Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம்

Featured Replies

இரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம்

 

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருடைய காணியில் மற்றுமொரு நபர்கள் குடியேறியுள்ளதாகம் தற்போது தனது காணியை அவர்கள் தர மறுப்பதாகவும் தெரிவித்து தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து விசப்போத்தலை வைத்துக்கொண்டு வவுனியா நகரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.D0d48d40d.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று, யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளது. 

இதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில்,  கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பமொன் தங்கியுள்ளது.

அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளார்.

இந்நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.

 

இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976 ஆம் ஆண்டு முதல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 இது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என சென்று தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே மருத்து குடித்து சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் தமது காணி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த போராட்டம் இடம்பெற்றது. 

இதன்போது அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்ததுடன் அருகில் உள்ள காணி உரிமையாளர்களின் காணி ஆவணங்களிலும் குறித்த காணி இந்தியாவில் இருந்து வந்தவர்களது காணியே எனவும் எல்லையிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விச மருந்து போத்தலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 

இது தொடர்பில் இன்றைய தினம் வவுனியா பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோருடன் பேசி தீர்வைத் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை இடைநிறுத்திய அவர்கள் அயலில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/18730

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.