Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல்வாதிகளை தண்டித்தே தீருவேன் அனைத்து சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுவேன் என்கிறார் ஜனாதிபதி

Featured Replies

ஊழல்­வா­தி­களை தண்­டித்தே தீருவேன்

mythiripala1-61aeb14059e924e672c9856e049c825be37e3c6f.jpg

 

அனைத்து சவால்­க­ளையும் சந்­தித்து வெற்­றி­பெ­றுவேன் என்­கிறார் ஜனா­தி­பதி
(ஆர்.யசி )

ஊழல் மோச­டிக்­கா­ரர்கள், கொள்­ளை­யர்கள், கொலை­கா­ரர்கள், மக்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்­த­­வர்கள், இப்­போது கொள்­ளை­ய­டிப்­ப­வர்கள் என எவ­ராக இருந்­தா லும் அவர்கள் எந்த கட்­சிக்­காரர்­க­ளாக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து அவர்­களை தண்­டிப்பேன். அதில் ஒரு­போதும் நான் பின்­னிற்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன தெரி­வித்தார்.

கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஒப்­ப­டைத்து ஒதுங்­கிக்­கொண்­ட­வர்கள் இப்­போது எனது ஜன­நா­யக நட­வ­டிக்­களை தடுத்து வரு­கின்­றனர். எனினும் நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­காவும் அனைத்து சவால்­க­ளையும் சந்­தித்து வெற்­றி­பெ­றுவேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இளைஞர் மாநாடு நேற்று கொழும்பில் சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இந்த மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே ஜான­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டர்.

அவர் மேலும் அங்கு உரை­யாற்­று­கையில்

நாட்டின் சகல பிர­தே­சங்­க­ளிலும் உள்ள இளை­ஞர்­களை இணைத்து மிக நீண்ட நாட்­களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் இளைஞர் மாநாட்டை நடத்­து­கின்­றமை மற்றும் இந்த மாநாட்டில் நான் கலந்­து­கொண்­டுள்­ள­மையை எண்ணி மகிழ்ச்சி அடை­கின்றேன். இந்த மாநாட்டில் நான் கலந்­து­கொண்­ட­மையை நான் செய்த பாக்­கி­ய­மாக கரு­து­கின்றேன். அதேபோல் இன்­றைய இந்த கூட்­டத்தை பார்க்கும் போது 35ஆண்­டுகள் பின்­சென்று நான் இளை­ஞ­னாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மாநாட்டில் கலந்­து­கொண்டு கட்­சியை பலப்­ப­டுத்­தி­யமை நினைவில் வரு­கின்­றது.

 ஜனா­தி­ப­தி­யாக நாட்டை ஆள­வேண்டும் என்றோ அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­தத்­து­வத்தை நான் பெறுவேன் என்றோ ஒரு சந்­தர்ப்­பத்­திலும் நினைத்­த­தில்லை. எனினும் கால­வோட்டம் மற்றும் மக்­களின் ஆத­ரவில் இந்த இரண்­டையும் ஏற்­க­வேண்­டிய நிர்ப்­பந்தம் எனக்கு ஏற்­பட்­டது. 2015 ஜன­வரி 15 ஆம் திகதி கூடிய ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்­திற்கு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அந்த கூட்­டத்தில் கட்­சியின் ஏக­ம­ன­தான தீர்­மா­னத்தின் பிர­காரம் கட்­சியின் தலை­மைத்­து­வதை ஏற்­றுக்­கொண்டேன்.

அதில் இருந்து கட்­சியின் புதிய வேலைத்­திட்­டங்கள், கட்­சியின் மீள­மைப்பு மற்றும் கட்­சியை முன்­னெ­டுத்து செல்­ல­வேண்­டிய நகர்­வு­களை நான் முன்­னெ­டுக்க ஆரம்­பித்தேன். ஆனால் அனைத்து வேலை­க­ளிலும் எனக்கு பல தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. தடை­களும், அச்­சு­றுத்­தல்­களும் எனக்கு எதி­ராக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தன. ஆனால் எனது அனு­பவம் மற்றும் கட்­சியின் ஒத்­து­ழைப்­புடன் நான் எனது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்­கின்றேன். நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் எமது இளை­ஞர்­க­ளுக்­கா­கவும் என்­னா­லான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களும் அர்ப்­ப­ணிப்­பு­க­ளையும் நான் செய்வேன்.

கட்­சியை பொறுப்­பெ­டுத்த போது எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களும், கட்­சியை என்­னிடம் ஒப்­ப­டை­த­வர்­களும் இன்று நான் கட்­சியை முன்­னெ­டுத்து செல்லும் போது ஏன் தடை­யாக உள்­ளீர்கள்? நான் இந்த அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்று கருத்தில் வந்­தவன் என்­ப­தற்­கா­கவா? அல்­லது நான் மேல்­வர்க்­கத்தில் இருந்து அர­சி­ய­லுக்கு வராத கார­ணத்­தி­னாலா? எனக்கு எதி­ராக இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர் என்­பதே எனது கேள்­வி­யாகும்.

எனினும் எனது இத்­தனை கால அர­சியல் அனு­பவம் மற்றும் எனது தேசிய அர­சியல் அறிவு சர்­வ­தேச அர­சியல் அறிவின் படியும் மக்­களின் ஒத்­து­ழைப்பின் மூலமும் இட­து­சாரி மக்­களின் ஒத்­து­ழைப்­பு­டனும் என்னால் இந்த நாட்டை சரி­யான திசையில் கொண்­டு­செல்ல முடியும் என நம்­பு­கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நாட்டின் சகல மக்­க­ளுக்கும் சொந்­த­மான கட்­சி­யாகும். கட்­சியில் எந்த தடை­களும், வர்க்க பிரி­வு­களும், பாகு­பா­டு­களும் இந்த கட்­சிக்குள் இல்லை. நான் இந்த கட்­சியின் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுக்­கொண்­ட­மை­யா­னது இந்த கட்­சியை வெற்­றி­பெற வைக்­கவே தவிர வீழ்த்­து­வ­தற்கு அல்ல. இந்த நாட்டு மக்கள் மிகவும் இயல்­பான வகையில் கட்­சியை மறு­சீ­ர­மைத்து எதிர்­கால அர­சாங்­கத்தை நாம் அமைக்க வேண்டும் என்­பதே எனது ஒரே எதிர்­பார்ப்­பாகும். இன்று இந்த கட்­சியில் எனது உற­வி­னர்கள், பிள்­ளைகள் எவ­ருக்கும் பொறுப்­பு­களை நான் கொடுக்­க­வில்லை.

சாதா­ர­ண­மான அதே­நி­லையில் தகு­தி­யான அங்­கத்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே கட்­சியின் பொறுப்­புக்­களை நான் ஒப்­ப­டைத்­துள்ளேன். இதன் மூலம் ஜன­நா­யக ரீதியில் எமது கட்­சியை உறு­தி­யாக கொண்­டு­செல்­வதே பிர­தான நோக்­க­மாகும். கடந்த காலத்தில் அதிக அனு­ப­வங்கள் எமக்கு உள்­ளன. கடந்த காலத்தில் யுத்தம் புரட்­சிகள் அனைத்­தையும் நாம் கண்­டுள்ளோம். இந்த அனு­ப­வங்­களை வைத்து நாட்டை சரி­யான திசையில் கொண்­டு­செல்ல வேண்டும். பொரு­ளா­தார சிக்­கல்­க­ளாக இருந்­தாலும் அல்­லது அர­சியல் பிரச்­சி­னை­க­ளாக இருந்­தாலும் அவற்­றுக்கு தீர்வை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் நாட்டை முன்­னெ­டுத்து சென்று அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­புகள் மூலம் வெற்­றி­பெற வேண்டும்.

இளை­ஞர்கள் சரி­யான திசையில் பய­ணிக்­கவும் இளம் சமூகம் நாட்டின் அபி­வி­ருத்­தியில் முக்­கிய பங்­கினை வகிக்­கவும் சரி­யான வழி­ந­டத்­தலை அர­சாங்கம் என்ற வகையில் நாம் முன்­னெ­டுக்க வேண்டும். அதற்­கா­கவே நாம் அனை­வரும் கைகோர்த்து வரு­கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இது­வ­ரை­யி­லான கால கட்டம் வரையில் சில தோல்­வி­களை சந்­தித்­தது. சில சந்­தர்ப்­பங்­களில் வீழ்ச்சி கண்­டது. ஆனால் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் மீண்டும் தைரி­ய­மாக எழுச்சி பெற்று இந்த நாட்டில் பல­மான அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது.

இதுவே எமக்கு கிடைத்த மக்கள் வெற்­றி­யாகும். ஆகவே கட்­சியை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். சக­ல­ருக்கும் ஏற்ற பொறுப்­புக்­களை நாம் கொடுக்க வேண்டும். இந்த ஆண்­டுக்குள் உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த தேர்­தலில் எமது இளை­ஞர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து கட்­சியை வெற்­றி­பெற செய்ய வேண்டும். இன்று வடக்கு கிழக்கு மக்கள் முதல் தட­வை­யாக தெற்கின் இளை­ஞர்­க­ளுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்­தி­யுள்­ள­மையே எமக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

இந்த நாட்டில் தூய்மையான அரசியல் பயணம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாத ஒரு சமூகத்தை மற்றும் அதற்கான தூய்மையான அரசியல் தலைமைகளை நாம் உருவாக்க வேண்டும். யாரையும் குற்றவாளிகள் என சித்தரிக்கவோ அல்லது யாரும் தூய்மையானவர்கள் என நியாயப்படுத்தவோ நான் முயற்சிக்கவில்லை. இந்த நாட்டில் ஊழல், மோசடி, கொள்ளையர்கள், கொலைகாரர்கள், மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் எந்த கட்சிக்கார்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களை தண்டிப்பேன். அதில் ஒருபோதும் நான் பின்னிற்க மாட்டேன் என்றார்.     

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.