Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடனான எமது உறவு தொடர்பில் இந்தியா விரக்தியடையத் தேவையில்லை புதுடில்லி கூடுதலாக அலட்டிக்கொள்கிறது என்கிறார் பிரதமர்

Featured Replies

சீனா­வு­ட­னான எமது உறவு தொடர்பில் இந்­தியா விரக்தியடை­ய­த் தே­வை­யில்லை

Ranil2000-414ec1e33af1217d07e84edc05d4281d7f2590b5.jpg

 

புது­டில்லி கூடு­த­லாக அலட்­டிக்­கொள்­கி­றது என்­கிறார் பிர­தமர்
(பா.ருத்­ர­குமார், க.கம­ல­நாதன்)

சீனா­வு­ட­னான எங்­க­ளது நட்பு இந்­தி­யாவை பகைத்­து­கொள்­வ­தற்­கா­னது அல்ல என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனா­வுடன் உறவு வைத்­தி­ருப்­பது தொடர்பில் இந்­தியா விரக்­தி­ய­டையத் தேவை­யில்லை. இந்­தி­யா­வு­டனும் சீனா­வு­டனும் நாம் வெவ்­வே­றான தொடர்பை வர­லாற்­றி­லி­ருந்து பேணி வந்­துள்ளோம்.

ஆனால் இது தொடர்பில் இந்­தியா கூடு­த­லாக அலட்­டிக்­கொள்­கின்­றது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார் 

 

அதி­கார பகிர்­வென்­பது வெறு­மனே தமிழ் சிங்­கள மக்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­யில்லை. எனவே தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு திருந்­தங்­களின் போது ஒவ்­வொரு மாகாண சபை­க­ளுக்கும் விசேட அதி­கா­ரங்­களை வழங்­கு­வது குறித்து சிந்­திக்­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

 போர்க்­குற்ற விசா­ர­ணை­களை நாமே தேர்ந்­தெ­டுப்போம். ஆனால் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பது நிச்­ச­ய­மான ஒன்­றாகும். இலங்கை எந்த நாடு­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருக்க வேண்டும் என்­பதும் இலங்­கையின் சாதா­ரண அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இடம்­பெ­று­கின்­றது. இதில் யாரும் அச்சம் கொள்ள தேவை­யில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இந்­தி­யாவை தள­மாக கொண்டு இயங்கும் ஊட­க­மொன்று வழங்­கி­யுள்ள சிறப்பு பேட்­டி­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

செவ்­வியின் பகுதி வரு­மாறு,

கேள்வி 2015 உங்­ளது அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும்­போது இந்­தி­யா­வுடன் இரு­த­ரப்பு தொடர்­பு­களை உறு­தி­யாக வைத்­துக்­கொள்­வ­தாக கூறி­யி­ருந்­தீர்கள். ஆனால் தற்­போது இலங்­கையின் அர­சியல் நகர்­வுகள் முற்று முழு­தாக சீனாவை நம்­பியே உள்­ளன. இது தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில் சீனா­வு­ட­னான எங்­க­ளது நட்பு வெறு­மனே இந்­தி­யாவை பகைத்­து­கொள்­வ­தற்­கா­னது அல்ல என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சீனா­வுடன் உறவு வைத்­தி­ருப்­பது தொடர்பில் இந்­தியா விரக்­தி­ய­டைய தேவை­யில்லை. இந்­தி­யா­வு­டனும் சீனா­வு­டனும் நாம் வெவ்­வே­றான தொடர்பை வர­லாற்­றி­லி­ருந்து பேணி வந்­துள்ளோம். ஆனால் இது தொடர்பில் இந்­தியா கூடு­த­லாக அலட்­டிக்­கொள்­கின்­றது. நாம் சீனா மட்­டு­மல்ல பிரித்­தா­னியா அமெ­ரிக்கா போன்ற எந்த நாடா­யினும் ஒரே வகை­யி­லான தொடர்­பையே பேணி வரு­கின்றோம்.

 எந்த விட­யத்தில் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட வேண்டும் என்­ப­தனை உணர்ந்து செயற்­ப­டு­கின்றோம். குறிப்­பாக ஜப்­பானின் பங்­க­ளிப்­போடு இந்­தி­யாவின் ஊடாக திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் வங்­காள விரி­கு­டாவில் பொரு­ள­தார மையத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். இதற்­கென கூட்டு ஒப்­பந்­தங்­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு இந்­தி­யாவின் 5 தென் மாநி­லங்­க­ளுடன் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்தி 500 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் வரு­மா­னத்தை பெறு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். பாது­காப்பு தொடர்பில் பார்ப்­போ­மானால் தகவல் தொடர்­பா­டலில் இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யும சிறந்த புரிந்­து­ணர்வு காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி. பீஜிங் உட­னான உங்­க­ளது தொடர்பு உங்­க­ளுக்கு வேண்­டு­மானால் முக்­கி­ய­மாக படலாம். ஆனால் அந்த தொடர்பு முழு­மை­யாக சீனா பக்கம் சார்ந்து இருக்­கின்­றது என்­பதே எமது நிலைப்­பாடு. சீனா­விடம் 8 பில்­லியன் அமெ­ரி­விக்க டொலர்­களை கடன் வாங்­கி­யுள்­ளீர்கள். கிட்­டத்­தட்ட 60 பில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட கடன் தொகையை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இப்­ப­டி­யி­ருக்­கின்ற போது சீனா உங்­க­ளுக்கு உதவிக் கரம் கொடு­கின்­றது என்று உங்­களால் எவ்­வாறு கூற முடி­கின்­றது?

பதில். சீனா­வுடன் தொடர்பு வைத்­தி­ருப்­பது தொடர்பில் ஏன் இவ்­வ­ளவு கவ­லைப்­ப­டு­கின்­றீர்கள் என தெரி­ய­வில்லை. யாரும் முதலில் இரும்­புக்­கரம் நீட்­டு­வ­தில்லை. சீனாவின் முத­லீ­டு­களில் யாவுமே இலங்­கையின் கட்­டு­மாண பணி­க­ளுக்­கா­ன­வை­யாகும். நாம் எதிர்­கட்­சி­யி­லி­ருக்­கும போதே சீனாவின் சில அபி­வி­ருத்தி திட்­டங்­களை சிறந்த தெரிவு என குறிப்­பிட்­டி­ருந்தோம். ஆனால் உங்­க­ளுக்கு 2007 ஆம் ஆண்­டிற்கு பின்னர் ஏற்­பட்ட பொரு­ளா­தார வீழ்ச்சி எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்­பது ஞாபகம் இருக்கும் என நினைக்­கிறேன்.

எனவே இலங்­கையை நீங்கள் எதிர்­ம­றை­யாக சிந்­திக்க கூடாது. பல நாடுகள் சீனா­வி­ட­மி­ருந்து உதவி திட்­டங்­களை பெற்­றுக்­கொள்­கின்­றன. பிரிக்ஸ் உள்­ளிட்ட ஆசிய முத­லீட்டு வங்­கிகள் பெரு­ம­ளவு இலங்­கைக்கு உதவி வரு­கின்­றன. அவர்கள் இலங்­கை­யோடு மட்­டு­மல்­லாது அனைத்து நாடு­க­ளு­டனும் தொடர்பை பேணி வரு­கின்­றனர்.

கேள்வி. இலங்­கையின் தென்­கி­ழக்கு அபி­வி­ருத்தி திட்­டங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக விளங்கும் அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தி மத்­தளை விமான நிலையம் என்­பன முழு­மை­யாக சீனாவின் ஆதி­கத்திக் கீழேயே காணப்­ப­டு­கின்­றன. அதன் நிர்­மாண பணி­களை சீனாவும் மிக விரை­வாக மேற்­கொண்டு வரு­கின்­றது. இவை­யெல்லாம் சீனாவின் ஆதிக்­கத்தை வெளிப்­ப­டை­யா­கவே காண்­பிக்­கின்­ற­வ­னவே?

பதில் மத்­தள விமான நிலை­யத்தில் முழு­மை­யாக இலங்கை விமான அதி­கா­ர­சேவை சபை­யினால் அபி­வி­ருத்தி பணிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதன் போது யார் வேண்­டு­மா­னாலும் விமான தள அபி­வி­ருத்தி பணி­களில் இணைந்து கொள்­ளலாம் என தெரி­வித்­தி­ருந்தோம். இந்து சமுத்­தி­ரத்தில் இலங்கை மையத்தில் உள்­ளது. சீன கப்­பல்கள் இல­கு­வாக பட்­டுப்­பா­தை­யி­னூ­டாக இலங்­கைக்கு வரு­கின்­றன. அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனாவின் உத­வி­யு­ட­னேயே அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டது.

ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திற்­கான மேல­திக அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு சீனாவை அழைத்­தி­ருந்தார். எமது அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவற்றில் திற­னில்­லாத திட்­டங்­களை இல்­லாமல் ஆக்­கி­யது. அதன் பின்­னரும் அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி திட்­டங்­களில் சீன கம்­பெ­னி­களே நேரடி தாக்கம் செலுத்­தி­யி­ருந்­தன. இது திட்­ட­மி­டப்­பட்ட ஒன்­றாக தெரி­ய­வில்லை. 20 சத­வீ­த­மான பங்கை இன்று துறை­முக அதி­கார சபையே கொண்­டுள்­ளது. யார் வேண்­டு­மா­னாலும் 40 அல்­லது 45 முத­லீ­டு­களை மேற்­கொள்ளாம். அதனை சீன கம்­பெ­னிகள் முறை­ப­டியே பெற்­றுக்­கொண்­டுள்­ளன. ஆகவே இலங்­கையும் ஏனைய நாடுகள் போன்­றதே என்­பதை உணர வேண்டும். வர்த்­தக நிலங்கள் முத­லீட்­டுக்­கான வாய்ப்­பாக உள்­ளன . இதில் மறை­மு­க­மான எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளுக்கும் இட­மில்லை.

கேள்வி அப்­ப­டி­யாயின் அம்­பாந்­தோட்­டையில் இந்­தியா முத­லிட நேரடி அழைப்­பி­தழை தரு­வீர்­களா?

பதில் இந்­திய கப்­பல்­களும் அம்­பாந்­தோட்­டைக்கு வரு­கின்­றன. அதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை. அத்­துடன் நாம் இந்­தி­யா­வுடன் சிறந்த வர்­தக தொடர்­பி­னையே பேணி வந்­துள்ளோம். ஏற்­க­னவே திரு­கோ­ண­மலை துறை­முகம் இந்­தி­யா­வி­னா­லேயே அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­கின்­றது. இதில் ஜப்­பா­னையும் இணைத்­துக்­கொள்ள தீர்­மா­னித்­துள்ளோம்.

கேள்வி. இலங்­கையில் சீன போர்­கப்­பல்கள் நிலைக்­கொண்­டி­ருப்­பது இந்­தி­யா­வுக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் தொடர்ந்து சீன போர் கப்­பல்கள் தரித்­தி­ருப்­பதால் இலங்­கையின் இறை­மைக்கு பாதிப்பு ஏற்­ப­டாதா?

பதில். சீன போர் கப்­பல்­க­ளுக்கு இலங்­கைக்கு வரு­வது ஒரு வழ­மை­யான விட­ய­மாகும். அவ்­வாறு வந்­தி­ருக்கும் ஒரு சந்­தர்ப்­பதின் போதே பிரச்­சினை ஏற்­பட்­டது. அப்­போது இந்­திய அர­சாங்கம் இது தொடர்பில் தெரி­விக்­க­வில்லை என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

முறை­யான விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டே சீன போர் கப்­பல்கள் இங்கு வந்­தன. சீனா­வையும் ஏனைய நாடுகள் போன்றே இலங்­கையும் பார்­கின்­றது. சீன மக்கள் இலங்­கைக்கு வரு­கி­றார்கள் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் பாது­காப்பு தொடர்­புகள் எதையும் சீனா­வுடன் மேற்­கொள்­ள­வில்லை.

கேள்வி. ஆனால் விடு­தலை புலி­க­ளு­ட­னான 30 வரு­ட­கால சிவில் யுத்­தத்தில் சீனாவின் பாது­காப்பு தொடர்­புகள் நேர­டி­யா­கவே தென்­பட்­டன. போர் ஆயு­தங்­களை வழங்கி இலங்கை புலி­களை வீழ்த்த முக்­கிய செல்­வாக்கு செலுத்­தி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே தொடர்ந்தும் சீனா உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை இலங்­கைக்கு மேற்­கொள்­கின்­றது. இவ்­வா­றி­ருக்கும் போது இந்­திய அர­சாங்­கத்­திற்கு இவை தொடர்பில் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ளீர்­களா?

பதில். ஆம் இவை தொடர்பில் புது டில்­லிக்கு அனைத்தும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக சீனா உள்­ளிட்ட எந்த நாடு­க­ளா­யினும் இலங்­கை­யுடன் தொடர்பை வைத்­தி­ருப்­பது சாதா­ரண விட­ய­மாகும். தேவை­யேற்­படின் நாம் அறி­வு­றுத்­தலை வழங்­குவோம்.

கேள்வி 1987 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை இந்­திய ஒப்­பந்தம் இன்றும் இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மாக உள்­ளது. அது­போ­லவே இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு முக்­கி­ய­மாக உள்­ளது. அவ்­வா­றி­ருக்கும் போது அதன் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக ஏற்­க­வில்லை என உங்­க­ளது நாட்டு தமிழ் மக்­களே கூறு­கின்­றனர் இதனை சிங்­க­ள­வர்­களும் எதிர்க்­கின்­றனர். இந்­நி­லையில் 30 வரு­டங்கள் கடந்த பின்பும் புதிய ஒரு சீர்­தி­ருத்தம் அவ­சி­ய­மா­கின்­றதா?

பதில் அவ்­வா­றில்லை. நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். தற்­போது வழி­ந­டத்தல் குழு­வூ­டாக, அதி­கார பகிர்வு தொடர்­பிலும் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். ஒவ்­வொரு மாகாண சபை­க­ளுக்கும் மேல­திக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். தற்­போ­தைய சம­யத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பு பற்றி அதிகம் சிந்­தித்து வரு­கின்றோம். இது தனிப்­பட்ட தமிழ் சிங்­கள மக்­களிக் பிரச்­சி­னை­யல்ல. இது மத்­திய பகு­திக்கும் பிற பகு­தி­க­ளுக்­கு­மான பிரச்­சி­னை­யாகும். நாம் அதன் உண்மை தன்மையை தற்போது விளங்கிக்கொண்டுள்ளோம் அதனால் தான் அது தொடர்பில் கல்ந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். நாம் ஒரு குடியரசு நாட்டின் பிரஜைகள் என்பதில் உறுதியாக உள்ளோம்.

கேள்வி. 13 ஆம் திருத்தத்தில் புதுடில்லியும் உடன்படுகின்றதே?

பதில். ஆம். உடன்படலாம் நாம் அதனை வரவேற்கின்றோம்.

கேள்வி இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை இலங்கையிள் மீது திணித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசத்துடன் இணைந்து இச்சவாலுக்கு கொழும்பு எவ்வாறு முகம்கொடுக்கும்?

பதில் ஆம். தற்போதைய இலங்கைக்கு சிறு பிரச்சிணைகளே உள்ளன அவ்வறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது சர்வதேச பரிந்துரைகளை ஏற்படுத்துவது தொடர்பில் நாம் சிந்திப்போம். ஆனால் சரவதேச நீதிபதிகள் விசாரணைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பு தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு குழுக்கள் அதன் பெயரை உபயோகின்றன. வடக்கு கிழக்கிலும் கூட பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனறார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.