Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம் (படங்கள்)

Featured Replies

பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம் (படங்கள்)

 

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

unnamed.jpg

சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் வாய் பேச முடியாத ஒரு பிள்ளையின் தாயார் ஒருவருக்கு நேற்று (02) நள்ளிரவு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை குறித்த தாயார் வீட்டின்  அருகில் உள்ள பற்றை காடு ஒன்றில் குப்பைகளுடன் சேர்த்து எரித்துள்ளார். இந்த சம்பவங்களை அவதானித்த குறித்த பெண்ணின்13 வயதான மகள் இன்றைய தினம் பாடசாலையில் நடந்த சம்பவங்களை ஆசிரியருக்கு விபரித்துள்ளார். இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பாடசாலை நிர்வாகம் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்;கு அழைத்து முறையிட்டனர்.

unnamed1.jpg

இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதுடன் குழந்தையை பிரசவித்த தாயாரையும் கைது செய்தனர். அத்தோடு எரிந்த நிலையில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் எம் எஸ் சம்சுதீன் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.

unnamed__1_.jpg

பிறந்த குழந்தை இறந்து பிறந்ததா? அல்லது  தாயாரால் கொலை செய்து எரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed__2_.jpg

http://www.virakesari.lk/article/18661

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.