்தினால் மாற்றுத் திறனாளி களாக்கப்பட்டுள்ளர். இலங்கை யின் ஒட்டுமொத்த கிராமப் புறங்களிலும் குறிப்பாக வடக்கு-, கிழக்கில் பொதுச்சுகாதார நடவடிக்கை மிகவும் மோசமாக உள் ளது. யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஏராளமானவர்கள் தமக்கு ஏற்பட்ட அனுப வங்கள் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள் ளனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதற்கு மருத்துவ,சுகாதார தொடர்புடைய வேலைத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் குழந்தைகள் அந்நிய மொழிகளில் பாண்டித் தியம் உள்ளவர்களாகத் திகழ்கின்றனர். அவற்றையும் கூட பகிர்ந்துகொள்ள முடி யும். 

சிவில் சமூக இயக்கங்களை உருவாக்கு வதும் வலுப்படுத்துவதும் அடுத்துள்ள மிக வும் முக்கியமான முயற்சியாகும். திறன் விருத்திக்கும், திறமைகளைக் கட்டியெழுப்பு வதற்குமான பயிற்சிகளை வழங்குவதற்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கும் உதவும். இதுவே தாயகத் தில் வளர்ந்துவரும் நிலையான குழுக் களை இயலுமானவர்களாகவும் திறமையா னவர்களாகவும் உருவாக்கி சமூக மீட்டெடுப் புக்கான அத்திவாரமாகவும் அமையும்.  

சிவில் சமூக இயக்கங்கள் என்று நான் குறிப்பிடுவது, அரசியல் சார்பற்ற நேர்மை யான சிவில் சமூக குழுக்களையே அன்றி, இரகசிய அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தைக் கொண்டு தங்களை சிவில் சமூக குழுக்களாக பிரகடனப்படுத்திக்கொள்ளும் குழுக்களை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் சமூகம் சர்ந்த அரசியல், சிவில் கட்ட மைப்புக்களுக்கும் திறன் மற்றும் ஆளுமை விருத்தி வழங்குவதற்கு தயாராக இருக் கின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-01#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.